தன்னைப் போல் ஒருத்தி - சிறுகதை
"காரோ ..."
மூன்றாவது தடவையாக ஆஞ்சலிகா என்னைக் கூப்பிட்டாள். காரோ என்பது அன்பே என்பதற்கான இத்தாலியச்சொல்.
"சொல்லுடி ..." அவளுக்குத் தமிழ் தெரியாது என்றாலும் இந்த வார்த்தைப்புரியும்.
" அந்த டோல்சே - கப்பானா (Dolce & Gabbana The One: "Street of Dreams) விளம்பரம் பார்த்தாயா? " இத்தாலியத்தில் கேட்டாள்.
" ஆமாம் பார்த்தேன், ஸ்கேர்லத் யோகன்சன் நடித்தது ... கறுப்பு வெள்ளையில் கவனத்தை ஈர்க்கின்றது " ஆங்கிலத்தில் பதில் கொடுத்தேன்.
"அதில் வரும் ஸ்கேர்லத் யோகன்சனைப் போல அச்சு அசப்பில் நான் இருக்கின்றேன் அல்லவா "
எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. இருவருக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. ஸ்கேர்லத் அத்தனை அழகு. யுடியூபில் வரும் அத்தனை விளம்பரங்களையும் தவிர்க்க முடியாத அந்த ஐந்து வினாடிகள் மட்டும் காத்து இருந்து ,முழு விளம்பரத்தையும் பார்க்காமல் நேரிடையாக பாடலுக்கு தாவிவிடுவேன். ஆனால் இந்த டோல்சே கப்பானா வாசனைத் திரவிய விளம்பரம் மட்டும் விதிவிலக்கு.ஸ்கேர்லத் யோகன்சன் மட்டும் என் கண் முன் வந்து நின்றால் இந்த ஆஞ்சலிகா, இந்த இத்தாலிய வேலை , பணம், புகழ் அத்தனையையும் விட்டுவிட்டு ஸ்கேர்லத் காலடியில் கிடப்பேன்.
எனது நக்கல் சிரிப்பைக் கவனித்த ஆஞ்சலிகா , பழைய நாளிதழ்களில் சிலவற்றுடன் தனது படங்களையும் எடுத்து வந்து அதில் இருந்த ஸ்கேர்லத் படங்களுடன் ஒப்பிட்டு பேசிக்கொண்டு இருந்தாள். ஆஞ்சலிகாவும் அவளது படங்களில் நன்றாகத்தான் இருந்தாள். ஆனால் ஸ்கேர்லத் யோகன்சனின் சினிமா ஸ்டில்களுக்கு முன்னால் ஆஞ்சலிகா தூசு.
பெரும்பாலும் வெள்ளைக்காரப் பெண்கள் ஓர் அதிக ஈர்ப்புடன் இருப்பதற்கான காரணம் அவர்களின் உடலுக்கு ஏற்ற உடை தேர்வும் அவர்களின் நிறமும். ஆஞ்சலிகா உட்பட , பெரும்பாலான வெள்ளைக்காரப் பெண்களை மாநிறமாக மாற்றிவிட்டால் நம்மூரின் சுமாரானப் பெண்களைவிட சுமாராகத்தான் இருப்பார்கள். ஆனால் ஸ்கேர்லத் ஒரு விதிவிலக்கு. அவளை ஆப்பிரிக்க கறுமை நிறத்திற்கு மாற்றினாலும் அழகு. அனேகமாக கிளியோபட்ரா கறுப்பு ஸ்கேர்லத்தாக இருந்து இருக்கவேன்டும்.
ஐரோப்பா வந்ததும் வெள்ளைக்காரத் தோழி இருக்கின்றாள் என்பதை உலகத்திற்குக் காட்டிக்கொள்ள முதலில் சிக்கும் பெண்ணிடம் பெரும்பாலான இந்தியர்கள் அதீதநட்புடன் இருப்பார்கள். இங்கு நட்பு படுக்கைக்கும் சில சமயங்களில் போய்விடுவதால் அது காதலாய் கசிந்துருகிவிடுகின்றது. இந்திய் ஆண்களுக்கு வெள்ளைக்காரத் துணை இருப்பது, ஒருவிதத்தில் சமூக பாதுகாப்பு மேலும் விசா போன்ற விசயங்களுக்கும் துணைபுரியும், கடைசி வருடப்படிப்பின் பொழுது ஆஞ்சலிகாதான் மெக்டோனல்ட்ஸில் வேலை பார்த்து என்னைப் படிக்க வைத்தாள். ஆக வெள்ளைக்கார மோகம் காமத்தில் ஆரம்பித்து இப்பொழுது ஓர் அளவிற்கு வேறு வழி இல்லாத அன்பில் வந்து நிற்கின்றது.
மறுநாளும் ஆஞ்சலிகா , ஸ்கேர்லத் புராணத்தை ஆரம்பித்தாள்.
