ஸ்மோலென்ஸ்க் நகரமும் போலந்து நாட்டின் சாபக்கேடும்
இத்தாலியர் அல்லாத ஒரு போப்பரசரை உலகிற்கு தந்த தேசம் !!! ஷாருக்கானையும் ஹிந்தித் திரைப்படங்களையும் ஆராதிக்கும் நாடு !! மளிகைக் கடைகளில் பழச்சாறுகளுடன் வோட்காவும் கிடைக்கும் கொண்டாட்ட தேசம். சண்டை போடனுமா,எல்லோரும் வங்கப்பா போலாந்து என்று ஒரு மைதானம் இருக்கு அங்கே சண்டைகளை வைத்துக் கொள்வோம்,இப்படியான ஐரோப்பிய நாடுகளின் போர் மைதானம். ரேடியத்தைக் கண்டுபிடித்த மேரி கியூரியின் தாயகம் !! நூறு வருடங்கள் உலக வரைபடத்திலேயே இல்லாத நாடு. மொழியையும் கலாச்சாரத்தையும் எப்படி பதுங்கு குழிகளில் பாதுகாப்பது என உலகிற்கு கற்றுத் தந்த கலாச்சார பூமி. கம்யூனிசப்பிடியில் இருந்து முதலில் வெளிவந்து இரும்புத்திரையை விலக்கிய, ஐரோப்பாவின் மேற்கையும் கிழக்கையும் இணைக்கும் அற்புதமான பால்டிக் கடற்கரை நாடுதான் போலாந்து.
ஏப்ரல் 10 , 2010 அன்று போலாந்து நாட்டின் அதிபர் லேக் அலெக்ஸாண்டர் கஸ்ஸின்சிகி, கேத்தின் வனப் படுகொலைகளின் 70வது ஆண்டு நிறைவடைதலை நினைவுகூற ரஷியாவில் இருக்கும் ஸ்மொலென்ஸ்க் சென்ற பொழுது நடந்த விமான விபத்தில் பலியானர். இவருடன் போலாந்து ராணுவதளபதி , மத்திய வங்கி ஆளுநர் உட்பட அரசாங்கத்தின் முக்கிய நபர்களும் பலியானார்கள். இந்த விமான விபத்தில் கவனிக்கப்பட வேண்டிய விசயம் என்னவெனில் கேத்தின் படுகொலை நடந்த அதே வனப்பகுதியில் தான் இந்த விமான விபத்து நடந்துள்ளது.
மறைந்த லேக் கஸ்ஸின்சிகி அவரது முகச்சாயல் கொண்ட இரட்டைச் சகோதரர் முன்னாள் பிரதமர் ஜார்ஸ்லாவ் (தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரான இவர் கஸ்ஸின்சிகியுடன் பயணம் செய்யவில்லை) உடன் இணைந்து போலாந்தை முன்னேற்றப்பாதையில் எடுத்துச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடுமையான கம்யூனிச(ரஷ்ய),ஜெர்மனி எதிர்ப்பாளரும், தீவிர கத்தோலிக்க வலதுசாரி அரசியல்வாதியுமான கஸ்ஸின்சிகி, ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் நாட்டை நற்திசையில் கொண்டு செல்ல முடியும் என்று நம்பிக்கையுடன் செய்ற்பட்டவர்.தன்னையும் தன் சகோதரர் ஜார்ஸ்லாவையும் போலாந்தின் உருளைக்கிழங்குகள் என ஒரு ஜெர்மானிய இடதுசாரிப் பத்திரிக்கை கிண்டலடித்ததால், ஜெர்மன் அதிபருடன் உடன் ஆன சந்திப்பை ரத்து செய்தவர். இந்தியாவின் லல்லுபிரசாத்தைப் போலத் தோற்றமளிக்கும் இவர், மத்தளத்திற்கு இருபக்கமும் அடி என மேற்குலகம், கிழக்கு ரஷியா என இருப்பக்கங்களின் ஏச்சுப் பேச்சுக்களையும்(ஐரோப்பிய ஊடகங்களால் அதிக அளவு கேலி செய்யப்பட்டவர்) சமாளித்து போலாந்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு சென்றவர் என்பது சிறப்பு.
