Sunday, July 17, 2011

கிரிக்கெட் வினாடி - வினா - ஆறுக்கு ஆறு

1. ராஜேஷ் சௌகான் ஒரு முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர். 90களில் அனில் கும்ப்ளே, வெங்கடபதி ராஜுவுடன் மற்றும் ஒரு மும்மூர்த்தியாய் வலம் வந்தவர். பாகிஸ்தானுக்கு எதிரான, கராச்சியில் நடந்த ஒருநாள் போட்டி ஒன்றில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 8 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், சிக்ஸர் அடித்து வெற்றியை எளிதாக்கியதில் பலரால் நினைவுக்கூறப்படுபவர். வீடியோ இங்கே

கேள்வி என்னவெனில் இந்த ராஜேஷ் சௌகான் மற்றும் ஒரு நினைவுகூறத்தக்க ஒரு சாதனையையும் வைத்துள்ளார். அந்த சாதனைதான் என்ன?

2. கிரிக்கெட் ஆட்டத்தின் தாய்வீடான லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் ஆட்டங்களில் முதன் முதலில் இந்திய அணி சார்பில் சதம் அடித்தவர் வினு மன்காட். அதன் பின்னர் திலீப் வெங்சர்க்கார் மூன்று சதங்களும், குண்டப்பா விஸ்வநாத், அசாரூதின், கங்குலி, ரவி சாஸ்திரி ஆகியோர் சதம் அடித்துள்ளனர். இவர்களைத் தவிர லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் சதம் அடித்துள்ள மற்றும் ஒரு இந்திய வீரர் யார்?

3. தற்பொழுது திரைப்பட நடிகராகிவிட்ட இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் சடகோபன் ரமேஷ் பன்னாட்டுப்போட்டிகளில் அடித்த ஒரே சிக்ஸரின் காணொளி கீழே இருக்கின்றது. இந்த ஆட்டத்தில் இந்தியாவின் சார்பாக அதிக ஓட்டங்கள் அடித்தவரும் இவரே ...
காணொளியைப் பார்த்து இருப்பீர்கள். இப்பொழுது கேள்வி என்னவெனில் , இந்த ஆட்டத்தின் முடிவு என்ன?

4. ககன் கோடா என்ற ஒருவர் இந்திய அணிக்காக இரண்டு ஒரு நாள் ஆட்டங்களில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கியுள்ளார். அதே போல ஆஸ்திரேலியாவிற்காக அந்தோனி ஸ்டுவர்ட் என்பவர் மூன்று ஒரு நாள் ஆட்டங்கள் ஆடி இருக்கிறார். இவர்களுக்கு இடையில் இருக்கும் ஒரு சுவாரசியமான ஒற்றுமை என்ன?

5. தற்பொழுது மூன்றாம் நடுவர்கள், தீர்ப்புகள் வழங்கும்பொழுது ஆட்டமிழப்பை சிவப்பு விளக்கிலும், தொடர்ந்து ஆடச்சொல்வதை பச்சை என்ற வகையிலும் அறிவிக்கின்றனர். ஆனால் மூன்றாம் நடுவர்கள் அறிமுகப்படுத்தப்பட்ட ஆரம்பத்தில் எந்த நிறத்தை ஆட்டமிழந்தார் என்பதை அறிவிக்கப் பயன்படுத்தினர்?

6. பொதுவாக கிரிக்கெட் மைதானங்களில் , எல்லைக்கோடு வரை எந்த கம்பங்களோட இடையூறோ இருக்காது. இதற்கு விதிவிலக்காக இரண்டு மைதானங்கள் மட்டும் எல்லைக்கோட்டிற்குள் மரங்கள் கொண்டிருக்கின்றன.அந்த மைதானங்களில் பன்னாட்டு ஒருநாள் போட்டிகளும் நடைபெற்று இருக்கின்றன. அந்த மைதானங்கள் எவை?

---


விடைகள்

1. ராஜேஷ் சௌகான் இந்தியாவுக்காக ஆடிய 21 டெஸ்ட் போட்டிகளில் எந்தபோட்டிகளிலும் , இந்திய அணி தோற்றது கிடையாது.
ராஜேஷ் சௌகான் ஒரு விரும்பத்தகாத சாதனையும் வைத்துள்ளார், இந்திய பந்து வீச்சாளர்களில் ஒரு இன்னிங்ஸில் அதிக ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தவரும் இவர்தான். இலங்கைக்கு எதிரான 97 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் ஆட்டத்தில் 1 விக்கெட் எடுத்து 276 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தார். (http://www.espncricinfo.com/ci/engine/match/63762.html)

2. மட்டையடிக்க தெரியாதவர் என அனைவராலும் கேலி செய்யப்பட்ட அஜித் அகர்கார் தான் லார்ட்ஸ் மைதானத்தில் சதமடித்தவர். அதன் காணொளி கீழே3. லீசெஸ்டரில் நடைபெற்ற 99 உலகக்கோப்பை முதல் சுற்று ஆட்டங்களில் ஜிம்பாப்வே அணி இந்திய அணியை 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடையச் செய்தது. ஹென்றி ஒலங்கா கடை ஓவரில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினார்.

ஆட்ட விபரம் இங்கே - http://www.espncricinfo.com/ci/engine/match/65200.html

காணொளி கீழே4. ககன் கோடாவும், அந்தோனி ஸ்டுவர்டும் தங்களது கடைசி ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருதைப்பெற்றவர்கள். துரதிர்ஷ்டவசமாக அதன் பின்னர் அவர்கள் எந்தப்பன்னாட்டு போட்டிகளிலும் பங்கேற்க வாய்ப்புக்கிடைக்கவில்லை.

