Tuesday, January 31, 2006

நேசித்தேன்..நேசிக்கின்றேன்..நேசிப்பேன் - தொடர்கதை

அவன் அன்று தான் அந்த பிளாட்டிற்கு குடி வந்து இருந்தான். பெங்களூரில் இரண்டு வருட வாசம் செய்து விட்டு சென்னைக்கு மாற்றல் பெற்று வந்து ஒரு வாரம் ஆகிறது. அவன் பெயர் கார்த்திக். படிததது மின்னியலில் பொறியியல் பட்டம். வேலைப் பார்ப்பது பிரபல முன்றெழுத்து சாப்ட்வேர் கம்பெனியில்.தனது அலுவலகத்துக்கு அருகாமையில் இருந்தமையால் இந்த அபர்ட்மென்ட்ஸை தெரிவு செய்தான். இரண்டு படுக்கையறை வசதி உடைய பிளாட்.

முதற்தள பிளாக்கில் மொத்தம் நான்கு வீடுகள் சதுரமாக.அவனுக்கு அவன் அம்மா சொன்னது ஞாபகம் வந்தது.. புது வீட்டிற்க்கு போகும்போது பால் காய்ச்சி குடிக்க வேண்டும் என்று.வீட்டைப் பூட்டி விட்டு பொடிநடையாக அருகில் எதிரே இருந்த கடைக்கு பால் வாங்க போனான்.ஞாயிற்று கிழமை எல்லோருடய வீட்டிலும் டிவி சத்தமாக ஒடிக்கொண்டி இருந்தது.

அவனக்கு தனது சிறு வயதில் மகாபாரதம் , சந்திரகாந்தா ஹிந்தியில் பார்த்த நினைவு வந்து சென்றது.when you have enough of some thing automatically you get bored with that. It happened to Television also...இப்போதெல்லாம் அவனுக்கு பிடித்த சேனல் SS music thaan, தென்னிந்திய மொழிப்பாடல் களுக்கான சேனல்.மணி காலை ஒன்பது ஆகி இருந்தது. லிப்டை தவிர்த்து படி ஏறி வீட்டு கதவை திறக்கையில் தன்னை யாரோ உற்று பார்ப்பது போல் தோன்றியது, திரும்பி பார்த்தான்

--------------------

தன்னை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்த பெண்ணை சடார் என்று கார்த்திக் திரும்பி பார்த்த்வுடன் அவள் சுதாரித்துக் கொண்டு, ஹாய் ஐ யம் துர்கா.... சினேகமான சிரிப்புடன் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்ட எதிர் பிளாட் பெண்ணிடம், ஹாய் என்றான்.

ஐ யம் அன் இஞ்ஜினியரிங் ஸ்டூடண்ட்... ப்ர்ஸ்ட் இயர் கம்யூனிக்கேஸன்ஸ் என்றாள் துர்கா....அவனுக்கு மனதுக்குள் ஆச்சர்யம் வந்த முதல் நாளே ஒரு க்யூடான பெண்ணின் அறிமுகம்....

துர்கா!!!!! உள்ளிருந்து ஒரு குரல்....அம்மா இதோ வரேன்.. ஐ டாக் டு யூ லேடர்... என்று சொல்லி விட்டு உள்ளே ஒடினாள் துர்கா.

கதவை திறந்து உள்ளே சென்று ஸ்டவ்வை ஆன் செய்து பாலைக் காய்ச்சி முருகன் படத்தின் முன் வைத்தான்.தன் லேப் டாப்பை ஆன் செய்து "ஸ்வப்னகூடு" என்ற மலையாள படத்திலிருந்து கருப்பின் அழகு பாட்டு வைத்து விட்டு தன் ரிலையன்ஸ் மொபைல் மூலமாக நெட் கனெக்ட் ப்ண்ணான் கார்த்திக்.அவன் பச்சை தமிழனாயிருந்தாலும் அவனுக்கு பிற மொழி படங்கள், பாடல்கள் ஆகியவற்றை விரும்பிக் கேட்பான். இந்த ஸ்வப்ன்கூடு படம் அவன் திருவனந்தபுரம் மீட்டிங் போய் இருந்தப்ப மலையாள நண்பர்களுடன் மிகவும் ரசித்துப் பார்த்த படம்.

