Friday, September 25, 2009

அம்மு,கண்ட இடத்துல கிறுக்காதே!! - சிறுகதை

எங்களுடன் வந்திருந்த அலுவலகத் தோழிகள், தசாவதாரம் படத்தின் இடைவேளையில் எழுந்து வெளியேப்போனவுடன், எனது இடது கையை இறுக்கமாகப் பிடித்து இருந்தவள்,மெல்ல கையை விலக்கி, இருக்கையின் கைப்பிடியில், நகத்தினால் ஏதோ எழுத எத்தனித்துக் கொண்டிருந்தாள்.

“என்னடா அம்மு, பண்ற!!' எனக் கேட்டுக்கொண்டே கைப்பிடியைக் கவனித்தேன். ”அம்மு - கார்த்தி” என எழுதி வைத்திருந்தாள்.

ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் ஒன்றாக்கி அவளின் மணிக்கட்டில் சுளீர் என ஒரு அடிக்கொடுத்தேன்.

“என்ன பழக்கம் இது, கண்ட இடத்துலேயும் கிறுக்கிக்கிட்டு”

மணிக்கட்டைத் தடவிக்கொண்டே, ”தெரியல கார்த்தி,இந்த மாதிரி உன் பேரையும் என் பேரையும் சேர்த்து வச்சு எழுதிப்பார்க்கிறது நல்லா இருக்கு”

”எழுதி வைக்கிறதுன்னா, உண்மையானப் பேரை எழுதி வைக்கனும்... உண்மையான பேரை எழுதினா மாட்டிக்குவோம்னு பயமா!!” என்னையும் அறியாமல் எனது குத்தல் வார்த்தைகள் வந்து விழுந்தது.

"நிமிஷத்துக்கு பத்து தடவை அம்மு கூப்பிடுறதுனால, அம்முங்கிறது தான் மனசுல நிக்குது”

“சரி சரி, நம்ம பேரை உன் மனசில எழுதி வை போதும், அதுவரை இப்படி பணத்துல கிறுக்கிறது, சுவத்துல கிறுக்கிறது எல்லாம் வேணாம்”

கொஞ்சம் குரலை உயர்த்தி சொன்னால் போதும், அவளின் கண்களில் நீர்த்திவலைகளுடன் என்னையே உற்றுப்பார்ப்பாள்.

”நீ மட்டும் கதையில எனக்கு ஒரு பேரு வச்சி எழுதுறீல்ல, அதை நான் கேட்டேனா”

“சரிடா செல்லம், காம்ப்ரமைஸ் காம்ப்ரமைஸ், அம்முகுட்டி தானே!! பொம்மு குட்டில ”

“சரி எல்லாம் வர்றாங்க ,இந்த அம்மு பொம்மு எல்லாம் ஸ்டாப் பண்ணிட்டு மத்மஸல் நு வழக்கம்போல கூப்பிடுங்க “

காதலிப்பதை விட , மற்றவர்களுக்கு தெரியாமல் ரகசியமாக காதலிப்பதுதான் மிக மிக சிரமம். இரண்டாம் பாதியில் அமெரிக்க வில்லன் பிளெட்சர் கதாநாயகக் கமலை துரத்த, பழைய காதலி ஜெனியின் கிறுக்கல் நினைவுகளை துரத்த முடியாமல் துவண்டு கொண்டிருந்தேன். காதலில் பழையது புதியது என உண்டா என்ன?

5 வருடங்களுக்கு முன்னே, மாயாஜாலில் வர்ணஜாலம் படம் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது இப்படித்தான் ஜெனி - கார்த்தி என இருக்கையில் முதன் முதலாக கிறுக்க ஆரம்பித்தேன். ஸ்ரீராமஜெயம் எழுதுவது போல, சமயங்களில் எங்களுடையப் பெயரை நுணுக்கமாக ஐந்து ரூபாய் பத்து ரூபாய் தாள்களில் எழுதி அவளுக்குக் கொடுப்பதுண்டு. கிழக்கு கடற்கரை சாலை மரங்கள், வளசரவாக்கம் உணவு விடுதிகளில் மேசைகளில் பலவற்றிலும் எங்கள் இருவரின் பெயர்களும் இருக்கும்.

“ஃபிரண்டாத்தான் பழகினேன், அவர்தான் தப்பா எடுத்திக்கிட்டாரு” என்று ஜெனி அவளின் சகோதரன் முன் சொன்ன பின் ,மனதில் கல்வெட்டாய் இருந்த அவளின் பெயர் கரைந்துப் போனது. எல்லாம் பொய்யாகிப்போன பின் சிரத்தை எடுத்து எல்லா இடங்களில் பதிந்து வைத்திருந்த அவளின் பெயரை மட்டும் அழித்து வைத்தேன்.

