தமிழ்மணம் நிர்வாகிகளுடன் சந்திப்பு, ஜூன் 15 2008
தமிழ்மணம் நிர்வாகிகளான தமிழ்சசி மற்றும் சொர்ணம் சங்கரபாண்டி ஆகியோர் சென்னைப்பதிவர்களை சந்தித்து தமிழ்மணம் பற்றி கலந்துரையாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பில் ‘விவசாயி' இளாவும் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார். நான் நீண்ட காலமாக சந்திக்க வேண்டும் என நினைத்திருந்த "பண்புடன்” ஆசிப் அண்ணாச்சியும் அங்கு வந்திருந்தது இன்ப அதிர்ச்சியாக இருந்தது.தனித்தனி அறிமுகங்களுடன் கலந்துரையாடல் ஆரம்பமானவுடன் , பதிவர்களின் தமிழ்மணம் தொடர்பான கேள்விகளுக்கு சொர்ணம் சங்கரபாண்டியும் தமிழ்சசியும் பதில் சொல்ல ஆரம்பித்தனர்.
(புகைப்படம் நன்றி: பத்ரி)
தமிழ்மணம் அறிவித்திருந்த விருது பற்றி ஏதும் பின்னறிவிப்பில்லையே என்றக் கேள்விக்கு மேம்பட்ட தொழில்நுட்பத்தில் தானியங்கியாக ஓட்டளிக்கும் முறையில் விருது வழங்கும் முறை முடிவுசெய்யப்பட்டிருந்ததாகவும் , ஆனால் தொழில்நுட்ப வேலைகள் குறித்த காலத்தில் முடிவுபெறாமையால் இந்த வருட இறுதிக்குள் தொழில்நுட்ப வேலைகள் முழுமை செய்யப்பட்டு , அடுத்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று சங்கரபாண்டி பதிலளித்தார்.
இடுகைகளின் வகைப்படுத்தல் இனிவரும் காலங்களில் முற்றிலுமாக நீக்கப்பட்டு குறிச்சொற்கள் அடிப்படையிலேயே வகைப்படுத்தப்படும் என்று தெளிவுப்படுத்தினர்.
பூங்கா பற்றிய எதிர்பார்ப்புகள் மீண்டும் ஒரு முறை அலசப்பட்டன. இந்த வருட இறுதிக்குள் வரும் என நிர்வாகிகள் உறுதி அளித்தனர்.
தனிப்பட்ட இடுகைகளைப் பரிந்துரைக்கும் முறை மாற்றப்பட்டு பயனர் கணக்குடன் கூடிய தெரிவுகள் முறைக் கொண்டுவரப்படும் என தமிழ்சசி அறிவித்தார்.
பின்னூட்டம் இட்டவர்களின் பெயர்களின் வீக்கம் அவர்கள் இட்ட பின்னூட்டத்திற்குநேர்மாறலானது என்றும் 'ம' திரட்டியை பிரபல்யப்படுத்தும் நோக்குடன் முகப்பில் வைக்கப்பட்டதாகவும் சசி மேலும் சொன்னார்.
தேன்கூடு போட்டிகள் போல போட்டிகள் அறிவித்தல் ஒரு கவனக்குவிப்பைக் கொண்டு வந்து பதிவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்து அது நல்ல தரமான பதிவுகளை கொண்டு வரக்கூடும் என்றக் கேள்விக்கு போட்டிகளை பதிவர்கள் குழுக்களாக அமைந்து நடத்திக்கொண்டால், அதற்கு தமிழ்மண முகப்பில் இடமளிக்கப்படும் என சங்கரபாண்டி உறுதி அளித்தார்.
சில இடுகைகள், சிலபதிவர்களின் ஒட்டு மொத்தப் பதிவுகளும் ஏன் நீக்கப்பட்டன என்றக் கேள்விக்கு சிலவிதிமுறைகளுக்குட்பட்டு அவை நீக்கப்பட்டன என்றும் ,இருந்த போதிலும் தனிப்பட்ட வகையில் அவர்களின் பதிவுகளை தான் படித்துவருவதாகவும் சொர்ணம் சங்கரபாண்டி கூறியபோது பார்வதி அரங்கில் நிரம்பி இருந்த பதிவர்களின் மத்தியில் சிரிப்பலை பரவியது.
பின்னூட்ட உயரெல்லை மீண்டும் கொண்டுவரப்படும் என்றும் தற்போது சோதனை வடிவம் இருப்பதால் பின்னூட்ட உயரெல்லை தற்காலிகமாக நீக்கப்பட்டிருப்பதாக கூறினார்.
தமிழ்மணம் இயங்காத காலங்களில் வலைப்பூக்களுக்கு கருவிப்பட்டையின் காரணமாக ஏற்படும் பிரச்சினை சரிசெய்வதாக தமிழ்சசி உறுதி அளித்தார்.
* லக்கிலுக் தமிழ்மணம் டீ-ஷர்ட்டில் வந்திருந்தர்.
* டி.பி.ஆர் ஜோசஃப் சாரை நீண்ட நாட்களுக்குப்பின்னர் பதிவர் சந்திப்பில் சந்திக்க முடிந்தது.
