பேய் வீடு - Surveyசன் போட்டிக்காக "நச்சுன்னு" மேலும் ஒரு கதை
" இந்த பேய் வீட்டை வாங்குற நீங்க பெரிய தைரியசாலிதான் சார், இருந்தும் உங்களுக்கு லாபம் தான், இந்த ஏரியாவில 50 லட்சம் விலை போற கிரவுண்ட் உங்களுக்கு வீட்டோட 15க்கு வந்துடுச்சு, " என தன் கமிஷன் தொகை குறைந்துவிட்டதை தலையை சொறிந்தபடி சுட்டிக்காட்டிய வீட்டு புரோக்கருக்கு 5000 ரூபாய் எக்ஸ்ட்ராவாகக் கொடுத்துவிட்டு , நான் வாங்கிய வீட்டிற்கு அடுத்த வீட்டைத் தட்டினேன். கதவைத் திறந்த நடுத்தர வயது ஆசாமியிடம் என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன்.
“கேள்விப்பட்டேன் சார், நீங்க அந்த வீட்டை வாங்கிட்டிங்கன்னு, கிட்டத்தட்ட 4 வருஷமா பூட்டிக்கிடக்கு, அந்த பொண்ணு தற்கொலை பண்ணிக்கிட்ட பின்ன குடி வந்தவங்களும் தினமும் நைட் 11 மணிக்கு மேல புல்லாங்குழல் சத்தம் வீட்டில கேக்குதுன்னு பயந்து காலி பண்ணிட்டு போயிட்டாங்க, “
“ம்ம்ம்" அவர் சொன்னதற்கு தலையாட்டினேன்.
“உங்களுக்கு பேய் பிசாசு மேல எல்லாம் நம்பிக்கை உண்டா?”
“இல்லை சார்
“ மனசு தான் பேய், எதுக்கும் நீங்க ஃபேமிலியோட குடிவர முன்னாடி ஒரு பூஜை பண்ணிடுங்க, பேய் வீடுங்கிற நெருடல் உள்ளுக்குள் இருந்தாலும் உங்களுக்கு போயிடும்... நீங்க குடும்பஸ்தரா?, ”
“இல்லை சார், எனக்கு இன்னும் கல்யாணமாகல" அவர் வீட்டில் கொடுத்த காபியை நாசுக்காக மறுத்துவிட்டு நான் புதிதாய் வாங்கிய வீட்டிற்கு ஒரு சில தட்டுமுட்டு சாமான்களுடன் வேலையாட்கள் சுத்தம் செய்து முடித்தவுடன் உள்ளே நுழைந்தேன்.
“சார், இந்த புல்லாங்குழல் கொல்லப் பக்கம் கிடந்தது" என்று சுத்தம் செய்ய வந்திருந்த ஆட்களில் ஒருவன் என்னிடம் கொண்டு வந்து கொடுத்தான்.
அதை சிரித்துக் கொண்டே வாங்கி அலமாரியில் வைத்து, வேலையாட்களை அனுப்பிவிட்டு கட்டிலில் கண்ணயர்ந்தேன். மனது நிறைந்திருந்தது . ஆம் இது என் கல்லூரிக் காதலி ஜெனி வாழ்ந்த வீடு இது... ம்ஹூம் ... இன்னும் வாழ்கிறாள் இங்குதான்.. எனக்காக... மற்றவர்களுக்கு அவள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். எனக்கு அவள் இன்னும் ஜீவனுள்ள அதே பழைய ஜெனிதான்... கல்லூரியில் அவள் வழக்கமாக வாசிக்கும் புல்லாங்குழல் இசை மெலிதாக என் காதுகளில் ஒலிக்க ஆரம்பித்தது.
19 பின்னூட்டங்கள்/Comments:
kalakkal!!
பயமுறுத்தாத பேய்க்கதை இது..நல்லா இருக்கு..
மங்களூர் சிவா , பாசமலர் மிக்க நன்றிகள்
//பயமுறுத்தாத பேய்க்கதை இது..நல்லா இருக்கு..//
வினையூக்கி, இன்னும் கொஞ்சம் அதிகமாக பயம் காட்டவும்... உங்களால் மட்டும்தான் முடியும் ;)
சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்...
