Sunday, May 20, 2007

கோவைப் பதிவர் பட்டறை - ஒரு (முழுமையான!!) பார்வை


பொதுவாக வெளியூர் நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது, நிகழ்ச்சி நடக்கும் இடத்தை சிரமமில்லாமல்/ அலைச்சல் இல்லாமல் கண்டுபிடிக்க வேண்டுமே என்ற ஒரு கவலை இருக்கும்.
பெரும்பாலும் அந்தக் கவலைப்படியே இடத்தைக் கண்டுபிடிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். ஆனால் இந்த பட்டறை நடந்த இடத்தை வெளியூர் பதிவர்கள் சிரமமில்லாமல் எளிதில் சென்றடைய முடியும் இடமாக தேர்வு செய்தமைக்காக நிச்சயம் ஓசை செல்லாவைப் பாராட்டவேண்டும்.(வெளியூர் பதிவர்கள் வந்து தங்குவதற்கும் ஓசை செல்லா ஏற்பாடு செய்து இருந்தார்).

சுமார் 9 மணியளவில் பட்டறை நடக்கும் இடத்தை அடைந்தபோது, "Stand -in Captain" பாலபாரதி ஏற்கனவே தனது ஒருங்கிணைப்பு குழுவினரோடு வந்து இருந்து நிகழ்ச்சிக்கான வேலைகளை மும்முரமாக செய்துகொண்டிருந்தார். ஓசை செல்லாவிற்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் வீட்டில் இருந்தபடியே நிகழ்ச்சிக்கான வேலைகளை கைத்தொலைபேசியின் வழியாக வழிகாட்டிக் கொண்டிருந்தார்.

முதலில் டெல்லியிலிருந்து சென்ஷி, பெங்களூரிலிருந்து "எ-கலப்பை" முகுந்த், சென்னையிலிருந்து உண்மைத்தமிழன், உள்ளூர்காரர்கள் உதயசெல்வி, கோவை ரவீ, சுப்பையா வந்து சேர சுய அறிமுகங்கள் ஆரம்பமாயின. வின்செண்டு, தாமோதரன் சந்துரு , செகுவேரா, ஜெயகுமார், லிவிங் ஸ்மைல் வித்யா, ராஜாவனஜ், பாரதி ராஜா, மோகன் தாஸ் ஆகியோர் ஒவ்வொருவராக அறிமுகங்களுடன் ஊடாக சேர்ந்து கொண்டனர். இதில் பாரதிராஜா தனக்கு மதியம் தேர்வு இருந்தபோதும் வலைப்பதிவர்களை சந்திக்கும் ஆர்வத்தில் வந்ததாகக் கூறினார்.
பெண் பதிவர் உதயசெல்வி சுய அறிமுகங்களின்போது உண்மைத்தமிழனின் பெயரை மட்டும் ஆச்சர்யத்துடன் மீண்டும் கேட்டபோது, பின்னால் இருந்து

"அப்போ நாங்க எல்லாம் யாரு?" குரல் வர(அட நம்ம தழலார் வந்துட்டாக!!?) ஏற்பட்ட சிரிப்பொலி அடங்க சில நொடிகளானது. உதயசெல்வி தனது ஆரம்ப கால தட்டச்சு அனுபங்களை சுவையாக பகிர்ந்து கொண்டார். சென்ஷிக்கான பெயர்க் காரணமும் நட்பின் அருமையைப் பறைசாற்றும் விதமாக இருந்தது.

அதைத் தொடர்ந்து சுப்பையா ஒரு வாரத்தில் கணினி கற்றுக் கொண்ட விதத்தை அவருக்கே உரித்தான நடையில் சொன்னது சுவாரசியமாயிருந்தது. சிறப்பு அழைப்பாளார்கள் பாமரன் மற்றும் இசைக் கலைஞர் ஆறுமுகம் வர பட்டறை களைக் கட்ட ஆரம்பித்தது.

பாமரனுக்கும் ஆறுமுகத்துக்கும் நடந்த கலந்துரையாடலில் ஆரம்பகால சினிமா பற்றிய சில சுவாரசியமான தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.தாதாசாகிப் பால்கேக்கு முன்னரே தமிழரான சாமிக்கண்ணு பேசாப்படத்தை எடுத்துள்ளார் என்ற விவரத்தை ஆறுமுகம் சொன்னபோது பெருமையாக இருந்தது. பாடல்கள் இல்லாத படம், பின்னனி இசையின்றி திரைப்படம், சாஸ்திரிய சங்கீதம் தெரிந்தவர்கள் தான் இசைக்கலைஞர்களா? என வாதப் பரிமாற்றங்கள் சூடு பிடிக்கத்துவங்கியது.

