Tuesday, June 19, 2007

பாஸ்வேர்டு - ஒரு நிமிடக்கதை

அலுவலக வேலைகளை முடித்து விட்டு வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்த ரம்யா, கணவனின் அழைப்பு வர, கைத்தொலைபேசி எடுத்து

"ஹலோ, கார்த்தி சொல்லுங்க"

"ரம்யா, ஒரு ஹெல்ப் பண்றீயா!!! என்னோட ஜிமெயில் ஐடி ஓபன் பண்ணி அந்த,யுஎஸ் கன்சல்டன்சி மெயிலை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்துட்டு வந்துடுறியா, நான் ஆபிஸ்ல எடுக்க மறந்துட்டேன், "

"சரி, கார்த்தி, பாஸ்வேர்ட்?"

"jeni22091980"

"சரி, நான் எடுத்துட்டு வந்துடுறேன்" அழைப்பைத் துண்டித்த பிறகு அந்த பாஸ்வேர்டு அவளை நெருடியது... பிரிண்ட் அவுட் எடுத்த பிறகு அவனது மெயிலை லாக் அவுட் செய்தாள்.

"ஜெனி, கார்த்தியின் கல்லூரித் தோழியல்லவா!!! .. ம்ம்ம் இருக்கலாம்..
எதுவாக இருப்பினும் இதைப் பற்றி கார்த்தியிடம் கேட்க கூடாது" என்று முடிவு செய்துவிட்டு, தனது மின்னஞ்சலை திறந்து "mohan143" என்பதை "karthiramya" என மாற்றிவிட்டு வீட்டிற்கு கிளம்பினாள்.

32 பின்னூட்டங்கள்/Comments:

said...

வினையூக்கி எப்படி உங்களுக்கு மட்டும் அருவி மாதிரி பொங்கி வழியுது கற்பனை? சரி 143ன்னா என்ன?

(நான் ஆசை படம் பார்க்கலை)

said...

Ha ha ha... !!!

said...

நல்லா இருக்கு.

said...

நல்லா இருக்குதுங்க வினையூக்கி!

said...

//சரி 143ன்னா என்ன? //

I HATE YOU.

(ஹிஹி..! நானும் ஆசை படம் பார்க்கலை)

said...

தல,
அந்த 'ஜெனி***' தானே, வினையூக்கி பாஸ்வோர்ட்டும் கூட?! ;)

Anonymous said...

அதென்ன என் பேரோட 143 சேர்த்திருக்கீங்க? யார் அந்த ரம்யா?

P. மோகன்

said...

அருமை வினையூக்கி.....

சற்றே வேறு மாதிரி எனக்கு தோன்றிய முடிவு கீழே படிக்கவும்.....
==========================
"சரி, கார்த்தி, பாஸ்வேர்ட்?"

"ஜெனி22091980"

"சரி, நான் எடுத்துட்டு வந்துடுறேன்" அழைப்பைத் துண்டித்த பிறகு அந்த பாஸ்வேர்டு அவளை நெருடியது... பிரிண்ட் அவுட் எடுத்த பிறகு அவனது மெயிலை லாக் அவுட் செய்தாள்.

"ஜெனி, கார்த்தியின் கல்லூரித் தோழியல்லவா!!! .. ம்ம்ம் இருக்கலாம்..
எதுவாக இருப்பினும் இதைப் பற்றி கார்த்தியிடம் கேட்க கூடாது" என்று முடிவு செய்துவிட்டு, தனது மின்னஞ்சலை திறந்து "மொகன்143" என்பதை "கர்திரம்ய" என மாற்றிவிட்டு வீட்டிற்கு கிளம்பினாள்.

==============
வீ எம் தொடர்ச்சி ================

அதே நேரம் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ரம்யாவின் பாஸ்வேர்ட் mohan143 என தெரிந்துக்கொன்டு கடந்த ஒரு வாரமாக உள்ளுக்குள்ளே புழுங்கி அழுது தீர்த்த கார்த்தி .. அவளையும் அதே அவஸ்த்தைக்குள்ளாக வேண்டும் என திட்டம் போட்டு அலுவலகம் விட்டு வரும் வேளையில் ரம்யா020981 என்ற தன் பாஸ்வேர்டை "ஜெனி22091980" என்று மாற்றி.........வீட்டிற்கு வந்து அவளுக்கு போன் செய்து....

