Monday, September 04, 2006

டெலி மார்கெட்டிங்

மொபைல் போன் வாங்கிய புதிதில் டெலி மார்கெட்டிங் மக்களின் அழைப்புகள் வரும் பொழுதெல்லாம் எரிச்சல் ஆகத்தான் இருந்தது. சிலமுறை அவர்களிடம் எனது "வெறுப்பைக்" காட்டிவிடுவதுண்டு. ஒரு முறை டெலி மார்கெட்டிங் கில் வேலைப் பார்க்கும் தோழி ஒருவர் அவர்களின் வேலைப் பளுவும் , வொர்க் ப்ர்ஷரையும் கேள்விப் பட்ட பிறகு , டெலி மார்கெட்டிங் மக்களை காயப்படுத்தாமல் அவர்களைத் தவிர்க்க சில உத்திகளைப் பயன்படுத்த ஆரம்பித்தேன்.

அவற்றில் சில,
1. ரோமிங்கில் இருப்பதாகக் கூறிவிடலாம்.

2. எந்த பேங்கிற்காக அழைக்கிறார்களோ அந்த பேங்கில் ஏற்கனவே வாடிக்கையாளரக(லோனோ , கார்டோ, இன்ஷூரன்சோ ) இருப்பதாக கூறிவிடுங்கள்.

3. பிறகு அந்த குறிப்பிட்ட அழைப்பின் நம்பரை உங்களது மொபைலில் சேமித்து, அந்த நம்பரை "சைலன்ட்" மோடில் போட்டுவிட்டால், பிறகு தொந்தரவு இல்லை.

அப்படியே தவிர்க்க இயலாமல் பேச நேரிட்டாலும் , மென்மையாக பேசி அவர்களை தவிர்த்திடலாம். ஒரு நிமிடம் இதற்கு ஒதுக்குவதால் நமக்கு ஒன்றும் இழப்பு இல்லை.

12 பின்னூட்டங்கள்/Comments:

லக்கிலுக் said...

அருமையான ஐடியாக்கள் வினையூக்கி...

இப்போது கூட இந்தப் பின்னூட்டம் அடிக்கும் போது ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் இருந்து தொலைபேசி பர்சனல் லோன் வேண்டுமா எனக் கேட்டார்கள்.... வேண்டாம் என்றதுமே நன்றி கூறி வைத்து விட்டார்கள்....

வினையூக்கி said...

ஆமாம் லக்கி லுக் ,இப்பொழுதெல்லாம் டெலி மார்கெட்டிங் மக்களின் அணுகு முறையில் நல்லதொரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. வேண்டாம் என்று கூறிவிட்டால் வாழ்த்துக்கள் கூறி வைத்து விடுகிறார்கள்

ப்ரியன் said...

நல்ல யோசனைகள் செல்வா!

/*எந்த பேங்கிற்காக அழைக்கிறார்களோ அந்த பேங்கில் ஏற்கனவே வாடிக்கையாளரக(லோனோ , கார்டோ, இன்ஷூரன்சோ ) இருப்பதாக கூறிவிடுங்கள்*/

இதை முன்னமே உபயோகித்துக் கொண்டுதான் இருக்கிறேன்

ரோமிங் & சைலண்ட் யோசனைகள் புதுசு பயன்படுத்திப் பார்க்கலாம் ;)

கருப்பு said...

நன்றாக எழுதி இருக்கீங்க வினையூக்கி. பொருள் நமக்கு வேண்டாம் என்றால் அன்பாகச் சொல்லி மறுத்தலே நல்மனிதனுக்கு அடையாளம். அதைவிட்டு சிலர் அதனை விபச்சாரம் என்று சொன்னார்கள். என்னுடைய டெலிமார்க்கெட்டிங் பதிவைப் படித்தீர்கள்தானே?

மணியன் said...

நல்ல யோசனைகள்.
இன்னுமொன்று: வங்கிகளின் இணையதளத்தில் Do Not Disturb என்ற பகுதியில் உங்கள் தொ.எண்களை பதிவு செய்யலாம்.

வினையூக்கி said...

படித்தேன் விடாது கருப்பு அவர்களே!!! உங்களது பதிவுகளையும் "விடாது" படிப்பது உண்டு.

வினையூக்கி said...

மணியன் நல்ல யோசனை. வருகைக்கும் நன்றி

யாத்ரீகன் said...

ஆமாம் சீனியர்.. அவர்களின் அணுகுமுறையில் மாற்றங்கள் தெரியுது.. நானும் என்றைக்குமே அமைதியாய் பதிலளித்தே மறுத்துவிடுவேன்..

சின்ன விஷயமாய் தெரிந்தாலும் நல்ல விஷயமாய் சொல்லியிருக்கீங்க..

வினையூக்கி said...

Junior,
Long time no see.

thiru said...

பண்பான அணுகுமுறை வினையூக்கி!

வினையூக்கி said...

Thank you Mr. Thiru

டிபிஆர்.ஜோசப் said...

அப்படியே தவிர்க்க இயலாமல் பேச நேரிட்டாலும் , மென்மையாக பேசி அவர்களை தவிர்த்திடலாம். ஒரு நிமிடம் இதற்கு ஒதுக்குவதால் நமக்கு ஒன்றும் இழப்பு இல்லை.//

இதுதான் சரியான அணுகுமுறை..

நானும் இப்படித்தான்.