Tuesday, April 27, 2010

சுவிடீஷ் (Svenska) மொழி - சில குறிப்புகள்

சுவீடனில் தாய் மொழியாகவும் பின்லாந்து நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாகவும் இருக்கும் சுவிடீஷ் (ஸ்விடீஷ் - Swedish) மொழி வடக்கு ஜெர்மானியக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியாகும்.ஆங்கிலத்தில் சுவிடீஷ் என அழைக்கப்பட்டாலும் சுவென்ஸ்கா(ஸ்வென்ஸ்கா - Svenska) என்பதே இந்த மொழியின் இயற்பெயர்.

லத்தீன் எழுத்துருக்கள் பயன்படுத்தப்படும் இந்த மொழியில் மொத்த 29 எழுத்துகள் உள்ளன. ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் 26 எழுத்துகளுடன் சுவென்ஸ்கா மொழிக்கானச் சிறப்பு எழுத்துகள் å, ä,ö ஆகியவற்றுடன் இந்த மொழி புழங்கப்படுகிறது.

ஒரு காலத்தில் ஸ்காண்டிநேவியா முழுவதும் புழங்கப்பட்ட பண்டைய நார்ஸ் மொழியின் பரம்பரையில் வந்த சுவிடீஷ் மொழி ஏறத்தாழ ஒரு கோடி மக்களால் பேசப்படுகின்றது. மேற்கு ஸ்காண்டிநாவியாவில் புழங்கப்பட்ட நார்ஸ் , நார்விஜியன் , ஐஸ்லாண்டிஸ்க் மொழியாகவும் கிழக்கில் புழங்கப்பட்ட நார்ஸ் மொழி டேனிஷ் மற்றும் சுவிடீஷ் மொழியாகவும் உருவெடுத்தது. நவீன சுவிடீஷ் மொழியின் வரலாறு அச்சுத்துறையில் ஏற்பட்ட மறுமலர்ச்சியுடன் தொடங்குகிறது.

சுவீடனிம் புகழ்பெற்ற மன்னரான குஸ்டாவ் வாசா ஆணையின் பெயரில் 1541 ஆம் ஆண்டு பைபிளின் புதிய ஏற்பாடு மொழிப் பெயர்க்கப் படுகிறது. இந்த மொழிப் பெயர்ப்பு பழமையான நார்ஸ் மொழியையும் புழக்கத்தில் இருந்த மொழியையும் இணைத்து ஒரு நிலையான சுவிடீஷ் மொழியை உருவாக்க ஒரு காரணியாக இருந்தது. இன்று கொஞ்சி குலாவிக் கொண்டாலும் அந்த காலத்தில் அடிபிடி சண்டையில் இருந்து டேனிஷ்காரர்களின் பைபிள் மொழிப்பெயர்ப்பில் இருந்து வேறுபடுத்தவும் சுவிடிஷின் சிறப்பு உயிர் எழுத்துகள் ö,ä, å இதில் அறிமுகப்படுத்தப்பட்டன. மொழியாக உருவெடுத்திருந்தாலும் 17 ஆம் நூற்றாண்டு வரை
சுவிடிஷ் மொழியின் இலக்கணங்கள் வரையப்படவில்லை. 19 ஆம் நூற்றாண்டில்தான் எழுத்துமுறைகள் நிலைப்படுத்தப்பட்டன.

நகரமயமாக்கல், தொழிற்மயமாக்கல் ஆகியவற்றின் தாக்கத்தில் தற்கால சுவிடீஷின் வளர்ச்சி 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பிக்கின்றது. இலக்கணம், ஒரேச் சீரான வார்த்தை வடிவமைப்புகள் என சுவீடீஷ் நிலை பெறத் தொடங்கியது. சுவிடீஷ் இலக்கிய வரலாறும் இந்தக் காலக் கட்டத்தில் இருந்து தான் துவங்குகின்றது.

தலைவனாக இருந்தாலும் தொண்டனாக இருந்தாலும் /நீ/ என ஒருமையில் அழைக்கக் கற்றுக்கொடுக்கும் சுவிடீஷ் மொழியிலும் மரியாதைக்குரிய அடைமொழிகள் புழங்கப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு ஆங்கிலத்தில் Mr. , Miss, Mrs, எனக்குறிப்பதை herr, fröken , fru எனவும் பிரெஞ்சில் நீங்கள் என்பதை vous எனக்குறிப்பதைப் போல சுவிடீஷில் ni எனவும் 1960 வரைப் புழங்கப்பட்டு வந்திருக்கின்றன. சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகளைச் சீராக்க , மக்கள் அனைவரும் சமம் என்பதை ரத்தத்திலேயே ஊட்ட , வார்க்க வேறுபாடுகளைக் காட்டும் இந்த மரியாதைக்குரிய அடைமொழிகள் அன்றாட வழக்கில் இருந்து மொழிச்சீர்திருத்த நடவடிக்கையில் ஒழிக்கப்பட்டன.