* இளவஞ்சி,வளர்மதி,டாக்டர் ப்ரூனோ,இளா ஆகியோரை முதன் முறையாக சந்தித்த பொழுது மனம் உவகைக் கொண்டது.
* புதுப்பதிவர்களான ஜிங்கார ஜமீன் மற்றும் அதிஷா ஆகியோர் கலந்துரையாடலை கவனமாக பின் தொடர்ந்து கொண்டிருந்தனர்.
* தமிழ்சசி முக அமைப்பில் இன்னொரு பிரபல பதிவரைப்போலவே அச்சு அசலாக இருந்தார்.
* இந்த வார தமிழ்மண நட்சத்திரம் ஜேகே வும் சந்திப்பில் கலந்து கொண்டது மிகப்பொருத்தமாக இருந்தது.
* சந்திப்பில் கலந்துகொண்ட ஏனைய பதிவர்கள் பத்ரி,ஐகாரஸ்பிரகாஷ், டோண்டு ராகவன்,ஜ்யோவ்ராம் சுந்தர்,பைத்தியக்காரன்,சுகுணாதிவாகர்,முரளிக்கண்ணன்,நந்தா,உண்மைத்தமிழன்,லிவிங்ஸ்மைல்வித்யா,
கடலையூர் செல்வம்,மக்கள் சட்டம் சுந்தர்ராஜன்,நடைவண்டி ஆழியூரான், ஜெயகார்த்தி,ராம.பாலன்,வாதி சரவணன்,ஆடுமாடு மற்றும் சோமன்.
* சந்திப்பை ஒருங்கிணைத்த பாலபாரதிக்கு நன்றிகள்.
தேநீர் அருந்திய பின்னர் பதிவர்கள் தனித்தனி குழுக்களாக கதைக்க ஆரம்பித்தனர். உறுதியளிக்கப்பட்ட விடயங்கள் விரைவில் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையில் ஒவ்வொருவராக விடைபெற்றனர்.வலைப்பதிவுலகில் மற்றும் ஒரு உற்சாகமான மாலைப்பொழுதாக தமிழ் வலையுலகம் அடுத்தக் கட்டத்தை நோக்கி மெல்ல நகர்கிறது,நகரும் என நம்பிக்கையோடு கழிந்தது.
16 பின்னூட்டங்கள்/Comments:
விரிவான் தகவலுக்கு நன்றி நண்பரே!
சொ.சங்கரபாண்டி மற்றும் தமிழ்சசி இருவரின் படங்களும் இல்லையே - கேட்டு வாங்கிப் பதிவில் இடுங்கள்!
என்ன வேகம் .
அதுக்குள்ள பதிவா..
வாவ்
அப்புறம் அங்க பேசின எல்லா விசயத்தையும் போட்டு கலக்கீட்டிங்க
சூப்பர்
ஏய்யாப்பா. .என்ன பாஸ்ட்...!
ஜெட் தோத்துடும் போல..., தமிழ்சசியை தமிழச்சி என நினைத்து சந்திப்புக்கு வந்து ஏமாந்து போன.. ஆழியூரான் கதையை சொல்லாததற்கு.. கண்டனங்கள். :)))))
பதிவர்களில் லிங்க் கொடுத்திருக்கலாம்.
செய்திக்கு நன்றி
பாலா சொன்னது போல எங்களின் ஆஸ்தான பதிவர் வினையூக்கிதான் அவர் எழுதுவார் என்று ஏற்கனவே சென்னார்.
செய்தியை உடன் பதிவு செய்துள்ளீர்கள் நன்றி
வினையூக்கி,
ஒன்றுகூடல் இனிதே நடந்து முடிந்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
சுடச்சுடச் செய்திகளைச் சேகரித்துத் தந்த உங்களுக்கும், ஒன்றுகூடலை ஒழுங்கு செய்த பாலபாரதிக்கும் நன்றிகள்.
கலந்து கொள்ள முடியாமல் போன குறையை நீக்கிவிட்டது உங்களின் உடனடி பதிவு
நன்றி
இது குறித்த என் இடுகை இங்குள்ளது
http://payanangal.blogspot.com/2008/06/15-06-2008.html
தம்பீபீபீபீபீ..
சுடச்சுட பதிவு போட்டுட்டே.. சூப்பர் பாஸ்ட்தான் போ..
நேற்றே பாத்தேன்.. ஆனாலும் டைப் செய்ய வசதியில்லாததால் சற்றுத் தாமதமாக இன்றைக்கு ஒரு கமெண்ட்..
கோவிச்சுக்காத ராசா..
//தமிழ்மணம் அறிவித்திருந்த விருது பற்றி ஏதும் பின்னறிவிப்பில்லையே என்றக் கேள்விக்கு மேம்பட்ட தொழில்நுட்பத்தில் தானியங்கியாக ஓட்டளிக்கும் முறையில் விருது வழங்கும் முறை முடிவுசெய்யப்பட்டிருந்ததாகவும் , ஆனால் தொழில்நுட்ப வேலைகள் குறித்த காலத்தில் முடிவுபெறாமையால் இந்த வருட இறுதிக்குள் தொழில்நுட்ப வேலைகள் முழுமை செய்யப்பட்டு , அடுத்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று சங்கரபாண்டி பதிலளித்தார்.
