பாலுமகேந்திரா என்ற நாயகனும் அவரின் நாயகிகளும் - சிறுகுறிப்பு
ஒவ்வொரு இயக்குநரும் தங்களுக்கென்று ஒரு மைதானத்தை வைத்திருப்பார்கள். அங்கு அவர்கள் களமிறங்கினால் அடிப்பொளிதான். பாலுமகேந்திராவிற்கு 'ஓர் ஆண் - இரண்டு பெண்கள் - காதல்' இதுதான் அந்தக்களம். சமூகம் அங்கீகரிக்கும் ஒரு காதல், அதைத் தாண்டி சமூகம் முகம் சுளிக்கும் இன்னொரு காதல் , இந்தப் பிரச்சினையை எப்படி நாயகன் சமாளிக்கின்றான் என்பதை வெவ்வேறு காலக்கட்டங்களில் தான் விரும்பிய முடிவுகளுடன் கோகிலா, ஓலங்கள், இரட்டைவால் குருவி, மறுபடியும், சதிலீலாவதி, ஜூலி கணபதி என வரிசையாக படம் எடுத்தவர் இயக்குநர் பாலுமகேந்திரா.
கோகிலா :- காதலன் - காதலி, காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் விபத்தாக தொடர்பு , புதியவள் கர்ப்பமடைகின்றாள் காதலன் புதிய பெண்ணுடன் வாழ்க்கையைத் தொடங்குகின்றான்.
ஓலங்கள்:- கணவன் - மனைவி , கணவனின் முந்தையக் காதல் குழந்தையின் ரூபத்தில் வாழ்க்கையில் வருகின்றது, எப்படி நாயகன் சமாளிக்கின்றான்.
இரட்டைவால் குருவி :- கணவன் - இரண்டு மனைவிகள். இறுதியில் இரண்டு மனைவிகளும் சமாதானமாக ஒரே குடும்பமாக கணவனுடன் தத்தமது குழந்தைகளுடனும் வாழ்வதாக படம் முடியும்.
மறுபடியும் :- பத்தாண்டுகள் பழைய , மகேஷ் பட் தன் வாழ்வின் ஒரு பகுதியை கதையாக எடுத்திருந்தஅர்த் எனும் இந்திப்படத்தைத் தூசித்தட்டி மறு உருவாக்கம் செய்த படம். பாலுமகேந்திராவின் வாழ்க்கைக்கு நெருக்கமான படம் என்றும் சொல்வார்கள். இயக்குநர் - மனைவி - புதிதாய் வந்த நடிகை. என்ன ஆகின்றது என்பதுதான் கதை. பாலுமகேந்திராவை அறிந்தவர்களுக்கு 'மறுபடியும்' என்ற பெயரே கதையைச் சொல்லிவிடும்.
சதிலீலாவதி :- கணவன் - மனைவி - குழந்தைகள், புதிதாய் வரும் பெண். புதிதாய் வரும் பெண் தனது பழையக் காதலனுடன் போய்விட, கணவன் மனைவி மீண்டும் ஒன்று சேர்ந்துவிடுவார்கள்.
ஜூலிகணபதி :- மணமான எழுத்தாளன் மேல் எழுத்தின் மேல் மையல் கொண்டு அவனை சிறைப்பிடித்து வைத்திருக்கும் பெண். அவளிடம் இருந்து நாயக எழுத்தாளன் எப்படி தப்பிக்கின்றான்.
மேற்சொன்ன படங்களில் முடிவுகள் வெவ்வேறாக இருந்தாலும் மைய இழை, ஒரே சமயத்தில் இரண்டு பெண்களிடம் சிக்கிக் கொண்டு தவிக்கும் ஓர் ஆணின் மனப்போராட்டம்தான். தனது படைப்புகளுக்கும் தன் வாழ்க்கைக்கும் பெரிய இடைவெளிகளை வைக்காதவன் கலைஞன். அவ்வகையில் தன்னுடைய போராட்டங்களையே கதைகளாக்கி திரையில் ஓவியமாக்கி , தனது இயல்வாழ்க்கை எதிர்பார்ப்புகளை திரை முடிவுகளாக பரிசோதித்து இருக்கின்றாரோ என அடிக்கடித்தோன்றும்.
பாலு மகேந்திரா என்ற மனிதனைத் தெரிந்து கொள்ள இந்தப்படங்களைப் பார்த்தாலே போதுமானதோ !!
பிகாசோ சொன்னபடி, தனது படைப்புகளில் தன் வாழ்க்கையை ஒளித்துவைத்திருப்பவன் தான் மிகச்சிறந்த கலைஞன். பாலுமகேந்திரா பிகாசோ வகைக் கலைஞன்.