ஒரு தேசத்தை அல்லது ஒரு இனத்தை நிர்மூலமாக்க வேண்டுமென்றால் , அந்த இனம் அல்லது தேசத்தின் அறிவுசார்ந்த ஆளுமைகளை அகற்றினாலே போதுமானது. வல்லரசுகளும் வல்லரசு ஆக வேண்டும் என நினைக்கின்ற அரசாங்கங்கள் தொன்று தொட்டு இதைத் தான் செய்து வருகின்றன. இதில் வசப்படுவது தனித்தன்மை வாய்ந்த தேசிய இனங்கள் தாம். இரண்டாம் உலகப்போரில் யூத இனம் பட்ட துயரங்களை மட்டும் பேசும் உலகத்திற்கு போலாந்து வாங்கிய அடிகள் ஏதேனும் பெரிய நிகழ்வு நடந்தால் மட்டுமே நினைவுக்கு வருகிறது. போலாந்து அதிபரின் விமானம் விபத்துக்குள்ளானது மற்றும் விபத்துக்குள்ளான நிலப்பரப்பு ஆகியன 70 வருடங்களுக்கு முன்னர் நடந்த கேத்தின் வனப்படுகொலைகளை மீள்நினைவு கொள்ள வைத்துவிட்டது.
போலாந்து மக்களுக்கு ஜெர்மனியின் மேல் இருக்கும் வெறுப்பை விட ரஷியாவின் மேல் இருக்கும் வெறுப்புதான் அதிகம். ஜெர்மனி தங்களைச் சில வருடங்கள் தான் கட்டுக்குள் வைத்திருந்தது, ஆனால் ரஷியாவின் இன்னொரு மாநிலமாகத்தான் 40 வருடங்கள் இருந்தோம் என்பனர். ரஷ்யர்களோ போலாந்து மக்கள் நன்றி கெட்டவர், தாங்கள் மட்டும் இல்லை என்றால் யூதர்களை நசுக்கியது போல போலாந்தையும் நசுக்கி இருப்பார்கள் எனச் சொல்வார்கள். ஜெர்மானியர்கள் கலாச்சார ரீதியாகவும் மத ரீதியாகவும் எங்களவர்கள், ரஷியர்களை நாங்கள் காலம் தொட்டே அந்நிய சக்திகளாகத்தான் பார்க்கின்றோம் என்பது போலாந்து மக்களின் வாதம்.
என்னது போலந்து மக்கள் அரசாங்கத்தின் மேல் கோபமாக இருக்கின்றனரா, இருக்கட்டும் இருக்கட்டும் அடுத்த மாதத்தில் இருந்து வோட்காவையும் வினிகரையும் அதிகமாக கொடுங்கள், அமைதியாகிவிடுவார்கள் என்பதுதான் ரஷ்யாவிற்கும் போலாந்தின் பொம்மை அரசாங்கத்திற்கும் குறைந்த பட்ச செயல்திட்டமாக இருந்தது. They ruled us with two "V"s Vodka and Vinegar, போலாந்து சென்றிருந்த பொழுது பயணவழிகாட்டி இப்படித்தான் சொன்னார்.
