Sunday, March 09, 2008

தமிழ்மணத்திற்கு நன்றி


தமிழ்மணம் நட்சத்திர வானில், பெரிய நட்சத்திரங்களின் மத்தியில் நானும் ஒரு சிறிய நட்சத்திரமாக மின்ன வாய்ப்பளித்த தமிழ்மணம் தளத்திற்கும், தொடர்ச்சியாக ஆக்கப்பூர்வமான அபிப்ராயங்களைக் கொடுத்துவரும் வாசக பதிவர்/நண்பர்களுக்கும் , நட்சத்திரப்பதிவுகளை தேன்கூடு,தமிழ்ப்பதிவுகள்,தமிழ்வெளி,திரட்டி, கூகுள் வாசிப்பான்கள் மற்றும் இதர தளங்களின் வாயிலாகவும் வந்து வாசித்த அன்பர்களுக்கும் எனது மனதார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இந்த தமிழ்மண நட்சத்திர வார முதற்பதிவுக்கு வந்த வாழ்த்துப் பின்னூட்டங்கள் இந்த சிம்மாசனத்தின் மதிப்பை உணர்த்தின. சென்ற வாரம் நட்சத்திர இடுகைகளுக்கு தாங்கள் அளித்த வரவேற்பைத் தொடர்ந்து பெறும் வகையில் சுவாரசியமான பயனுள்ள தகவல்களுடனும், எனது எண்ண ஓட்டங்களை நல்ல கதைகளாகவும் தந்து மார்ச் 3 இல் உதித்த இந்த "வினையூக்கி" நட்சத்திரம் மேலும் மேலும் பிரகாசமடையும் உறுதி எடுத்து,வரும் வார நட்சத்திரம் "டுபுக்கு" அவர்களுக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டு விடைபெறுகிறேன்.

தமிழ்மண நட்சத்திரமாக எழுதிய இடுகைகளை வாசிக்க இங்கே சொடுக்கவும்

15 பின்னூட்டங்கள்/Comments:

said...

அருமையான வாரமாக இருந்தது வினையூக்கி..

பதிவுகள் ஒவ்வொன்றும் தனித்து, அவதானித்து, ரசிக்க கூடிய அளவில் வழங்கியிருந்தீர்கள்..

சின்ன நட்சத்திரம் என்றுச் சொன்னதற்காக..(நான் அப்படி நினைக்கவில்லை ..)

கடுக சிறுத்தாலும், காரம் குறைவதில்லை.. :)

said...

தங்களது எண்ணங்களையும்,கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டமைக்கும், மிக்க நன்றிகள்....

நிறைய அறிந்து கொண்டேன்....

said...

வீனையூக்கி சார்,

நட்சத்திரம் என்றால் நட்சத்திரம் தான் சிறிய பெரிய என்றெல்லாம் இல்லை.
நன்றாக நிறைவாக செய்தீர்கள்.

ஒரு சில இடுகைகளைப் படிக்க நேரம் கிடைக்கவில்லை.

பாராட்டுக்கள்.

அனானி பின்னூட்டத்திற்கு வழிவைக்காமல் போனதால் 'பேய்கள்' என்னிடம் முறையிட்டன. அவைகளின் வாழ்த்துக்களை புறக்கணித்துவிட்டீர்களாம்.
:)

said...

நல்ல வாரமாக இருந்தது எங்களுக்கும்..வாழ்த்துகள்..

said...

நல்ல வாரம் வினையூக்கி!!

(க்விஸ் எல்லாம் வெச்சு நம்ம பொழப்புல மண்ணைப் போட்டுட்டீங்க!!)

said...

வினையூக்கி, நட்சத்திரவாரம் நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்!

said...

நட்சத்திரவாரம் நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்!

said...

கண்ணன் சார் சொன்னாமாதிரி நட்சத்திரத்தில் சின்னது, பெருசுன்னு இல்லை.

ஆனால் எனக்கு ஒரு சின்ன வருத்தம். தமிழ்மணத்தில் சாதியையும், அரசியலையும் வைத்து எழுதுனாத்தான் பின்னூட்டங்கள் நிறைய வரும் போல. தரமான எழுத்துக்கு அவ்வளவா மதிப்பில்லை போலருக்கு.

