Thursday, March 02, 2006

இனியவை - நான்கு, சங்கிலிப்பதிவு

நமக்கு சமீபத்தில் அறிமுகமானவர்கள், நமக்கு ஏற்கனவே மிகவும் பரிச்சயமான சூழலில் இருந்து வருபவர்கள் என்று தெரிய வரும்போது மிகவும் சந்தோசமாக இருக்கும். முத்து(தமிழினி)யின் அறிமுகமும் அவ்வாறே.

காலையில் முத்து(தமிழினி) யின் மெயில் பார்த்தவுடன் நிச்சயம் இன்று என்னுடைய "இனியவை நான்கு" பதிய வேண்டும் என்று முடிவெடுத்து பதிகின்றேன்.

என்னுடைய "இனியவை நான்கு" பலவேறு காலக் கட்ட்ங்களில்...

மறக்க முடியாத ரயில் பயணங்கள்,

1. சிறு வயதில், விடுமுறைக் காலங்களில் திருச்சியில் இருந்து, திருவாரூர் அருகில் உள்ள எனது தந்தையாரின் சொந்த ஊரான கொரடாச்சேரிக்கு செல்லும் திருச்சி - நாகூர் மீட்டர் கேஜ் பாசஞ்ஜர் ரயில் பயணம். எல்லா ஊர்களிலும் நின்று செல்லும் இந்த ரயில் பயணங்களே பிற் காலங்களில் எனக்கு ரயிலின் மீது ஏற்பட்ட சொல்ல முடியாத அபிமானத்தின் அடிப்படை,

2. திருச்சி - திருப்பரங்குன்றம் . ஒவ்வொரு முறை காலேஜ் லீவில் வீட்டிற்கு வந்து செல்லும் போதும் இந்த ரயிலில் தான் ரிடர்ன். இந்த ரயில் தஞ்சாவூரில் இருந்து திருநெல்வேலி வரைச் செல்லும். இதன் இணைப்பு ரயில் ஈரோடிலிருந்து வந்து திண்டுக்கலில் இணையும். இதற்காக திண்டுக்கல் ஷ்டேசனில் ஒரு மணி நேரம் வரை நிறுத்தி விடுவார்கள். செமஸ்டர் ரிஸல்ட்டின் பயம் மனதைக் கவ்வும் பயணங்கள்.

3. சென்னை - மதுரை - திருச்சி பல்லவன், பாண்டியன், வைகை, ராக்போர்ட் பயணங்கள். வேலைக்கு சேர்ந்த பிறகு, கல்லூரிக்கோ, வீட்டிற்கோ செல்லும் பயணங்கள். எக்மோரில் ஏதேனும் ஒரு கல்லூரி தோழன்/தோழி பார்க்கையில் பீறிடும் உற்சாகம்..பெயர் தெரியாமல் வழியும் சுவாரசியம். இன்னும் தொடர்கிறது.

4. டெல்லி - சென்னை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் பயணம். டெல்லியில் ஒரு ஐரோப்பிய - இந்திய மாநாட்டில் ஊணமுற்றோர்களுக்கான உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்கான அவசியத்தை உணர்த்தி பேசிவிட்டு, திரும்பி வருகையில் ஏசி இரண்டடுக்கில் பயணம் செய்தது. எங்களுடன் பயணம் செய்த ரஷ்ய குடும்பத்துடன் உரையாடியது. அப்போதுதான் புரிந்தது அவர்களின் ஆங்கிலத்தை விட எனது பரவாயில்லை என்று.


மறக்க முடியாத கிரிக்கெட் மேட்ச்சுகள்
1. 1991 ஆம் வருடம் அக்டோபர் 25 இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஷார்ஜா பைனல் மேட்ச். அக்யூப் ஜாவித் ஹாட்ரிக் எடுத்த மேட்ச்.

http://ind.cricinfo.com/db/ARCHIVE/1991-92/OD_TOURNEYS/WLSTPY/PAK_IND_WLSTPY_ODI-FINAL_25OCT1991.html

2. 1996 வோர்ல்ட் கப் கால் இறுதி ஆட்டத்தில் பெங்களூரில் ஜடேஜா அடித்த அடி இன்னொரு தீபாவளி
http://www.cricinfo.com/db/ARCHIVE/WORLD_CUPS/WC96/WC96-MATCHES/IND_PAK_WC96_ODI-QF2_09MAR1996.html

3.1996 வோர்ல்ட் கப் செமி பைனல்ஸில் வினோத் காம்ப்ளி அழுதபோது , ஏதோ வீட்டில் துக்கம் நடந்தது போல் கண்னீர் விட்டது...

http://www.cricinfo.com/db/ARCHIVE/WORLD_CUPS/WC96/WC96-MATCHES/SL_IND_WC96_ODI-SEMI1_13MAR1996.html
4.1999 வோர்ல்ட்கப் டாண் டாண் டவுன்டனில் 373 ரன் அடிச்சு இலங்கையை அழ விட்ட போது 1996 கு ஒரு பழி வாஙகள் என்ற ஒரு திருப்தி....

http://ind.cricinfo.com/db/ARCHIVE/WORLD_CUPS/WC99/SCORECARDS/GROUP-A/IND_SL_WC99_ODI21_26MAY1999.html

நானாக இருக்க விரும்பும் சினிமாக் கதாபாத்திரங்கள்,
1.மௌனராகம் - மோகன்.
2. அன்பே சிவம் - கமலஹாசன்
3. பூவே உனக்காக - விஜய்.
4. கோபுரவாசலிலே - கார்த்திக்.

இந்தப் பாத்திரங்களில் ஏனோ எனக்குப் பிடித்தது இவர்களின் "தியாக, மன்னிக்கும் உணர்வு". இந்தப் படங்களை எத்தனை முறைப் பார்த்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவதுண்டு.

