Tuesday, February 23, 2010

உன்னால் கவிஞனும் ஆனேன் !!!!



வீதியின் திருப்பத்தில் வேறுபாதை எடுப்பாய் எனத் தெரியும்
உன்னுடன் செல்லும் வரை சிறப்பு, பிரிவாய் எனத் தெரிந்தும் ..
விதியை மதியால் வெல்ல விருப்பம் இல்லை!!
இந்தப் பாதையும் சாட்சி, நாம் இருவரும் ஒன்றாக கடந்தோம் என்பதற்கு..
பிரிவும் தனிமையும் இன்னும் புதிதல்ல ஆதலால்..
இன்றும் தனித்தே இருக்கிறேன்
உன் நினைவுகளோடு..!!!!

17 பின்னூட்டங்கள்/Comments:

The Majuscule Tornado said...

கனமான கவிதை..!!!

Alag said...

Good. Good if it makes you strong!!!!!!!!!!!!!

Unknown said...

vaazhthukkal!
ungal kavithai payanam innum thodara vendum...........

சென்ஷி said...

கவித..

எங்க ஏரியா.. உள்ள வராதே :)

(சும்மா சொன்னேன்.. நல்லாருக்கு செல்வா.. அடுத்த ரவுண்டுக்கு ரெடி ஆகுங்க தலைவரே)

தருமி said...

கவுஜ ..

அப்போ நான் வர்ட்டா ..?

சென்ஷி said...

ப்ச்... செல்வா.. விட்டுத்தள்ளுங்க தலைவரே.. உங்க மனசு புரிஞ்சவங்களுக்கு /புரிஞ்சுக்கிட்டவங்க சீக்கிரம் உங்களைத் தேடி வருவாங்க. இல்லைன்னா உங்க பக்கத்துலயே இருப்பாங்க..

(எச்சரிக்கை: இன்னொருக்கா இப்படி கவுஜ போட்டு வைச்சா கொலைவெறித்தாக்குதல் படையினர் கொண்டு கும்மி அடிக்கப்படும்.)

அன்புடன் நான் said...

கவிதை... கொஞ்சம் வலி.

Alexander said...

//வேறுபாதை எடுப்பாய்// aangilathil yosithathin vilaivu (take turn), sariyana thamizh thanaa?? irunthaalum kavithai super!!!

மதுரை சரவணன் said...

தனித்தே இருக்கிறேன் உன் நினைவுகளுடன்/ அருமை. தனித்து உள்ளத்தில் இடம் பிடிக்கிறது.

ஆயில்யன் said...

தனிமையில/தனிமையுள்ள கவிதைகள் மனதினை கனமாக்கி செல்லவே ரொம்ப ஆசைப்படுக்கின்றன போல!

விட்டு
தள்ளுங்க
பாஸ்!

உங்க மனசை புரிஞ்சுக்கிட்டவங்க சீக்கிரம் உங்களைத் தேடி வருவாங்க. :)

கிச்சான் said...

மிகவும்...... மென்மையாக........
சோகத்தை
ரசிக்கும்படி
சொல்லி இருக்கிறது
உங்களின் இந்த படைப்பு

வாழ்த்துக்கள் தோழர் செல்வகுமார் அவர்களே !


அன்புடன் கிச்சான்

Unknown said...

மனதை ரணமாக்கிய கனமான கவிதை
கவிதை படித்து முடிக்கும் போது மனத்தில் தோன்றியது கிளைகள் இல்லாத வீதியாக இருந்திருக்கக்கூடாதா....... என்று

வாழ்த்துக்கள் உங்கள் கவிதைப் பயணம் தொடர...................

Unknown said...

ஆழ்ந்த காதலில் இருக்ரிர்கள் என்று நினைக்கிறேன்

Ganesh with Sweden Peoples said...

மயிலின் அழகு, அறியும் துணை மயில்
உன் சோகம், அறியும் உன் காதல்
இதை படிகளாக வைத்துப்போராடு - வித்தாகும் புது படைப்பிற்கு ..

vidivelli said...

good........good your poem.

நிஹேவி said...

நான் எழுதுவது போல் இருந்தது!!! காலம் எல்லா காயங்களுக்கும் மருந்து தரும்.

chimu said...

மிகவும் அழகான கவிதை ....