நம்மில் எத்தனை பேர் , காதல் அல்லது நட்பில் பிரிவு ஏற்படும்போது சம்பந்தப்பட்ட மற்றவரை மட்டும் குறை சொல்லி உள்ளோம். நிச்சயம் 99 விழுக்காடு நபர்கள், உறவின் பிரிவின் போது சம்பந்தப்பட்ட மற்றவரை எவ்வளவு தரம் தாழ்த்தி பேசி விடுகிறார்கள். உண்மையான நட்பு அல்லது காதலின் ஆழம் பிரிவுக்குப் பின்னரும் நாம் மற்றவரின் மேல் வைத்துள்ள மரியாதையில் தான் உள்ளது.பிரிவினால் மற்றவருக்கு அமைதியோ சந்தோசமோ கிடைக்குமென்றால், தாராளமாக அந்தப் பிரிவை ஏற்றுகொள்ளலாம். அப்படி ஏற்றுகொள்ளும்போது எந்த ஒரு உறவின் பிரிவும் காயமாக மாறாது, மாறாக பிரிந்தவரின் நினைவுகள் மண்வாசனை போல் என்றென்றும் ரம்மியத்தைக் கொடுக்கும்.
1 பின்னூட்டங்கள்/Comments:
வினையூக்கி, தங்களின் புதிய வலைபக்க தேர்வு நல்லதொரு மாற்றம்.
Post a Comment