Thursday, January 26, 2012

கிரிக்கெட் வினாடி வினா - ஆறுக்கு ஆறு

நெருக்கப்பட்ட பன்னாட்டு கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணையில் சாமானிய ரசிகனால் உள்ளூர் போட்டிகளைத் தொடர்ந்து கவனிக்க முடிவதில்லை. ஐபிஎல் போட்டிகள் உள்ளூர் போட்டிகள் என்ற போதிலும், அதில் இருக்கும் பன்னாட்டு வீரர்களினால் இருபதுக்கு இருபதை சர்வதேசத் தரப் போட்டியாகவே நோக்கப்படுகிறது. கட்டமைப்பான உள்ளூர் போட்டிகளினாலும் தொடர்ந்த ஆஸ்திரேலிய ரசிகர்களின் ஆதரவாலும், ஆஸ்திரேலியா 30 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து நீட்டிப்பான வெற்றிகளைத் தொடர்ந்து பெற முடிகிறது. இந்தியாவிலும் உள்ளூர் முதல் தரப்போட்டிகளுக்கு ஆதரவு அதிகமானால் மேலும் இந்தியக் கிரிக்கெட்டின் தரம் உயரும். இந்த வினாடி வினாவில், நம் கிரிக்கெட் ரசிகர்களால் எந்த அளவிற்கு முதல் தரப்போட்டிகள் நோக்கப்படுகிறது என்பதை “டெஸ்ட்” செய்யும் விதமாக இந்த ஆறு கேள்விகளும் அமையப்போகின்றது. முடிந்தவரை எளிமையாகவே கேள்விகளை அமைத்து இருக்கின்றேன். வினாக்கள் முதல் தரப்போட்டிகளில் இருந்து கேட்கப்பட்டுள்ளன. ஒரு வேளை கேள்விகளில் தகவல் பிழை இருந்தாலும் சுட்டிக்காட்டவும்.

1. கீழ்கண்ட படத்தில் பிரபல ஆட்டக்காரர் கவாஸ்கர் இடதுகையால் மட்டையடிப்பது போல இருக்கின்றது, இது கண்ணாடி வழியாக இடவல மாற்றப் புகைப்படம் அல்ல, நிஜமாகவே ஒரு ஆட்டத்தில் கவாஸ்கர் இடதுகை ஆட்டக்காரராகவும் ஆடினார். அந்த இந்திய முதல் தர ஆட்டம் என்ன? எந்த சூழலில் அவர் ஆடினார் என்பதையும் தெரிந்தால் சொல்லுங்களேன்.



2. முதல் தரப்போட்டிகளில் பிரையன் லாரா அடித்த ஆட்டமிழக்காத 501 ஓட்டங்களே இன்று வரை அதிகபட்சமாக இருக்கின்றது. கேள்வி, பிரையன் லாராவிற்கு முன்னர் அந்த சாதனையை வைத்திருந்தவர் யார்?

3. இந்திய முதல்தரப்போட்டிகளில், முந்தைய ரஞ்சிக்கோப்பையை வென்ற அணியுடன், இதர இந்திய வீரர்களின் அணி (Rest of India)ஆடும் போட்டிக்கான கோப்பையின் பெயர் என்ன?

4. ஐபில் இருபதுக்கு இருபது ஆட்டமாக நகரங்களுக்கு இடையிலான போட்டிகளாக நடத்தப்படுகிறது. ஆனால் இந்திய அளவில் வேறு ஒரு இருபதுக்கு இருபது போட்டித்தொடரும் முதல்தரப் போட்டிகளாக நடத்தப்படுகின்றது. அதாவது ரஞ்சிப் போட்டிகளில் ஆடும் அணிகள் இந்த இருபதுக்கு இருபது போட்டிகளில் பங்கேற்கும். இந்தப் போட்டித் தொடரின் பெயர் என்ன?

5. கீழ்க்காணும் படத்தில் இருக்கும் கிரிக்கெட் வீரர் யார்? தொடர்ந்து இந்திய முதல் தரப்போட்டிகளைக் கவனித்து வருபவர் என்றால் இவரை சுலபத்தில் கண்டுபிடித்துவிடலாம்.