ஒலிப்பியல் (phonetic) மொழியான சுவிடீஷில் எழுத்துகளின் உச்சரிப்புகள் , வேற்று மொழியில் இருந்து கடன் வாங்கிய வார்த்தைகளைத் தவிர , ஏனையவை அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. ஆங்கிலத்தில் cut - put அல்லது through - cough என மாறுபாட்டுடன் ஒலிப்பதைப்போல தொந்தரவுகள் சுவிடீஷில் இல்லை.

9 உயிர் எழுத்துகள்(vowels) குறில் ,நெடில் உச்சரிப்புடன் 18 வகையாக வார்த்தைகளில் உச்சரிக்கப்படும். a,e,i,o,u,y,å,ö,ä . ஏனைய 20 மெய்யெழுத்துகள் (consonants) 23 வகையாக வார்த்தைகளில் உச்சரிக்கப்படுகின்றன. இவற்றின் உச்சரிப்புகளை கேட்டுப் பழக பின் வரும் சுட்டியைச் சொடுக்கவும் http://www2.hhs.se/Isa/swedish/chap9.htm#pronunciation

ஆங்கிலமும் சுவிடீஷைப் போல ஜெர்மானியக் குடும்பத்தைச் சார்ந்ததனால் ஆங்கிலத்தின் நிறைய வார்த்தைகள் பல, எழுதும் முறையில்/உச்சரிக்கும் முறையில் சிறுது மாறுபட்டு அப்படியே பயன்படுத்தப் படுகின்றன. இருந்த போதிலும் சில ஆங்கில வார்த்தைகள் சுவிடீஷ் மொழியில் நேர் எதிரிடையான அர்த்தங்களைத் தரக்கூடும். முத்தத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல் சுவிடீஷில் சிறுநீரைக் குறிக்கும் , இந்த வேறுபாட்டை அறியாமல் காதலியிடமோ காதலனிடமோ பயன்படுத்தினால் என்னவாகும் என யோசியுங்கள்.

http://sv.wikipedia.org/wiki/Lista_%C3%B6ver_falska_v%C3%A4nner_mellan_svenska_och_engelska

படித்த மேற்தட்டு மக்களின் மொழி என 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் கருதப்பட்ட பிரெஞ்சு மொழியின் தாக்கமும் சுவிடிஷீல் உண்டு. Idé – idée , Dramatik – dramatique , Byrå - Bureau, nivå - niveau ஆகியன சில பிரெஞ்சு வார்த்தைகள் அதே உச்சரிப்புடனும் பொருளுடனும் ஆனால் வேறுபட்ட எழுத்துக் கோர்வையிலும் இருக்கும் சுவிடீஷ் வார்த்தைகள்.

ஆங்கிலத்தில் வாக்கியங்களில் வினைச்சொற்கள் வரும் இடம் மாறுபடலாம். ஆனால் சுவிடிஷில் ஜெர்மன் மொழியைப் போல வினைச்சொல் எப்பொழுதும் இரண்டாம் இடத்தில் தான் இருக்க வேண்டும். ஆங்கிலமோ , ஜெர்மனோ தெரிந்திருந்தால் சுவிடீஷ் மொழியைச் சுலபத்தில் கற்றுக் கொள்ளலாம். சுவிடிஷ் மொழியின் இலக்கணம் மிகவும் எளிது. உச்சரிப்புகளைத் தொடர்ந்த பயிற்சியின் மூலம் கற்றுக்கொண்டால் ஏனைய ஐரோப்பிய மொழிகளைக் காட்டினாலும் எளிதாக கைவசப்படும். குறிப்பிடத்தக்க விசயம் என்னவெனில் நார்விஜியன், டேனிஷ் மொழிகளை சுவிடீஷ் தெரிந்திருந்தால் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். ஏறத்தழ தமிழ் தெரிந்தவர்கள் ஏனையத் திராவிட மொழிகளைப் புரிந்து கொள்ள முடிவது போல்தான்.

எந்த மொழியாக இருந்தாலும் பெரும்பாலானோர் கற்றுக்கொள்ள விரும்புவது 'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்பதை எப்படி அந்த மொழியில் சொல்லுவது என்பதைத்தான்,

jag älskar dig - யாக் எல்ஸ்கார் தெய்க் (புழக்கத்தில் யா எல்ஸ்கார் தெய் எனக் கூறப்படும்).

