Saturday, February 28, 2009

Six Out of Six : கிரிக்கெட் வினாடி வினா

1. இவர் ஒரு இடது கை ஆட்டக்காரர். இவர் இரண்டு அணிகளுக்காக பன்னாட்டு டெஸ்ட் மட்டும் ஒரு நாள் ஆட்டங்களில் ஆடி இருக்கிறார். இங்கிலாந்து அணிக்கெதிராக தான் ஆடிய இரண்டு நாட்டு அணிகள் சார்பாகவும் டெஸ்ட் ஆட்டங்களில் சதமடித்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராகக் கூட இரண்டு அணி சார்பாகவும் விளையாடி உள்ளார். அதில் ஒரு ஆட்டத்தில் சதம் கூட அடித்துள்ளார். இந்த ஆட்டக்காரர் யார்?

2. மதம் முக்கிய பங்கு வகிக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம் பெற்ற முதல் இந்து இவர். விக்கெட் காப்பாளராக 9 டெஸ்ட் போட்டிகளிலும் 15 ஒரு நாள் ஆட்டங்களிலும் பாகிஸ்தான் அணி சார்பாக களம் இறங்கி இருக்கும் இவரின் உறவினர் பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் முக்கிய பந்து வீச்சாளர்? இந்த விக்கெட் காப்பாளர் யார்?

3. இவர் இந்திய நடுகள மட்டையாளர். ஒரு நாள் போட்டிகளி ஆறு சதங்கள் அடித்து இருந்தும், ஒரு நாள் அணியில் எட்டுவருடங்கள் இருந்தும், இடைப்பட்ட காலங்களில் மூன்று ஒரு நாள் உலககோப்பைக்கான அணியில் இடம்பிடிக்காத இந்த ஆட்டக்காரர் யார்?

4. இரண்டு நாட்டு அணிகளுக்காக ஆடுவது எவ்வளவு அரிதோ அதுபோல இரண்டு வெவ்வேறு விளையாட்டுகளில் பங்கேற்பது. கென்யா அணிக்காக விளையாடிய இந்த விளையாட்டு வீரர் , தனது நாட்டு அணிக்காக டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிகளிலும் ஆடி இருக்கிறார். இவர் யார்?

5. மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான டிரிடினாடில் பிறந்த இவர், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக தனது முதல் இரண்டு போட்டிகளை ஆடிய இவர் அடுத்த ஆட்டத்தை ஆட கிட்டத்தட்ட 7 வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் பல ஆட்டங்களில் உயிரைக் கொடுத்து ஆடி கேவலமான தோல்விகளை கவுரவமான தோல்விகளாக மாற்றிய இந்த இந்திய ஆட்டக்காரர் யார்?

6. நல்லதொரு துவக்க ஆட்டக்காரராக வந்திருக்கக்கூடிய இவர், 1998 காமன்வெல்த் போட்டிகளினால் காணாமல் போனது துரதிர்ஷ்டம். இந்தியாவின் சார்பில் இரண்டு பன்னாட்டு ஒரு நாள் ஆட்டங்கள் ஆடியிருக்கும் இவர் , இரண்டாவது ஆட்டதில் தான் அடித்த 89 ரன்களுக்காக ஆட்ட நாயகன் விருதைப் பெற்றவர். மலேசியாவில் நடைபெற்ற 98 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளுக்கான கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருந்த இவர், அங்கு சரியாக ஆடததால் அதன் பின் ஓரங்கட்டப்பட்டார். காமன் வெல்த் கிரிக்கெட் போட்டிகள் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தால் அங்கீகரிக்கப்படவில்லை.

கிரிக்கெட் அபிமானிகளே விடைகள் தெரிந்தால் பின்னூட்டமாக இடவும். விடைகளுக்கு இங்கே சொடுக்கவும்

நன்றி : கிரிக் இன்போ. கோம்

14 பின்னூட்டங்கள்/Comments:

said...

1.Kepler Wessels
2. Anil Dalpat Sonavaria
5. Rabin Singh

said...

இளா,
நீங்க சொன்ன மூன்றும் சரி

said...

1. கெப்ளர் வெசல்ஸ்
2. அனில் தால்பாட்
3. V.V.S லக்ஸ்மன்
4. சபா கரீம்
5. ராபின் சிங்
6. ககன் கோடா

said...

தமிழ் பிரியன் 4 வது விடைக்கான இரண்டாம் பெயர் சரி, முதல் பெயர் தவறு. மற்ற 5 கேள்விகளும் சிக்ஸர்.சரியானவை. நீங்கள்

said...

4. Asif Karim

said...

தமிழ் பிரியன்,
இப்போ நாலாவது பந்தையும் சிக்ஸருக்கு அனுப்பிட்டிங்க.. பர்பெக்ட் ஹிட்

said...

1. Kepler Wessels
2. Danish Kaneria மூலமா கூகுள் சொன்னது - Anil Dalpat
3. VVS
4. Asif Karim
5. Robin Singh
6. Gagan Khoda

said...

கப்பி பய,
நீங்களும் எல்லா பந்தையும் சிக்ஸருக்கு அனுப்பிட்டீங்க. சூப்பர்

said...

1. Kepler Wessels
2. Anil Dalpat,Danish Kaneria
3. VVS Laxman
4. Aasif Karim
5. Robin Singh
6. Gagan Khoda

நன்றி : கிரிக் இன்போ. கோம்

said...

நரேன் நீங்களும் கிப்ஸ் மாதிரி எல்லா பந்தையும் சிக்ஸருக்கு அடிச்சிட்டீங்க

said...

keppler wessles
Anil Dalpat Sonavaria
VVS Laxman
asif Karim
jimmy adams
Gagan Khoda

said...

அகில் பூங்குன்றன், 5 ஐ தவிர அனைத்தும் சரி

said...

(1) Kepler Wessels (Australia & South Africa).

(2) Anil Dalpat

(3) V.V.S Laxman

(4) Asif Karim

(5) Robin Singh

(6) Gagan Khoda

said...

King Viswa , Six out of Six