Monday, February 19, 2007

பச்சைக்கிளி முத்துச்சரம் - விமர்சனம்


திருமணத்திற்கு அப்பாற்பட்டு ஏற்படும் நட்புகளை/உறவுகளை மையப்படுத்தி "சஸ்பென்ஸ்-த்ரில்லர்" வகையில் "மின்னலே" கௌதமின் இயக்கத்தில் திரைக்கு வந்து இருக்கும், அவரின் நான்காவது படம் பச்சைக்கிளி முத்துச்சரம்.
வேட்டையாடு விளையாடு படத்தின் மிகப்பெரும் வெற்றியினால் சற்று அதிகமான எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்துள்ளது.

அழகான மனைவி(ஆண்ட்ரியா), குழந்தை(மாஸ்டர் நந்தா), நிறைவான வாழ்க்கை என இருக்கும் சரத்குமார் ஒரு பார்மசூட்டிகல் கம்பெனியில்,பெரிய லட்சியங்கள் ஏதுமின்றி மெடிக்கல் ரெபரஷெண்டேடிவ் ஆக வேலை பார்க்கிறார். வாழ்க்கை தெளிந்த நீரோடை போல் மகிழ்ச்சியாக போய்கொண்டிருக்கும் போது, ஒரு நாள் சரத்தின் குழந்தைக்கு டயாபடிக்ஸ் என கண்டறியப்படுகிறது. தினம் இன்சுலின், மருத்துவமனை என சரத்தின் குடும்ப வாழ்க்கை மாற, கணவன் மனைவி இடையில் இடைவெளி ஏற்படுகிறது.

இந்த இடைவெளியை நிரப்பும் விதமாக ஜோதிகாவின் அறிமுகம் எலக்ட்ரிக் ட்ரெயினில் சரத்துக்கு ஏற்படுகிறது. ஜோதிகாவும் ஏற்கனவே திருமணமானவர் என்று தெரிந்து கொள்ளும் சரத், ஜோதிகாவுடன் பழக ஆரம்பிக்கிறார். பரஸ்பர நேசம் , அடிக்கடி நிகழும் சந்திப்புகளினால் அதிகம் ஆக,ஜோதிகாவின் விருப்பப்படி, சரத்குமாருக்கு விருப்பம் இல்லாவிடினும் இருவரும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட்டுக்கு செல்கின்றனர்.

அங்கு வரும் வில்லன் மிலிண்ட் சோமன், சரத்தை அடித்துப் போட்டுவிட்டு, சரத்தின் கண்னெதிரிலேயே ஜோதிகாவை நாசம் செய்கிறார். மிலிண்ட் சோமன், சரத்தை மிரட்டி பணம் பறிக்க ஆரம்பிக்கிறார்.

குழந்தைக்காக சேர்த்து வைத்த அனைத்துப் பணத்தையும் கொடுத்து விட, குற்ற உணர்ச்சியிலும், இயலாமையிலும் ஆண்ட்ரியாவிடம் உண்மையைச் சொல்ல ஆண்ட்ரியாவும் சரத்தை விட்டு போகிறார்.

எல்லாம் கைமீறி போக, தானே மிலிண்ட் சோமனை ஒரு கை பார்ப்பது என முடிவு செய்ய, அடுத்தடுத்து ஏற்படும் திருப்பங்கள் எல்லாம் உறைய வைப்பவை.

