Friday, July 17, 2009

அதோ அந்த வெள்ளைக் குதிரை - சிறுகதை

பலமுறைப் பார்த்து சலித்துப்போன இடங்களை நமக்குப் பிடித்தமான ஒருத்தியோடு வந்து சுற்றிக்காட்டும்பொழுது இருக்கும் சுவாரசியமே தனிதான்.

“அம்மு, இந்த பெஞ்ச்ல உட்கார்ந்துக்கிட்டுதான் உங்க அப்பாகிட்ட நம்ம லவ்வப் பத்தி எக்ஸ்ப்லெயின் பண்ணேன்” சொல்லிவிட்டு காதலித்துக் கரம்பிடித்த மனைவியோடு அந்த மரப்பலகையில் அமர்ந்தேன்.

“கார்த்தி, லைட்டெல்லாம் போட்டு, நல்லா மெயிண்டெயின் இந்த வழிய தான், டெய்லி காட்டுப்பாதைல வர்றேன், பயமாயிருக்குன்னு முன்ன சொன்னீங்களா?”


போன வாரம் வரை “டேய்..டெட்ட டேய்” என்று கூப்பிட்டுக்கொண்டிருந்த கீர்த்தனா ”ங்க” போட்டு மரியாதையாக கூப்பிடுவதும் நன்றாகத்தான் இருந்தது.

“அம்மு, விண்டர் நடுக்குற குளிர்ல வரப்பத்தான் பயம் தெரியும்...அந்த பேரலல் ரோடு போகுது பார்த்தியா.. அங்க தான் நீ ஒரு நாள் நாம பிரிஞ்சுடலாம்னு சொன்னப்ப உட்கார்ந்து அழுதேன்”

“அழுது அழுதே காரியத்தை சாதிச்சுக்கிட்டீங்க..பொறுக்கி..பொறுக்கி “

சுவீடனின் அழகான பூங்கா எனத்தேர்வு செய்யப்பட்ட இந்த ப்ரூன்ஸ்பார்க்கில், கீர்த்தனாவிற்கு ஒவ்வொரு இடமாக சுற்றுலா வழிகாட்டி போல சுற்றிக்காட்டிக்கொண்டிருந்தேன்.

”அங்கப் பாருங்க, சூப்பர் வெள்ளைக் குதிரை”

“அது நிஜக் குதிரை இல்லைமா!!! சிலை... அந்தக் குதிரைச் சிலையைப் ஒரு புருடாக் கதை.. சாரி புராணக்கதை இருக்கு”

“புராணம் எல்லாம் புருடா இல்லை” கீர்த்தனாவின் முகத்தில் கோபம் எட்டிப்பார்த்தது. அவளைப் பொருத்தவரை பழங்கால புராணக்கதைகள் எல்லாம் நடந்தவை,அது மதுரையைத் தாண்டி இருக்கின்ற சின்ன ஊரின் தலபுராணமாக இருந்தாலும் சரி, இந்த உறை பனி தேசத்தில் சொல்லபடுகின்ற செவிவழிக்கதையாக இருந்தாலும் சரி.

“ஓகே ஒகே... சிலைக்குப் பக்கத்திலே போய் அந்தக் கதையைச் சொல்றேன்” என அந்த ஏரிக்கு அருகில் இருக்கும் அந்த குதிரையிடம் அழைத்துப்போனேன்.

சிலையின் மேல் அவளை ஏற்றி புகைப்படங்களை எடுத்துக் கொண்டபின்,
“அம்மு, முன்ன ஒரு காலத்தில இந்த காட்டுல ஒரு வெள்ளைக்குதிரை இருந்துச்சாம்.. அந்தக் குதிரை இங்க விளையாட வர சின்னப்பசங்களை முதுகில ஏத்திக்கிட்டு ரவுண்ட் அடிச்சுக்காட்டுமாம்”

“ம்ம் அப்புறம்”

“ரவுண்ட் அடிச்சுட்டு இந்த ஏரில குழந்தைங்கள பிடிச்சு தள்ளி விட்டுருமாம்”

“அய்யோ, அப்புறம்”

”ம்ம் ,,, எத்தனை குழந்தைங்கள தண்ணீல தள்ளிவிடுதோ அதுக்கு ஏத்த மாதிரி குதிரை நீட்டமா வளருமாம்”

“இண்டரஸ்டிங்.. சொல்லுங்க”

“பின்ன ஒரு ராஜகுமாரன் வந்து அந்த குதிரையை கொன்னுட்டாராம், அந்த மிதலாஜிக்கல் ஸ்டோரி ஞாபகமா இந்தக் குதிரை சிலையை இங்கே தத்ரூபமா செஞ்சு வச்சிருக்காங்க”டிசம்பரில் அலுவலகத் தோழன் கிறிஸ்டோபருடன் இங்கு வரும்பொழுது அவன் இந்தக் கதையை என்னிடம் சொல்லி இருந்தான். அப்போது விளையாட்டாக நான் அளந்து பார்த்தேன். என் கையளவில் 16 சாண் வந்தது.