பத்தாம் நூற்றாண்டின் துவக்கத்தில் மேற்கு ஐரோப்பாவுடன் ஆன நெருக்கம், கத்தோலிக்க மதத்தை வரித்துக் கொண்டது ஆகியன போலாந்தை ஆதிக்க ரஷியாவிற்கு வேண்டாத நாடாகவே வைத்திருந்தது. போலாந்து - லித்துவேனியா கூட்டமைப்பு (1605 - 1618) ஆம் ஆண்டுகளில் ரஷியாவின் மேல் படையெடுத்து மாஸ்கோவைக் கைப்பற்றி ஒரு பொம்மை அரசாங்கத்தை நிறுவியது. இதற்கு ரஷியபிரபுக்கள் மத்தியில் ஆதரவும் இருந்தது. ஆனால் போலாந்து அரசர் மூன்றாம் சிகிஸ்முண்ட், தானே ரஷியாவின் அரசனாக முடிசூட்டிக்கொள்ள முயற்சித்த பொழுது ரஷியபிரபுக்களுடன் இருந்த நட்பு முறிந்து போலாந்து பின்வாங்க வேண்டியதாகியது. போலாந்து பின் வாங்கினாலும் ரஷியாவின் முக்கியத்துவம் வாய்ந்த ஸ்மோலென்ஸ்க் நகரை மற்றும் கைப்பற்றித் திரும்பியது. தாங்கள் கொடுத்த ஒரு அடி அதற்கடுத்த நான்கு நூற்றாண்டுகளுக்கு திரும்ப வந்து கொண்டே இருக்கும் என அப்பொழுதைய போலாந்து தேசத்திற்கு தெரியவில்லை.
மாஸ்கோவிற்கு மேற்கே 360 கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கும் ஸ்மொலென்ஸ்க் நகரம் வரலாற்றில் மட்டும் அல்ல இலக்கியத்திலும் நீங்காத இடத்தைப்பெற்றிருக்கிறது. லியோ டால்ஸ்டாயின் போரும் சமாதானமும் நூலில் நெப்போலியன் படையெடுப்பைப் பற்றிய வர்ணனையில் இடம்பெறுவது இந்த நகரம் தான். இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் முன்னேற்றத்தை தடுத்தி நிறுத்திய செஞ்சேனையினர் நடத்திய போர் நடைபெற்ற இடமும் இதுதான்.
அதே செஞ்சேனையினர் ஸ்டாலினின் ஆணையின் பேரில் போலாந்தின் அரசியல் ஆளுமைகளை , ராணுவத் தளபதிகளை, அரசாங்க உயரதிகாரிகளை, முக்கியஸ்தர்களை போர்க்குற்றவாளிகள் என்ற போர்வையில் தீர்த்துக் கட்டிய இடமும் இந்த நகரம் தான். ரஷியாவை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த ஜெர்மனியப் படைகள் ஸ்லோமென்ஸ்க் மாவட்டத்தில் இருந்த கேத்தின் காட்டுப்பகுதிகளில் புதைக்கப்பட்டிருந்த பிணங்களைக் கண்டெடுத்தது. சண்டை போடச் சென்றவர்கள் தோண்ட தோண்ட பிணமாக எடுத்துக் கொண்டிருந்தார்கள். இரண்டாம் உலகப்போரில் நாஜி ஜெர்மனி செய்த ஒரு நல்ல காரியம் இதுவெனக் கூட சொல்லலாம்.
கிட்டத்தட்ட 22 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு குவியல் குவியலாக புதைக்கப்பட்டிருந்தனர். நாஜி ஜெர்மனி உலக அரங்கில் ரஷியாவை மட்டம் தட்ட இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டது. ஒரு இடத்தில் மட்டும், 28 மீட்டர் ஆழமும் 16 மீட்டர் அகலமும் கொண்ட குழியில் இருந்து 12 அடுக்குகளாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த 3000 போலாந்து அதிகாரிகளின் பிணங்களைத் தோண்டிஎடுத்தனர். அப்பொழுது இதை மறுத்த ரஷியா சிறைபிடிக்கப்பட்ட போலாந்து மக்கள் ஸ்மொலென்ஸ்க் நகர கட்டுமான வேலைகளுக்கு அனுப்பப்பட்டனர் எனவும் அவர்களைக் கொன்றது ஜெர்மன் படைகள் தான் என சாதித்தனர். ஜெர்மனிய மருத்துவர்கள் கண்டெடுக்கப்பட்ட பிணங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே , அதாவது இரண்டாவது உலகப்போரின் ஆரம்பத்தில் ரஷியாவின் கட்டுப்பாட்டில் போலாந்து இருந்தபொழுது சிறைபிடிக்கப்பட்டவர்களுடையாதகும் என நிருபித்தனர்.
