Saturday, June 09, 2007

அறை எண் 420 - சிறுகதை

கார்த்தி எப்போ கோயம்புத்தூர் வந்தாலும் இப்படித்தான் ஆகுது, போன தடவை இண்டர்சிட்டி 3 மணி நேரம் லேட்டு. இன்னக்கி இந்த வெஸ்ட்கோஸ்ட் 2 மணி நேரமா, டிரெயின் திருப்பூருக்கு முன் ஏதோ ஒரு இடத்தில் போட்டுட்டான். டிரெயின்ல தனியா வந்த சில பேரு பொடி நடையா இறங்கி அரைக் கிலோமீட்டர் தள்ளி இருக்கிற ரோட்டுல போய் பஸ் பிடிச்சுப் போயிடலாம்னு போயிட்டாங்க. மூட்டை முடிச்சுகளோட அப்படி இறங்கிபோனதுல பொண்ணூங்களும் இருந்தாங்க. டிரெயின்ல புத்தகம் விற்கிற பையன் அவன் அருகில் வைத்து விட்டு போன சில புத்தகங்களை எடுத்துப் புரட்டலானான். “நம்பிக்கை" விலை 25 ரூபாய் என போட்டிருந்ததைப் பார்த்துக் கொண்டிருக்கையில்,

"சார் இன்னக்கி எதுவுமே விக்கல, வாங்கிக்கங்க, சார் , 20 ரூபாய் போதும்"

நம்பிக்கையை 5 ரூபாய் குறைத்து வாங்கியதில் அவனுக்கு ஒரு சின்ன சந்தோசம்.

காசை வாங்கிக் கொண்டு அவன் நகரவும் டிரெயின் கிளம்பவும் சரி ஆக இருந்தது. புத்தகத்தை மேலொட்டமாக மேய்ந்தான், பல துணுக்குகளுடன் புத்தகம் கட்டுரைகளின் தொகுப்பாக இருந்தது.

டிரெயின் கோயம்புத்தூர் 10.30 மணிக்கு வந்து சேர்ந்தது. கார்த்தி எதுவும் லக்கேஜ் எடுத்து வரவில்லை. ஆமாம் இன்று ஒரு இரவு பிறகு அவன் வாழ்க்கையை முடித்துக் கொள்ளப் போகிறான். காரணம், என்னங்க வழக்கமான காரணம்தான் காதல் தோல்வி, மனிதனால் கடைசி மூச்சுவரை ஜீரணித்துக் கொள்ளமுடியாத தோல்வி.. அவனாலும் முடியவில்லை... மூச்சை நிறுத்திக் கொள்ள முடிவெடுத்துவிட்டான்.
----------------------
அந்த பிரபல லாட்ஜில்,

“சார் இன்னக்கி ஒரு நைட் மட்டும் ரூம் கிடைக்குமா?”

“சாரி சார், சீசன் டைம் எல்லா புக் ஆயிடுச்சு, ஃபேமிலியா வந்தவங்களுக்கு கூட ரூம் இல்லைன்னுதான் சொல்லிட்டோம்..”

“நான் ஏற்கனவே இங்க தங்கியிருக்கேன் சார், பிளீஸ் திஸ் ஈஸ் மை பேவரிட் லாட்ஜ் நான் வேற எங்கேயும் போக விரும்பல" பாக்கெட்டிலிருந்து முன்பு தங்கி இருந்ததற்கான ரசீதைக் கார்த்தி காட்டினான்.

ஜெனியுடன் கோயம்புத்தூர் வந்திருந்த போது கூட இங்குதான் அவளுடன் தங்கினான்.

“கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க , யாராவது வெக்கேட் பண்ணால் தரேன்.. பட் ஐ யம் னாட் ஸ்யூர்"

ஒரு 20 நிமிடங்களுக்குப் பிறகு ரிசப்ஷனில் இருந்தவர் மிகுந்த யோசனையுடன் ரும் நெம்பர் 420க்கான சாவியை எடுத்து அவனிடம் கொடுத்தார். முழுப்பணத்தையும் கட்டிவிட்டு சாவியை வாங்கி கொண்டு தனது ரூம்முக்கு கார்த்தி போன பிறகு, ரூம் பாய்,
“என்ன சார் அந்த 420 ரூமையா கொடுத்தீங்க, கடைசி ஒரு வருசத்துல அந்த ரூம்ல தங்கியிருந்த 10 பேர் தற்கொலை பண்ணிக்கிட்டாங்க, முதலாளி அந்த ரூமை யாருக்கும் கொடுக்க வேண்டாம்னுல சொன்னார்"

“இந்த ஆளு அடிக்கடி இங்க தங்கி இருக்காரு, ரெகுலரான ஆளு, பயப்படாதே எதுவும் நடக்காது".