6. கடைசிக் கேள்வி, லீ ஜெர்மோன், தனது முதல் டெஸ்ட் ஆட்டத்தை கேப்டனாக அறிமுகமாகி ஆடினார். கேண்டர்பர்ரி அணிக்காக இவர் ஆடிய முதல் தர ஆட்டமொன்று கிரிக்கெட் பதிவுகளில் நீங்கா இடம் பெற்றுவிட்டது. அந்த ஆட்டத்தில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க நிகழ்வு என்ன, அதில் இவரின் பங்கு என்ன?

விடைகள்

1. 81/82 ரஞ்சிப்போட்டிகளின் அரை இறுதி ஆட்டத்தில், ரகுராம் பட் என்ற கர்னாடகா அணியின் சுழற்பந்து வீச்சாளரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் பம்பாய் அணியினர் சுருண்டனர். ஏற்கனவே முதல் இன்னிங்ஸில் அதிக ஓட்டங்கள் குவித்திருந்ததின் அடிப்படையில் கர்னாடகா இறுதிக்குத் தகுதிப்பெற்றிருந்தது. ஒட்டு மொத்தத் தோல்வியைத் தவிர்க்க, ரகுராம் பட் பந்து வீசும்பொழுது மட்டும் இடதுகை ஆட்டக்காரராக ஆடி, ஆட்டத்தை டிரா செய்தார். முதல் தரப்போட்டிகளில் நன்றாக விளையாடியும் சொற்ப பன்னாட்டு ஆட்டங்களே ஆடி ரகுராம் பட் ஓய்வுப் பெற்றார்.

ஆட்டவிபரம் இங்கே

2. ஹனீப் முகமது கராச்சி அணிக்காக அடித்த 499 ஓட்டங்கள். சுவாரசியமான விசயம் என்னவெனில் இவர் 500 வது ஓட்டத்தை எடுக்கும்பொழுது ரன் அவுட் என்ற முறையில் ஆட்டமிழந்தார். அதைப்பற்றியக் கட்டுரையை பின்வரும் சுட்டியில் படிக்கலாம்.
http://www.espncricinfo.com/magazine/content/story/385930.html

3. இரானி கோப்பை

4. எதிர்பார்த்த விடை சையத் முஷ்தாக் அலி கோப்பை என்ற போதிலும் Interstate 20 என்ற விடையும் சரியானதே

5. ராபின் பிஸ்ட் , ராஜஸ்தான் அணியின் ஆட்டக்காரர். இந்த சீசனில் அதிக ஓட்டங்களை ரஞ்சிப்போட்டிகளில் எடுத்தவர் என்ற பெருமை உடையவர்.

இவரின் பக்கம் http://www.espncricinfo.com/ci/content/player/262464.html

6. 59 ஓவர்களில் 291 வெற்றி இலக்கு என்று கடைசிநாளில் களமிறங்கிய கேண்டர்பர்ரி அணி, 108 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டிருந்தது. இருந்த போதிலும் லீ ஜெர்மோனும் ரோஜர் போர்டும் ஓரளவிற்கு சமாளித்து டிராவை நோக்கி ஆட்டத்தை நகர்த்திக் கொண்டிருந்தனர். எதிராக ஆடிய வெலிங்க்டனின் அணியின் கேப்டனும் பயிற்சியாளரும் ஒரு திட்டத்தை வகுத்தனர். இரண்டு ஓவர்கள் மீதம் இருக்கும் நிலையில் எளிதாக பந்துகளை ஆட்டக்காரர்களுக்கு வீசுவதன் மூலம் , இரண்டு மூன்று பந்து ஆடி வாங்கினாலும், கிட்டத்தட்ட 95 ஓட்டங்களை கண்டிப்பாக எடுக்க முடியாது, மீதமிருக்கிற இரண்டு விக்கெட்டுகளை எடுக்க வாய்ப்பு இருக்கின்றது என பெர்ட் வான்ஸ் என்பவரை பந்து வீசச்செய்தனர். வேண்டுமென்றே நோபால்களை வீசச் செய்து மட்டையாளர்களை குஷிப்படுத்தினர். கொடுத்தக் காசுக்கு மேல் கூவ ஆரம்பித்த வான்ஸ் வாரி வழங்கி 77 ஓட்டங்களைக் கொடுத்தார். கடைசி ஓவரில் 18 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் 17 ஓட்டங்களை எடுத்த லீ ஜெர்மோன் ஸ்கோரை சமன் செய்தார். அதனைப் பற்றிய விவரணையான கட்டுரை இங்கே

http://www.espncricinfo.com/magazine/content/story/451716.html

7 பின்னூட்டங்கள்/Comments:

said...

