தூம் -2 விமர்சனம்
நடைமுறை வாழ்க்கையில் நடக்க முடியாத, பார்க்க முடியாத சம்பவங்களை திரையில் பார்க்கும் போது நம்மை அறியாமல் ஒரு வித பரவசம் ஏற்படுவது இயல்புதான்(அவை நம்ப முடியாதவையாக இருப்பினும்).
தூம்-2 படத்தின் முதற்பாதி அப்படி ஒரு பரவசத்தை நிச்சயம் கொடுக்கும்.
அட்டகாசமான நமீபியா பாலைவன ரயிலில் (கிட்டத்தட்ட 15 நிமிடம். ) திருடும் காட்சியில் ஹ்ரித்திக் ரோஷன் அறிமுகமாகிறார். ஆஜானுபாகுவான தோற்றத்துடன் அவர் ஆடும் டைட்டில் பாட்டு பிரமிப்பு.
ஒப்பு நோக்கில் மிகவும் குறைவான ஆர்ப்பாட்டத்துடன் உதய் சோப்ரா, அபிசேக் பச்சன் , backwaters சண்டையில அறிமுகமாகிறார்கள்.
இண்டர்னேஷனல் திருடன்(ர்) "A" (ஹ்ரித்திக் ரோஷன்) வைப் பிடிக்க மும்பையில் பொறி வைக்கின்றனர் ACP ஜெய் (அபிஷேக்),சப்-இன்ஸ்பெக்டர் அலி (உதய் சோப்ரா) மற்றும் சோனாலி (பிபாஷா பாசு).
காதில் பூ சுற்றினாலும் , வைரத்தை ஹை-டெக் க திருடி விட்டு தப்பிக்கிறார் ஹிரித்திக்.
பிறகு ஒரு அருமையான சேசிங்.
போலி "A" வுக்காக ராஜஸ்தான் செல்லும் ஹிரித்திக், போலி "A" ஐஸ்வ்ர்யா ராயை காப்பாற்றுகிறார். (இங்க ஒரு சஸ்பென்ஸ்).
இதனிடையில் உதய் சோப்ராவுக்கு பிபாசா மேல் ஒரு கண். அதிலும் உதய் சோப்ரா பிபாசா வ்ரும் காட்சிகளில் கனவு கான்பது நிச்சயம் சிரிப்பை வரவழைக்கும்.
இரண்டாவது பாதி ஹ்ரித்திக் - ஐஸ்வர்யா காதல், இன்னொரு பிபாசா என கதை
பிரேசிலுக்கு இடம் பெயருகிறது. கிளைமேக்ஸ் சேசிங் வீடியோ கேம் சேஸ் போல இருந்தது.
பழைய அமிதாப் படங்களில் சசிகபூர் வருவதைப் போல இதில் அபிசேக் வருகிறார். உதய் சோப்ராவுக்கு காமெடி நன்றாகவே வருகிறது.
இது முழுக்க முழுக்க ஹ்ரித்திக்ரோஷன் படம். இந்தியாவின் சூப்பர் மேன் இமேஜ் இவருக்குத்தான். கிட்டத்தட்ட 8 கெட்டப்புகளில் வருகிறார்.
படத்திற்கு U/A எப்படிக்கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை.
படம் தமிழிலும் வந்துள்ளது.
ஹ்ரித்திக் ரோஷனுக்காக ம்ட்டும் படம் ஒரு முறைப்பார்க்கலாம்.
13 பின்னூட்டங்கள்/Comments:
நல்ல படம். சொத்தை விமர்சனம்.
//Anonymous said...
நல்ல படம். சொத்தை விமர்சனம்.
//
வருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி.
நீங்க அதே பழைய அனானியா?
//Anonymous said...
நல்ல படம். சொத்தை விமர்சனம்.
//
அண்ணன் வினையூக்கியை திரும்ப திரும்ப காலாய்க்கும் அனானியைக் கண்டிக்கிறோம்.
அ.மு.க
வடபழனி முருகன் கோயில்
சூப்பர் விமர்சனம் அண்ணா!!
மொக்கை விமர்சனம்
அனானி எதிர்ப்பு கழகம்
ஆர்டிக் பிரதேசம்
வேற வேலை இருந்த போய் பாருங்க வினையூக்கி.
வினையூக்கி யார் என்ன சொன்னாலும் சரி.. படத்துக்கேத்த விமர்சனம்தான் இது..
இதுல பொடி ஒன்னும் வைக்கலீங்க:))
//நீங்க அதே பழைய அனானியா?//
இல்லே. புது அனானி. பழைய அனானி படம் பாக்க போயிருக்கார்.
//வினையூக்கி யார் என்ன சொன்னாலும் சரி.. படத்துக்கேத்த விமர்சனம்தான் இது..
இதுல பொடி ஒன்னும் வைக்கலீங்க:))
//
நன்றி ஜோசப் சார்
//இல்லே. புது அனானி. பழைய அனானி படம் பாக்க போயிருக்கார். //
ஹிஹிஹி வருகைக்கு நன்றி அனானி
கன்னிராசி, சிம்மராசி, பெயர் வெளியிட விரும்பும் மற்றும் விரும்பாதவர்களுக்கு நன்றி
தலைவி படம் போடாம விமர்சனமா?? :))
நன்றி
Post a Comment