கார்த்திக்கைப் பொருத்த மட்டில் தன்னை சீட்டுக்கட்டில் வரும் ஜோக்கர் போல் கருதிக் கொள்வான். எந்த கார்டுடன் வேண்டுமானலும் சேர்த்து வைக்கலாம்.... தேவைப்படாத சமயங்களில் தனித்தும் இருந்து கொள்ளலாம்தனது காலேஜ் புரபசர் அனுப்பித்து இருந்த ஜுனியர் மாணவனின் பயோ-டேடா வை தன் கம்பெனி மனித வள மேலாளருக்கு பரிந்துரை செய்து விட்டு நெட்டை துண்டிததான்.

மணி காலை பத்து ஆகி இருந்தது மோகன் வீட்டுக்கு போகலாம் என்று நினைத்து, கிளம்பினான். மோகன் அவன் காலேஜ் சீனியர் . ஒரு பிரபல ஐந்தெழுத்து சாப்ட்வேர் கம்பெனியில் உயர் பதவியில் உள்ளார்,அவரைப் பார்த்து விட்டு அப்படியே ஒரு டீவி வாங்கி வர வேண்டும் என்று மனதில் எண்ணிகொண்டான்.வீட்டைப் பூட்டி விட்டு பார்கிங ஏர்யாவுக்கு வந்து தன் மாருதி ஆல்டொவை ஸ்டார்ட் செய்து ரிவர்ஸ் எடுக்கும் போது டமார்னு பின்னாடி காரை இடித்த சப்தம் .. அட டா என்று சகுனத்தை நொந்து கொண்டு கீழே இறங்கி இடித்த இடத்தை நோக்கிப் போனான்.

அங்கே... ஒரு இளம்பெண் ஸ்கூட்டியில் வந்து கார் ஹெட் லைட்டில் மோதி உடைத்து இருந்தாள். அவள் அருகில் ஒரு நடுத்தர வயதான பெண்மனி...

----------------

சாரி,,, பிரேக் சட்டுன்னு பிடிக்கவில்லை என்றாள் இளம்பெண்... அவள் அருகில் இருந்த நடுத்தர வயது பெண்மணியிடம் "தவறுக்கு வருந்துகிறோம்" என்ற விதத்தில் மெல்லிய புன்னகை... இருவரும் பொட்டு வைத்திருக்கவில்லை.... அனேகமாக கிருஸ்த்தவர்களாக இருக்க வேண்டும். சன்டே சர்ச்சுக்கு போய் விட்டு வருகிறார்கள் என்று மனதில் நினைத்துக் கொண்டே இட்ஸ் ஓகே... என்று சொல்லி உடைந்த கண்ணாடி துண்டுகளை பொறுக்கி ஓரமாக போட்டு விட்டு காரை ரிவர்ஸ் எடுத்து திருப்பினான்.

கார்த்திக் பிறப்பால் ஹிந்து வாக யிருப்பினும் கத்தோலிக்க பள்ளியில் படித்தமையால் அவனுக்கு கிருஸ்தவத்தின் மீது மரியாதை உண்டுகார்த்திக் பைபிளை மத நூலாகப் பார்க்காமல் ஒரு தத்துவ நூலாக கருதி படித்துள்ளான்.

காரை வேகமெடுத்து அசோக் பில்லர்,கிண்டி அண்ணா யுனிவர்சிடி வழியாக மத்திய கைலாஷ் சிக்னலில் நிற்கும்போது அவன் ரிலையன்ஸ் மொபைல் கூவியது.... பச்சை விழுந்ததும் முன்ன இருந்த ஆட்டோவை முந்திகொண்டே ஹேண்ட்ஸ் பிரீ போட்டு பேசினான். அழைத்தது மோகன்... அவன் கல்லூரி சீனியர்

சொல்லுங்க அண்ணா ...ஐ யம் ஆன் த வே டு யூவர் ஹோம்....அடையார் ல இருக்கேன்.... இன்னும் ஐந்து நிமிசத்தில் ஐ வில் பி தெர்..... என்று அழைப்பை துண்டித்தான்.....

