Saturday, November 21, 2009

பேயில்லாமல் நானில்லை - சர்வேசன் ‘நச்' போட்டிக்கு அனுப்ப மறந்தக் கதை

என் பேரு கார்த்தி, கார்த்தி ராமச்சந்திரன். கஜினிப் பட சஞ்சய் ராமசாமி மாதிரி சொல்றேன்னு நினைச்சுடாதீங்க, சுவீடனுக்கு வந்தப் பிறகு அப்பா பெயரையும் சேர்த்து சொல்றது வழக்கமாப் போச்சு. நான் ஒரு அமெச்சூர் எழுத்தாளன், அப்போ அப்போ கதை எழுதி என் நேரத்தையும் , வாசிக்கிறவங்க பொறுமையையும் கொல்றது எனக்கு ஒரு ஹாபி. சில சமயங்களில் முன்னாள், இன்னாள் காதலிகளையும் பிடிக்காத, பிடித்தவர்களையும் கதையில் கதாபாத்திரங்களா ஆக்கி தாளிச்சுவிட்டுடுறதும் உண்டு. சரி விசயத்துக்கு வரேன், அம்மு, தன்னைப் பற்றி கதையில் எதுவும் எழுதக்கூடாதுன்னு சொல்லிட்டதுனால இப்பொவெல்லாம் வெறும் பேய்க்கதைகள் தான் எழுதிட்டு இருக்கேன்.

முதல் கதையில் இருந்த திகில் இப்பொவெல்லாம் கிடைக்கிறது இல்லை அப்படின்னு எனக்கு இருக்கிற வாசகர்கள்???!!! தொடர்ந்து சொல்லிட்டு இருக்காங்க.

சிலபேர் மருதமலைப் பட வடிவேலு சிரிப்பு போலிஸ் மாதிரி, என் கதையில் வர்ற பேய்கள் எல்லாம் சிரிப்புப் பேய்யா தெரியுதுன்னு கிண்டல் பண்றாங்க, இது எல்லாம் பரவாயில்லீங்க, நம்ம அப்பாவி கணேசன் , அதுதான் என் ரூம் மேட், விக்ரமன் படம் மாதிரி லாலாலா பாடுற செண்டிமெண்ட் எபெக்ட் ல என் பேய்கதைகள் இருக்குன்னு சொல்லிட்டாரு. I felt very bad, you know,, அதுதான் கண்டிப்பா ஒரு டெரிபிக் பேய்க்கதை எழுதிடனும் ஒரு மாசமா யோசிச்சுட்டு இருந்தப்ப தான் ஒரு சம்பவம் நடந்துச்சு.

பேய்க்கதை எழுதுறதுல பெரிய வெரைட்டி கிடைக்காது. ஒரு சம்பவம், அந்த சம்பவத்துல இருக்கிற யாரவது ஒருத்தர் உயிரோடு இருப்பவர் கிடையாதுன்னு முடிக்கனும், அந்த அதிர்ச்சியை வாசிக்கிறவங்களுக்கு கொடுக்கிற விதத்துல தான் இருக்கு கதையோட சக்ஸஸ்.

”இருக்கு ஆனால் இல்லை” - ”இல்லை ஆனால் இருக்கு” அப்படிங்கிற மாதிரி திகிலுக்கு கதைக்கரு யோசிக்க சிலப்பல இங்கிலீஷ் பேய்ப்படங்கள் டவுன்லோட் செஞ்சு வச்சிருந்தேன். அப்பாவி கணேசன் நீச்சல் பிராக்டிஸுக்கு போனப்பின்ன பார்ப்பதுண்டு. கணேசன் ஏதாவது சுவிடீஷ் பிகர்ங்களை கரெக்ட் பண்ணலாம்னு ஒவ்வொரு வீக் எண்டும் நீச்சல் குளத்துக்குப்போறார். ஆனால் அவருக்கு செட் ஆனது என்னமோ அவரு இடுப்பு உயரமே இருக்கிற பிலிப்பைன்ஸ் பிகரு. இப்படிதாங்க, டிராக்கை விட்டு வேறு எதாவது சொல்லிட்டு இருப்பேன். அப்பாவி கணேசன் போயிட்டாருன்னு பேய்ப்படம் பார்க்க உட்கார்ந்தா எல்லா பேய்ப்படத்துலேயும் திகில் சீன்களை விட கில்மா சீன் தான் ஜாஸ்தி இருக்கு. இந்தப் படம் எல்லாம் பார்த்தா கில்மாக் கதை தான் எழுத வரும்.