இரண்டாம் உலகப்போரில் ஜெர்மன் படைகள் பெலாரஸில் இருந்த ஒரு கிராமத்தை சூறையாடி அங்கிருந்த அனைவரையும் வீட்டோடு கொளுத்தியது. அந்த கிராமத்தின் பெயரும் கேத்தின் தான். ஜெர்மன் படைகள் எத்தனையோ இடங்களில் நாசம் செய்து இருந்தாலும், சோவியத் ரஷியா குறிப்பாக இந்த கிராமத்தைத் தேர்ந்தெடுத்து நினைவு மண்டபத்தைக் கட்டியது. இதைவிடக் கொடூரமாக தாங்கள் செய்திருந்த கேத்தின் வனப்படுகொலைகளை மறைக்க ரஷியா தந்திரமாக செய்தக் குழப்படி வேலையாகத்தான் நோக்கப்படுகிறது. இன்றும் இணையத்தில் தேடினால் கேத்தின் படுகொலை என்ற பெயரில் பெலராஸ் கிராமக் கொலைகளும் கிடைக்கும்.

1990 ஆம் ஆண்டு வரை தங்கள் செய்ததை ஒப்புக்கொள்ளாத ரஷியா, கம்யூனிசம் வீழ்ந்த பின்னர் ஒரு வழியாக ஒப்புக்குச் சப்பாக 22000 பேர் கொல்லப்பட்டனர் என்றது. ஆனால் அது போர்க்குற்றம் என்றோ அல்லது இனப்படுகொலை என்றோ ஒப்புக்கொள்ளவில்லை. ரஷிய முன்னாள் அதிபர் மிகையல் கொர்பச்சேவ் , ஸ்டாலின் அரசாங்கம் நடத்தியக் கொலைகள் என்று சொன்னாலும் ஸ்டாலின் அடக்குமுறைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் கூட தரப்படவில்லை, கேத்தின் படுகொலைகளை ஸ்டாலினின் ரஷியப் பிரதமர் விளாடிமிர் புதின் கேத்தின் வனப்படுகொலை ‘அரசியல் குற்றம்' என்று சொன்னதுதான் ரஷியாவின் தரப்பில் இருந்து வந்த அதிகபட்ச ஒப்புக்கொள்ளல்.
தெற்கு ஒசேத்தியா போரில் போலாந்தின் ஜார்ஜியா ஆதரவு நிலை, நேட்டோ படைகளுக்கும், அமெரிக்க ஏவுதளத்திற்கும் இடமளித்தல் ஆகியன இரண்டு வருடங்களுக்கு முன் மற்றுமொரு ரஷிய-போலாந்து போர் ஏற்படும் சூழலைஏற்படுத்தி இருந்தாலும் இருநாடுகளின் பிரதமர்களின் சந்திப்பு பதட்டத்தைக் கொஞ்சம் தனித்திருந்த வேலையில் போலாந்து அதிபரின் இந்த விமான விபத்து போலாந்து மக்களை அதிர்ச்சியிலும் துக்கத்தில் ஆழ்த்தி இருக்கின்றது. போலாந்து அதிபர் பயணம் செய்த விமானம் 1960 களில் ரஷியாவில் தயாரிக்கப்பட்ட Tupolev ரகத்தைச் சார்ந்தது. விபத்து நடந்த இடம் கேத்தின் படுகொலைகள் நடந்த அதே வனப்பகுதியான ஸ்மோலென்ஸ்க் நகரம். வரலாறு திரும்புகின்றதா !! வரலாற்றின் சிலப்பக்கங்களைச் சமன் செயயும் நடவடிக்கைகளா !! தெரியவில்லை... உண்மைகள் விழித்துக்கொள்ள இன்னும் ஐம்பது வருடங்களாவது ஆகும்.