சொன்னபடியே ஐந்து நிமிடத்தில் பெசன்ட் நகர் கலாஷேத்ரா காலனியில் உள்ள் மோகன் வீட்டை அடைந்தான்...காரைப் ரோட்டோரத்தில் பார்க் செய்து நிறுத்தினான். அரசாங்கா குடியிருப்பை போல் தோற்ற்மளித்த நீண்ட வரிசை வீடுகளில் M3 மோகன் வீடு.M3 அழைப்பு மணியை அழுத்தினான்....

டேய்....வாடா... வாடா என்று சொல்லியபடி மோகன் கதவை திறந்தான்

ஹேய் எப்படி இருக்க.... வெல்கம் டு கூவம்பட்டி .... புது வீடு ... புது காரு ...கலக்குறே கார்த்திக் என்று கிண்டலடித்தபடியே காபி கொண்டு வந்து வைத்தார்கள் பூர்ணிமா...

பூர்ணிமா மோகனின் மனைவி... காதல் திருமணம்.... கல்லூரியில் வகுப்புதோழி.... இப்பொது வாழ்க்கை துணைவி.... மோகனும் பூர்ணிமாவும் "மேட் பார் ஈச் அதர்" கார்த்திக் சொல்லுவதுண்டு

கார்த்திக்கிற்கு கல்லூரிக் காலங்களில், மனப்பிரச்சினை, பணபிரச்சினை எதுவாகினும் ஒரே புகலிடம் மோகன் - பூர்ணிமா தான். பூர்விக மதராஸ் வாசியான பூர்ணிம்மாவுக்கு "கூவம்பட்டி பூரணி" என்று பட்டப்பெயர் வைத்து கலாட்டா செய்து அவர்களுக்கு கார்த்திக் அறிமுகம் ஆனான்.

கார்த்திக், லேட்டஸ்ட்டா என்னடா புக் படிச்ச ? - மோகன்.

"Veronica Decides to Die" by Paul CoelHo படிச்சேன் அண்ணா....என்ன ஆச்சு சாவைப் பத்தி எல்லாம் படிக்கிற - பூர்ணிமா

இல்ல அண்ணி இது தத்துவம் மாதிரி- கார்த்திக்

மோகன் அண்ணன் ஆனதால் பூர்ணிமா அண்ணி ஆனாள்.

அடேய் சாவு என்ற டாபிக்கே ஒரு தத்துவக்கடல்.. ஒன்னு சொல்லட்டுமா!!! மனித இறப்பை போல ஒரு விடுதலை, சுதந்திரம் எதுவும் கிடையாது - பூர்ணிமா


அண்ணி பசிக்குது ..காலையில பால் மட்டும் குடிச்சது... என்ன சாப்பாடு....உனக்கே தெரியும்...இங்க அசைவம் கிடையாது... சாம்பார் கத்தரிக்காய் வறுவல் அப்புறம் வத்தல் அவ்ளோதான்... - மோகன்...

அண்ணா உங்க சமையலா !! தெளிவா நீங்க பதில் சொல்றிங்க!!!!ஹி ஹி ஹி என்று வழிந்தான் மோகன்.

பூர்ணிமா பிராமணப் பெண்...மோகனோ ஒடுறது பறப்பது தாவுறது குதிப்பது என்று எல்லாத்தையும் ஒரு வெட்டு வெட்டுபவன்... ஆனால் திருமணத்துக்குப் பின் அசைவத்தை முற்றிலும் குறைத்து விட்டான்.

யாரேனும் கேட்டால்மோகனின் விளக்கம்...அவள் எனக்காக உறவுகளையே விட்டு வந்தவள்... அவளுக்காக நான் உணவுப்பழக்கத்தை தானே விட்டேன்.
-----------
அருமையான மதிய சாப்பாட்டிற்கு பிறகு, மூவரும் கிளம்பி பெசன்ட் நகர் பீச் வந்து சேர்ந்தனர். பூர்ணிமா, மோகன் இருவரும் பீச் வந்தால் எதுவும் பேசிக்கொள்ள மாட்டார்கள். கடல் ஒரு பிரம்மாண்டம், பேரானந்தத்தின் உருவகம்.

அண்ணா!!.... ஏதாவது பேசுங்கள், உஙகளிருவரின் மௌனம் எனக்கு போர் அடிக்கிறது.ஒகே... எப்போ உன் கல்யாணம், கார்த்தி....அண்ணா, நிறைய விசயம் பண்ணனும், சமுதாயத்துக்காக .... ஐ பீல் கல்யாணம் ஒரு அனாவசிய கமிட்மென்ட். என்னுடய சில எண்ணங்களுக்கு, நோக்கங்களுக்கு , கல்யாணம் ஒரு த்டைக்கல்லாக அமைந்துவிடுமோ என்ற பயம் எனக்கு உண்டு.

