விடைகள் - கிரிக்கெட் வினாடி வினா - ஆறுக்கு ஆறு (Cricket Quiz with Answers)
1. இந்தப்புகைப்படத்தில் இருப்பவர் யார், நவீன கிரிக்கெட் ஆட்டத்தின் போக்கை மாற்றிய ஒரு விசயத்தை முதன்முதலில் அதிகாரப்பூர்வமாக டெஸ்ட் ஆட்டங்களில் செய்தவர். இவர் செய்த விசயம்தான் என்ன?
கிரஹாம் யலுப் - அடிவயிற்றுப் பாதுகாப்பு உபகரணம் கண்டுபிடிக்கப்பட்டு கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்குப்பின்னரே , தலைக்கவசம் கிரிக்கெட் ஆட்டத்தில் அதிகாரப்பூர்வமாக பயன்பாட்டிற்கு வந்தது. மனிதனின் மூளையும் முக்கியமானது என உணர ஒரு நூற்றாண்டு தேவைப்பட்டுள்ளது என நகைச்சுவையாக கூறுவார்கள். கவாஸ்கர் , தலையைச் சுற்றி அடிபட்டால் கட்டும் கட்டுபோல போல ஒரு வடிவுடன் ஒரு கவசத்தை அணிந்து ஆடியிருக்கிறார்.
டென்னிஸ் அமிஸ், பெக்கர் உலக(கலகத்) தொடர் போட்டிகளில் மோட்டார் சைக்கிள் ஓட்டும்பொழுது பயன்படுத்தப்படும் தலைக்கவசத்தை சில மாறுபாடுகள் செய்து ஆடினார். ஆனால் அதிகாரப்பூர்வ டெஸ்ட் ஆட்டங்களில் , முதன் முறையாக தலைகவசத்தை அணிந்து ஆடியவர் கேள்வியின் படத்தில் இருக்கும் கிரஹாம் யலுப் என்ற ஆஸ்திரேலிய வீரர். மேற்கிந்திய தீவுகளுடன் உடன் ஆனா டெஸ்ட் தொடரில், பார்படாஸில் நடந்த இரண்டாவது டெஸ்டில் தலைகவசத்துடன் இறங்கி ஆடினார். பயந்தாங்கோலி என மேற்கிந்திய ரசிகர்களால் இவர் எக்களிக்கப்பட்டர்.
2. கிரிக்கெட் விதி எண் இரண்டின்படி மாற்று ஆட்டக்காரராக வருபவர் , விக்கெட் கீப்பிங் பணியை செய்ய இயலாது. டெஸ்ட் ஆட்டங்களில் ஒரு முறை இந்த விதி இரண்டு அணித்தலைவர்களின் ஒப்புதலோடு மீறப்பட்டுள்ளது. அந்த டெஸ்ட் ஆட்டம் எது? அந்த டெஸ்ட் ஆட்டத்தில் முதல் தர ஆட்டங்களில் அதிக அளவில் விக்கெட் கீப்பிங் முறையில் ஆட்டக்காரர்களை வீழ்த்தியவர் என்ற பெருமை உடைய ஒருவர் பன்னாட்டு ஆட்டங்களில் இருந்து ஓய்வு பெற்று இரண்டு வருடங்களுக்குப்பிறகு மாற்று விக்கெட் கீப்பராக சில நேரம் இருந்தார்.
பாப் டெய்லர் தான் அந்த விக்கெட் கீப்பர் . 86 ஆம் ஆண்டு லார்ட்சில் நடந்த நியுசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் ஆட்டம் ஒன்றில், இங்கிலாந்தின் விக்கெட் கீப்பர் புருஸ் பிரெஞ்ச், பேட்டிங் செய்யும்பொழுது காயமடைந்து விட , அணியில் இருந்த பில் அத்தே சில ஓவர்களுக்கு விக்கெட் கீப்பராக இருந்தார், சிறப்பாக கீப்பிங் செய்யத் தடுமாறிய பில் அத்தே விற்குப்பதிலக சிறப்பு விருந்தினர்களுடன் ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்த பாப் டெய்லர் இங்கிலாந்திற்கான விக்கெட் கீப்பராக இருக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டது.கிட்டத்தட்ட 70 ஓவர்கள் கீப்பிங் செய்த டெய்லரின் பணியை ஹாம்ப்ஷையர் விக்கெட் கீப்பர் பாபி பார்க்ஸ் தொடர்ந்தார்.