வேறு சில வாக்கியங்கள்

Vad heter du? - உங்கள் பெயர் என்ன? - வாட் (வா) ஹியத்தர் டு

Jag heter Vinaiooki - என் பெயர் வினையூக்கி - யாக் (யா) ஹியத்தர் வினையூக்கி

Tack så mycket - நன்றிகள் பல - தக் ஸோ மிக்கெத்


மொழித் தெரிந்தால் மட்டுமே அது சார்ந்த நிலப்பரப்பின் கலாச்சாரத்தை உணர்வுப்பூர்வமாகப் புரிந்து கொள்ள முடியும்.அதுவே நாம் அந்த மண்ணிற்கு செலுத்தும் மரியாதையாகவும் இருக்கும். நம் வாழ்வியல் முறைகளையும் வேற்று நாட்டு மக்களுக்கு எளிதில் கொண்டு சேர்க்க முடியும். தமிழ் அடையாளத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்த தாம் வாழும் நிலத்தில் புழங்கப்படும் மொழியைக் கற்றுக்கொள்வது மிகவும் அவசியமாகின்றது. ஆங்கிலம் அகிலத்தின் மொழியாக மாறிவிட்டாலும் கூட, புலம் பெயர்ந்த இடத்தின் மொழியையும் அறிந்து கொள்வது நமது அறிவுக்கும் மட்டும் அல்ல, தமிழுக்கும் வளர்ச்சியாகும் !!.

11 பின்னூட்டங்கள்/Comments:

said...

//தமிழ் அடையாளத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்த தாம் வாழும் நிலத்தில் புழங்கப்படும் மொழியைக் கற்றுக்கொள்வது மிகவும் அவசியமாகின்றது. ஆங்கிலம் அகிலத்தின் மொழியாக மாறிவிட்டாலும் கூட, புலம் பெயர்ந்த இடத்தின் மொழியையும் அறிந்து கொள்வது நமது அறிவுக்கும் மட்டும் அல்ல, தமிழுக்கும் வளர்ச்சியாகும்//

-maruka mudiyatha unmai , thanks selva

said...

"முத்தத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல் சுவிடீஷில் சிறுநீரைக் குறிக்கும் , இந்த வேறுபாட்டை அறியாமல் காதலியிடமோ காதலனிடமோ பயன்படுத்தினால் என்னவாகும் என யோசியுங்கள்."

anubavam edachum irukka???

said...

மற்றுமொரு அருமையான பகிர்வு செல்வா.. மிக்க நன்றி!

said...

wow! Trevlig post! En bukett!

said...

குறிப்புகள் சுவாராசியமாக இருந்தது.
எப்படி ஒரு புது மொழியை வெகு விரைவாக கற்றுக்கொள்வது என்று சொன்னால் கூடுதல் குறிப்பாகும்.

said...

மற்றும் ஒரு அத்திப்பூ

said...

//Vinaiooki// அவர்கள் உச்சரிப்பில் வினாய்ஊகி என்று வரும் போலிருக்கிறதே.

ஒரு ஆண்டுகாலம் பாஷா இந்தோனேசியா பழகிய ஞாபகம் வருகிறது. நல்ல பகிர்வு நன்றி.

said...

சூப்பர் தல

--

ஐ.பி.எல் குறித்து ஒரு கட்டுரை ப்ளீஸ் !!!

said...

அண்ணா, கடைசி வருட ஆய்வுக்கட்டுரையுடன் மொழியியலிலும் ஆய்வு செய்திருப்பீர் போல்.ஒரு கோடி பேர் பேசும் ஸ்வீடிஷில் கூகிள் ட்ரான்ஸ்லேசன் இருக்கு.ஆறு கோடிக்கும் மேல் பேசும் தமிழில் இல்லையே?

said...

தம்பி!
அருமையான கட்டுரை!
என்னுமொரு மொழியை அறிய முற்படும்போது; முதலில் அறிமுகமாவது ஏனோதெரியவில்லை;
கெட்ட வார்த்தைகளே! ஆனால் அதை நண்பர்களுடன் சொல்லலாம். பொது இடத்தில் எழுதமுடியாது.
ஆனால் இந்த" நான் உன்னை விரும்புகிறேன்; நீ ரொம்ப அழகு"; உங்கள் பெயர் என்ன?" பொதுவாக
புதிய மொழி பேசும் இடங்களில் பொதுவான ஆரம்ப அறிதலுக்கு உரிய சொல்லாக இருப்பதன் காரணம் என்ன?
என்னிடம் என் பிரஞ்சு நண்பர் தான் பயணிக்கும் தொடர்வண்டியில் உடன் பயணிக்கும் தமிழ்ப் பெண்ணுக்கு " வணக்கம் , நீங்கள் ரொம்ப அழகு "எனக் கூறக் கற்றுச் சென்றார்.
உங்க ஊருக் கிஸ்சை நினைக்கப் பயமாக இருக்கு!

said...

nice blog!