ஒரு புத்த மத நீதிக் கதை
ஓர் ஊரில் ஒரு அழகான பூந்தோட்டங்களுடன் அமைந்த வீட்டில் தனது சீடர்களுடன் அமைதியான புத்தத்துறவி வசித்து வந்தார். தினமும் அவரைப் பார்க்க அவ்வூர் மக்கள் அடிக்கடி வருவர். துறவியின் பக்கத்துவீட்டில் , தன் பிள்ளைகள் மேல் ஏக பாசம் வைத்திருக்கும் பக்ஷேசூரா என்ற ஒருவன் வாழ்ந்து வந்தான். பக்ஷேசூராவிற்கு துறவியைப் பிடிக்கவில்லை. அதனால் ஏகப்பட்ட பிரச்சினைகளை துறவிக்குக் கொடுத்துக் கொண்டிருந்தான். கழிவுகளை , துறவியின் வீட்டின் எல்லைக்குள் எறிவது, துறவியை சந்திக்க வருபவர்கள் , அவன் வீட்டை கடக்கும்ப்பொழுது ஏக வசனத்தில் திட்டுவது, சில சமயம் வீட்டில் இருந்து கல்லெறிவது, துறவியின் சீடர்களைத் தாக்குவது என ஏகத்துக்கும் போய்க் கொண்டிருந்தது. பக்ஷேசூராவின் நெருங்கிய நண்பரின் இடத்தைத் தான் இவர்கள் வாடகைக்கு எடுத்து இருந்தார்கள். அதனால் வீட்டு உரிமையாளரிடம் சொல்ல இயலாது. துறவி ஏதாவது செய்ய வேண்டும் என சீடர்கள் கேட்டுக்கொண்டார்கள் . நாளை முதல் பக்ஷேசூராவின் தொந்தரவு இருக்காது என உறுதியளித்த துறவி. வழக்கமாக துறவியின் வீட்டுத் தோட்டத்தில் விளையாட வரும் ஏகப்பட்ட பிள்ளைகளில், பக்ஷேசூராவின் பிள்ளைகளை மட்டும் தலையில் நான்கு குட்டுகள் குட்டி, இனிமேல் இந்தப் பக்கம் விளையாட வரக்கூடாது என துறவி விரட்டினார். குழந்தைகள் விளையாட இடமும் ஆட்களும் இல்லாமல் ஏங்கித் தவித்ததைப் பார்த்த பக்ஷேசூரா , மனந்திருந்தியதை போல் கொஞ்சம் நடித்து தனது கொடுமைகளை நிறுத்தினான். நடிப்பு என்று துறவி புரிந்து கொண்டாலும் பக்ஷேசூராவின் குழந்தைகளை விளையாட அனுமதித்தார்.
நீதி - தனக்குத் தொந்தரவு கொடுப்பவர்களை சிறு வன்முறையினால் மிரட்டலாம். தவறில்லை.
கதையில் சொல்லாமல் விட்ட நீதி
குழந்தைகளைக் குட்டியது வருத்தமானது என்றாலும் துறவியின் நிலை கடினமானது. அவர் ஓர் இடத்தில் வாடகைக்கு இருக்கிறார். சொந்த “ இடமாக” இருந்திருந்தால் , இந்நேரம் பக்கத்துவீட்டுக்காரனை வெளுத்து எடுத்து இருப்பார். அனேகமாக அடுத்தடுத்த வாரங்களில் துறவியும் சீடர்களும் சொந்த ”இடத்தைப்” பற்றி யோசிக்க ஆரம்பித்து இருப்பார்கள்