டேய் டேய் .... ரொம்ப பேசுறட.... For Every Successful man there is a woman behind Him... ஞாபகம் வச்சுகோ ஆமாம்... நீ காலேஜ் ல கடலை போட்டு சுத்திக் கிட்டு இருந்தியே உன் ஜூனியர் சுஜி அவள் என்ன ஆனாள்? Are you Still in touch with her? என்று பூர்ணிமா கார்த்திக்கை கிண்ட ஆரம்பித்தாள்

அண்ணி, அவள் பெங்களூரில் தான் இருக்காள்..... ஒரு தடவை பிருந்தாவன் ல பார்த்தேன்.

என்னடா மூனாவது மனுஷன் மாதிரி பேசுற!!!! உன்னோட பாதி கிளாஸ் அட்டன்டன்ஸ் அவகூடதானே என்ன பிராப்ளம் ஆச்சு....இது மோகன்.

என்னோட பாசத்தை அவள் புரிஞ்சுககல.... She Felt I am toooooo Posessive...

Were you Friends only? எதுனாச்சும் Propose பண்ணிட்டியா என்றாள் பூர்ணிமா.

இல்லை அண்ணி.... அவள் மேல் எனக்கு காதல் எல்லாம் கிடையாது. நல்ல தோழமைதான். தோழமை மட்டும் தான். ஆனால் எனக்கு அவள் மற்றவர்களிடம் பேசினால் எனக்குப் பிடிக்காது. எனக்கு பிடிக்காத இந்த விஷயம் அவளுக்குப் பிடிக்கும். அதனால் நான் அவளை விட்டு பிரிந்துவிட்டேன்.

Being Posessive is the Lowest form of showing affection என்றாள் பூர்ணிYes. I know, that's why Now I am neither attached with any one nor being possesive.

கார்த்தி ஒன்று மட்டும் புரிந்து கொள் எந்த் ஒரு உறவிலும் நமக்கென்று ஒரு வரையறை உள்ளது. அந்த வரையறைக்குட்பட்டே நடக்க வேண்டும், அதீதப் பிரியம் ஆளுமைத்தன்மையாக மாறினாலே பிரச்சினைதான் .... விட்டுக்கொடுத்த்லே வாழ்க்கை என்று அழகாக ஒரு தத்துவத்தைக் கூறி முடித்தான் மோகன்.

ஓகே அண்ணா!!!!!!! எனக்கு டைம் ஆயிடுச்சு.... நான் போற வழியிலே ஒரு டீவி ஒண்ணு வாங்கிட்டு கிளம்புறேன்.

சரிடா!!! அடிக்கடி வீட்டுக்கு வா!. என்றனர் இருவரும்.

அண்ணா வீட்டுல விடனுமா?வேணாம்... நாங்க லேட்டாத்தான் கிளம்புவோம். நீ புறப்படு.
------------
கார்த்திக், ஒரு பிரபல நிறுவனத்தின் 21 இன்ச் கலர் டீவி ஒன்றை தி.நகரில் வாங்கிக் கொண்டு, மித வேகத்தில் காரை ஒட்டி வந்து கொண்டிருந்தான். சுஜி நினைவில் வந்து வந்துப் போனாள்.லக்ஷ்மன் சுருதி சிக்னலில் வந்து நின்ற போது , தன் முன்னே நின்ற பைக்கின் பின்னே காலையில் தனக்கு ஹாய் சொன்ன எதிர் வீட்டுப் பெண் துர்கா... அவள் அந்த பைக்கில் உட்கார்ந்திருந்த விதம் நிச்சயம் அந்தப் பைக்காரன் அவளின் காதலனாகத் தான் இருக்கும் என்று மனதுக்குள் உறுது செய்துக்கொண்டான்.

சிக்னல் விழுந்ததும் கார்த்தி வேண்டுமென்றே ஹாரனை வேகமாக அழுத்தினான். துர்கா எரிச்சலுடன் காரை திரும்பிப் பார்த்தாள்.