பஞ்சாபி கமலஹாசன் ஆடிக்கொண்டிருக்க,

“சுவீடன் போனப்பின்ன என்னை மறந்துடுவியா?” கன்னத்தின் அருகே மெல்லிய குரல் கேட்டவுடன் ஜெனியை மனதில் இருந்து துரத்தி விட்டு

“ இல்லடா அம்மு, குறைஞ்சது இரண்டு மணி நேரமாவது பேசுவேண்டா!! ”

” எனக்குப் பத்தாது, நீ பேசிட்டே இருக்கனும், நீ ஜத்தெய்ம் ஜத் தெய்ம் நு சொலிட்டே இருக்கனும், நான் மெர்சி பக்கூப் பக்கூப் நு பதில் சொல்லனும்”

“சரிடா குட்டிமா, பேசிட்டே இருப்பேன்... சரி பிரஞ்ச் எல்லாம் கலக்குற”

“பாண்டிச்சேரி பொண்ணா இருந்துகிட்டு இது கூட இல்லேன்னா எப்படி” கண்களை சிமிட்டிக்கொண்டே, படம் முடியும் வரை தன் கைவிரல்களை என் விரல்களோடு இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள்.

உதயம் திரையரங்கத்தில் பத்து விரல்களில் வலுவான நெருக்கம், பத்து மாதங்களில் பன் மடங்காகி போன வாரம் பட்டென முடிந்து போனது.

“அம்மா அப்பா முன்ன, உன்னைப்பிடிக்கும் னு சொல்ல முடியாதுடா!! “

ஜெனியின் மேல் வந்த கோபத்தில் லட்சத்தில் ஒரு பங்கு கூட வரவில்லை. பிரிந்துவிடலாம் என முடிவு செய்த பின்னர் இரண்டு முறை தொடர்புகொண்ட போதும் கைபேசியை எடுக்கவில்லை. வீட்டிற்கு அழைத்தால் கடுமையான குரலில் எடுத்து எறிந்து பேசும் அவளின் தந்தை. புதுச்சேரி அரசாங்க நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்குனர், மகள் காதலிக்கும் அல்லது அவரை பொருத்தவரை , மகளை காதலிக்கும் எவனோ ஒருவனிடம் அப்படி நடப்பது தானே இயல்பு.

நிராகரிப்பை விட ஒதுக்கப்படுதல் அதிக வலியை தரும். சராசரி காதலனைப் போல கதறி அழுது கொடுத்த சலசலப்பை எல்லாம் கண்டு கொள்ளாமல் ,பெற்றவர்களின் பிள்ளையாய் போனவளை இனி மீட்டெடுக்க முடியாது. மீட்டெடுக்கவும் வேண்டாம் என, மன மாற்றத்திற்காக பாரிஸ் வந்தாலும் அவளின் எண்ணங்களே வந்து நிற்கின்றது. நகரத் தெருக்களில் காதில் விழும் மதமஸல், மொன்சியர், மெர்சி பக்கூப், ஜத் தெய்ம் வார்த்தைகள் எல்லாம் அவளின் குரலில் வந்து விழுகின்றன. ஈஃபிள் கோபுரத்தின் முன்னர் முத்தம் கொடுத்துக்கொண்டிருந்த காதலர்களைப் பார்த்த பின்னர், அவள் எனக்குக் கொடுத்த முத்தத்தை கண்களை மூடி மீள்நினைவு செய்தேன்.
நண்பர் ஜனா மூன்றாவது தளத்தில் இருந்து என்னை படம்பிடிக்க படிக்கட்டுகளில் ஏறிப்போன பின்னர், யாரும் கவனிக்கிறார்களா என ஒரு முறை சுற்றும் முற்றும் பார்த்து விட்டு ”பிரசன்னவதனி” என்று அவளின் பெயரை ஆங்கிலத்தில் அழுத்தமாக, ஈபிள் கோபுர பக்கவாட்டு கைப்பிடி மரக்கம்பத்தில் பதிந்தேன்.

19 பின்னூட்டங்கள்/Comments:

said...

தனித்து இருக்கிறேன் அவளின் நினைவுகளோடு .....அவள் கிடைக்க வாழ்த்துக்கள்.

said...

இது சிறு'கதையா'? சிறுகதையா?

said...

பேய்க் கதை போரடிச்சுட்டுச்சா.. எல்லாம் காதல் சோகமாவே கொட்டிட்டு இருக்கீங்க :-)

//நிராகரிப்பை விட ஒதுக்கப்படுதல் அதிக வலியை தரும்.//

எனக்கென்னமோ ஒதுக்கப்படுதலை விட நிராகரிப்பு அதிக வலியைத் தரும்ன்னு தோணுது..

(ஒதுக்கப்படுதல், நிராகரிப்பு : இரண்டுக்கும் உள்ள பொதுவான வேறுபாடு என்னன்னு சொல்லுங்க வினையூக்கி!)


