Sunday, July 19, 2009

டிப்ளோமெடிக்காய் ஒரு முத்தம் - ஒரு நிமிடக்கதை

கீர்த்தனாவிடம் தொலைபேசியில் உரையாடும்பொழுதெல்லாம் நான் அதிகம் உபயோகப்படுத்தும் வார்த்தை “டிப்ளோமெடிக்”. இந்த சங்கேத வார்த்தைக்கு அர்த்தம் என்னைச் சுற்றி நண்பர்கள் இருக்கின்றனர், அதனால் இயல்பாக உரையாட முடியாது என்பதுதான். வெளிநாட்டில் படிக்கும்போது சிக்கனமாக இருக்கவேண்டும் என்று 15 க்கு 15 அடி அறையில் நான்கு பேர் தங்கி இருப்பதனால் வரும் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று.இதற்காகவே அர்த்த ராத்திரியில் எழுந்து இந்தியாவில் தூங்கிக்கொண்டிருக்கும் கீர்த்தனாவை எழுப்பி, பேசுவது உண்டு, அவள் எரிந்து விழுந்தாலும் கூட.

சுவீடன் நேரம் இரவு இரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது.கீர்த்தனாவின் தொலைபேசி அழைப்பிற்காகக் காத்துக் கொண்டிருந்தேன். சனி,ஞாயிற்று கிழமைகளில் வீட்டில் இருந்துவிட்டு திங்கட் கிழமை அதிகாலைப் பேருந்தைப் பிடித்து சென்னைக்கு வரும் வழியில் என்னிடம் வார இறுதிகளில் நடந்தவைகளை சொல்வது அவள் வழக்கம்.

தூங்காமல் மானாட மயிலாட இணைய தளம் ஒன்றில் பார்த்துக்கொண்டிருந்த அறை நண்பன் கிருஷ்ணமூர்த்தி தயங்கியபடியே என்னிடம் வந்து,

“கார்த்தி, நீ கீர்த்தனாகிட்ட பேசுறப்ப அடிக்கடி டிப்ளோமேடிக் யூஸ் பண்றியே அதோட அர்த்தம் என்ன?”

“டேய் சிபிஎஸ்ஈ ஸ்கூல்ல படிச்சிட்டு வந்த உனக்கு அர்த்தம் தெரியுதா? என்ன நக்கலா!!”

“நான் லிட்டரல் மீனிங் கேட்கல, உங்க ரெண்டு பேருக்குள் அது ஏதாவது கோட் வேர்டா!! கோட் வேர்டுக்கு என்ன அர்த்தம்”

“நத்திங், ரூம்ல நிறைய பேரு இருக்காங்க, அம்மு,செல்லம்,புஜ்ஜிக்குட்டின்னு எல்லாம் பேச முடியாது, டிப்ளோமெடிக்காத்தான் பேசுவேன் அப்படிங்கிறது... சரி நீ எதுக்கு கேட்டே!! நீ கூட அன்னக்கி டிப்ளோமெடிக்குன்னு உன் ஆளு உமாகிட்ட சொல்லிட்டு இருந்தியேடா”

கொஞ்சம் வழிதல் முகத்தோடு ”எங்களுக்குள்ள டிப்ளோமெடிக் நா கிஸ் நு அர்த்தம்” என்றான்.

”ராஜராஜ சோழன் நான் எனை ஆளும் காதல்” என கைபேசி மணி அடித்தது எடுத்து, கிருஷ்ணமூர்த்தி அறையில் இருப்பதால் சன்னமான குரலில் கீர்த்தனாவுடன் பேச ஆரம்பித்தேன்.

“அம்மு, ரெண்டு நாள் ரொம்ப மிஸ் பண்ணேன்”

“அப்படியா!!! இந்தா சாட்டர்டே மர்னிங் பியானோ, இது லஞ்சுக்கு, இது டின்னர் பியானோ” என தொடர்ந்து தொலைபேசியில் முத்தங்களைக் கொடுத்துக்கொண்டே இருந்தாள்.

12 பின்னூட்டங்கள்/Comments:

said...

யாரந்த கிருஷ்ணமூர்த்தி?

said...

ஹிஹி!

பியானோன்னா முத்தமா?

உக்காந்து யோசிப்பாங்களோ!

said...

நமக்கும் இருக்கு ...


சங்கோஜத்தினால் விளைந்த சங்கேத பாஷை.

said...

இந்த மாதிரி நிறைய கோட் வேர்ட்ஸ் சொல்லிக்கொடுங்க தலைவா! :)

said...

சன்னமான முறையில் ரூம் மேட்-அய்ய் தாக்கிடீங்க ... அது சரி யாரந்த கிருஷ்ணமுர்த்தி னு என்னக்கு மெயில் பண்ணுங்க

said...

பியானோ முத்தங்கள்!! :)

said...

பாலா. அது நானும் இல்ல. நிஹெவியும் இல்ல. நீங்களே கண்டுபிடிங்க !! :))

வினையூக்கி சார், கதை ரொம்ப நல்லா இருக்கு... ரெண்டு கிதார் உங்களுக்கு

said...

இந்த கிருஷ்ணமூர்த்தி யார்...

முத்தம் அன்பு இருந்தால்தான் கிடைக்கும்

said...

இது போல் பல சங்கேத வார்த்தைகளை அறிமுகப் படுத்த வேண்டுகின்றேன் !!!!!

;)))))

said...

haha... நல்லா இருக்கு!:)

said...

Sujatha used to say that the *first* line of a short story should pull the reader in. You achieved it with the title itself! great :-)

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்