5. இன்றைய நிலைமைக்கு நேர் எதிராக பச்சை விளக்கு ஆட்டமிழப்பதைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. காணொளி கீழே6. மரங்கள் இருக்கும் இரண்டு கிரிக்கெட் மைதானங்கள்

செயிண்ட் லாரன்ஸ் - காண்டர்பெர்ரி - கெண்ட் (http://www.espncricinfo.com/england/content/ground/56869.html)

சிட்டி ஓவல், பியத்தர்மரிட்ஸ்பெரி , தென்னாப்பிரிக்கா
http://www.espncricinfo.com/southafrica/content/ground/59151.html

இந்த மைதானத்தில் சச்சின் டெண்டுல்கரும், கங்குலியும் நமீபியாவிற்கு எதிரான உலகக்கோப்பை ஒன்றில் சதமடித்துள்ளனர்.

15 பின்னூட்டங்கள்/Comments:

said...

:-)
for anser follow ups

said...

1) His 78 overs/276 runs against SriLanka in the 1997 EPIC match (where Jayasuriya & Mahanama made a triple & double tons) is the worst bowling action by any Indian Bowler..
2) Ajit Agarkar (Last Indian, who scored a Century at Lords)..
3) India lost to Zimbabwe in that 1999 World Cup league match.. Henry Olanga superbly delivered the match's final over & finished Indian tail-enters..
4) Both Gagan & Stuart (respectively) played only 2 & 3 ODIs, performed well, but did not managed to get further chances to represent their countries.. Similarity in the sense, Both ended their career with the MOM award in their last games..
5) Saint Lawrence Ground at Kent & City Oval at Pietermaritzburg..
6) Green colour to indicate the batsman was out.. (I guess, On those days Third Umpire actually reflects the mindset of
1st & 2nd umpire - means agreeing/disagreeing field umpire's mindet)..

said...

1 ) ஜாவிட் மியான்டாட்டுக்கு போட்டியின் இறுதிப்பந்தில் தேவையான 6 ஓட்டங்களை அடிக்க Full toss பந்து போட்டவர்.

2 ) அஜித் அகார்கர்

3 ) ஜிம்பாவே 3 ஓட்டங்கள்ளல் வெற்றி

4 ) இருவரும் தாம் விளையாடிய இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்றபோதும் மீண்டும் அணியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

5 ) முதலாவதாக 3 ஆவது நடுவரால் ஆட்டமிழப்பு அறிவிக்கப்பட்டபோது (சச்சினுக்கு தென்னாபிரிக்காவுடன்) பச்சை விளக்கு ஒளிர்விக்கப்பட்டது.

6 ) சென் லோரன்ஸ், காண்டர்பரி, இங்கிலாந்து (கென்ட் பிராந்திய அணியின் சொந்த மைதானம்)
பெற்றமரிஸ்பெர்க் ஓவல், தென்னாபிரிக்கா

ஓரிரு வினாக்களுக்கு இணையத்தில்த்தான் விடை தேடினேன், நல்ல முயற்சி. இப்படி கிரிக்கட் கேள்விகளை அப்பப்ப போடுங்க. 24 மணிநேர அவகாசத்தை கொஞ்சம் கூட்டலாம், காரணம் வேலைப்பளுவால் ஓரிருநாள் லேட்டாக பார்ப்பவர்களும் உள்ளனர் :-) 3 நாட்கள் ஓகே :-)

said...

2. அகர்கர்

6. இங்கிலாந்து மற்றும் ஜிம்பாப்வேயில் உள்ள மைதானம் பெயர் சிக்க வில்லை.

1. ராஜேஷ் - அதிக ஓவர் வீசியதா?

டஃப்ஃபாத்தான் இருக்கு

சடகோபன் - நாம் தோற்ற மேட்சா காணொளி இங்கே அனுமதியில்லை. வெயிட்டிங்

said...

@பிரசன்னா கண்ணன்,
அனைத்து கேள்விகளுக்கும் விடை சரி.
நேரமிருந்தால் ராஜேஷ் சவுகான் தன் வசம் வைத்திருக்கும் இன்னொரு நேர்மறை சாதனையையும் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

said...

@எப்பூடி

முதல் கேள்விக்கு மட்டும் விடை தவறு. ஏனையவை சரி

said...

@முரளி கண்ணன்,
2,3 ஆகியன சரி, 1 கிட்டத்தட்ட நெருங்கிட்டிங்க ...
மைதானம் கேள்விக்குப் பாதி சரி

said...

ம்ம்ம்ம்ம்ம்

said...

சேத்தன் சர்மாவை ராஜேஷ் சௌகான் என நினைத்து தவறுதலாக விடையளித்துவிட்டேன் :-( , முதலாவதற்க்கான பதில் இவர் விளையாடிய 21 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா எவற்றிலும் தோற்கவில்லை என்பதாகும் (இதற்க்கான விடையை உண்மையில் விக்கிபீடியாவில்த்தான் பெற்றேன் )

said...

@எப்பூடி

Now Right answer for the first question

said...

Hi Selva, I have a very similar question related to your fourth question..

There is one Cricketer who scored a double century in his lastly played innings & won the MOM award for that.. Even he got the MOS award too on that series.. But he never managed to get a chance after that to represent his country in Test matches.. Guess who?

said...

@Prasanna,

Jason Gillespie

said...

Jason Gillespie - Good shot Selva! :-)

BTW, Pls post such quiz kinda posts in frequent basis... I love to participate.. ..

said...

nice

Anonymous said...

என் முதல் விசிட்...என் வாழ்த்துக்களை பிடியுங்கள்...