ஒரு ஆட்டத்தில் 4 விக்கெட் கீப்பர்கள் பயன்படுத்தப்பட்டது இந்த ஆட்டத்தின் மற்றொரு சிறப்பம்சம். இத்தனை மாற்றங்களுக்கும் நியுசிலாந்து அணியின் தலைவர் ஜெரமி கோனே பெருந்தன்மையாக ஒப்புக்கொண்டார். துணைத் தகவல் - ஜெரமி கோனே ஒரு முறை , அவரின் பந்து வீச்சை கபில்தேவ் துவம்சம் செய்தபொழுது வெள்ளைக்கொடி காட்டி அரங்கையே சிரிப்பில் ஆழ்த்தியவர்.
3. கிரிக்கெட்டில் ஹாட்ரிக் எனப்படுவது தொடர்ந்து மூன்று பந்துகளில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்துவது. பலர் ஒரே ஓவரில் எடுப்பார்கள். சிலர் இரண்டு ஓவர்களில் எடுத்திருப்பார்கள். அதாவது முதல் ஓவரில் கடைசி பந்துகளில் ஒரு விக்கெட்டோ அல்லது இரண்டு விக்கெட்டுகளோ, அதே பந்துவீச்சாளர் மறுமுறை பந்துவீசும்பொழுது மீதமுள்ள விக்கெட்டுகளை எடுப்பது. டெஸ்ட் ஆட்டங்களில் ஒரு பந்து வீச்சாளர் மூன்று ஓவர்களில் தனது ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்தார். எப்படி எடுத்தார் மேலும் அந்த பந்துவீச்சாளர் யார்?
ஆஸ்திரேலியாவின் மீசைக்கார வேகப்பந்து வீச்சாளர் மெர்வ் ஹியுஜஸ் தான் மூன்று ஓவர்களில் ஹாட்ரிக் எடுத்தவர். பெர்த்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் , அம்புரோஸ் ஹாட்ரிக்கின் முதல் விக்கெட்டாக வீழ்ந்தார், அந்த பந்துடன் ஓவரும் முடிந்தது. ஹியுஜஸ் தனது அடுத்த ஓவரின் முதல் பந்தில் பாட்ரிக் பட்டர்சனின் விக்கெட்டை எடுத்தார். அத்துடன் மேற்கிந்திய தீவுகளின் முதல் இன்னிங்க்ஸ் ஆட்டமும் முடிவுக்கு வந்தது. ஆஸ்திரேலிய பேட்டிங்கிற்குப்பின்னர் , மீண்டும் களம் இறங்கி ஆடிய மேற்கிந்தியத்துவுகளின் இரண்டாவது இன்னிங்க்சில் பந்து வீச வந்த ஹியுஜஸ் தனது முதலாவது பந்திலேயே கர்டன் கிரினிட்ஜை ஆட்டமிழக்கச் செய்து சிறப்பம்சம் பொருந்திய இந்த ஹாட்ரிக் சாதனையுடன் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
4. ஆமை முயலாகுமா எனத் தெரியாது. ஆனால் தனது ஆமை வேக ஆட்டத்தை தேவைப்பட்ட சமயங்களில் முயலென்ன, சிறுத்தை வேகத்தில் கூட மாற்றிக்கொள்ளக்கூடிய ஆட்டத்திறன் பெற்றவர் மேற்கிந்திய தீவுகள் அணியின் மட்டையாளர் சந்திரபால். இவர் பன்னாட்டு ஒருநாள் ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டீவ் ஹாரிம்சன் வீசிய ஒரு ஓவரை துவம்சம் செய்தார். 5 பவுண்டரிகள் ஒரு சிக்சர் என தூள் கிளப்பி ஆடிய கீழ்க்காணும் காணொளியின் ஆட்டத்தின் முடிவு என்ன? அந்த முடிவில் இருந்த சுவராசியமும் என்னவென்று சொல்லுங்களேன்.
விடை :
மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு ஓட்டம் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. வருண பகவனும் இணைந்து விளையாடிய இந்த ஆட்டத்தில் வெற்றி இலக்கு ௨௭௧ என களமிறங்கி ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணியின் ஏழாவது விக்கெட்டாக ராம்தின் வீழ்ந்தார். டக்வோர்த் லூயிஸ் முறையின் படி இரண்டு ஓட்டங்கள் பின் தங்கி இருப்பதைக் கவனிக்காத பயிற்சியாளர் ஜான் டைசன் , மட்டையாளர்களை மழை காரணமாகத் திரும்ப உத்தரவிட்டார். நமுட்டு சிரிப்புடன் இங்கிலாந்து வெற்றியை எடுத்துக்கொண்டது.
Score Card - http://www.espncricinfo.com/wiveng2009/engine/current/match/352665.html
5. கொஞ்சம் எளிமையான கேள்விதான், நியுசிலாந்து பந்து வீச்சாளர் கிறிஸ் மார்ட்டினுக்கும் , முன்னாள் இந்திய சுழற்பந்துவீச்சாளர் பகவத் சந்திரசேகருக்கும் உள்ள ஒற்றுமை என்ன? பந்து வீச்சில் இருவரும் 200 க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள், அதைத்தவிர வேறு ஒரு சுவாரசியமான ஒற்றுமை உள்ளது, அது என்ன?