துர்கா, கார்த்திக்கை காரில் பார்த்ததும் எரிச்சல் முகம் மாற்றி புன்முறுவலுடன் ஹாய் என்று கையசைத்தாள். மெதுவாக பைக்கை பின் தொடர்ந்தான். அந்தப் பைக் ஆள், துர்கா வை 100 மீட்டர் முன்னமே இறக்கி விட்டு எதிர் சாலையில் சென்று விட்டான். ஹெல்மெட் அணிந்து இருந்ததால் முகம் தெரியவில்லை.


காரைப் பார்க் செய்து விட்டுப் படியேறும்போது, துர்கா படிக்கட்டில் நின்று கொண்டிருந்தாள். கார்த்திக் அதைக் கண்டும் காணாததைப் போல் அவளை தாண்டும்போது அவள் கூப்பிட்டாள்.

எக்ஸ்க்யூஸ் மீ. நீங்க காத்தால உங்க பேரைச் சொல்லவே இல்லை.ஓகே ஐ யம் கார்த்திக். சாப்ட்வேர் இஞ்சினியர்.நைஸ் டு மீட் யூ..... யு லுக் ஸ்மார்ட் என்றாள் துர்கா.

ஹேய் தாங்ஸ்.... கார்த்திக்கிற்கு துர்கா பேசிய விதம் சுஜியை நினைவுப் படுத்தியது. சுஜி மட்டும் தான் தன்னுடைய முதற் அறிமுகத்திலேயே அவனுடைய தோற்றத்தைப் பற்றி பாராட்டியவள்.

பரஸ்பரம் நலம் பேசிகொண்டே மெதுவாகப் படியேறினார்கள்.துர்கா தனது அம்மாவிடம் கார்த்திக் கை எதிர் வீட்டுக்கு புதிதாய் குடி வந்து இருக்கும் நபர் என்று அறிமுகம் செய்தாள். அவர்களின் பேச்சினூடே அவர்கள் பிராமணர்கள் என்பதைப் புரிந்துக் கொண்டான்.

சடார்னு தன் TV ஞாபகம் வந்தவனாய், துர்கா!!!! எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா? என்னோட TV கார்ல இருக்கு... கொஞ்சம் தூக்கிட்டு வர ஹெல்ப் பண்ணனும்.ஸ்யூர்.... அம்மா விடம் தன் உடைமைகளைக் கொடுத்து விட்டு கீழே இறங்கி அவனுடன் நடந்தாள்.

உண்மையில் அவனுக்கு ஆச்சார்யமாக இருந்தது.... இன்ஸ்டன்ட் காபி போல் இன்ஸ்டன்ட் அறிமுகம்... இன்ஸ்டன்ட் உதவி.....மனிதனுக்கே உரிய "க்யுரியாசிட்டி" உடன் துர்காவைப் பார்த்து துர்கா யார் அந்தப் பையன்? என்று கேட்டான்.துர்கா சிரித்துக் கொண்டே உண்மையை சொல்லட்டா!!!! பொய் சொல்லட்டா!!!!!!

சிறிது நேரம் இடைவெளி விட்டு அந்தப் பையனாத்தான் நான் நேசிக்கிறேன்.... ஐ மீன் ஐ யம் இன் லவ் வித் ஹிம்.
---------

கார்த்திக் அவளை ஆச்சர்யத்தோடுப் பார்ப்பதை கவனித்த துர்கா, என்ன அப்படி பார்க்கிறிங்க!!! ஏன் லவ் பண்ணால் தப்பா!!!

அப்படி எல்லாம் இல்லை...அது தனி மனித சுதந்திரம்.. என்றான் கார்த்திக்.ஓகே... டீவி ஐ தூக்குங்க... மெதுவாக, இருவரும் டீவியை தூக்கிக் கொண்டு வந்து வீட்டு ஹாலில் வைத்தார்கள்.

தாங்க்யூ துர்கா.


சரி கார்த்திக் நாளை எனக்கு இன்டர்னல் எக்ஸாம்... போய் படிக்கனும் உங்க மொபைல் நம்பர் கொடுங்க.... அப்புறமா கால் பண்ணி என் கதை சொல்றேன்.கார்த்திக் தன் மொபைல் நம்பருடன் கூடிய விஸிட்டிங் கார்டைக் கொடுத்தான்.ஸி யூ லேட்டர்... என்று தன் வீட்டிற்குள் மறைந்தாள்.

