Thursday, January 31, 2008

"Hussey" சகோதரர்கள்


லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்து கடந்த இரண்டு வருங்களாக கிரிக்கெட் ஆடுகளத்தில் கலக்கிவருபவர் ஆஸ்திரேலியாவின் மைக்கெல் ஹஸ்ஸி. முதல் தர போட்டிகளில் 15000 க்கும் அதிகமான ரன்களைகுவித்தும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடிக்க முடியாமல் காத்துக் கொண்டிருந்த மைக்கெல் எட்வர்ட் கில்லின் ஹஸ்ஸிக்கு, ஜஸ்டின் லேங்கரின் காயம் காரணமாக அணியில் இடம்பெற வாய்ப்புக்கிடைத்தது.



கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் தனது இரண்டாவது டெஸ்ட்போட்டியில் சதமடித்து தனது வருகையை உலகிற்கு அறிவித்த ஹஸ்ஸி எட்டு சதங்கள், எட்டு அரைசதங்களுடன் இரண்டாயிரம் ரன்களை மிகவிரைவாகக் கடந்து இருக்கிறார். இதில் சிறப்பம்சம் என்னவெனில் இவரின் சராசரிதான்... பிராட்மேனுக்கு அடுத்தபடியாக 78 யை இருபத்திரண்டு டெஸ்ட் ஆட்டங்களுக்குப்பின்னரும் வைத்திருப்பது பெரிய விசயமாகக் கருதப்படுகிறது.
டெஸ்ட் போட்டிகள் மட்டுமன்றி ஒருநாள் போட்டிகளிலும் அதிரடியாக ஆடி விரைவாக ரன்குவிப்பவதிலும் மைக்கெல் ஹஸ்ஸி வல்லவர்.வலுவான பேட்டிங் வரிசை கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய அணியில் பின்வரிசை ஆட்டக்காரராக களமிறங்கும் ஹஸ்ஸிக்கு பெரும்பாலான சமயங்களில் ஆட வாய்ப்பு இல்லாத போதும் , சந்தர்ப்பம் கிடைக்கும்பொழுதெல்லாம் சிறப்பாக ஆடி அணியை இக்கட்டான சூழலில் இருந்து மீட்டெடுப்பார். இவரை பெரும்பாலும் ஆட்டமிழக்க செய்வது கடினமான பணியாகும்.பேட்டிங் செய்ய வாய்ப்புக்கிடைத்த 55 ஆட்டங்களில் 23 முறை ஆட்டமிழக்காதவராக வெளிவந்து இருக்கிறார்.



கடந்த உலகக்கோப்பை ஆட்டங்களில் கடைசி சில ஓவர்கள் மட்டுமே பேட்டிங் செய்ய வாய்ப்புக்கிடைத்தாதால் விரைவாக ஆட முயற்சித்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது மட்டுமே ஹஸ்ஸியின் கிரிக்கெட் வாழ்வில் சுமாரான விசயமாகும்(உலகக்கோப்பை சராசரி 17.4).
மிஸ்டர். கிரிக்கெட் என அன்பாக அழைக்கப்படும் நான்கு ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் தலைவராக இருந்துள்ளார்.இந்த நான்கு ஆட்டங்களில் வெற்றி ஏதும் பெறாவிடினும் முக்கியம வீரர்கள் யாரும் இல்லாதபோதும் இவர் அணியை வழிநடத்தியவிதமும் , பேட்டிங்கும் நினைவுகூறத்தக்கது.



இவரைப்போலவே இவரது இளைய சகோதரர் டேவிட் ஜான் ஹஸ்ஸியும் நீண்ட காத்திருப்பிற்குப்பின் ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்து இருக்கிறார். 31வது வயதில் இந்தியாவுடன் ஆன T20 ஆட்டத்திற்காக இவர் அணியில் இடம்பிடித்து இருக்கிறார். அண்ணனைபோல் இல்லாமல் வலது கை ஆட்டக்காரரான டேவிட் ஹஸ்ஸி அதிரடியாக ஆடுவதில் கெட்டிக்காரர். இங்கிலாந்து கவுண்டி ஆட்டம் ஒன்றில் எட்டுபந்துகளில் ஏழு சிக்ஸர்களை அடித்துள்ள இவர் உள்ளூர் 44 T20 ஆட்டங்களில் 141யை ஆட்டவேகமாக (Strike rate) வைத்துள்ளதால் அணியில் இடம்பெற்றிருக்கிறார்.

ஆஸ்திரேலியாவில் விக்டோரியா அணிக்காக ஆடும் இவர் சமீபத்தில் நிறைவு பெற்ற KFC T20 போட்டிகளில் விக்டோரியா அணி கோப்பையைக் கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்து இருக்கிறார்.

இந்த ஹஸ்ஸி சகோதர்கள் மூன்று வருடங்களுக்குப்பிறகு ஒரே அணியில் ஆட இருக்கின்றனர். மைக்கெல் ஹஸ்ஸி மேற்கு ஆஸ்திரேலியாவுக்காக ஆடுபவர்.
வாக் சகோதரர்கள், ஷேன் லி, பிரட் லீ சகோதர்களைத் தொடர்ந்து இவர்களும் கலக்குவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது.

1 பின்னூட்டங்கள்/Comments:

said...

ஆஸ்திரேலியாவுக்கு மட்டும் பெவன், ஹஸ்ஸின்னு வரிசையா வர்றாங்க :))

டேவிட் ஜான் ஹஸ்ஸியும் களத்துல இறங்கறாரா..ம்ம்..அவர் ஆட்டத்தை பார்த்ததில்ல..இந்த மேட்ச்ல பார்ப்போம்..