Six out of Six கிரிக்கெட் வினாடி வினா - விடைகள்
முந்தையப் பதிவான Six out of Six கிரிக்கெட் வினாடி வினாவிற்கான விடைகள் கீழே
1. கெப்ளர் வெஸல்ஸ்
ஆஸ்திரேலியா துவக்க ஆட்டக்காரராக ஒரு நாள் மற்றும் டெஸ்ட் ஆட்டங்களில் களமிறங்கி ஆடிய வெஸல்ஸ் , தென்னாப்பிரிக்கா மீண்டும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தடை நீங்கியபோது, தென்னாப்பிரிக்கா அணித்தலைவரானார். ஆஸ்திரேலிய அணிக்காக 24 டெஸ்ட் போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா அணிக்காக 16 போட்டிகளிலும் களம் இறங்கி ஆடி இருக்கிறார். கெப்ளர் வெஸல்ஸை பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்தப் பக்கத்தைச் சொடுக்கவும்
2. அனில் தல்பாட்
தற்போது பாகிஸ்தான் அணியில் ஆடிவரும் டேனிஷ் கனேரியா வின் உறவினர் இவர். அப்துல் காதிரின் சுழற்பந்து வீச்சை நல்லமுறையில் விக்கெட் காப்பு பணி செய்தார் என கிரிக் இன்போ தளம் சொல்லுகிறது. இவரின் புள்ளி விவரங்களை அறிய இங்கே சொடுக்கவும்
3. வி.வி.எஸ் லக்ஷ்மண்
86 ஒரு நாள் ஆட்டங்களில் 2000 க்கும் அதிகமான ஓட்டங்கள் எடுத்திருக்கும் லக்ஷ்மண் களத்தடுப்பு சரியாக செய்ய மாட்டார், விக்கெட்டுகளுக்கு இடையே ஓடுவதில் வல்லவர் இல்லை, மெதுவாக ஓட்டங்கள் சேர்ப்பார் என சொல்லி முழுக்க முழுக்க டெஸ்ட் ஆட்டக்காரராக ஆக்கிவிட்டனர். இன்னும் டெஸ்ட் ஆட்டங்கள் ஆடிவருவதால் 2011 வரை தாக்குப்பிடித்தால் அடுத்த உலகக் கோப்பை அணியிலாவது இடம்பிடிக்கலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. லக்ஷ்மணுக்கும் இருக்கும். :)
4. ஆசிப் கரீம்
ஆஸ்திரேலியா அணிக்கெதிராக 2003 ஆம் ஆண்டு சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசியமைக்காக புகழ் பெற்றவர். 1996,99 மற்றும் 2003 உலகக்கோப்பை ஆட்டங்களில் கென்யா அணிக்காக பங்கேற்று இருக்கும் இவர், அமெரிக்காவில் டென்னிஸ் ஆட்டத்திற்காக உதவித்தொகையுடன் 4 வருடங்கள் டென்னிஸ் பயிற்சி மேற்கொண்டு கென்யா அணியின் தலைவராக டேவிஸ் கோப்பை ஆட்டங்களில் பங்கேற்று இருக்கிறார்
ஆசிப் கரீம் ஆஸ்திரேலியா அணிக்கெதிராக சிறப்பாக பந்துவீசிய காணொளியை காண இங்கே சொடுக்கவும்
5. ராபின் சிங்
முதல் மூன்று விக்கெட்டுகள் விழுந்தாலே தோல்வி என்ற நிலையை மாற்றி, வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது என சிறிது நம்பிக்கை கொடுத்தவர் ராபின் சிங். இவரும் ஜடேஜாவும் வெற்றியின் விளிம்பு வரை பல ஆட்டங்களைக் கொண்டு சென்றும், சில ஆட்டங்களை வென்றும் உள்ளனர். இவரும் கங்குலியும் வங்காளதேச சுதந்திர கோப்பைக்கான மூன்றாவது இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடிய இணையாட்டத்தை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க இயலாது. 99 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மரண அடி வாங்கி இருக்க வேண்டிய நிலையில் இவரும் ஜடேஜாவும் கவுரமான தோல்வி வாங்கி தந்தார்கள். ஷான் வார்னே வின் ஒரு ஓவரில் ஜடேஜா இரண்டு சிக்ஸர் அடிக்க, இவர் அந்த ஓவரின் கடைசிப்பந்தில் இன்னொரு சிக்ஸர் அடித்து வர்னே வந்தாலே அடிதான்னு சொல்ல வைத்தார்கள்.
6. கோகன் கோடா
இந்தியா எப்பொழுதெல்லாம் தோல்வி மேல் தோல்வி அடைகிறதோ அப்பொதெல்லாம் சோதா அணிகளை கூப்பிட்டு போட்டித்தொடர் நடத்தி கோப்பையைக் கைப்பற்றி கொண்டாடிவிடும். அதுபோல வங்காளதேசம், கென்யா அணிகளுடன் ஆன முத்தரப்பு போட்டிகளின் இறுதிப்போட்டியில் கோகன் கோடா 89 ரன்கள் அடித்து ஆட்ட நாயகன் விருது பெற்றார்.