------
தமிழோவியம் இதழுக்காக எழுதியது
25 பின்னூட்டங்கள்/Comments:
யோசிக்க சொல்கிறது !!!
வரலாறு சொன்னதற்கு நன்றி.தொடர்ந்து எழுதவும்.
தொடர்ந்து இதுபோன்ற கட்டுரைகளை எழுதவும். நன்றி
வரலாறுச் செய்தித் தொகுப்பு ,அருமை
அறியாத செய்தி, பயனுள்ள கட்டுரை... நன்றி...
அருமையான வரலாற்றுத் தொகுப்பு வினையூக்கி. தொடரவும்.
நல்ல பதிவு நண்பரே.
இப்படி கொடுமைகள் நடப்பதால்தான் கம்யுனிச நாடுகள் இரும்புத்திரையிட்டு ரகசியம் காக்கின்றன போலும்.
கம்யுநிசம்தான் சிறந்தது என்று சாதிப்பவர்கள் சிந்திக்கட்டும்.
GOOD Article
நல்லதொரு பயனுள்ளக் கட்டுரை. மிகவும் நன்றி நண்பரே.
எனக்கெழுந்த சில கேள்விகள்?
சந்தேகம் ஒரு நாட்டின் அதிபருக்கு ஏன் தனியான விமானம் இல்லை?
அடுத்து ஏன் மிகவும் பழைய விமானத்தில் செல்லவேண்டும்?
இது உண்மையான விபத்தா? அல்லது சதியா?
வினையூக்கி தெரியாத பல தகவல்களை தெரிந்துக்கொண்டேன் நன்றி!
வரலாற்று தகவலுக்கு நன்றி. இது போன்ற வரலாற்றுச் செய்திகளை மேலும் அறியத்தாருங்கள்.
Interesting and informative post.
Keep posting such similar reports my friend
K.Sundaramurthy,Yemen
Very intrest continivue
நல்லா எழுதிருக்கீங்க வினையூக்கி...!! வாழ்த்துக்கள்..
Informative blog. I am a regular reader of ur blog...Keep up the good work...I dont understand Why our education system never add these things in our history books...These are all the important things....
அருமையான கட்டுரை. ஒரு நாட்டைப் பற்றி இவ்வளவு சுறுங்கச் சொல்லி விளங்க வைத்திருக்கிறீர்கள்.
மஞ்சூர் ராசா..
எனக்கெழுந்த சில கேள்விகள்?
//சந்தேகம் ஒரு நாட்டின் அதிபருக்கு ஏன் தனியான விமானம் இல்லை?//
அவ்வளவு பொருளாதாரம் இல்லை.
//அடுத்து ஏன் மிகவும் பழைய விமானத்தில் செல்லவேண்டும்?//
மேற்சொன்ன அதே காரணம். புது விமாணம் வாங்க முயற்சி செய்தபோது பொதுமக்களும், எதிர்கட்சிகளும் இட்ட கூக்குரலில் திட்டம் கைவிடப்பட்டது. இப்போது மக்கள் வருத்தத்திலும், அதிர்ச்சியிலும்.
//இது உண்மையான விபத்தா? அல்லது சதியா//
இனிதான் தெரிய வரும். விளாடிமிர் புதின் முழுவிசாரனை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்போம் என்றிருக்கிறார்.
தம்பீ..
மிக, மிக அருமையான கட்டுரை..! பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.. மிக்க நன்றிகள்..!