சரத்குமாரின் திரை வாழ்க்கையில் நிச்சயம் இது ஒரு குறிப்பிடத்தக்க படம், ஒவ்வோரு பிரேமிலும் மிளிர்கிறார். புது அறிமுகம் ஆண்ட்ரியா அழகாவே இருக்கிறார், சரத் வந்து மன்னிப்பு கேட்கும் இடத்தில், குழந்தையின் எதிரில் வார்த்தையில் கோபப் படாமல் கண்களில் கோபத்தைக் காட்டும் இடம் சிறப்பு. மும்பை மாடல், மிலிண்ட் சோமன் டிபிகல் கௌதம் பட வில்லனாக வந்து போகிறார்.
ஜோதிகா, நடிப்பில் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

பாடல்கள், ஏற்கனவே பெரிய அளவில் ஹிட் ஆகி இருக்கிறது. குறிப்பாக "உன் சிரிப்பினில்" பாடல் மாஸ்டர் பீஸ்,

வித்தியாசமான முயற்சி எடுத்தமைக்காக நிச்சயம் கௌதமை பாராட்டலாம். கடைசியாக கே.எஸ்.ரவிக்குமாரின் புரியாத புதிர், ஒரு நல்ல சஸ்பென்ஸ் திரில்லர் படமாகப் பார்த்த நினைவு,

இது கணவன், மனைவி குடும்ப உறவுகள், திருமண பந்த்ததிற்கு அப்பாற்பட்ட உறவுகளை மட்டும் சொல்லாமல், இரண்டாம் பாதியில் இருக்கையின் நுனிக்கு கொண்டு வரும் எதிர்பாரா திருப்பங்களுடன் நல்லாவே திரைக்கதை அமைத்து எடுத்து இருக்கிறார்.

ஒவ்வொரு படத்திலும் வில்லனுக்கு கௌதமே குரல் கொடுப்பது காக்க காக்க ஜீவனையே ஞாபகப் படுத்துகிறது. இனிவரும் படங்களில் வில்லனுக்கு நீண்ட கூந்தல் வைப்பதையும், கெட்ட வார்த்தை வசனங்களையும்(இயல்பாக இருந்தாலும் கூட) தவிர்க்கலாம்.

ரசிக்க வைத்த இடங்கள்,

1. ஆண்ட்ரியா விடம் இயல்பாக நடக்கும் விசயங்கள் கொண்டாட்டங்கள் இல்லை என சரத் கூறுபது
2. எலக்ட்ரிக் ட்ரெயின் காட்சிகள்
3. ஆண்ட்ரியா சரத்திடம் "டீ" என கேட்கும் வெவ்வேறு சந்தர்ப்பங்கள். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு எமோஷன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
4.ஒவ்வொரு முறை பணம் கொடுக்குபோது சரத்தின் முகபாவம்
5. கிளைமேக்ஸில் வில்லன் கும்பலிடம் பணத்ததக் கொடுத்து விட்டு செல்வது.

இன்னும் சில உண்டு சொன்னால் சஸ்பென்ஸ் போய்விடும் போய் படம் பாருங்க நண்பர்களே!!

பிற்சேர்க்கை : குழந்தைகளுடன் பார்ப்பதை தவிர்ப்பது நலம்

10 பின்னூட்டங்கள்/Comments:

Anonymous said...

நன்றி படக் கிடுக்கியத்திற்கு(விமர்சனம்) அல்ல(அதுவும் நன்றாக இருக்கு,அது வேறு விதயம்!)
கௌதம் என்று தனித்து எழுதியதுக்காக, அப்படித் தான் அவரும்
மின்னலே தொட்டு தலைப்பு அட்டைகளில் போட்டு வருகிறார். பின்பெயரை
அவர் பயன்படுத்துவதில்லை. ஆனால் தமிழ் இதழ்களும், வலைப் பதிவில் பலரும்
கௌதம் மேனன் என்றே எழுதி வருகின்றனர். மேனோன்/ மேனன் என்ற சாதியப்
பின்பெயரை அவரே கடாசி விட்ட பின்னரும் மற்றையோர் எடுத்தாண்டு வருவதை
என்ன சொல்வது.... பாமரன் தன் பழைய கட்டுரையில் நெறியாளுநர்/ஒளிப்பதிவாளர் இராஜீவ்
பற்றிக் குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது.

நன்றி!

- பிரதாப்

இப்பதிவுக்குத் தொடர்பில்லாததென்று கருதினால் இப்பின்னூட்டைப்
பொதுவுக்களிக்காது விடலாம்!

said...