"கடைசி பத்து ஆண்டுகளாகவே ஸ்கேர்லத் போல இருக்கின்றேன் என எனக்குத் தெரியும்... ஆனால் யாரிடமும் சொன்னதில்லை... உன்னைக்கூட , உனது விருப்பமான நடிகை ஸ்கேர்லத் யோகன்சன் என சொன்னபிறகுதான் மிகவும் பிடித்துப் போனது "
நான் ஒன்றும் சொல்லவில்லை. கல்லூரியில் படிக்கும்பொழுது நடிகர் மாதவன் அலைபாயுதே படத்தில் காட்சி தந்த பக்காவாட்டு தோற்றம் எனக்கும் இருந்ததாக நானும் நினைத்துக் கொண்டதுண்டு. பின்னர் நந்தா சூரியா போல அசப்பில் நான் இருப்பதாக நினைத்துக் கொண்டு சிலப்படங்கள் எடுத்து வைத்திருக்கின்றேன். அவர்களுக்கும் எனக்கும் ஸ்னானபிராப்தி கூட இல்லை என்பது மிகவும் தாமதமாகத்தான் புரிந்தது.
ஒரு நாள், இரு நாள் ,, இரு மாதங்களாய் இந்த ஸ்கேர்லத் புராணம் தொடர்ந்தது. எனக்கு ஸ்கேர்லத்தின் மேல் வெறுப்பு வந்துவிடுமோ என்ற பயத்துடன் ஒருவேளை என் ஆஞ்சலிகா பைத்தியமாகிவிட்டாளோ என்ற பயமும் சேர்ந்துவிட்டது.
ஒருநாள் என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று
"ஆஞ்சி, நீ ஸ்கேர்லத் யோகன்சனைப் போல கொஞ்சம் கூட முக அமைப்பில் இல்லை "
"இல்லை, அவளைப்போலத்தான் இருக்கின்றேன்.. வேண்டுமானால் என் அம்மா அப்பா என் தோழிகளைக் கேட்போம்" சாமியாடும் பெண்களைப் போலப் பேசினாள்.
அந்த வார இறுதியில் அனைவரும் வந்தார்கள். அவர்கள் எவ்வளவு எடுத்து சொல்லியும் ஆஞ்சலிகா தன் கருத்தை மாற்றிக்கொள்ளவில்லை. இறுதியாக ஆஞ்சலிகாவை ஒரு மனநல மருத்துவரிடம் கூட்டிப்போவது என முடிவு எடுக்கப்பட்டது. இந்தியத் துணைக்கண்ட ஆண்களுடன் காதல் வயப்படும் ஐரோப்பிய பெண்கள் கொஞ்சம் மறை கழன்டவர்கள் என்ற எனது கருதுகோள்களில் ஒன்று நிஜமாகிவிடுமோ எனத் தோன்றியது.
பலத்தரப்பட்ட பரிசோதனை, தனி ஆலோசனைகளுக்குப்பின்னர்...
"Apophenia வில் ஒரு வகை இது ... Pareidolia , மேகங்களில் , மலைகளில் மனித உருவங்களையோ தனக்குப்பிடித்த உருவங்களையோ பார்ப்பதைப்போல... தான் தனக்குப்பிடித்த ஓர் ஆளுமையைப்போல முகச்சாயலுடன் இருக்கின்றோம் என்பதை ஆழமாக நம்புவது.. இந்த வகையான மயக்குறு சூழலில் உங்களது ஆஞ்சலிகா இருக்கின்றார் " என்ற மருத்துவர் தொடர்ந்து
"ஆஞ்சலிகாவை வேறு ஏதாவது ஊருக்கு சுற்றுலாவாக கூட்டிக்கொண்டு போங்கள் ... ஸ்கேர்லத் யோகன்சனைப் பற்றி பேசாதீர்கள்" என அறிவுறுத்தினார்
அதற்குப்பின்னர் ஆஞ்சலிகா , ஸ்கேர்லத்தைப் பற்றி எதுவும் பேசவில்லை. உற்சாகமாகவே பாரீஸ் பயணத்திற்குத் தயாரானாள். ரோம் விமானநிலையத்தில் நடைமுறைகளை முடித்துவிட்டு விமானத்திற்காகக் காத்துக் கொண்டு இருக்கையில் , தூரத்தில் ஒரு பரபரப்பு. அது நடிகை ஸ்கேர்லத் யோகன்சன் என மக்கள் உற்சாகமாகினர். இந்த சூழலில் எனக்கு ஆஞ்சலிகாவே முக்கியம் எனத் தோன்றியதால் அங்கு போகவில்லை. ஆஞ்சலிகாவிற்கு அந்த பரபரப்பில் கவனம் போகவில்லை. அவள் இளையராஜா பாடல்களை கேட்டுக்கொண்டு இருந்தாள். ஸ்கேர்லத் பாரீஸ் தான் போகப்போகின்றார் போலும்... எங்கள் இடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார். பிரயாணிகள் தங்களது கைபேசிகளில் அவரைப் படமெடுத்துக் கொண்டு இருந்தனர். ஸ்கேர்லத் எங்கள் இருக்கைகளுக்கு எதிரே வந்து நின்றார்.
வியப்புடன், ஆஞ்சலிகாவைக் கண்ணுக்குக் கண் பார்த்த ஸ்கேர்லத் ஆங்கிலத்தில் சொன்னது
"என்ன ஆச்சரியம்... நீ அச்சு அசப்பில் என்னைப்போலவே இருக்கின்றாய்?"
------------------