Thursday, September 28, 2006

உன்னையும்

உன்னால் வருத்தங்களும் உண்டு

வலிகளும் உண்டு

ஆனால் இவைதாம் நான் உயிரோடு இருப்பதற்கு சாட்சிகள்

ஆம் வலி இல்லாமல் வலிமை இல்லை

சங்கு சுட்டாலும் வெண்மை தரும்

விலகினாலும் விலக்கி வைத்தாலும்

நேசித்தேன் நேசிக்கின்றேன் நேசிப்பேன்

உன்னை மட்டும்

இல்லை இல்லை...

உன்னையும்

Tuesday, September 26, 2006

வலி

வருத்தங்களும் உண்டு

வலிகளும் உண்டு

ஆனால் இவைதாம் நான் உயிரோடு இருப்பதற்கு சாட்சிகள்

ஆம் வலி இல்லாமல் வலிமை இல்லை

சங்கு சுட்டாலும் வெண்மை தரும்

விலகினாலும் விலக்கி வைத்தாலும்

நேசித்தேன் நேசிக்கின்றேன் நேசிப்பேன்

இவ்வாழ்க்கையை

Monday, September 04, 2006

டெலி மார்கெட்டிங்

மொபைல் போன் வாங்கிய புதிதில் டெலி மார்கெட்டிங் மக்களின் அழைப்புகள் வரும் பொழுதெல்லாம் எரிச்சல் ஆகத்தான் இருந்தது. சிலமுறை அவர்களிடம் எனது "வெறுப்பைக்" காட்டிவிடுவதுண்டு. ஒரு முறை டெலி மார்கெட்டிங் கில் வேலைப் பார்க்கும் தோழி ஒருவர் அவர்களின் வேலைப் பளுவும் , வொர்க் ப்ர்ஷரையும் கேள்விப் பட்ட பிறகு , டெலி மார்கெட்டிங் மக்களை காயப்படுத்தாமல் அவர்களைத் தவிர்க்க சில உத்திகளைப் பயன்படுத்த ஆரம்பித்தேன்.

அவற்றில் சில,
1. ரோமிங்கில் இருப்பதாகக் கூறிவிடலாம்.

2. எந்த பேங்கிற்காக அழைக்கிறார்களோ அந்த பேங்கில் ஏற்கனவே வாடிக்கையாளரக(லோனோ , கார்டோ, இன்ஷூரன்சோ ) இருப்பதாக கூறிவிடுங்கள்.

3. பிறகு அந்த குறிப்பிட்ட அழைப்பின் நம்பரை உங்களது மொபைலில் சேமித்து, அந்த நம்பரை "சைலன்ட்" மோடில் போட்டுவிட்டால், பிறகு தொந்தரவு இல்லை.

அப்படியே தவிர்க்க இயலாமல் பேச நேரிட்டாலும் , மென்மையாக பேசி அவர்களை தவிர்த்திடலாம். ஒரு நிமிடம் இதற்கு ஒதுக்குவதால் நமக்கு ஒன்றும் இழப்பு இல்லை.