அந்த ஞாபகம் இப்பொழுது வர மீண்டும் என் கையை வைத்து குதிரையின் கழுத்துப் பகுதியில் இருந்து வால் ஆரம்பிக்கும் இடம் வரை அளக்க ஆரம்பித்தேன். இப்பொழுது இரண்டு விரற்கிடை அதிகமாக இருந்தது. அதிர்ச்சியாகவும் இருந்தது. உண்மையில் இந்த கற்குதிரை வளர்ந்து இருக்கின்றதா!!!

“அம்மு, கிட்டத்தட்ட ரெண்டு இஞ்ச் லெங்த் ஜாஸ்தி ஆயிருக்கு”

”சும்மா சொல்லாதீங்க”

“எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு எக்ஸ்காக்ட்டா சிக்ஸ்டீன் இருந்துச்சு”

“கார்த்தி, கம் ஆன், அப்போ விண்டர், கல் எல்லாம் கொஞ்சம் சுருங்கி இருக்கும், இப்போ 25 டிகிரில வெயில் சுள்ளுன்னு அடிக்குது.. எக்ஸ்பாண்ட் ஆகி இருக்கும்.. ரயில்வே டிராக் ல கேப் விட்டு , தண்டவாளம் சேர்ப்பாங்கன்னு நாம படிச்சிருக்கோம்ல”

“அட, மொக்கை காமர்ஸ் படிச்ச உனக்கு இவ்ளோ சயிண்டிபிக் அறிவா” என அவளை மெச்சிக்கொண்டேன்.

மறுநாள் காலை, தூங்கிக் கொண்டிருந்த கீர்த்தனாவிற்கும் சேர்த்து காப்பி போட்டு எடுத்துக்கொண்டு சுவீடனின் ஆங்கில செய்தி இணைய தளங்களில் ரோன்னிபே உள்ளூர் செய்திகளை மேய ஆரம்பித்தேன். எனக்குத் தலைச்சுற்ற ஆரம்பித்தது, முதல் செய்தியைப் படித்ததுமே!!!!

”போன வாரம் காணாமல் போன இரண்டு குழந்தைள்,பல இடங்களில் தேடுதலுக்குப் பின்னர் ப்ரூன்ஸ்பார்க் ஏரியில் இருந்து சடலங்களாக மீட்டெடுக்கப்பட்டனர்”

-------------

7 பின்னூட்டங்கள்/Comments:

said...

நல்லவேளை.. அந்த ராஜகுமாரன் நீங்கள் என்று சொல்லவில்லை..

“அட, மொக்கை காமர்ஸ் படிச்ச உனக்கு இவ்ளோ சயிண்டிபிக் அறிவா” - அழகான ஊடல்.. அருமை..

said...

மீண்டும் ஒரு அசத்தல் த்ரில் வினையூக்கியிடமிருந்து...

எங்கேர்ந்துய்யா மேட்டர புடிக்குறன்னு கேக்க வைக்குது ஒவ்வொரு கதையும் ;)

//“அம்மு, விண்டர் நடுக்குற குளிர்ல வரப்பத்தான் பயம் தெரியும்...அந்த பேரலல் ரோடு போகுது பார்த்தியா.. அங்க தான் நீ ஒரு நாள் நாம பிரிஞ்சுடலாம்னு சொன்னப்ப உட்கார்ந்து அழுதேன்”

“அழுது அழுதே காரியத்தை சாதிச்சுக்கிட்டீங்க..பொறுக்கி..பொறுக்கி “ //

மெய்யாலுமா.. சொல்லவேயில்ல. அண்ணி“அம்மு, விண்டர் நடுக்குற குளிர்ல வரப்பத்தான் பயம் தெரியும்...அந்த பேரலல் ரோடு போகுது பார்த்தியா.. அங்க தான் நீ ஒரு நாள் நாம பிரிஞ்சுடலாம்னு சொன்னப்ப உட்கார்ந்து அழுதேன்”

“அழுது அழுதே காரியத்தை சாதிச்சுக்கிட்டீங்க..பொறுக்கி..பொறுக்கி “

மெய்யாலுமா.. சொல்லவேயில்ல :)

said...

;)))

என்ன??? தொடர்ந்து ஸ்வீடன் க்ரைம் ஸ்டோரியா???

அடுத்த முறை ஒரு கிளுகிளுப்பான கதையை வேண்டி நிற்கும் உங்கள் வாசகன் !!!!!!!!

;))))

said...

நீங்கள் வாழ்க்கையை வாழ்கிறீர்கள்....
அதையே தள்ளி நின்னு தாராளமா இரசிக்கவும் செய்கிறீர்கள் என்பதை தவிர வேறு ஏதும் சொல்வதற்கில்லை...

said...

சொறிபவர்களுக்கு.. சொருகுவேன்!!

said...

முதல் முறையாக தங்கள் வலைபதிவுக்கு வந்துள்ளேன்... கதை நன்றாக உள்ளது....

said...

மீண்டும் ஒரு அசத்தல் த்ரில்!பூங்கொத்து !!