கிரிக்கெட் வினாடி - வினா - ஆறுக்கு ஆறு
1. ராஜேஷ் சௌகான் ஒரு முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர். 90களில் அனில் கும்ப்ளே, வெங்கடபதி ராஜுவுடன் மற்றும் ஒரு மும்மூர்த்தியாய் வலம் வந்தவர். பாகிஸ்தானுக்கு எதிரான, கராச்சியில் நடந்த ஒருநாள் போட்டி ஒன்றில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 8 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், சிக்ஸர் அடித்து வெற்றியை எளிதாக்கியதில் பலரால் நினைவுக்கூறப்படுபவர். வீடியோ இங்கே
கேள்வி என்னவெனில் இந்த ராஜேஷ் சௌகான் மற்றும் ஒரு நினைவுகூறத்தக்க ஒரு சாதனையையும் வைத்துள்ளார். அந்த சாதனைதான் என்ன?
2. கிரிக்கெட் ஆட்டத்தின் தாய்வீடான லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் ஆட்டங்களில் முதன் முதலில் இந்திய அணி சார்பில் சதம் அடித்தவர் வினு மன்காட். அதன் பின்னர் திலீப் வெங்சர்க்கார் மூன்று சதங்களும், குண்டப்பா விஸ்வநாத், அசாரூதின், கங்குலி, ரவி சாஸ்திரி ஆகியோர் சதம் அடித்துள்ளனர். இவர்களைத் தவிர லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் சதம் அடித்துள்ள மற்றும் ஒரு இந்திய வீரர் யார்?
3. தற்பொழுது திரைப்பட நடிகராகிவிட்ட இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் சடகோபன் ரமேஷ் பன்னாட்டுப்போட்டிகளில் அடித்த ஒரே சிக்ஸரின் காணொளி கீழே இருக்கின்றது. இந்த ஆட்டத்தில் இந்தியாவின் சார்பாக அதிக ஓட்டங்கள் அடித்தவரும் இவரே ...
காணொளியைப் பார்த்து இருப்பீர்கள். இப்பொழுது கேள்வி என்னவெனில் , இந்த ஆட்டத்தின் முடிவு என்ன?
4. ககன் கோடா என்ற ஒருவர் இந்திய அணிக்காக இரண்டு ஒரு நாள் ஆட்டங்களில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கியுள்ளார். அதே போல ஆஸ்திரேலியாவிற்காக அந்தோனி ஸ்டுவர்ட் என்பவர் மூன்று ஒரு நாள் ஆட்டங்கள் ஆடி இருக்கிறார். இவர்களுக்கு இடையில் இருக்கும் ஒரு சுவாரசியமான ஒற்றுமை என்ன?
5. தற்பொழுது மூன்றாம் நடுவர்கள், தீர்ப்புகள் வழங்கும்பொழுது ஆட்டமிழப்பை சிவப்பு விளக்கிலும், தொடர்ந்து ஆடச்சொல்வதை பச்சை என்ற வகையிலும் அறிவிக்கின்றனர். ஆனால் மூன்றாம் நடுவர்கள் அறிமுகப்படுத்தப்பட்ட ஆரம்பத்தில் எந்த நிறத்தை ஆட்டமிழந்தார் என்பதை அறிவிக்கப் பயன்படுத்தினர்?
6. பொதுவாக கிரிக்கெட் மைதானங்களில் , எல்லைக்கோடு வரை எந்த கம்பங்களோட இடையூறோ இருக்காது. இதற்கு விதிவிலக்காக இரண்டு மைதானங்கள் மட்டும் எல்லைக்கோட்டிற்குள் மரங்கள் கொண்டிருக்கின்றன.அந்த மைதானங்களில் பன்னாட்டு ஒருநாள் போட்டிகளும் நடைபெற்று இருக்கின்றன. அந்த மைதானங்கள் எவை?
---
விடைகள்
1. ராஜேஷ் சௌகான் இந்தியாவுக்காக ஆடிய 21 டெஸ்ட் போட்டிகளில் எந்தபோட்டிகளிலும் , இந்திய அணி தோற்றது கிடையாது.
ராஜேஷ் சௌகான் ஒரு விரும்பத்தகாத சாதனையும் வைத்துள்ளார், இந்திய பந்து வீச்சாளர்களில் ஒரு இன்னிங்ஸில் அதிக ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தவரும் இவர்தான். இலங்கைக்கு எதிரான 97 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் ஆட்டத்தில் 1 விக்கெட் எடுத்து 276 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தார். (http://www.espncricinfo.com/ci/engine/match/63762.html)
2. மட்டையடிக்க தெரியாதவர் என அனைவராலும் கேலி செய்யப்பட்ட அஜித் அகர்கார் தான் லார்ட்ஸ் மைதானத்தில் சதமடித்தவர். அதன் காணொளி கீழே
3. லீசெஸ்டரில் நடைபெற்ற 99 உலகக்கோப்பை முதல் சுற்று ஆட்டங்களில் ஜிம்பாப்வே அணி இந்திய அணியை 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடையச் செய்தது. ஹென்றி ஒலங்கா கடை ஓவரில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினார்.
ஆட்ட விபரம் இங்கே - http://www.espncricinfo.com/ci/engine/match/65200.html
காணொளி கீழே
4. ககன் கோடாவும், அந்தோனி ஸ்டுவர்டும் தங்களது கடைசி ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருதைப்பெற்றவர்கள். துரதிர்ஷ்டவசமாக அதன் பின்னர் அவர்கள் எந்தப்பன்னாட்டு போட்டிகளிலும் பங்கேற்க வாய்ப்புக்கிடைக்கவில்லை.
5. இன்றைய நிலைமைக்கு நேர் எதிராக பச்சை விளக்கு ஆட்டமிழப்பதைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. காணொளி கீழே
6. மரங்கள் இருக்கும் இரண்டு கிரிக்கெட் மைதானங்கள்
செயிண்ட் லாரன்ஸ் - காண்டர்பெர்ரி - கெண்ட் (http://www.espncricinfo.com/england/content/ground/56869.html)
சிட்டி ஓவல், பியத்தர்மரிட்ஸ்பெரி , தென்னாப்பிரிக்கா
http://www.espncricinfo.com/southafrica/content/ground/59151.html
இந்த மைதானத்தில் சச்சின் டெண்டுல்கரும், கங்குலியும் நமீபியாவிற்கு எதிரான உலகக்கோப்பை ஒன்றில் சதமடித்துள்ளனர்.