ஆனால் அதிக பின்னூட்டங்களுக்கு மயங்கி அந்த சாக்கடையில் விழாமல்
நின்ற உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

said...

//கடுகு சிறுத்தாலும் காரம் குறைவதில்லை//
ர்ர்ர்ரிப்பீட்டேய்

மிகநன்றாக-புதிய விபரங்களை
அள்ளிவீசியமைக்கு வாழ்த்துக்கள்

said...

கலக்கல் வாரம் அண்ணாத்த!! வாழ்த்துக்கள்!!

said...

அருமையாக இருந்தது வினையூக்கு..வாழ்த்துக்கள்.என் வேலையையும் இந்த வாரம் கடினமாக்கிட்டீங்க.

said...

வினையூக்கி,

நல்ல வாரம். பேய் கதை தான் என்னை கொஞ்சம் பயமுறுத்திடுச்சி (நெசமா!).

அப்புறம், கொஞ்சம் தமிழ்:

வாழ்த்துக்கள் இல்லை வாழ்த்துகள் (வாழ்த்துக்'கள்' குடிக்கத் தான் முடியும். பிறருக்கு சொல்வது 'வாழ்த்துகள்' தான்)

நன்றிகள், கோடி நன்றிகள் போன்ற சொல் வழக்கு சரியானதல்ல. இது போன்ற சொற்கள் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு அப்படியே மொழிபெயர்ப்பதன் விளைவு.

'நன்றி' என்பதே சிறந்த சொல் வழக்கு. நன்றி என்பது தரம்(qualitative) சார்ந்தது, எண்ணிக்கை(quantitative) சார்ந்ததல்ல.

(ரொம்ப அறுக்கறேனோ... சும்மா சொல்லனும்னு தோனுச்சி.)

said...

@கோபி,
மிக்க நன்றி சார். உங்களுக்கு என் நன்றியையும் இனியநாளாக அமைய வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

@டிபிசிடி
நன்றி சார்.
@பேரரசன்
நன்றி பேரரசன்

@கோவி.கண்ணன்
பேய்களின் பயம் இருந்ததால் தான் அனானிப்பின்னூட்டம் திறக்கவில்லை. உங்கப் பாராட்டுக்கு நன்றி சார்.
@பாசமலர்
நன்றி பாசமலர்
@இலவசக்கொத்தனார்
நன்றிசார்.க்விஸ் எல்லாம் உங்க ஸ்டைல்தான்.

@சுப்பையா
சுப்பையா சார் , நீங்க சொன்ன மாதிரியே படித்து ரசித்தக் கதையைப்பகிரிந்து கொண்டேன்

@தமிழ் பிரியன்
உங்க தொடர்ச்சியான ஊக்கத்திற்கு நன்றி தமிழ்பிரியன்
@சிவஞானம்ஜி
மிக்க மிக்க நன்றி ஜி
@வசந்தன்
மிக்க மிக்க நன்றி வசந்தன்
@கப்பிபய
நன்றி ஜூனியர்
@டுபுக்கு
உங்களுக்கு வரும் வார நட்சத்திர வாழ்த்துகளையும் இங்கேயும் தெரிவித்து விடுகிறேன்.

said...

அன்பு நண்பா

இனிய பயனுள்ள வாரமாக இருந்தது.
இனிய நட்பும் கிடைத்தது.

வாழ்த்துகள்

நன்றி.

said...

சீனியர் .. கிரிக்கெட் மற்றும் பேய் வாரம் நல்ல இருந்தது :-) நீங்க சில கதைகளுக்கு பயன்படுத்திய சில களங்கள் அருமை , அதை நன்றாகவே கையாண்டும் இருந்தீர்கள் .. எல்லாவற்றிலும் தனியே பின்னூட்டம் போடவில்லைஎனிலும் படித்துக்கொண்டே இருந்தேன் .. ஊக்க பின்னூட்டங்களைப்பற்றி தனி மடலிடுகின்றேன் .. தொடருங்கள் :-)