ஏதோ ஒரு குரூர திருப்தியில் தான் மறக்காமல ஏற்கனவே ப்ரின்ட் எடுத்து வந்த யு.எஸ் கன்சல்டன்சி மெயிலை படிப்பதில் மூழ்கிப்போனான் கார்த்தி.

==வீ எம்

Anonymous said...

adap paavieeghala ovvoruthan Password laiyum oru vaalve maayam story olinjutu irukum pola iruke..

said...

//வீ. எம் said...
அருமை வினையூக்கி.....

சற்றே வேறு மாதிரி எனக்கு தோன்றிய முடிவு
//
நன்றி வீ.எம். உண்மையில் இந்த ஒரு நிமிடக்கதைக்கு உங்களின் முடிவு ஒரு சிறுகதைக்கான சுவாரசியத்தைக் கூட்டி தந்து உள்ளது. மிக்க மிக்க நன்றி.

said...

வினையூக்கிதான் வி.எம். மா?
ஆனா ப்ரொபைல் வேற வேறயா இருக்கே..........?

said...

//siva gnanamji(#18100882083107547329) said...
வினையூக்கிதான் வி.எம். மா? ஆனா ப்ரொபைல் வேற வேறயா இருக்கே..........? //

சிவஞானம்ஜி என்ன இது இப்படி எல்லாம் குண்டைத் தூக்கி போடுறீங்க... கதைப் பத்தி ஒன்னுமே சொல்லலியே!!!

said...

// நந்தா said...
வினையூக்கி எப்படி உங்களுக்கு மட்டும் அருவி மாதிரி பொங்கி வழியுது கற்பனை? சரி 143ன்னா என்ன?
(நான் ஆசை படம் பார்க்கலை) //

நன்றி நந்தா.... உண்மையிலேயே நீங்க ஆசை படம் பார்க்கலியா!! ஹிஹி நானும் பார்க்கல... 144 னா தடையுத்தரவு... 143 அதுக்கு முன்னாடி எதாவது உத்தரவா இருக்கும். நீங்க நாமக்கல் சிபி கமெண்டு பார்த்திங்களா!!
143 - i hate you

said...

// Anonymous said...

adap paavieeghala ovvoruthan Password laiyum oru vaalve maayam story olinjutu irukum pola iruke.. //

நன்றி அனானி. ஹிஹி நீங்க சொல்றது 90% கரெக்ட்.

said...

// Anonymous said...
அதென்ன என் பேரோட 143 சேர்த்திருக்கீங்க? யார் அந்த ரம்யா?
P. மோகன//

ஹிஹிஹி... உங்களுக்கு உண்மையிலேயே யாருன்னு தெரியாதா!!!

said...

//நாமக்கல் சிபி said...
//சரி 143ன்னா என்ன? //
I HATE YOU.
(ஹிஹி..! நானும் ஆசை படம் பார்க்கலை) //

தலைவா நன்றி... ரொம்ப நாள் கழிச்சு ஆவிகளை கூட்டி வராம தனியா வந்து இருக்கீங்க...

said...

//பொன்ஸ்~~Poorna said...
தல,
அந்த 'ஜெனி***' தானே, வினையூக்கி பாஸ்வோர்ட்டும் கூட?! ;) //
பொன்ஸ், கிட்டத்தட்ட கரெக்டு. :) :)

said...

// Jeyaganapathi said...
Ha ha ha... !!! //
நன்றி ஜெயகணபதி

said...

//வெங்கட்ராமன் said...
நல்லா இருக்கு.//
நன்றி வெங்கட்ராமன்.

said...

வினையூக்கி,

Excellent!


வீ எம்,

Wow! Great!

said...

கதை நன்றாக இருக்கிறது வினையூக்கி. தேசிபண்டிட்டில் இணைத்துள்ளேன். நன்றி!!

http://www.desipundit.com/2007/06/19/password/

said...

I also enjoyed :)

said...

