Thursday, June 19, 2008

வா ஜெனி, போயிடலாம் - சிறுகதை

கார்த்தியை அந்த பிள்ளையார் கோவிலின் மதிலின் அருகே பார்த்த பொழுது முதன்முறையாக ஜெனிநடுங்கிப்போனாள். கார்த்தியின் ஒவ்வொரு அசைவுகளும் அவளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துக்கொண்டிருந்த நாட்கள் எப்படி மாறிவிட்டன.அவனைப் பார்த்ததும் தன்
கழுத்தில் அணிந்திருந்த சிலுவையை இறுக்கமாக பிடித்துக்கொண்டே “கார்த்தருக்கு தோத்திரம்” என முணுமுணுத்துக்கொண்டே வேகமாக வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கிய அவளை பின் தொடர்ந்த கார்த்தி

“வா போயிடலாம், ஜெனி, உனக்காக இங்கேயே காத்திருப்பேன்” என்று சொன்னது மட்டும் அவள் காதில் விழுந்தது.

வீட்டிற்கு வந்து சேர்ந்து அம்மாவின் மடியில் முகத்தைப் புதைத்து அழுது முடித்துவிட்டு அம்மாவிடம் ஏதும் சொல்லாமல் பைபிளை எடுத்து வாசிக்க ஆரம்பித்தாள். பயம்,துக்கம் வருத்தம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்தது போல இருந்தது. கார்த்தியும் ஜெனியும்
உயிருக்கு உயிராக காதலித்தவர்கள். கார்த்தியுடன் போய்விட ஜெனிக்கு விருப்பம்தான், இருந்த போதிலும், அப்பா இறந்த பிறகு கண்ணும் கருத்துமாக தன்னை வளர்த்த அம்மாவை நிராதரவாக விட்டு செல்ல அவள் மனசாட்சி விட்டுக்கொடுக்கவில்லை.

பைபிளை மூடி வைத்து ஜெனி சற்று கண்ணயர்ந்த போது பைபிளின் மேல் வைத்திருந்த கைத்தொலைபேசி அடித்தது.

“ஜெனி,நான் கார்த்தி பேசுறேன், இரண்டு நாட்களாக உனக்காக காத்திருக்கின்றேன், நீ இன்னும் வரல, கடைசி வரை இருப்பேன்னு சொன்ன, ஆனால் கடைசிக்குப்பிறகு வரமாட்டியா? நான் இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ எப்படி உனக்கு எப்படி மனசு வருது, ஆத்மார்த்தமானது நம் காதல்னு சொன்ன, நான் ஆத்மாவாக இருக்கிறப்ப ஏன் என்னைப்பார்த்து பயப்படுற? எனக்கு ஆக்ஸிடெண்ட் ஆகிற கடைசி நிமிசம் வரை உன்னைதான் நினைச்சுட்டு இருந்தேன், சீக்கிரம் வா காத்திருக்கிறேன்” என கார்த்தி சொல்லி முடிக்க அழைப்பு துண்டிக்கப்பட்டது.

சரியாக மணி பனிரண்டு அடிக்க, அம்மாவிற்காக வாங்கி வைத்திருந்த தூக்க மாத்திரைகளை எண்ண ஆரம்பித்தாள். மொத்தம் 18 இருந்தது. மூன்றாவது மாத்திரையை வாயில் போடும்பொழுது திரைச்சீலை விலகி இருந்த சன்னலுக்கு வெளியே கவனித்தாள். அவள் அப்பா நிற்பது போல இருந்தது. உண்மைதான் அவர் இறந்த அன்று போட்டிருந்த உடையுடன் அங்கு நின்று கொண்டிருந்தார்.

”ஆக்ஸிடெண்ட்ல, நான் போனப்ப, அம்மாவும் உன்னை மாதிரியே முடிவு எடுக்க நினைச்சிருந்தா நீ, இந்த நிலைக்கு படிச்சு முன்னுக்கு வந்து இருக்க முடியுமா, துக்கத்தை விட்டுட்டுப்போகனும்னா எல்லோரும் செத்துதான் போகனும்.. இந்த நிலையும் மாறும்.. இந்த முடிவு வேண்டாம்”

என ஜெனியின் அப்பா அவளது காதில் சன்னமாக கூறுவது போல இருந்தது. திரைச்சீலையை மூடிவிட்டு தீர்க்கமான முடிவுடன் மாத்திரைகளை மீண்டும் இருந்த இடத்தில் வைத்துவிட்டு அவளது அப்பா கடைசியாக எழுதி வைத்திருந்த நாட்குறிப்பு புத்தகத்தை எடுத்து தலைமாட்டில் வைத்துக்கொண்டு தூங்கிப்போனாள்.

*********************

16 பின்னூட்டங்கள்/Comments:

said...

மீண்டும் பேய் கதையா??

said...

/
”ஆக்ஸிடெண்ட்ல, நான் போனப்ப, அம்மாவும் உன்னை மாதிரியே முடிவு எடுக்க நினைச்சிருந்தா நீ, இந்த நிலைக்கு படிச்சு முன்னுக்கு வந்து இருக்க முடியுமா, துக்கத்தை விட்டுட்டுப்போகனும்னா எல்லோரும் செத்துதான் போகனும்.. இந்த நிலையும் மாறும்.. இந்த முடிவு வேண்டாம்”
/

முடிவு யதார்தம்

said...

காதலுக்கு அவமரியாதை!!
:)))

said...

அற்புதமான கதை! நல்ல முடிவு வினையூக்கி!

சூப்பர்!

டிபிகல் வினையூக்கி டச்!

said...

மீண்டும் பேய் கதை என்றாலும் அர்த்தமுள்ள முடிவு சிறப்பு...!

said...

வலையுலக பி.டி.சாமி வாழ்க!

said...

பேய்க்கதை ஸ்பெஷலிஸ்ட் வினையூக்கி வாழ்க!!

said...

கருத்துடன் ஒரு திகில் கதை...முடிவு அருமை வினையூக்கி:))

said...

நல்லாயிருக்குங்க.. :)

said...

நல்லா இருக்கு, அப்படியே ஒரு +

said...

மீண்டும் ஒரு பேய்க்கதை...
ஆனாலும் பாஸிடிவான பேய்க்கதை!
கலக்கிட்டீங்க வினையூக்கி

said...

நல்லாருக்குங்க. வாழ்த்துக்கள்.

said...

/ இந்த நிலையும் மாறும் /

யதார்த்தமான கதை... கலக்ஸ்.....

said...

romba yadhaarththamaana mudivu....
anbudan aruna

Anonymous said...

உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. மேலும் அதிகமான இணைய நண்பர்களுக்கு உங்கள் பதிவினை கொண்டு செல்ல http://www.tamilish.com -ல் சமர்பிக்கவும். வாழ்த்துக்கள்

said...

படிக்க ஜாலியா இருந்தது.