/ஸ்மோலென்ஸ்க் நகரமும் போலந்து நாட்டின் சாபக்கேடும்////ஒரு அற்புதமான ஆவன பதிவு என்று சொல்லும் அளவுக்கு இந்த கட்டுரையை வரலாற்று பிண்னனியுடன் சுவராஸ்யமாக விவரித்த உங்கள் கரங்களுக்கும்,விரல்களுக்கும் நன்றிகளை அணிகலன்களாக சமர்பிக்கிறோம்!
நல்லதொரு கட்டுரை செல்வா.
இந்த விபத்தின் செய்திவந்தவுடன் எனக்கு வந்த சந்தேகத்தினையே உங்களது இந்த இடுலையிலும் காண்கின்றேன்.
அன்பான நண்பர் திரு வினையூக்கி,
நல்ல கட்டுரை. வாழ்த்துகள்!
வினவு கும்பலுக்கு மற்றுமொரு எதிரி கிடைத்துவிட்டார்கள்! அதான் சார், Katyn massacre பற்றி நீங்கள் எழுதியது அனைத்தும் பொய், நீங்கள் ஏகாதிபத்திய அடிவருடி என்று ஆரம்பித்து விடுவார்கள்! இதில் கவனிக்க படவேண்டியது, ஸ்டாலினிச கொடுமைகளில் மிக சாதாரணமானது இந்த Katyn கொலைகளம்! எப்பவோம் போல, முடிவெடுத்தது ஸ்டாலின். நடத்தியது லாவறேண்டி பேரியா (Chief of NKVD, which was latter called KGB).
இதை போல பல பல அயோக்கியத்தனங்களை செய்து, அதேல்லாம் வெளிப்பட்டு, உலகம் முழுவதும் கண்டுகொள்ளப்பட்டு, இவர்களை துரத்தி அடித்த பின்னரும், இந்தியா, நேபால் போன்ற இடங்களில் இவர்கள் உட்கார்ந்து கொண்டு, மற்றவனுக்கு அறிவுரை வேறு, நாங்கள் ஆட்ச்சிக்கு வந்து நல்லது செய்வோம் என்ற சூளுரை வேறு!!! கொலை செய்வதில், பொய் சொல்லுவதில், நேரத்திற்கு ஏற்றார்போல பேசி ஏமாற்றுவதில், ஸ்டாலினிய மற்று மாவோவிச கும்பல்களுக்கு நிகர் இல்லை!!!
பொறுத்திருந்து பாருங்கள், பல பெயர்களில் வந்து நம்ம புரட்ச்சியாளர்கள் உங்க தளத்தில் தாக்குவார்கள்!!!
Repeat, நல்ல கட்டுரை!!
நன்றி
நல்ல கட்டுரை நண்பா. ஆனால் விபத்து சதியினாலா என்று சொல்ல முடியாது.
பைலட்டின் தவறு போல் தெரிகிறது. Black boxes தகவல்கள் அப்படி சொல்கின்றன. மேல் விபரங்கள் சில நாட்களில் வெளி வரும்..
போலந் மற்றும் பல கிழக்கு அய்ரோப்பிய நாடுகள் சோவியத் ரஸ்ஸியாவின் இரும்பு பிடியில் சுமார் 45 ஆண்டுகள் கடும் சித்தரவதைகளை அனுபவித்தன. அவை வரலாற்று கட்டாயங்கள் என்று தோழர்கள் நியாயப்படுத்துவார்கள்.
கேதின் படுகொலைகள் பற்றிய விக்கி சுட்டி :
http://en.wikipedia.org/wiki/Katyn_massacre
விக்கிபிடியா சுட்டிகளை அளித்தாலே உடனே இளக்காரமாக பேசுவார்கள். ஆனால் விக்கி சுட்டிகள் ஒரு introductionக்குகாகத்தான். மிக முக்கியமாக அதன் அடியில் பல இதர வலைமனை மற்றும் ஆய்வுகளுக்கான லிங்குகள் மற்றும் தரவுகள் அளிக்கப்பட்டிருக்கும். உண்மைகளை அறிய விரும்புவோர் தேடி படிக்கலாம்.