விடை :
Score Card - http://www.espncricinfo.com/wiveng2009/engine/current/match/352665.html
5. கொஞ்சம் எளிமையான கேள்விதான், நியுசிலாந்து பந்து வீச்சாளர் கிறிஸ் மார்ட்டினுக்கும் , முன்னாள் இந்திய சுழற்பந்துவீச்சாளர் பகவத் சந்திரசேகருக்கும் உள்ள ஒற்றுமை என்ன? பந்து வீச்சில் இருவரும் 200 க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள், அதைத்தவிர வேறு ஒரு சுவாரசியமான ஒற்றுமை உள்ளது, அது என்ன?
விடை :
இருவரும் டெஸ்ட் ரன்களை விட அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள்.
6. சடகோபன் ரமேஷ் முன்னாள் இந்திய துவக்க ஆட்டக்காரர், ஓரளவிற்கு டெஸ்ட் ஆட்டங்களிலும் ஒரு நாள் ஆட்டங்களிலும் சோபித்தார். கால்களை நகர்த்தாமலேயே ஆடி 1000 ரன்கள் எடுப்பது என்பது அத்தனை சுலபம் அல்ல. கிரிக்கெட் ரசிகர்கள் மறக்காமல் இருக்க இவர் ஒரு சுவாரசியமான ஒருநாள் ஆட்ட சாதனையை தன் வசம் வைத்துள்ளார். உலக அளவில் 16 பேர் செய்து இருந்தாலும் இந்திய அளவில் இவர் ஒருவரே வைத்துள்ளார். 16 பேர்களில் குறிப்பிடத்தக்க மற்றொருவர் இன்சாமம் உல் ஹக். அது எத்தகைய சாதனை என்பதுதான் இந்த வினாடிவினாப் பதிவின் கடைசிக் கேள்வி.
விடை :
ஒரு நாள் போட்டிகளில் தனது முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த ஒரே இந்தியர்.
------------
5 பின்னூட்டங்கள்/Comments:
Ramesh is the only Indian bowler to take a wicket off his first ball in ODI cricket,
சரவணன்,
சடகோபன் ரமேஷ் பற்றிய உங்களது கேள்விக்கான விடை சரி
1. Graham Yallop - முதல் முறையாக ஹெல்மட் (வாகனங்களுக்கு உபயோகிக்கும்) அணிந்து தோன்றினார்.
2. England vs Newzealand 1986 Test match. இங்கிலாந்தின் விக்கெட் கீப்பர் காயமுற்ற பின், ஓய்வு பெற்றிருந்த பாப் டெய்லர் கிட்டத்தட்ட 70 ஓவர்களுக்கு கீப்பிங் செய்தார்.
3. Merv Hughes
4. ஆட்டம் மழையினால் பாதிக்கப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் கோச் டக்வொர்த் லூயிஸ் ஸ்கோரை சரியாகக் கணிக்காமல் வெஸ்ட் இண்டீஸ் வென்றதாக நினைத்து விட்டார். ஆனால் மறு பரிசீலனைக்குப் பிறகு இங்கிலாந்து வென்றதாக அறிவிக்கப் பட்டது.
5. இருவரும் டெஸ்ட் ரன்களை விட அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள்.
6. ஒரு நாள் போட்டிகளில் தனது முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த ஒரே இந்தியர்.
முகிலன்,
அட்டகாசம், கலக்கிட்டீங்க, அனைத்துக் கேள்விகளுக்கும் விடை சரி.
நன்றி வினையூக்கி.
முதல் கேள்விக்கான விடை ஃபோட்டோவைப் பார்த்ததுமே தெரிஞ்சிட்டது. அவரோட பேர் தெரியாது. கூகுள் செஞ்சிதான் கண்டுபிடிச்சேன்.
ரெண்டாவது கேள்விக்கான விடை விக்கெட் கீப்பரா இருக்கிறதால தெரியும். ஆனா யார் யாருக்கிடையிலான போட்டிங்கிறதை கூகுள் செஞ்சிதான் கண்டெடுத்தேன்.
மூணாவது கேள்விக்கான விடை சமீபத்துலதான் க்ரிக் இன்ஃபோல ஒரு கட்டுரையில வந்திருந்தது.
நாலாவது அஞ்சாவது ஆறாவது கேள்விக்குத்தான் கூகுள் செய்யாமலே கண்டுபிடிக்க முடிஞ்சது.
இறுதியா நல்ல வினாடி வினா. இது போல அடிக்கடி செய்யுங்க.
Post a Comment