கதை நன்றாக இருந்தது
வி.எம்.மின் பின்இணைப்பு ஜோர்.
ஒரு புது முயற்சி செய்து பாருங்களேன்:
நீங்களும் வி.எம்.மும் இப்படியே எழுதிப்பார்க்கலாமே.
எங்களுக்கு நல்ல கதைகளும் கிடைக்கும்; ஆவி பயமும் இருக்காது...

ரம்யா said...

//
அதென்ன என் பேரோட 143 சேர்த்திருக்கீங்க? யார் அந்த ரம்யா?

P. மோகன்
//மோகன்,

என்னை மறந்துட்டீங்களா? :(

அதான்! எந்நேரமும் மைக்கும் கையுமா அலைஞ்சே என்னை மறந்துட்டீங்க போல!

said...

dubuku desipundit இல் இணைத்தமைக்கு நன்றி

said...

நன்றி, சிவபாலன், சிவஞானம்ஜி, பா.பா மற்றும் ரம்யா

Anonymous said...

TAMIL ENTERTAINMENT SITE:
=========================

தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்


சூரியன் வானொலி.
தமிழன்
சூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........

ரேடியோ.ஹாப்லாக்.காம்
( radio.haplog.com )

சன் டிவி..............
கே டிவி..............
தமிழன்
உங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......

டிவி.ஹாப்லாக்.காம்
( Tv.Haplog.Com )

HINDI ENTERTAINMANT SITE:
=========================

Watch more than 250 A to Z High Quality HIndi Movies.

More than 250 A to Z Mp3 Songs with Download options.

Hindi Comedy and Movie Songs in DIVX Format.

http://hindi.haplog.com

TELUGU ENTERTAINMENT SITE:
==========================

Telugu Movies, Video Songs, Comedy and LIVE GEMINI TV...

http://telugu.haplog.com


MALAYALAM ENTERTAINMENT SITE:
============================

MALAYALAM MOVIES, SONGS and LIVE SURYA TV............

http://malayalam.haplog.com


KANNADA ENTERTAINMANET SITE:
===========================

Decent No. of Kannada Movies for live watch....

http://kannada.haplog.com

Also..........

http://photos.haplog.com
http://music.haplog.com

More.........................

தமிழ்.ஹப்லாக்.காம் Telugu.haplog.com Hindi.haplog.com Malayalam.haplog.com kannada.haplog.com music.haplog.com radio.haplog.com tv.haplog.com
(Tamil.Haplog.com)

said...

sooper thala!

said...

No Comments Anna!
:)

Anonymous said...

TAMIL ENTERTAINMENT SITE:
=========================

தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்


சூரியன் வானொலி.
தமிழன்
சூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........

ரேடியோ.ஹாப்லாக்.காம்
( radio.haplog.com )

சன் டிவி..............
கே டிவி..............
தமிழன்
உங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......

டிவி.ஹாப்லாக்.காம்
( Tv.Haplog.Com )

HINDI ENTERTAINMANT SITE:
=========================

Watch more than 250 A to Z High Quality HIndi Movies.

More than 250 A to Z Mp3 Songs with Download options.

Hindi Comedy and Movie Songs in DIVX Format.

http://hindi.haplog.com

TELUGU ENTERTAINMENT SITE:
==========================

Telugu Movies, Video Songs, Comedy and LIVE GEMINI TV...

http://telugu.haplog.com


MALAYALAM ENTERTAINMENT SITE:
============================

MALAYALAM MOVIES, SONGS and LIVE SURYA TV............

http://malayalam.haplog.com


KANNADA ENTERTAINMANET SITE:
===========================

Decent No. of Kannada Movies for live watch....

http://kannada.haplog.com

Also..........

http://photos.haplog.com
http://music.haplog.com

More.........................

தமிழ்.ஹப்லாக்.காம் Telugu.haplog.com Hindi.haplog.com Malayalam.haplog.com kannada.haplog.com music.haplog.com radio.haplog.com tv.haplog.com
(Tamil.Haplog.com)

said...

jeni22091980....

ha ha ha..am enjoying it..!!!!

said...

நன்றி ஞானேஷ் அண்ணே!!