Eslöv to Hässleholm பெயர் குழப்பம் (சுவீடன் அனுபவங்கள் - 1 )
சுவீடன் வந்த செப்டம்பர் முதல்வாரத்தில் எனக்கான சக்கர நாற்காலியைப் பெற்றுக்கொள்வதற்காக எஸ்லோவ்என்ற ஊர் வரை செல்ல வேண்டியதாய் இருந்தது. ரோன்னிபே என்ற ஊரில் இருந்து இது கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ரயில் பிரயாணம். ஏதோ ஒரு தைரியத்தில் தனியாகவே போய் வாங்கி வந்துவிடலாம் என , ரயிலைப்பிடித்து கிளம்பியாகிவிட்டது.
இந்த ரயில் சுவீடனில் கார்ல்ஸ்க்ரோனா என்ற ஊரில் இருந்து டென்மார்க் தலைநகரம் கோபன்ஹேகன் வழியாக ஹெல்சின்ஹர் என்ற ஊர் வரை செல்வது. சுவீடனின் நாட்டுப்புற அழகை கண்ணாடி சன்னலுக்கு வெளியே ரசித்தபடியே, அடுத்த வருடம் கீர்த்தனாவுடன் இப்படி போகவேண்டும் என்ற எதிர்கால நினைவலைகளுடன் பயணம் சுவாரசியமாகவே சென்று கொண்டிருந்தது. ரயிலில் அடுத்த நிலையம் அறிவிப்பு எஸ்லோ என வந்தது. அட நாம் வரவேண்டிய ஊரு 20 நிமிடம் முன்னமே வந்துவிட்டதே என இறங்க ஆயத்தமானேன். இருந்தாலும் மனதில் சின்ன நெருடல்.பக்கத்தில் இருந்தவரிடம் , அடுத்த நிலையம் எஸ்லோவ் ஆ எனக்கேட்டபோது ஆமாம் என அவர் தலையாட்ட நானும் ரயிலை விட்டு இறங்கி ஒரு மரபெஞ்சை பிடித்து அமர்ந்து , ரயில் நகர்வதைப் பார்த்துக்கொண்டே, தலையைத் திருப்பி ரயில் நிலையத்தின் பெயரைப்பார்க்க அது Hässleholm என்று இருந்தது. அடடா, நாம் இறங்க வேண்டிய ஊர் Eslov ஆச்சே என யோசித்துக்கொண்டே, ரயில் பாதையை சரிப்பார்த்துக்கொண்டிருந்தவர்களிடம் இது எந்த ஊர் எனக்கேட்டபோது அவர்களும் Eslov க்குரிய உச்சரிப்புடனே யே ஊர் பெயரை சொன்னார்கள்.
நான் அந்த ஊரின் பெயரைப்படித்த போது ஹஸ்லஹோம் எனப்படித்தேன். ஸ்வீடிஷ் மொழி உச்சரிப்புப் படி அது எஸ்லஹோ என புரிந்தது. தவறான ரயில் நிலையத்தில் இறங்கி இருந்தாலும் பயம் ஏற்படவில்லை. சுவீடனில் கையில் காசு இல்லை என்றால் கூட ஊர் போய் சேர ரயில்நிலைய அதிகாரிகளே டிக்கெட் எடுத்துத் தருவார்களாம்.
எனக்கு அப்போது இருந்த ஒரே சந்தேகம், என் கையில் இருந்த பயணச்சீட்டு செல்லுமா என்பதுதான். ஒவ்வொரு மணிநேரத்திற்கும் ஒரு ரயில் நான் செல்லப்போகும் ஊர் வழியாக செல்லும் என்பது தெரிந்திருந்ததால் ரயில் நேரம் பற்றி கவலைப்படவில்லை.
அங்கு ரயில்பாதையில் வேலை செய்து கொண்டிருந்தவர்களிடம் என் சந்தேகத்தை நான் ஆங்கிலத்தில் கேட்க, அவர்களுக்கு ஆங்கிலம் சரிவர பேசவராததால் , ரயில்நிலைய அதிகாரியை அழைத்தனர். வந்த ஆண் ரயில் அதிகாரி ரயில் வரும் நேரத்தை மட்டுமே சொல்லிக்கொண்டிருந்தார், அதுவும் சுவீடிஷ் மொழியில். எனக்கு என் பயணச்சீட்டு செல்லுமா என்பது தான் சந்தேகம். அடுத்த சில நிமிடங்களில் ஒரு பெண் அதிகாரி ஆங்கித்தில் என் பயணச்சீட்டு செல்லும் என்பதை தெளிவாக்கி, என்னை ரயிலில் பத்திரமாக ஏற்றிவைத்தார்.
அடுத்த 20 நிமிடத்தில் நான் இறங்கவேண்டிய இடத்தில் சரியாக இறங்கி, எனக்கான சக்கர நாற்காலியைப் பெற்றுக்கொண்டு, மாலை ஊர் திரும்பினேன்.
புகைப்படங்களுக்கு இங்கே சொடுக்கவும்
-----
அடுத்தப்பதிவு பேருந்துக்காகக் காத்திருக்கையில் ஒரு ஈரானியப்பெண்ணுடன் உரையாடியது.
12 பின்னூட்டங்கள்/Comments:
me the firstuuu.. ;-)
//சுவீடனில் கையில் காசு இல்லை என்றால் கூட ஊர் போய் சேர ரயில்நிலைய அதிகாரிகளே டிக்கெட் எடுத்துத் தருவார்களாம்.//
இது நல்லா இருக்கே? ;-)
இப்படி மாட்டிக்கிட்டா எனக்கு கால் பண்ணுங்க..
ஆனால், எனக்கும் அவங்க மொழி தெரியாது. ;-)
வெளிநாடு போய் முதல் பதிவு நானும் முதன்முதலாய் உங்கள் பதிவுக்கு எண்ட்ர் ஆகுறேன்!
வாழ்த்துக்கள்:)
//.:: மை ஃபிரண்ட் ::. said...
me the firstuuu.. ;-)
//
என்னா பாஸ்ட்டு!
:)
கதை எழுதி ரொம்ப நாளாச்சே விக்கி, பயண அனுபவங்களோட அப்பப்ப கதைகளையும் எழுதிட்டு வாங்க...
அப்புறம், ஸ்வீடன் பெண்களை ரொம்ப விசாரிச்சேன்னு ஆங்கிலத்துலயே சொல்லுங்க... :)
me the 7thuuu i hope :))
////சுவீடனில் கையில் காசு இல்லை என்றால் கூட ஊர் போய் சேர ரயில்நிலைய அதிகாரிகளே டிக்கெட் எடுத்துத் தருவார்களாம்.///
inga othaipanga :D
அப்புறம், ஸ்வீடன் பெண்களை ரொம்ப விசாரிச்சேன்னு ஆங்கிலத்துலயே சொல்லுங்க... :)
Repeeeatai :)
vazhthukkal thala... kalakungo
வாழ்த்துக்கள்:)
வாங்க! தொடருங்க :)
hi anna just saw ur blogs... very nice....ofcourse b4 i read itself i knew it would be nice.. i don think ny one nw would read blogs of urs to know wat it would have, rather, they have expectations for which u have to stand for.. i mean u r been more noticable by ur fans... continue to the best nd reach ur goal.. my all wishes na... couldn catch ya ny wfere so i came here.. but after cuming here i don think i can catch u until u think abt this fan who has been with from the day she stepped out homw alone... bi na...
Post a Comment