நல்ல கதை.
அப்ப, வெளீல இருக்கர புல்லாங்குழல்ல காத்து பட்டு ம்யூஜிக் வரலியா?
பேய்தான் ஊதிச்சா?
இன்னும் ஒரு பேய்க்கதை போடுங்க தல. சும்மா அலறி அடிச்சுக்கிட்டு ஓடுற மாதிரி இருக்கணும். :))
(அப்புறம் நானும் ஒரு கதை எழுதி இருக்கேன், முதல் கதை. வந்து படியுங்கய்யா)
நன்றி நிமல்.
சர்வேசன் சார்,
காத்துல புல்லாங்குழல் ஊதப்பட்டதா, இல்லை இறந்த பழையக்காதலியினால் புல்லாங்குழல் இசைக்கப்பட்டதா என்பதெல்லாம் வாசகர்களின் அனுமானத்திற்கு விடப்படுகிறது. ரொம்ப சந்தோசம் நீங்க இந்தப் பக்கம் வந்தமைக்கு
இலவசக்கொத்தனார் சார்,
உங்க கதையைப் படிச்சு பின்னூட்டமும் போட்டாச்சு.. நல்லா இருக்கு
கதை எனக்குப் பிடிச்சிருந்தது. நச்சென்று முடிவில்லாமல் முத்தென்று இருந்தது. ஆனால் அதுவும் சிறப்பு. முடிவை ஊகிக்க முடியவில்லை. மிகவும் ரசித்தேன்.
ஆவியான காதலியுடன் வாழ நினைக்கும் காதலன்....வாவ்!
நல்லாயிருக்குங்க கதை!
பாராட்டுக்கள்!
நன்றி ஜி.ரா மற்றும் திவ்யா
ஆவியோ, பாவியோ, செத்தாலும் காதலி காதலிதானே :). நல்ல கதை.
short & நச். :-)
கதை நல்லா இருக்கு.
இது உங்கள் வழக்கமான ஸ்டைல்தான் என்பதால் நச் மிஸ்ஸிங்
அப்புறம் நானும் ஒரு கதை எழுதி இருக்கேன். பயணிகள் கவனிக்க வந்து படியுங்க
நல்லா இருந்தா பின்னுட்டம் போடுங்க. நல்லா இல்லாட்டாலும் பின்னுட்டம் போடுங்க.
நீங்க பின்னுட்டம் போட்டா மட்டும் போதும்
மறைந்த காதலி ஜெனிக்காக அவள் வாழ்ந்த ஒரு வீட்டையே வாங்கி அங்கேயே அவளது நினைவுகளுடன் இருக்க முடிவெடுத்தது நன்று. ஆமாம் அவள் ஏன் தற்கொலை செய்து கொண்டாள். காதல் தோல்வியா ?
வழக்கமான நீங்கள் எழுதும் கதையை விட இதில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். நச் என்று முடியும் என்று நினைத்தேன் ஆனால் 'பச்' என்று உச்சி கொட்ட வைத்து அனுதாபம் பெற வைத்துவிட்டது.
வீட்டை குறைந்த விலைக்கு வாங்க வேண்டும் என்பதற்காக அவனே இரவில் எகிறி குதித்து வந்து புல்லாங்குழல் வாசித்தான் என்று ஊகித்துக் கொள்கிறேன்.
Good One!
வணக்கம்...
தலைப்புலயும், கதை ஆரம்பத்துலயும் இருந்த 'நச்' முடிவுல இன்னும் கொஞ்சம் நல்லா கொண்டு வந்து இருக்கலாம். மற்றபடி நல்ல கதை ஓட்டம்.
வாழ்த்துக்கள்...
தலைப்புலயும், கதை ஆரம்பத்துலயும் இருந்த 'நச்' முடிவுல
இல்லை
நன்றி கோவி.கண்ணன், சிவபாலன், நித்யா, அனுராதா,சீனா, கிருஷ்ணா, மைபிரண்டு, இளா
Post a Comment