“இல்லை சார், முதலாளி அந்த ரூம்ல ஆவி எல்லாம் உலவுதுன்னு சொல்லி இருக்காரு"
-------------------------
மறுநாள் காலை,
“சார், ரூம் 420ல இருப்பவரு இன்னும் பிரேக்ஃபாஸ்ட் கேட்கல, டைம் இப்பொவே 10, போன் அடிச்சாலும் எடுக்கல, பயமாயிருக்கு சார்"

“நேத்து நைட்டு லேட்டாதானே ரூம் கொடுத்தோம், தூங்கிக்கிட்டு இருப்பாரு"
என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே படிக்கட்டில் கார்த்தி இறங்கி வந்து கொண்டிருந்தான்.

“பார்த்தியா, ஆள் வந்துட்டாரு" ரிசப்ஷனிஸ்ட் கிசுகிசுப்பான குரலில் ரூம் பாயிடம் சொல்லிவிட்டு "4வது புளோர் போ" என்று அவனை விரட்டினார் .

கார்த்தி ரிசப்ஸனிஸ்ட்டை பார்த்து ஒரு குறும்பான புன்னகை செய்துவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.

கார்த்தி போன பிறகுதான் ரிசப்ஸனிஸ்ட்டுக்கு ஞாபகம் வந்தது, ஒரு இரவுதானே தங்குவதாக சொல்லி ரூம் எடுத்தான், ரூம் சாவியையும் கொடுக்கலியே!!!, நேற்றிரவு எடுத்து வைத்திருந்த "நம்பிக்கை" புத்தகம் அவன் போகும் கையில் வைத்திருந்தானா!!! வைத்திருந்தது போல் தான் இருக்கு..உறுதியா சொல்ல முடியலியே!!!!

அறை எண் 420லிருந்து போன் அழைப்பு வருவதை போர்டு காட்டியது..
திகிலுடன் "ஹலோ ரிசப்ஷன்"
-----------------------

16 பின்னூட்டங்கள்/Comments:

மஞ்சூர் ராசா said...

அதென்ன 420......

என்னமோ சொல்ல வர்றீங்க. ஆனா என்னான்னு தான் புரியலெ...

ம்ம்ம் அந்த ரூம் கிடைக்குமான்னு நான் முயற்சி பண்றேன். எந்த லாட்ஜுன்னு சொன்னீங்க....?

siva gnanamji(#18100882083107547329) said...

·¦¿÷ððÔþ´ôøìˆ‹ìfðºúŒîùôýõ,.¦À¡þ¯öü¦
øìˆ‹ìfðºõýôùîŒú

இம்சை said...

Puriyalaye aiyya

வினையூக்கி said...

இம்சை,
உண்மையிலேயே உங்களுக்கு புரியலியா!! அதாவது கதையின் நாயகன் கார்த்தி தற்கொலை செய்து கொண்டானா!! இல்லை அந்த புத்தகம் படித்து மனம் மாறினானா!! கடைசியில் அவன் போவது உண்மையா இல்லை ஆவியா என்பது எல்லாம் படிப்பவர்களின் கற்பனைக்கே விடப்படுகிறது

வினையூக்கி said...

சிவஞானம்ஜி நீங்க எழுதி இருக்கும் ஃபாண்டு ஒன்னுமே புரியல... கிரிப்டோகிராபி ஸ்டைலில் எழுதி இருக்கீங்களா

வினையூக்கி said...

மஞ்சூர் ராசா,
பதிவர் சந்திப்புக்கு கோவை போன போது லாட்ஜில் தூக்கம் வரமால் யோசித்துக் கொண்டிருந்த போது இந்த கதை தோனியது. 420 எண் வைத்தது திரட்டிகளில் தலைப்பை "catchy" யா வைத்து ஆள் பிடிக்கத்தான்

none said...