சரி நம்ம ஊரு ராம்கோபால் வர்மாவை இன்ஸ்பிரேஷனுக்கு எடுத்துக்கலாம்னா, எனக்கு என்ன கதை எல்லாம் தோணுதோ அது எல்லாத்தையும் அவரு முன்னமே படமா எடுத்துட்டாரு. திங்கிங் ல நான் ராம்கோபால் வர்மாவுக்கு முன்னோடி..

jokes apart, சீரியஸான விசயம் சொல்லனும், போன வாரம் சனிக்கிழமை , எங்க அபார்ட்மெண்ட் பின்ன இருக்கிற பாதி உறைஞ்சி போய் இருந்த ஏரியை வேடிக்கைப் பார்க்கிறப்ப ஒரு ஐடியா தோனுச்சு, அந்த ஏரில மனித முகம் மாதிரி ஒரு வடிவம் தெரிஞ்சுச்சு.அந்த முகச்சாயல்ல திடீர்னு ஒரு மனுஷனை சந்திச்சா எப்படி இருக்கும். கேட்கிறப்பவே திகிலா இருக்குல்ல,

சரி, அந்தக் கருவுக்கு ஏற்ற சில சம்பவங்களை யோசிச்சு கதையாக மறுநாள் ஞாயிற்றுக்கிழமை எழுதாலாம்னு உட்கார்ந்தால் , லெட்டர் வந்து விழுற சவுண்ட் கேட்டுச்சு. சண்டேஸ் ல போஸ்ட் மேன் வர்ற மாட்டானுங்களே!! அட்வர்டைஸ்மெண்டா இருக்கும்னு போய் எடுத்தால் என் பெயருக்கு ஒரு லெட்டர், முழுக்க முழுக்க சுவிடீஷ் ல எழுதி இருந்துச்சு, இரண்டு ஏ4 சைஸ் பேப்பர் அளவுக்கு இருந்த லெட்டரை கூகிள் டிரான்ஸ்லேட்டர் டைப் பண்ணி இங்கிலிஷ் ல டிரான்ஸ்லேட் பண்ணி படிக்கிறப்ப அப்படியே உடம்பு வெடவெட என நடுங்க ஆரம்பிச்சுடிச்சு, நான் யோசிச்சு வச்சிருந்த அதேக் கதை டீடெயில்டா, என்ன மாதிரி டிவிஸ்ட் எல்லாம் இருக்கனும்னு நினைச்சேனோ அப்படியே அந்த லெட்டர் ல வரிக்கு வரி இருந்துச்சு. நான் இந்தக் கதையை கணேசன் கிட்ட கூட டிஸ்கஸ் பண்ணல, எனக்கு மட்டுமே தெரிஞ்சக் கதை. ஏங்க எனக்கு மட்டும் இப்படி நடக்குது.

இரண்டு நாள் தூக்கமே இல்லை, ஒன்னும் மட்டும் புரியுதுங்க, என்னைச் சுத்தி வேற ஏதோ ஒன்னு இருக்கு. இருங்க, லெட்டர் போடுற சவுண்ட் கேட்குது, போய் பார்த்துட்டு வந்து சொல்றேன்.

வழக்கம் போல சுவிடீஷ் ல தான் லெட்டர், ஏ4 சைஸ் பேப்பர்ல நாப்பது பக்கம் இருக்கும்போல, முதல்வரி மட்டும் வாசிக்கிறேன்.

Jag heter Karthi, Karthi Ramachandran, tänker du av filmen Gajini's Sanjai Ramasamy!!, Nej, Efter kom jag till Sverige , jag talar mitt namn med min pappas namn.

அதோட தமிழாக்கம் கீழே!!

“என் பேரு கார்த்தி, கார்த்தி ராமச்சந்திரன். கஜினிப் பட சஞ்சய் ராமசாமி மாதிரி சொல்றேன்னு நினைச்சுடாதீங்க, சுவீடனுக்கு வந்தப் பிறகு அப்பா பெயரையும் சேர்த்து சொல்றது வழக்கமாப் போச்சு.”

11 பின்னூட்டங்கள்/Comments:

said...

he he he. pavam Ganesh

said...
This comment has been removed by the author.
said...

திகிலாக இருந்தது.ஆனால் உங்களிடம் காதல் கதையை எதிர்ப்பார்க்கும் இரசிகன்.கடைசியில் அந்த phillipines பொன்ன Mr.கணேசன் pick up பண்ணிட்டாரே!!

said...

பின்னிட்டீங்க போங்க!

said...

டைரக்டர் சசிகுமார், அமீர் மாதிரி நீங்களும் வித்யாசமா யோசிச்சு கதை எழுத அரம்பிட்சுடீங்க...
கதை சூப்பர் ...எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது ...
என்னங்க சிவாஜி (கணேசன்) இப்படி ஆயுடுச்சி...

said...

திகில் கொரஞ்சுடுச்சான்னு எனக்கு தெரியல..ஏன்னா, பேய்ன்னு சொன்னாலே எனக்கு பயம் வந்துடும்.. அதனால அத வாசகர்கள்(?!?!) தான் முடிவு பண்ணனும்.. But, எழுத்து நடை வாய்ப்பே இல்லாம கூடிட்டு போகுது..

said...

பேய் கதை படிக்கப்போறோம் மனசை தைரியமா வைச்சுக்கோடான்னு மனசுக்குள்ள சொல்லிக்கிட்டேத்தான் ஸ்டார்ட் செஞ்சேனாக்கும்! பட் பீதி கொஞ்சம் கம்மிதான் :))

said...

பேய்க் கதை என்று படிக்க வந்ததால் திகில் காணாது போல் இருக்கிறது. மற்றப் படி கதை நடை அருமை. தொடருங்கள்.

said...

தலைப்பே கலக்கல் :)

said...

thrilling story.

said...

ganesh escape!!!!!