//”பிரசன்னவதனி” //

பேரு ரொம்ப பெருசா இருக்குது. மரத்துல எழுத கொஞ்சம் அதிகம் கஷ்டப்படணும் போலருக்குது :-)

இந்தக்காதலியா(லா)வது ஒழுங்கா உங்ககூடவே கல்யாணம் ஆக வாழ்த்துக்கள்....

said...

nice :)

said...

:(

said...
This comment has been removed by the author.
said...

i think you are a kadhal kirukan.நிராகரிப்பை விட ஒதுக்கப்படுதல் அதிக வலியை தரும் good line.

said...

//நிராகரிப்பை விட ஒதுக்கப்படுதல் அதிக வலியை தரும்.//

எனக்கென்னமோ ஒதுக்கப்படுதலை விட நிராகரிப்பு அதிக வலியைத் தரும்ன்னு தோணுது..

(ஒதுக்கப்படுதல், நிராகரிப்பு : இரண்டுக்கும் உள்ள பொதுவான வேறுபாடு என்னன்னு சொல்லுங்க வினையூக்கி!)


rendum kasatam than

said...

@நிலாமதி

மிக்க நன்றி.

@நிமல்

:)

@சென்ஷி

நிராகரிப்பு - Total Rejecction

ஒதுக்கப்படுதல் - Avoid அல்லது ignore அதுவும் உயிருக்கு உயிராய்ப் பழகிவிட்டு ஒதுக்கபடும்பொழுது வலி அதிகமாக இருக்கும்

@Visa
நன்றி விசா

@அன்புடன் அருணா

:(

@செழியன்

சரி தான். இரண்டுமே ஏற்றுக்கொள்ள கடினம் தான்

said...

நல்ல கதை!

said...

காதல் போதை ரொம்ப
ஆபத்தானது ஜி.....

said...

//ஒதுக்கப்படுதல் - Avoid அல்லது ignore அதுவும் உயிருக்கு உயிராய்ப் பழகிவிட்டு ஒதுக்கபடும்பொழுது வலி அதிகமாக இருக்கும் //

100% சரி நண்பா.

நானும் உன் துன்பத்தை அனுபவித்து விட்டேன். வலி உணர முடிகிறது.

மனம் தேறுதலடையட்டும்.

said...

கதை நல்லாருக்கு. நமக்கும் கொசுவத்தி சுழல் ஆரம்பிச்சிடுத்து. இந்நேரம் அவங்க குழந்தைக்கு 6-7 வயசு இருக்கலாம். அதனால நோ ஃபீலிங்க்ஸ் மூவ் ஆன்ன்ன்ன்ன்...அதுக்கப்புறம் அப்பப்போ அன்னன்னைக்குன்னு ஏதோ ஒரு கேர்ள்பிரண்டு நம்மள தேத்திக்கிட்டும் அழ வெச்சிக்கிட்டும் இருக்காங்க. So, No worries...mate.

said...

//”பிரசன்னவதனி” என்று அவளின் பெயரை ஆங்கிலத்தில் அழுத்தமாக, ஈபிள் கோபுர பக்கவாட்டு கைப்பிடி மரக்கம்பத்தில் பதிந்தேன்//

மனதில் ஓடிய சோகமான RRயை தவிர்க்க முடியவில்லை. அழகான கவிதை போன்று ஒரு கதை:)

said...

hi vinaiooki eppadi irukeenga...
ennai ninavu irukkua..

ippellam athiagama enn elutha maatureenga?

said...

ஹோட்டல்ல இட்லி இல்லைன்னா தோசை வாங்கி சாப்பிடறதில்லையா ? அதுமாதிரி.

அதுக்காக இட்லியும் தோசையும் ஒண்ணா அப்படீன்னு கேக்காத.

எல்லாம் ஒரே க்ரைண்டர்ல அரைச்ச மாவுதான்.

ருசியான மொறுமொறு தோசை கிடைக்க வாழு'த்துக்கள்...!!!

said...

ச்சே....இவ்வளவு நாளும்
இந்த அருமையான
பீலிங்கான ..கதையை
படிக்காம
இருந்துட்டனேன்னு
ஒரு வருத்தம்
மனதில் .

அன்புடன் கிச்சான்

said...

Nice story !

Generally I get irritated when seeing someone written names in public places like bus seats, park benches etc. Your story makes me think of the feel of the love behind those marks. I hope not to get irritated anymore.

By the way, the name of the girl "prasanna vadhani" is lovely, especially its meaning.

said...

கதை அருமை. கவித்துவமான முடிவு.

வினையூக்கியின் பதிவுன்னாலே ஏதோ பேய் பங்களா கணக்கா நினைச்சிட்டிருந்தேன் :)