பூஸ்வா ’ஆதரவாளர்கள்’ மற்றும் அடிவருடிகளை கொலை செய்வது வரலாற்று தேவை. கம்யூனிசத்தை அமலாக்க இது முக்கியமான தேவை என்று நியாயப்படுத்தும் ‘கருணாமூர்த்திகள்’ உள்ளனர். உண்மைகளை வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
கம்யூனிசத்தை அமலாக்கி, ஏற்ற தாழ்வற்ற ’சொர்க’ பூமியை உருவாக்க இதுவரை நடந்த படுகொலைகள், கொடூரமான மனித உரிமை மீறல்கள் பற்றி அறிய ஒரு முக்கிய சுட்டி :
http://econfaculty.gmu.edu/bcaplan/museum/musframe.htm
இவைகள் எல்லாம் முதலாளித்துவ ஏகாதிபத்திய ஊடகங்களின் பொய் பிரச்சாரங்கள் என்று தோழர்கள் கதைப்பர். எண்ணிக்கைகளில் மிகை இருக்கலாம். (அன்று மூடப்பட்ட நாடுகளில் இருந்து முழு விபரங்கள் வெளிவரவில்லை. ஆனால் நிகழ்வுகள் பொய்களல்ல. 1991க்கு பிறகு திறந்துவிடப்பட்ட National Archives மற்றும் பல்லாயிரம் தனிநபர் ஆவணங்கள் மூலம் முழு தகவல்கள் இன்று உறுதிபடுத்தப் பட்டுள்ளன. எதிர்காலத்தில் எங்காவது செம்புரட்சி உருவானால், இவை மீண்டும் நிகழும் என்பதே வரலாற்று பாடம். Never again..
வரலாறு குறித்து பல புதிய தகவல்களை அறிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
இவ்விபத்து பல சந்தேகங்களை தோற்றுவிக்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த முக்கியஸ்தர்களை வைத்துக் கொண்டு, வான்பரப்புக் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி, தரையிறக்கும் அளவுக்கு விமானிக்கு என்ன கட்டாயமோ தெரியவில்லை. ஒரு வேளை விமானப்படை தளபதியோ அல்லது அதிபரே கூட என்ன ஆனாலும் சரி என்று தரையிறக்கச் சொல்லியிருக்கலாம். கருப்புப் பெட்டி விவரங்கள் வெளியிடப்பட்டால் வெளிச்சத்திற்கு வரும்.
விமான விபத்துக்களுக்கும், ரஷ்யாவிற்கும் பல விவகாரமான தொடர்புகளை வரலாற்றில் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. பிரிதொரு சமயம் விளக்கமான பதிவாக இடுகிறேன்.
தகவல்களுக்கு நன்றி பின்னோக்கி
நீங்கள் இப்போது நடந்த சம்பவத்தையும், பழைய சம்பவத்தையும், கண்டறிந்த விதம் அருமை.
பழைய அரசியல் நிகழ்வுகளை புரிந்துகொள்ள எடுத்த முயற்சியும், அதை துளி குறையாமல் விவரித்த முறையும் அருமை.
எனக்கு போலாந்தின் மீது எப்போதும், ஒரே வருத்தம் தான்
ஜெர்மேநியர்களால் பாதிக்க பட்ட போதும், ரஷ்ய அரசாங்கம் வதைத்த போதும்
இவர்கள், அவர்களை கண்டு யோசித்து செயல் பட மறுக்கும் காரணம் தான் அது.
இவர்கள் சேரனின் பிரிவோம் சந்திப்போம் போன்ற நிறைய படங்கள் பார்த்திருந்தால் கூட
ஒரே விமானத்தில் பயணம் செய்து இருக்க மாட்டார்கள்.
Post a Comment