இடுகைகளின் வகைப்படுத்தல் இனிவரும் காலங்களில் முற்றிலுமாக நீக்கப்பட்டு குறிச்சொற்கள் அடிப்படையிலேயே வகைப்படுத்தப்படும் என்று தெளிவுப்படுத்தினர்.
பூங்கா பற்றிய எதிர்பார்ப்புகள் மீண்டும் ஒரு முறை அலசப்பட்டன. இந்த வருட இறுதிக்குள் வரும் என நிர்வாகிகள் உறுதி அளித்தனர்.
தனிப்பட்ட இடுகைகளைப் பரிந்துரைக்கும் முறை மாற்றப்பட்டு பயனர் கணக்குடன் கூடிய தெரிவுகள் முறைக் கொண்டுவரப்படும் என தமிழ்சசி அறிவித்தார்.
பின்னூட்டம் இட்டவர்களின் பெயர்களின் வீக்கம் அவர்கள் இட்ட பின்னூட்டத்திற்குநேர்மாறலானது என்றும் 'ம' திரட்டியை பிரபல்யப்படுத்தும் நோக்குடன் முகப்பில் வைக்கப்பட்டதாகவும் சசி மேலும் சொன்னார்.
தேன்கூடு போட்டிகள் போல போட்டிகள் அறிவித்தல் ஒரு கவனக்குவிப்பைக் கொண்டு வந்து பதிவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்து அது நல்ல தரமான பதிவுகளை கொண்டு வரக்கூடும் என்றக் கேள்விக்கு போட்டிகளை பதிவர்கள் குழுக்களாக அமைந்து நடத்திக்கொண்டால், அதற்கு தமிழ்மண முகப்பில் இடமளிக்கப்படும் என சங்கரபாண்டி உறுதி அளித்தார்.
சில இடுகைகள், சிலபதிவர்களின் ஒட்டு மொத்தப் பதிவுகளும் ஏன் நீக்கப்பட்டன என்றக் கேள்விக்கு சிலவிதிமுறைகளுக்குட்பட்டு அவை நீக்கப்பட்டன என்றும் ,இருந்த போதிலும் தனிப்பட்ட வகையில் அவர்களின் பதிவுகளை தான் படித்துவருவதாகவும் சொர்ணம் சங்கரபாண்டி கூறியபோது பார்வதி அரங்கில் நிரம்பி இருந்த பதிவர்களின் மத்தியில் சிரிப்பலை பரவியது.
பின்னூட்ட உயரெல்லை மீண்டும் கொண்டுவரப்படும் என்றும் தற்போது சோதனை வடிவம் இருப்பதால் பின்னூட்ட உயரெல்லை தற்காலிகமாக நீக்கப்பட்டிருப்பதாக கூறினார்.//
தம்பீபீ..
இதெல்லாம் என்ன? நாங்க என்ன தமிழ் எம்.ஏ. படிக்கவா வந்திருக்கோம்.. சென்னை பாஷைல பேசினால புரியறது கஷ்டமா இருக்கு.. இதுல இலக்கணத் தமிழா..?
கொஞ்சம் லேசுபாசா உடனே புரியறாப்புல எழுதியிருக்கலாம்..
//தமிழ்சசி முக அமைப்பில் இன்னொரு பிரபல பதிவரைப்போலவே அச்சு அசலாக இருந்தார்.//
யாருப்பா அது? டூப்ளிகேட் தமிழ் சசி..?
சூடான பதிவுக்கு நன்றி! :-)
டி.பி.ஆர் ஜோசஃப் சாரை நீண்ட நாட்களுக்குப்பின்னர் பதிவர் சந்திப்பில் சந்திக்க முடிந்தது. //
எனக்கும் உங்களைப் போன்ற பல இளம் பதிவர்களை மீண்டும் சந்திக்க முடிந்தது மிகுந்து மகிழ்ச்சியை அளித்தது வினையூக்கி.
இனி இயன்றவரை அனைத்து கூட்டங்களிலும் கலந்துக்கொள்வேன், அதாவது சென்னையிலிருந்தால்:-)
ஐயா,
என்னுடைய வலைப்பூவை பார்த்து அதை மேன்மைபடுத்த ஆலோசனை வழங்குகள்...விஜய்-கோவை
http://pugaippezhai.blogspot.com
ஐயா ,எனது முதல் பதிவினை பார்த்து கருத்து சொல்லவும்.
"கொங்கு மண்டலத்தில் ஒரு சுற்றுச்சுழல்
போராளியின் வெற்றிப்பேரிகை"
http://pugaippezhai.blogspot.com/2008/06/blog-post_3130.html
அன்புடன்,
விஜய்
கோவை
Hi
Let's come together on http://www.tamiljunction.com to bring all the Tamil souls unite on one platform and find Tamil friends worldwide to share our thoughts and create a common bond.
Let's also show the Mightiness of Tamils by coming together on http://www.tamiljunction.com
Post a Comment