பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் - 3 வலைப்பதிவர்களின் கூட்டுத் தொடர்கதை
முந்தையப் பகுதிகள் :
பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் - 1 எழுதியவர் சிறில் அலெக்ஸ்
பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் - 2 எழுதியவர் லக்கிலுக்
இனி
"அன்புள்ள அண்ணா சுரேஷுக்கு" இந்த வாக்கியம் அவனது மூளையில் சுத்தியலால் அடிப்பது போல திரும்ப திரும்ப வந்து கொண்டே இருந்தது.மின்னஞ்சலை எரிச்சலுடன் படித்து முடித்துவிட்டு , அலுவலக தோட்டத்தில் கையில் சிகரெட்டுடன் வலம் வந்து கொண்டிருந்தான். ஒரு மணி நேரத்தில் ஒரு பாக்கெட் சிகரெட்டுகளை
உள்ளிழுத்துவிட்டு மீண்டும் இருக்கைக்கு வந்தமர்ந்தான். மீண்டும் ஒரு முறை அந்த மின்னஞ்சலை வாசிக்க ஆரம்பித்தான்.
அன்புள்ள அண்ணா சுரேஷுக்கு,
நான் உங்களை அண்ணா என்று அழைப்பது உங்களுக்கு வியப்பாய் இருக்கலாம். ஏன் அதிர்ச்சியாகக்கூட இருக்கலாம். மன்னிக்கவும். தங்களது சூசகமான வார்த்தைகளின் மூலம் தங்களது விருப்பத்தை அறிந்தேன். உங்களது பெயரும், பேச்சுக்களும் எனது பள்ளிக்காலத்தில் என்னுடன் படித்த சுரேஷையே நினைவுப்
படுத்துகின்றன. சுரேஷ் என் உண்மையான சகோதரன் போல் என் மேல் பிரியம் வைத்து இருந்தான். பள்ளி இறுதிக்குப் பின்னர் அவனை தொடர்பு கொள்ள முடியவில்லை. உங்களை இணையத்தில் சந்தித்து அரட்டையடிப்பது அவனுடனே பேசுவதைப் போல உணருகின்றேன்.
உங்கள் நட்பு தொடரும் என்ற நம்பிக்கையுடன்
ஆம்பல்
இந்த முறை நல்ல ஆங்கிலத்தில் எழுதிய மின்னஞ்சலை வாசித்துவிட்டு ஒரு பெருமூச்சுடன் சுரேஷ் ஆர்குட்டினுள் புகுந்தான். ஆம்பலுடனான நட்பு இங்குதான் அவனுக்கு ஆரம்பமானது. ஒரே ஒரு ஸ்கிராப் இருக்க ஸ்கிராப் புக் பக்கம் சென்றான். அது ஆம்பல் உடையது.
"அண்ணா, சுரேஷிற்கு காலை வணக்கம்" தமிழ் வாக்கியம் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யப்பட்டிருந்தது.
ஆம்பலின் மின்னஞ்சல் முகவரி கிடைத்ததில் இருந்து , அவளின் ஆர்குட் புரைபல் பக்கமே அவன் போனதில்லை. அவளின் புரைபலின் பக்கம் நீண்ட நாள் கழித்து அப்போது சென்றான். அவனைத்தவிர ஆம்பலுக்கு வேறு நண்பர்கள் அங்கு இல்லை. அவன் மட்டுமே இருந்தான். ஆர்குட்டில் இருந்து லாக் அவுட் செய்யலாம் என்று நினைத்து எலிக்குட்டியை இழுத்து சென்றபோது search கட்டத்தைக் கண்டவுடன் அவனுக்கு சடாரென ஏதோ தோன்றியது.
சுரேஷிற்கு இது ஒரு வியாதி போல, நாளுக்கொருமுறை தன் பெயரையோ தனக்கு நெருங்கியவர்களின் பெயரையோ கூகிளில் அடித்து தேடுவது. என்னமோ தெரியவில்லை ஆம்பலுடன் நெருக்கமான இந்த பூஜ்ய உறவின் நாட்களில் ஒரு முறைக்கூட அப்படி அவன் செய்ய நினைப்பு வரவில்லை. அடுத்து வரப்போகும் அதிர்ச்சிகளைப் பற்றி அறியாமல்
ஆர்குட் தேடுக கட்டத்தில் "Aambal" என்று அடித்து search பொத்தானை சொடுக்கினான்.
16 ஆர்குட் புரைபல் பக்கங்கள் வந்து விழுந்தன. அதைப் பார்க்கையில் அவனுக்குத் தலைச்சுற்றலே வந்தது, ஆம் அனைத்திலும் "ஆம்பலின்" புகைப்படங்கள். ஒவ்வொன்றாய் திறந்து பார்த்துக் கொண்டே வந்தான். அடுத்த அதிர்ச்சி அதனுள் காத்திருந்தது.
ஆம் ஒவ்வொன்றிலும் ஒரே ஒரு நண்பர் தான். அதுவும் சுரேஷ் என்ற பெயரில்
மட்டும். 15 யும் பார்த்து முடித்துவிட்டு கடைசியாக இருந்த ஆம்பலின் பக்கத்தை திறந்தான். அவன் கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை. இதில் இரண்டு நண்பர்கள். ஒன்று முந்திய பக்கங்களில் இருந்தது போன்று எதோ ஒரு சுரேஷ்.
இன்னொன்று
...............................
............................
....................................
அது அவனின் மனைவியின் புரபைல். ஒரு கணம் அவன் இதயமே வெடித்துவிடும் போல் இருந்தது.
தொடரும்
அடுத்தப் பகுதியை எழுதப் போவது மகரந்தம் ஜி.ராகவன். (ஜிரா... ஜிரா... ஜிரா ....எக்கோ எபெக்ட்ல )
7 பின்னூட்டங்கள்/Comments:
புது ட்விஸ்ட் கலக்கல் :)
அடுத்து ஜிராவை அழைத்ததும் கலக்கல்
:)
எனக்கும் இதயமே வெடித்துவிடும் போல் இருக்கிறது....!!
ஜிரா.... அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்....
ஆகா...இத்தனைத் திருப்பங்களைக் கொடுத்துட்டு என்னையக் கூப்புட்டுட்டீங்களா! சரி. வந்துருவோம். கொஞ்சம் நேரம் குடுங்க. போட்டுருவோம்.
ஓரளவுக்கு 3 பேரின் ஸ்டைலுமே ஒரே மாதிரியாக அமைந்திருந்தது இத்தொடரின் சிறப்பு!
கலக்கியிருக்கிறீர்கள் வினையூக்கி!!!
நான்காவது பாகம் இங்கெ...
http://gragavan.blogspot.com/2007/11/4.html
திருப்பத்திற்க்கு மேல் திருப்பங்கள்.......சூப்பர்!
ரொம்ப விறு விறுப்பாக இருந்தது படிக்க!
பயங்கர திருப்பம் - ஒவ்வொரு பாகத்திலும் நசென்ற திருப்பம் - கலக்கிட்டீங்க வினையூக்கி
Post a Comment