முடிவிலா இசைப் பற்றிய விவாத முடிவில்,சுப்பையா சார் சிறப்பு அழைப்பாளர் ஆறுமுகத்துக்கும்,வலையுலக "ஹீரோ?!! செந்தழலாருக்கும்" , பாலபாரதிக்கும் அவர்களின் சேவையைப் பாராட்டி பொன்னாடைப் போர்த்தி மரியாதை செய்தார்.

கடைசிவரை இருந்து அனைத்து அமர்வுகளையும் கூர்ந்து கவனித்த திரு.வின்செண்ட், மரபணுக்களை மாற்றி உருவாக்கப்பட்ட நெல் விதைகளைப் பயன்பாடுத்தலில் எப்படி விவசாயிகள் பகடைக்காய்களாக அரசாங்கத்தாலும் பன்னாட்டு நிறுவங்களாலும் பயன்படுத்தப் படுகின்றனர் என்ற தகவலை சொல்லி வருத்தப்பட்டார். .

இதனிடையில் ஆங்கில நாளிதழ்களிலிருந்து வந்திருந்த புகைப்பட கலைஞர்கள், நம் பதிவர்களை பல கோணங்களில் படமெடுத்தனர். ஒளிப்பதிவும் செய்யப்பட்டது. சுடச்சுட நேரிடைப் பதிவுகளும் வலையில் ஏற்றப்பட்டன.
அடுத்து பேராசிரியர் ரமணி, ஊடக ஆதிக்கத்தை , புகைப்படம் எடுக்கப்பட்ட விதத்தை சிலேடையாக குறிப்பிட்டு தனது உரையில் பின்நவீனத்துவத்தை எளிதில் புரியும் வகையில் அறிமுகப் படுத்தினார்.ராஜாவனஜ், மோகன் தாஸ், முகுந்த், மா.சி, மிதக்கும் வெளி முதலானோர் கேள்விகள் வைக்க அதன் விளக்கங்களுடன் பின்நவீனத்துவ அமர்வு நிறைவானது. இந்த அமர்வின் நிறைவில் வலையுலகின் பின்நவீனத்துவ கவிஞர் மிதக்கும் வெளி சுகுணதிவாகருக்கு செந்தழல் ரவியின் சார்பாக நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

தேநீர் இடைவெளியின் போது கதை எழுதுவது பற்றியும், அதை சுவாரசியமாக்குவதைப் பற்றியும் தனது எண்ணங்களை மோகன் தாஸ் சக வலைப்பதிவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

ஹிந்து ஆங்கிலப் பத்திரிக்கையின் நிருபர் வலைப்பதிவர்களை, தமிழ் கலந்த ஆங்கிலத்தில் பேட்டி எடுக்க நம்மவர்கள், ஆங்கிலம் கலந்த தமிழில் பேட்டி அளித்தனர். அந்த பெண் நிருபரும் மிக ஆர்வமாக பெரும்பாலன வலைப்பதிவர்களிடம் தனித்தனி கேள்விகள் வைத்து அவர்களைப் பற்றிய குறிப்புகளும் எடுத்துக் கொண்டார். லிவிங் ஸ்மைல் வித்யாவுடனான நிருபரின் உரையாடல் தெளிவான புரிதலை வலைப்பதிவர்களிடம் வைத்தது.


அடுத்ததாக பாமரன் தனது சொல்ல மறந்த கதையாக ஆரம்ப கால கணினி பயிற்சி முறைகளையும்,தான் கணினி கற்றுக் கொண்டமைக்கான காரணத்தையும் "செவிக்கு உணவாக " உணவு இடைவேளைக்கு முன் பேசினார்.


உணவு இடைவேளைக்குப் பின் "எ-கலப்பை" முகுந்த் பல்வேறு தட்டச்சு முறைகளை பயன்படுத்தும் விதங்களை அவற்றை கணினியில் நிறுவும் முறைகளை எளிய முறையில் மிகவும் கலகலப்பாக அழகாக சொல்லிக் கொடுத்தார். நிறையப்பதிவர்கள் முன்னர் அறிந்திராத அதியன், தமிழ்விசை பற்றியும், மற்றும் யாஹூ, ஜிடாக் என அனைத்து சாட் தளங்களும் ஒருங்கே கிடைக்கும் மீபோ வையும் அறிமுகப் படுத்தினார். தமிழ்வலைப்பதிவு திரட்டியான தமிழ்ப்பதிவுகள் பற்றியும் இந்த திரட்டியில் பின்னூட்டம் திரட்டப்படாது என்றும் கூறினார். தொடர்ந்து மா.சிவக்குமார் கூகிளில் பதிவுகளையும், மின்னஞ்சல்களையும் முறைப்படுத்தல், பயர் பாக்ஸில் உள்ள எளிய வழிமுறைகளை பின்பற்றுதல் பற்றியும் ஜோயல் ஆன் சாஃப்ட்வேர் உதாரணம் மூலமாக பதிவுகளை பயனுள்ள முறையில் பயன்படுத்துதலின் முக்கியத்துவத்தை சொல்லியும் இந்த அமர்வை நிறைவு செய்தார்.

