மலரும் நினைவுகள் - சென்னை பதிவர் பட்டறை - 2007
கற்றல் இனிது, கற்றுக்கொடுத்தல் அதனினும் இனிது என , இணையத்தில் தமிழ் தட்டச்சும், வலைப்பூக்களும் கொஞ்சம் கொஞ்சமாக பூத்துக் குலுங்க ஆரம்பித்து இருந்த காலங்களில் சென்னையில், 2007 ஆம் ஆண்டும் நடைபெற்ற பதிவர் பட்டறையைப் பற்றிய நினைவுகள் கடந்த சில வாரங்களாக மனதில் ஓடிக்கொண்டிருக்கின்றன. பிந்திய இரவுகளில் பழையப் பாடல்களைக் கேட்கும்பொழுது, ஏற்படும் ஓர் உணர்வு, பழையப் பதிவுகளைப் படிக்கும்பொழுதும் இருக்கும். இதில் இருந்த ஒரு சிறப்பம்சம் என்னவெனில் பதிவர்களை ஒருங்கிணைத்து தேரை இழுத்தது மட்டுமல்லாமல், வாசகர்களையும், எதிர்காலப் பதிவர்களையும் அன்றைய நாளில் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்ததுதாம். 2007 ஆம் ஆண்டு பதிவர் பட்டறை பற்றிய பழையப் பதிவுகளின் இணைப்புகள்.
கற்றதும் கற்றுக்கொடுத்ததும் - வலைப்பதிவர் பட்டறை
மறுநாளைய இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில தினசரியில் வந்த செய்தித் தொகுப்பு
சென்னைப்பதிவர் பட்டறை புகைப்படங்கள்
இந்த ஐந்து வருடங்களில் வலைப்பதிவுகளின் வீச்சு அதிகமாகிக் கொண்டே இருக்கின்றது என்பதைப் பார்க்கையில் தமிழ் அவ்வப்பொழுது அயற்சி அடைந்தாலும் ஃபீனிக்ஸ் பறவைப்போல மீண்டும் மீண்டும் எழுந்து உயரேப் பறக்கும் என்பது மட்டும் உறுதியாகின்றது.