பதில் சொல்லிருவோமா :)

1) ரஞ்சி செமி பைனல். ரகுராம் பட் என்ற ஒரு ஸ்பின் பௌலரை வலது கை ஆட்டக்காரர்கள் எதிர் கொள்வது கஷ்டமாக இருந்ததால் அவர் வீசும் பொழுது மட்டும் கவாஸ்கர் இடது கை மட்டையாளராக மாறினார். அவர் அவுட் ஆகாமல் இருந்ததால் மும்பை தோற்கவில்லை. ஆனால் முதல் இன்னிங்க்ஸில் அதிக ஓட்டங்கள் எடுத்து கர்நாடகா இறுதி ஆட்டத்தில் நுழைந்தது.

2)ஹனீப் மொகம்மத் - 499 (500 ஆவது ஆட்டம் எடுக்க முயல்கையில் ரன் அவுட் ஆனார்!)

3)இரானி ட்ராபி

4) ராபின் பிஷ்ட்! இந்த வருட ரஞ்சி ட்ராபியில் அதிக ரன்களைக் குவித்தவர். பைனல்ஸைக் காணத் தந்த bcci.tvக்கு நன்றி!

5)இந்தக் கேள்வி படுத்துதே. முதலில் Interstate T20 Trophyன்னு ஒண்ணு இருந்தது. அதைச் சொல்லறீங்களா? இல்லை சையத் முஷ்டாக் அலி ட்ராபின்னு ஒண்ணு நடக்குது. அதைச் சொல்லறீங்களா?

6)கூகிளாண்டவர் சரணம். இப்படி ஒரு மேட்ச் நடந்ததே தெரியாது. சொன்னதுக்கு நன்றி. http://www.espncricinfo.com/magazine/content/story/146056.html

said...

@இலவசக்கொத்தனார்,

செஞ்சுரினா டெண்டுல்கர், க்விஸ்னா நீங்கதான்... கலக்கல்... அனைத்துமே சரி.

said...

1> I remember an article i read few years back.. In some early 80-s & he played left handed in a local Ranji match to face a left hand spinner.. I dont remember the opponent team & the spinner name and all..
2> 499 by Hanif Mohammad (Pakistan)..
3> Irani Trophy..
4> Sorry, not getting the question properly..
5> Robin Bist (Rajasthan)
6> Scored 70 runs in an unofficial over??

said...

@பிரசன்னா கண்ணன்,
நீங்கள் சொல்லிய வரை அனைத்து விடைகளும் சரி.

குழப்பமான 4வது கேள்வி மீண்டும் கீழே...

ஐபில் தவிர இந்தியாவில் நடைபெறும் வேறு டி20 முதல் தரப்போட்டித் தொடரின் பெயர் என்ன?

said...

1.சுழல் பந்து வீச்சை சமாளிப்பதற்காக சுனில் கவாஸ்கர் அவ்வாறு ஆடினார்.
(பந்து வீச்சாளர் ரகுராம் பாட். ரஞ்சி அரை இறுதி போட்டி)

2.ஹனிப் முஹம்மத் - பாகிஸ்தான் 499 ரன்கள்.

3.இராணி கோப்பை

4.சையத் முஸ்தாக் அலி கோப்பை

5.ராபின் பிஸ்ட் (மிகச் சுலபமான ஒன்று)

6.லீ ஜெர்மோன் ஒரே ஓவரில் 70 ரன்கள் குவித்தார். மொத்தம் 77 ரன்கள் அந்த ஓவரில் எடுக்கப்பட்டன.
எனினும் இது அதிகரபூர்வமாக ஏற்றுகொள்ளபடவில்லை

said...

@காரணன்,
அனைத்து விடைகளும் சரி

said...

கேள்வியை தெளிவுபடுதியதற்கு நன்றி வினையூக்கி!! இந்தாருங்கள் என்னுடைய பதில்.. இதுவும் சரியாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.. :-)
4) Its "Inter-State T20 Championship"..