Wednesday, October 08, 2008

சினிமா டைட்டில் கார்டுகளும் சில சுவாரசியங்களும்

எத்தனை சுமாரானப் படமாக இருந்தாலும் அந்தப்படத்தின் டைட்டில் போடுவதில் இருந்து பார்க்கவில்லை என்றால் படம் பார்த்த ஒரு நிறைவு இருக்காது. பெரிய கதாநாயகர்கள் என்றால் அவர்களுக்கே உரிய பில்டப்புடனும் அவர்களின் பெயர் போடப்படும். முன்னனி இயக்குனர்கள் ஏதாவது ஒரு பஞ்சிங் காட்சியில் கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம் என போடுவார்கள். நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கும் படங்களில் உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடிக்கும் என டைட்டிலை ஆரம்பிப்பார்கள்.

யுடியூப் தளத்தின் வாயிலாக சிலபடங்களின் டைட்டில்களை உற்றுக்கவனித்ததில் சில சுவாரசியமான விசயங்கள் தட்டுப்பட்டன.


மணிரத்னம் இயக்கிய குரு திரைப்படத்தில், அபிஷேக்பச்சன் கதாநாயகனாக இருந்தாலும் மிதுன் சக்கரவர்த்தியின் பெயர் முதலாவதாக வரும்.

நாயகன் சல்மான்கான் பெயருக்கு முன்னமே நாயகி மாதுரி தீக்‌ஷித்தின் பெயர் ஹம் ஆப் ஹெய்ன் கோன் என்றப்படத்தில் வரும்.

இதே போல தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘அலைபாயுதே' திரைப்படம், ஷாத் அலி இயக்க விவேக் ஒபராய்,ராணி முகர்ஜி நடிக்க சாத்தியா என எடுக்கப்பட்ட பொழுது ராணிமுகர்ஜியின் பெயர் விவேக் ஒபராயிற்கு முன்னர் வரும்.

இதேப்படத்தின் தமிழ் வடிவத்தில் கதை ஆர்.செல்வராஜ் மற்றும் மணிரத்னம் எனக் காட்டுவார்கள்.

தமிழ் டைட்டில் காட்சி இங்கேஆனால் இந்தியில் மணிரத்னம் பெயர் மட்டுமே வரும். மூல தமிழ் வடிவமும் இந்திவடிவமும் காட்சிக்கு காட்சி அப்படியே இருக்கும்பொழுது எப்படி ஆர்.செல்வராஜ் பெயர் விட்டுப்போனது என தெரியவில்லை.

இந்தி டைட்டில் காட்சி இங்கே

11 பின்னூட்டங்கள்/Comments:

said...

Good!!!

said...

ஊருவிட்டு ஊரு போனா யூடியூப் ரொம்ப தேவைப் படுமே :)

said...

http://sivasinnapodi1955.blogspot.com

said...

நல்லா இருக்கு! அதே போல நிறைய கிரியேடிவ் விசயங்களும் டக்குன்னு மக்களை இம்ப்ரஸ் பண்ண வைக்கிறதுக்கு படாத பாடு படும் கலைஞர்களை நினைத்துப்பார்க்க வைத்தது!

எங்க ஊரு டி.ஆரு
போடும் அந்த,
கதை
திரைக்கதை
வசனம்
டைரக்‌ஷன்
இசை
நடிப்பு
(ஏதோ கொறையுது! )
இதெல்லாம் அதுக்கு பெறவு யாராலயும் போட முடியாதுங்கற சங்கதியில நாங்கெக்காம் காலரை தூக்கிவிட்டுப்போம்ல :))))))

said...

சில ஆங்கிலப் படங்களின் டைட்டில் கார்டுக்காகவே பெரும் உழைப்பு இருக்கும். குறிப்பாக சரித்திரப் படங்களைக் காட்டலாம்.

தமிழிலும், சமீப காலமாக வரைகலைப் பயன்பாடு அதிகமான பிறகு, டைட்டில் கார்டிலும் வித்தியாசம் காட்ட ஆரம்பித்துள்ளனர்.

said...

//சிலபடங்களின் டைட்டில்களை உற்றுக்கவனித்ததில்//

ரொம்பவே உற்று கவனிச்சிருக்கீங்க :))


//ஆனால் இந்தியில் மணிரத்னம் பெயர் மட்டுமே வரும்//

விட்டா நம்மாளுங்க எடுக்கற படங்களுக்கு மூலக்கதைக்கெல்லாம் கிரெடிட் கொடுக்கனும்னு கேப்பீங்க போல :))//முன்னனி இயக்குனர்கள் ஏதாவது ஒரு பஞ்சிங் காட்சியில் கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம்//

திரையில அவருக்கே இடம் இருக்காது...ஆனா கதைல ஆரம்பிச்சு காஸ்டியூம் வரைக்கும் இசைல ஆரம்பிச்சு இம்சை வரைக்கும் நாப்பது பக்க நோட்டுல எழுதற அளவுக்கு வேலை பார்த்து(?) டைட்டில்லயும் போடறது யாரு? எங்க டீஆரு!!

said...

நல்லா இருக்கு உங்க பதிவு...

said...

சுவையான கவனிப்பு & தொகுப்பு

said...

செம ஆராய்ச்சி மாமே...

said...

மணிரத்தினம் சாலக்குடியில் படப்பிடிப்பில் இருக்கிறார்.

கேட்டு சொல்லவா செல்வா?

said...

ஆஹா நன்றாகக் கவனிச்சிருக்கீங்க, இது சீனியாரிட்டிக்காக கொடுத்த கெளரவமாக இருக்கலாம். உதாரணம் சிவாஜி கணேசன், ரங்கராவ் நடித்திருந்த பழைய படங்கள் சிலதில் ரங்காராவ் பெயர் தான் முன்னர் இடம் பிடிக்கும்.

மணிரத்னம் விஷயம் மட்டும் புரியல ;-)