அடுத்த இரு நாட்களில் கேபிள் கனெக்ஷன், பால், பேப்பர் எல்லாம் கார்த்திக் ஏற்பாடு செய்துக் கொண்டான்.ஆபிஸில் வழக்கம் போல் அதிகம் வேலையாதலால் சீக்கிரம் எழுந்து போய் லேட்டாக திரும்புவதால் துர்கா வை பார்க்கவே முடியவில்லை.ஒரு நாள் இரவு 9 மணி வாக்கில் மொபைல் சிணுங்கியது...

ஹலொ சொன்னவுடன்... நான் துர்கா என்றாள் மறுமுனையில்....என்ன சாரைப் பார்க்கவே முடியல!! பிஸியோ...

இல்ல துர்கா...வேலை ஜாஸ்தி...அப்புறம் உங்க இன்டர்னல்ஸ் எப்படி போச்சு....

ம்ம்ம்ம் நல்லாப் போச்சு.... சாப்டிங்களா!!

எங்க இருக்கிங்க...வீட்டுக்குத்தான் வந்துட்டு இருக்கேன். சரி...நல்லா சாப்பிட்டு தூங்குங்க!!! டாடா குட் நைட் என்று இணைப்பைத் துண்டித்தாள் துர்கா.கார்த்திக் தன் அபார்ட்மென்ட்ஸ் வந்தடைந்தான்.

காரை வழக்கமான் இடத்தில் பார்க் செய்து விட்டு, ஹெட் லைட் வெளிச்சம் முகத்தில் அடிக்க திரும்பிபார்த்தான்.அன்று தன் காரை இடித்த ஸ்கூட்டிப் பெண் இடிப்பதுப் போல் வந்து வண்டியை நிறுத்தி விட்டு வேகமாக படியேறி சென்றுவிட்டாள்.தூக்க கலக்கமாக இருந்ததால் உடனே வந்து படுக்கையில் படுத்தான்.

அதிகாலையில் ஏனோ தூக்கம் திடிரென ஒரு பேய் கனவினால் கலைந்து எழுந்தான்.மணி பார்த்த போது நான்கரை. எழுந்து முகம் கழுவி விட்டு வந்து ஆதித்யா தெலுங்கு பாட்டு சேனலை போட்டான். கடலோரக் கவிதைகள் படத்தின் ஆத்தாடி பாடல் தெலுங்கு வடிவத்தில் ஓடிகொண்டிருந்தது. சிரஞ்சீவி சுஹாசினி நடித்திருந்தனர்.பல சேனல் களை மாத்தி மாத்தி பார்த்துக் கொண்டிருந்தான். எஸ் எஸ் ம்யுசிக் கில் காக்க காக்க படத்திலிருந்து உயிரின் உயிரே ஓடிய போது காலை என்று பாராமல் அதிக சவுண்ட் வைத்து கேட்டுக் கொண்டிருந்த போது காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டு கதவை திறந்தான்,எதிரே அந்த ஸ்கூட்டிப் பெண். அம்மா ஜெபம் பண்ணிகொண்டு இருக்கிறார்கள் ப்ளீஸ் சவுண்ட் குறைத்து வைத்து கேளுங்கள் என்றாள்.

ஓ அப்படியா...ஐ யம் சாரி... என்று ரிமோட்டை எடுத்து சவுண்டைக் குறைத்தான். அந்த ஸ்கூட்டிப் பெண் துர்காவின் வீட்டுக் கதவை ஒட்டினாற் போல் உள்ள அடுத்த வீட்டிற்குள் நுழைந்தாள்.மறு நாள் துர்காவிடம் அவள் பேரைக் கேட்க வேண்டும் என்ற எண்ணத்தோடு காலை பேப்பரை படிக்கலானான்.

2 பின்னூட்டங்கள்/Comments:

said...

நல்லாவே எழுதுறீங்க..உங்களுடைய சிறுகதைகள் அனேகமானது வாசித்துள்ளேன்.
எப்பங்க இந்த தொடர் கதையின் மீகுதி வரும்..விரைவில் எதிர்பார்க்கிறேன்..

said...

Thanks Nilavan