சில தோல்விகள், சறுக்கல்கள் வெகுகாலம் சென்ற பிறகு திரும்பிப் பார்க்கையில், இனிமையாக இருக்கும்.

அவ்விதத்தில்,

1. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில ரேங்க் வாங்குவேன், என்ற எதிர்பார்ப்பில் இருந்த போது பள்ளியில் நான்காமிடமே வந்தது.

2. அண்ணா யுனிவர்சிடியில் இடம் இருந்தும் அப்பாவின் விருப்பத்தால் மதுரையில் சேர்ந்தது. இன்றும் அண்ணா யுனிவர்சிடியை கடக்கும் போது மனம் ஏனோ கணக்கும், மணமாகிவிட்ட காதலியைப் பார்ப்பது போல்.

3. வாழ்க்க்கையில் பள்ளி இறுதி வரை எந்த ஒரு பாடத்திலும் தோல்வியேயுறாதவன் முன்றாவது செமஸ்டரில் "கப்" வைத்தது.

4. என்னை மிகவும் விரும்பிய பெண், எந்த முன்னறிவிப்பும் இன்றி என்னுடனான தொடர்பைத் துண்டித்துக் கொண்டது.


தற்போதைக்கு சென்னையில் பிடித்த இடங்கள்,
1. எனது பிரென்ச் வகுப்பறை, வகுப்பு தொடங்கும் ஒரு மணி நேரம் முன்னதாகவே சென்று உட்காருவது பழக்கமாகிவிட்டது.[நிச்சயம் "கடலை" போடுவதற்காக இல்லை}.

2. வடபழனி, நம்ம வீடு வசந்த பவன் ஹோட்டல்.

3. ஈஞ்சம்பாக்கம் "பாபா" கோவில்.

4. மாயாஜால் தியேட்டர்

வாழ்க்கையின் நான்கு லட்சியங்கள்:

1. திருமணமென்றால் காதல் திருமணம். [இப்போதைக்கு யாரையும் காதலிக்கவில்லை]

2. ஒரு திரைப்படமாவது டைரக்ட் செய்ய வேண்டும்.

3. அரசியலில் குறைந்த பட்சம் ஒரு எம்.எல்.ஏ ஆகவது ஆக வேண்டும்.

4. உடற் ஊணமுற்ற வர்களுக்காக ஒரு பொறியியற் கல்லூரித் தொடங்க வேண்டும்.

சமீபத்தில் விரும்பிப் படித்த புத்தகங்கள்

1. The Da vinci Code.

2. God's Debris

3. Veronica Decides to Die

4. The Alchemist

எனது வாழ்க்கையின் திருப்பங்களுக்கு காரணமான, எனது மதிப்பிற்குரிய பெரிய மனிதர்கள்.
1. திரு. தாமஸ் அடிகளார். நான் ஆர்.சி. மேனிலைப் பள்ளியில் படித்த போது தாளாளராக இருந்தவர்.
2. திரு. முத்துகிருஷ்னன் . லால்குடி அரசு மேனிலைப் பள்ளியில் நான் முதற் மாணவனாக +2 வில் வர கார்ணமானவர். அப்பள்ளியின் தலைமை ஆசிரியர், எனது கணக்கு வாத்தியார்.

3. திரு. ராம்கோபால் , எனது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் மூத்த உறுப்பினர், எனது நல்ல குண்ங்களை மெருகேற்றியவர். மதுரையில் ஒரு "இன்டஸ்ட்ரியலிஸ்ட்"

4. திரு.சுரேஷ் காமத். எனது கம்பெனி சேர்மன்.

இப்போதைக்கு என் இனியவை நான்கு நிறைவுறுகிறது. இந்தப் பதிவின் மூலம் பல காலங்கள் பின்னோக்கி சென்று விட்ட ஒரு தோற்றம். மனது லேசாகி உள்ளது. நன்றி.

1 பின்னூட்டங்கள்/Comments:

Muthu said...

ஆமா புடிச்ச நாலு விசயம்னு சொல்லிட்டு எல்லாமே ரயில் பயணத்தையே சொல்லிட்டீங்க...

கிரிக்கெட் ல ஆர்வம் இருக்கலாம்..ஆனா ஆர்வமே கிரிக்கெட்டா இருக்கலாமா?))))

என்னை மிகவும் விரும்பிய பெண், எந்த முன்னறிவிப்பும் இன்றி என்னுடனான தொடர்பைத் துண்டித்துக் கொண்டது.

இது என்னங்க கதையா இருக்கு? விளக்கமாக பதிவு போடுங்கள் அய்யா


ஈஞ்சம்பாக்கம் "பாபா" கோவில்.

இது சிவசங்கர் பாபாவா...உஷாராக இருக்கவும்....

1. திருமணமென்றால் காதல் திருமணம். [இப்போதைக்கு யாரையும் காதலிக்கவில்லை]

இது லட்சியம்..
சீரியஸாக சொன்னால் இப்படி லட்சியம் எல்லாம் வைக்க வேண்டாம்.ஆனால் லவ் வந்தால் கண்டிப்பாக கைவிடாமல் கல்யாணம் செய்வேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

The Alchemist

இந்த ஆல்கெமிஸ்ட் பற்றி நிறைய கேள்விபட்டாயிற்று..ஒரு ரிவ்யூ போடுங்கள்அய்யா..என்னை மாதிரி ஆங்கிலம் தெரியாதவர்கள் இந்த புத்தகத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.

திரண்ட கருத்து...

நீங்கள் ரொம்ப பொறுப்பான மாணவன் என்று புரிகிறது.கீப் இட் அப்.