அவருக்கும் உன் முகச்சாயல் தாண்டா - சிறுகதை
"கார்த்தி, முன்பே வா பாட்டு பார்த்திருக்கியா?!!”
“இல்லைடா அம்மு, அந்த பாட்டு ரொம்ப ஸ்லோ, முழுசா கேட்டதும் இல்லை, பார்த்ததும் இல்லை “
“நீ இப்போ பார்க்கனும், யூடியூப் ல தேடிப் பாரு , சண்டே வீட்டில இருக்கிறப்ப எங்க லோக்கல் சேனல்ல அடிக்கடிப் போட்டான்”
சுவீடன் இணைய இணைப்பின் வேகம் அதிகமானதால் ஒரு சில வினாடிகளில் முழுக்க தரவிறக்கம் ஆனது.
“கார்த்தி, கொஞ்சம் ஃபார்வர்ட் பண்ணிட்டு, சூர்யா ப்ளூ கலர் டீஷர்ட் ல வர்ற இடத்தில் இருந்து பாரு!”
”பாட்டுக் கேட்குதா அம்மு” சொல்லிக் கொண்டே மடிக்கணிணியில் சத்தத்தை அதிகரித்தேன்.
நீரும் செம்புல சேறும் கலந்தது போலே கலந்தவர் நாம் என்ற வரிகள் வந்ததும் “ஸ்டாப் ஸ்டாப்” என கீர்த்தனா உற்சாகத்தில் கத்தியதும் பாட்டை அப்படியே நிறுத்தினேன்.
“இப்போ, அந்த லைனை மட்டும் திரும்ப ப்ளே பண்ணு”
திரும்ப அதே வரிகள் பாட ஒலிக்க ஆரம்பிக்க அந்த வரிகளுடன் கீர்த்தனாவும் முணுமுணுக்க ஆரம்பித்தாள்.
“இப்போ சூர்யா ஒரு பக்கமா திரும்பி ஸ்மைல் பண்றதைப் பாரேன்.. ஸோ கியூட்” எனச்சொல்லிவிட்டு ஒரு குழந்தை சிரிப்பு சிரித்தாள் .
எனக்குக் கோபம் வரவில்லை.நான் அவள் வாழ்க்கையில் வந்த பிறகுதான் அவளுக்கு சூர்யாவைப் பிடிக்க ஆரம்பித்து இருந்தது. சென்னையில் வேலைபார்க்கும் கீர்த்தனா வார இறுதிகளில் சொந்த ஊருக்குப் போய் விட்டு வந்தால், அவள் செய்யும் முதல் காரியம் தொலைக்காட்சியில் பார்த்த நிகழ்ச்சிகளைப் பற்றிக்குறிப்பிட்டு அதை என்னை இணையத்தில் பார்க்கச் சொல்லக் கேட்பதுதான்.
“காப்பி வித் அனு பார்த்தியா, டைரக்டர் கௌதம் வந்து இருந்தாரு”
மென்பொருள் வர்த்தகம் பற்றி ஒருக் கட்டுரையை மதியத்திற்குள் அனுப்ப வேண்டிய அவசரத்தில்
“இனிமேல் நீ ஊருக்குப் போயிட்டு வரதுக்குள்ள நீயா நானா காப்பி வித் அனு, நடந்தது என்ன, சூப்பர் சிங்கர் , லொட்டு லொசுக்கு எல்லாம் பார்த்து வச்சிடுறேன் போதுமா” சொல்லிய உடனேயே கீர்த்தனாவின் முகம் வாடிப்போனதை குரலில் அறிந்து கொள்ள முடிந்தது.
“ நீ டீவில ப்ரொகிராம் எல்லாம் பார்க்கனும்கிறதுக்காக சொல்லல, கௌதமோட க்ளோஸ் ஷாப் ஷாட்ல கண்ணை மட்டும் மறைச்சிட்டு , இப்போதான் ஸ்மார்ட்டுன்னு எங்க அக்காக்கிட்ட சொல்லிட்டு இருந்தேன் தெரியுமா!!”
ஆண்கள் பக்கம் பக்கமாக அன்பைப்பொழியும் வசனங்கள் பேசுவது, பெண்களின் ஒருவரி வாக்கியத்திற்கு முன் அடிப்பட்டு போய்விடும். கட்டுரையாவது மண்ணாங்கட்டியாவது என எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு அவள் 48 மணி நேரம் வீட்டில் இருந்த கதையை 6 மணி நேரத்தில் கேட்டு முடித்தேன். அதன் பின்னர் எந்த பாடாவதியான நிகழ்ச்சியானாலும் சரி, பாடல் ஆனாலும் சரி அவள் சொன்ன அடுத்த நொடியே தேடிக்கண்டுபிடித்து பார்த்துவிடுவேன். யாராவது ஒரு ஆள் என் முகச்சாயலில் இருப்பார்கள், அதை என்னைப் பார்க்கச்சொல்லி அவள் ரசித்துக்கொள்வாள். ரசிப்புடன் இலவச இணைப்பாக அவளின் குழந்தை சிரிப்பும் கிடைக்கும்.
