விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கம் , புகைப்படங்கள்
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் , விழுப்புரம் மாவட்டம் வலைப்பதிவர் மன்றம் நடத்தும் வலைப்பதிவர் பயிலரங்கம், இன்று [மே,11 ஞாயிறு] இனிதே தொடங்கியது. சென்னையிலிருந்து மா.சிவக்குமார், பாலபாரதி, 'வினையூக்கி' செல்வா ஆகியோரும் பயிற்சி வகுப்பு எடுக்க அழைக்கப்பட்டுள்ளனர்
--------------------
மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.பொன்முடி துவக்கவிழாவில்
முனைவர் மு.இளங்கோவன் அறிமுக உரையில்
பதிவர் வினையூக்கி வலைப்பதிவர் பயிலரங்க ஆயத்த கட்ட வேலைகளில்
மா.சிவக்குமார் தமிழில் வலைப்பதிய வந்திருக்கும் ஆர்வலர்களுக்கு வலைப்பதிவு ஆரம்பிப்பதைப் பற்றி வகுப்பு எடுக்கிறார்.
2 பின்னூட்டங்கள்/Comments:
அமைச்சர் பொன்முடிக்கு தமிழில் வலைப்பதிவு மா.சிவக்குமார் தொடங்கிக் கொடுத்தார். வலைப்பதிவு முகவரி
ஐயா,வணக்கம். நன்றி.
பயிலரங்கிற்கு வந்துப் பயிற்று வித்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றி!
பயிலரங்கச் செய்திகளைச் சிறப்பாகத் தந்திருக்கின்றீர்கள்! அதற்காகவும் நன்றி!
தமிழநம்பி என்ற என் பெயரில் மூன்றாம் எழுத்து மெய்யெழுத்தன்று!
('ழ்' அன்று 'ழ' என்று இருக்க வேண்டும்)
தோழர் இரவிக்கார்த்தி போக்குவரத்துத் துறையில் பணியாளர். 'பொறியாளர்' என்றிருப்பதை மாற்றிவிடும்படிக் கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் நன்றி!
- தமிழநம்பி
Post a Comment