தொழில்நுட்ப விசயங்களைப் பற்றிய அமர்வுகளில் உண்மைத்தமிழன் காட்டிய ஆர்வம் மெச்சத் தகுந்ததாக இருந்தது.

ஒளி-ஒலி அமர்வு ஆரம்பிக்க எதிர்பார்த்தபடி அபி அப்பா வந்திருந்த பதிவர்களுடன் தொலைபேசினார். ஒளித்திரையில் சிறில் அலெக்ஸ் சிரிக்க , பதிவர்கள் சற்றுமுன் பற்றியும், அடுத்த கட்ட பட்டறை,சந்திப்புகளைப் பற்றியும் விவாதித்தனர். அனைத்து அமர்வுகளும் முடிய பதிவர்கள் சிறு சிறு குழுக்களாக அமர்ந்து கதைக்க ஆரம்பித்தனர். கோவை மணி தனது ஹைக்கூ கவிதைகளை பகிர்ந்து கொண்டார். ஹைக்கூ கவிதகளைப் பற்றி பாலபாரதியும் , மா.சி யும் சொன்னவைகளை அவர் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டார். பதிவர்கள் ஒவ்வொருவரும் விடைபெற்று கொள்ள தமிழ் பதிவுலகத்தின் முதல் பட்டறை குறைகள் இருந்தாலும் அது தெரியாத அளவிற்கு மனநிறைவாகவே இனிதே முடிவுற்றது. கோவைப் பட்டறைக்கான காரணகர்த்தா ஓசை செல்லாவிற்கும், பொறுப்பாக நடத்தி முடித்த பாலபாரதி & குழுவிற்கும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.

கோவை வலைப்பதிவர் பட்டறை செந்தழலாரின் பார்வையில்

கோவை வலைப்பதிவர் பட்டறை வாத்தியார் சுப்பையாவின் பார்வையில்

கோவை வலைப்பதிவர் பட்டறை மா.சிவக்குமாரின் பார்வையில்


எஸ்.பாலபாரதியின் பட்டறைத்துளிகள் பதிவைக் காண இங்கே சொடுக்கவும்.

எ-கலப்பை முகுந்த் அவர்களின் பார்வையில் கோவைப் பதிவர் பட்டறை

கவிஞர் தியாகுவின் பட்டறைப் பற்றிய பதிவைக் காண இங்கே சொடுக்கவும்

மோகன் தாஸின் பட்டறைப் பதிவு

14 பின்னூட்டங்கள்/Comments:

said...

பதிவு அட்டகாசம் அன்பரே. மிக்க நன்றி.

said...

//சென்ஷிக்கான பெயர்க் காரணமும் நட்பின் அருமையைப் பறைசாற்றும் விதமாக இருந்தது.//
ரொம்ப சஸ்பென்ஸாக இருக்கே இந்த விஷயம்....

said...

இருட்டடிப்பு.. இருட்டடிப்பு..
என்னோட புகைப்படம் இருட்டடிப்பு செய்யப்பட்டு உள்ள்து. நானும் ஒரு அறை மணிநேரம் கலந்துகிட்டேங்க.
தேர்வினால் என்னால் முழுமையாக இருந்துக்கமுடியாம போய்விட்டது

said...

விரிவான பதிவுக்கு நன்றி :)

said...

படங்களும்,செய்திகளும் அமர்க்களமாக உள்ளது நண்பரே!
நன்றி உரித்தாகுக!

said...

ம்.. சந்தோஷம்..

said...

அருமையாக பதிவு செய்திருக்கீங்க வினையூக்கி...!!!!!!!!!!!!

said...

பதிவர் சந்திப்பைப் பற்றிய விரிவான பதிவிற்கு நன்றி. உங்களையும் மற்ற நண்பர்களையும் சந்தித்தது குறித்து மகிழ்ச்சி. இந்த சந்திப்பைப் பற்றிய என்னுடைய கருத்துக்களையும் இங்கு http://mugunth.tamilblogs.com/?itemid=62 பதிந்திருக்கிறேன்.

-முகுந்த்

said...

ச்சே வர முடியாம ரொம்ப மிஸ் பண்ணிட்டமோன்னு நினைச்சேன். ஆனால் உங்கள் பதிவைப் பார்த்த பின்பு அந்த குறை கொஞ்சம் நீங்கியது.

said...

இது போன்ற ஒரு பதிவர் சந்திப்பில் கலந்துக்கொள்ளவேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது.

said...

was expecting Jeni in some way in the narration?

said...

வினையூக்கி உங்களை நேரில் சந்தித்ததில்
மிக்க மகிழ்ச்சி

said...

Nice Experience. I am verymuch inspired in this article. gohead.

said...

Hello Vinaiyuuki, pls see my article on kovai meet.

http://labtap.blogspot.com/2007/05/blog-post_22.html