நிஜம் அருகில் இல்லாதபொழுது நிழல்களில் என்னைத் தேடி மகிழ்ச்சி அடைந்து கொள்ளும் கீர்த்தனா கடைசி வரை நிஜத்தை அவளின் பெற்றோர்களிடம் கொண்டுப் போய் சேர்க்கவேண்டும் நினைக்கவில்லை.
“கார்த்தி,உன்னப் பத்தி சொல்லி எங்க அம்மா கிட்ட இருந்து ரெண்டு சொட்டு கண்ணீர் வரதைப் பார்க்கிற கஷ்டம் உன்னைப் பிரிஞ்சு வாழுற கஷ்டத்தைவிட ஜாஸ்தி”
நான் எப்பொழுதும் கீர்த்தனாவின் பேச்சிற்கு மறுபேச்சு பேசியதில்லை. என்னால் அவள் பெற்றோருடன் பேசி சம்மதிக்க வைக்க முடியும் என்ற போதிலும், இவள் ஒருத்தியையாவது நான் காயப்படுத்தாமல் அனுப்பி வைக்கலாமே என்று முயற்சி எடுக்கவில்லை.
இதோ நாளை கீர்த்தனாவிற்குத் திருமணம். தானே தொலைபேசியில் அழைத்து என் வாழ்த்துக்களைப் பெற்றுக்கொள்வதாக மின்னஞ்சலில் தெரிவித்து இருந்தாள். அவளின் தொலைபேசி அழைப்பிற்காகத்தான் காத்துக்கொண்டிருக்கின்றேன்.
வழக்கம்போல அவளின் தொலைபேசி அழைப்பை எடுக்க முழு மணியும் அடிக்க விட்டு , நானே திரும்ப அழைத்தேன்.
“சொல்லுடா அம்மு, விஷஸ், உன் நல்ல மனசுக்கு நீ ஜம்முன்னு இருப்பே”
“தாங்க்ஸ்டா!! நீயும் சீக்கிரம் செட்டில் ஆகனும்டா!!!”
அதன் பின் என்ன பேசுவது என்று தெரியவில்லை. சில வினாடிகள் மௌனத்திற்குப்பின்
“கார்த்தி, அவருக்கும் உன் முகச்சாயல்தாண்டா” , இந்த முறை கீர்த்தனா பழைய குழந்தைப் புன்னகையைத் தரவில்லை.
13 பின்னூட்டங்கள்/Comments:
நல்லா எழுதியிருக்கீங்க வினையூக்கி.. சில இடங்கள்ல ரொம்ப ரசிச்சேன்!
Hi Vinay,
This post is really nice, As senshi said in some areana i enjoyed much
I hope this again u will change the story ending :-) keerthana dosen't like these kind of end up in ur stories la vinai.
And one more thing kindly acctivate open ID comment in ur blog, so that i can comment you throudh my wordpress account
Regards
Adaleru
(http://adaleru.wordpress.com)
சந்தடி சாக்குல நீங்க சூர்யா ஆகிட்டீங்களே!!
நல்லாயிருக்கு..!
கலக்கல் செல்வா..
உணர்ச்சிமயமாய், சந்தோஷமாய் போய் இறுதியில் சோகத்தில்...
நல்லாயிருக்குங்க கதை.
"கார்த்தி என் குழந்தையும் உன் முகச்சாயல்டா”ன்னு சொல்லாம விட்டாளே :)
என்ன சொல்தெனப் புரியவில்லை...யார் மீது கோபம் எனவும் புரியவில்லை...
ரொம்ப யதார்த்தமான கதை. கடைசி வரி சூப்பர்!:)
இந்த முறை கீர்த்தனா பழைய குழந்தைப் புன்னகையைத் தரவில்லை - மிச்சம் இருக்கும் ஒரு கடைசி குழந்தைப் புன்னகையாக இருக்கலாம்... அவள் வாழ்நாள் முழுமைக்கும் கார்த்திக்கிற்காக வைத்திருக்கும் ஒரு பொக்கிஷம் அது...
“தாங்க்ஸ்டா!! நீயும் சீக்கிரம் செட்டில் ஆகனும்டா!!!” - ஒரு அன்பின் ஏக்கம்
அதன் பின் என்ன பேசுவது என்று தெரியவில்லை. சில வினாடிகள் மௌனத்திற்குப்பின் --- மொழிகள் பொருளற்று போகும் தருணங்களில்
“கார்த்தி, அவருக்கும் உன் முகச்சாயல்தாண்டா” , - நீ(கார்த்திக்) உடன் இருக்கும் நம்பிக்கைகளில் ஒன்று
very nice
different thought
good one
i m dumbstruck -no words,
unmaiyana kadhal vitukodukkum,
kadhalipavarkalai, aanal kadhalai alla,
superb story !!!!!!
superb sir..
//"கார்த்தி என் குழந்தையும் உன் முகச்சாயல்டா”ன்னு சொல்லாம விட்டாளே ://
athu neenga understand pannikanum :)
//unmaiyana kadhal vitukodukkum,
kadhalipavarkalai, aanal kadhalai alla,
superb story !!!!!!//
it's true
super story 1 sec i am on silent @ the end of story.
"அவளின் குழந்தை சிரிப்பும் கிடைக்கும்"
குழப்புதே.
Post a Comment