சஸ்பென்ஸ் குறையாமல், திறம்பட எழுதி, பாடம் பார்க்கும் ஆவலைத் தூண்டிவிட்டிருக்கிறீர்கள்.

நல்ல விமரிசனம்.

said...

//கௌதம் என்று தனித்து எழுதியதுக்காக, அப்படித் தான் அவரும்
மின்னலே தொட்டு தலைப்பு அட்டைகளில் போட்டு வருகிறார். //

நன்றி பிரதாப், ஊடகங்களில் "மேனன்" என்ற பின் பெயருடன் வெளிவருவதை நானும் கவனித்தேன். இந்தப் பதிவில் கூட மேனன் என நானும் இடுவதை திட்டமிட்டே தவிர்த்தேன். நீங்கள் அதை கவனித்தமைக்கு நன்றி. பின்னூட்டதுக்கும் நன்றி.

said...

// SK said...
சஸ்பென்ஸ் குறையாமல், திறம்பட எழுதி, பாடம் பார்க்கும் ஆவலைத் தூண்டிவிட்டிருக்கிறீர்கள்.

நல்ல விமரிசனம்
//
எஸ்.கே ஐயா நன்றி.

said...

Pachai Kili Muthucharam
.... Based on....

Derailed (2005)

Advertising executive Charles Schine is just another Chicago commuter who regularly catches the 8:43 A.M. train to work. But the one day he misses his train and meets Lucinda Harris, his life is changed forever. Lucinda is charming, beautiful and seductive. Despite the fact that each are married with children, their attraction to one another is magnetic. Lunch dates quickly become cocktails after work, and before long, Charles and Lucinda's infatuation leads them to a hotel room. Their seemingly perfect affair goes terribly awry when LaRoche, a brutal stranger, breaks into their room and holds them at gunpoint. This once illicit liaison turns into a nightmare more dangerous and violent than either could have ever imagined. Charles' life soon becomes filled with deception, blackmail, violence and crime. Unable to confide in his wife or speak to the police, Charles finds himself trapped in a world he doesn't recognize, with no trace of the life he once knew.

Production Status: Released

Genres: Drama and Thriller

Running Time: 1 hr. 50 min.

Release Date: November 11th, 2005 (wide)

MPAA Rating: R for strong disturbing violence, language and some sexuality.

Production Co.: Patalex V Productions, di Bonaventura Pictures, Inc.

Studios: The Weinstein Company , Miramax Films

U.S. Box Office: $36,020,063

Filming Locations: London, England
Chicago, Illinois, USA
Joliet Correctional Center, Chicago, Illinois, USA

Produced in: United States

said...

நல்ல விமர்சனம். படத்தை பார்க்க தூண்டும் வகையில் எழுதியிருக்கீங்க.. வாழ்த்துகள்!!

said...

//Siva Sivalingam said...
Pachai Kili Muthucharam
.... Based on....

Derailed (2005)
//
நன்றி, சிவா சிவலிங்கம், கௌதமே derailed (எழுதியவர் - James siegel) என்ற ஆங்கில புதினத்தின் பாதிப்பில் தான் இந்த படத்தை எடுத்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.

உங்கள் பார்வைக்கு அவரது ரீடிப் பேட்டி
http://specials.rediff.com/movies/2007/feb/15sli1.htm


வருகைக்கும் derailed படத்தைப் பற்றிய தகவலுக்கும் நன்றி.

said...

//Thamizhmaagani said...
நல்ல விமர்சனம். படத்தை பார்க்க தூண்டும் வகையில் எழுதியிருக்கீங்க.. வாழ்த்துகள்!!
//
Thank you Thamizhmaagani

said...

தெளிந்த நீரோடை போன்ற நல்ல விமர்சனம். படத்தைப் பார்க்க தூண்டிவிட்டீர்கள்.

said...

நல்ல பதிவு