தற்கொலை பண்றதுக்கு முன்னாடி நம்ம கார்த்தி அந்த "நம்பிக்கை" புக் படிச்சாரா. அது நான் எழுதின புக் தானுங்கோ! (http://poopoornima.blogspot.com/2006/11/blog-post.html )
அதுல 'லாட்ஜ்ல் பணம் கட்டாமல் தப்பிப்பது எப்படி?" அப்படின்னு ஒரு கடைசி சாப்டர் இருந்துதா. அதை படிச்சிட்டு இருக்கும்போது தான் அந்த புக் ல வினையூக்கி அப்டினு ஒரு பிளாக் இருப்பதா போட்டிருந்ததை பார்த்தார். அதுல இருக்குற இந்த மாதிரி திகில் கதையெல்லாம் படிச்சிட்டு, நாமளும் ஏன் இப்படி திகில் கதைகள் எழுதி 4 பேரை complaint..... sorry sorry...comment போட வைக்ககூடாதுன்ற முடிவுக்கு வந்து லாட்ஜ் ல இருந்து escape ஆகிட்டார்!

நீங்க தானே அண்ணா, கதை "படிப்பவர்களின் கற்பனைக்கே விடப்படுகிறது " அப்படின்னு சொல்லிருக்கீங்க? என் கற்பனை எப்பிடி? super இல்ல?

ஹி ஹி ஹி!

என் பிளாக் ல வந்து chat பண்றீங்களா? இனிமேல் நானும் உங்களுக்கு இப்படி தான் comment போடப்போரேன்.

வினையூக்கி said...

பூர்ணிமா..வாங்க வாங்க நல்லா இருக்கீங்களா? உங்க கடைசி பதிவு கும்மி சாட்ல பார்த்தது...

ஹிஹி... வினையூக்கியோட திகில் கதைகளைப் படிச்சுட்டு மீண்டும் தற்கொலையே பண்ணிக்கலாம்னு வேற லாட்ஜுக்கு கார்த்தி போயிடுறான்.

Anonymous said...

இங்கே கும்மி அடிக்கலமா!!!

Anonymous said...

மே ஐ கம் இன் பிளீஸ்

Anonymous said...

மீண்டும் திகில் கதைகள் எழுத ஆரம்பித்துவிட்ட "மொக்கை கதை மன்னன்" வினையூக்கிக்கு எங்கள் போலி ஆவியுலகம் சார்பில் விரைவில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்படும்.

siva gnanamji(#18100882083107547329) said...

இது எப்படி இருக்கு?
எது?
சிஜி பின்னூட்டம்!
"அறை எண் 420" மாதிரியே இருக்கு!
அப்டீன்னா......?
கதையும் புரியல்லே;பின்னூட்டமும் புரியல்லே....
{TSCHANJAL ல் வேண்டுமென்றே பின்னூட்டமிட்டேன்)

கப்பி | Kappi said...

//பதிவர் சந்திப்புக்கு கோவை போன போது லாட்ஜில் தூக்கம் வரமால் யோசித்துக் கொண்டிருந்த போது இந்த கதை தோனியது.//

இது தான் ரூம் போட்டு யோசிக்கறதா? :))

Unknown said...

intha mathiri aavi kadaikal ellam niraiya yeluthuveenga pole.... anyways, vithiyasama irunthathu...

வினையூக்கி said...

நன்றி விஜி

Anonymous said...

TAMIL ENTERTAINMENT SITE:
=========================

தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்


சூரியன் வானொலி.
தமிழன்
சூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........

ரேடியோ.ஹாப்லாக்.காம்
( radio.haplog.com )

சன் டிவி..............
கே டிவி..............
தமிழன்
உங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......

டிவி.ஹாப்லாக்.காம்
( Tv.Haplog.Com )

HINDI ENTERTAINMANT SITE:
=========================

Watch more than 250 A to Z High Quality HIndi Movies.

More than 250 A to Z Mp3 Songs with Download options.

Hindi Comedy and Movie Songs in DIVX Format.

http://hindi.haplog.com

TELUGU ENTERTAINMENT SITE:
==========================

Telugu Movies, Video Songs, Comedy and LIVE GEMINI TV...

http://telugu.haplog.com


MALAYALAM ENTERTAINMENT SITE:
============================

MALAYALAM MOVIES, SONGS and LIVE SURYA TV............

http://malayalam.haplog.com


KANNADA ENTERTAINMANET SITE:
===========================

Decent No. of Kannada Movies for live watch....

http://kannada.haplog.com

Also..........

http://photos.haplog.com
http://music.haplog.com

More.........................

தமிழ்.ஹப்லாக்.காம் Telugu.haplog.com Hindi.haplog.com Malayalam.haplog.com kannada.haplog.com music.haplog.com radio.haplog.com tv.haplog.com
(Tamil.Haplog.com)