கதையில் வந்த பெண் - சிறுகதை
ஒரு வாரம் அலுவலக விசயமாக திருச்சி சென்று விட்டு சென்னைக்கு காரில் திரும்பிக் கொண்டிருக்கையில், திண்டிவனத்திற்கு முன் ரோட்டின் நடுவே ஒரு பெண் கையை ஆட்டி லிஃப்ட் வேண்டும் என்று கேட்பதை சில மீட்டர்கள் முன்னமே கார்த்தி கவனித்து விட்டான். நள்ளிரவில் வரும் கார்களில் இது போல லிஃப்ட் கேட்டு வழிப்பறி செய்யும் கும்பலின் ஆளாக இருப்பாளோ என்ற பயம், பாவம் உதவலாம் என்ற அவனது எண்ணத்தை வென்றது. அழகான , பார்ப்பவர் முகத்தில் சட்டென்று பதியும் வட்ட முகம். சிவப்பு கலர் சுடிதார், கண்ணாடி அணிந்திருந்தாள். வண்டியை நிறுத்தாமல் இன்னும் வேகமெடுத்தான்.
மறுநாள் தனது வீட்டில் கலைந்து கிடந்த தினசரிகளை அடுக்கி வைக்கையில் அவனது கண்ணில் பட்ட செய்தி
"திண்டிவனம் அருகே இளம்பெண் கொலை, சென்னையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகள்..."
செய்தியின் அருகே, நேற்றிரவு என்னிடம் லிஃப்ட் கேட்ட பெண்ணின் புகைப்படம் இருந்தது... அய்யோ !!! ஒரு வேளை லிஃப்ட் கொடுத்திருந்தால் அவளைக் காப்பாற்றி இருக்கலாமோ என்ற குற்ற உணர்ச்சி அவனக்கு அதிகமாகிய போது எதேச்சையாக தினசரியின் தேதியைக் கவனித்தான்.. அந்த செய்தி இரண்டு நாட்களுக்கு முந்தையது !!!!!
.....................
மங்கலான வெளிச்சத்தில் பஸ்ஸினுள் மேற்சொன்ன ஒரு பக்க கதையை வார இதழுக்காக நான் எழுதி முடித்தபோது, பஸ் விழுப்புரம் அடுத்து எதோ ஒரு ஊரில் பயண இடைவெளிக்காக நின்றது. வழக்கமாக நான் கதையை எழுதும்பொழுது கதை மாந்தர்களுக்கு கற்பனை உருவம் கொடுப்பது போல் வந்த அந்த பெண் கதாபாத்திரத்துக்கும் ஒரு அழகான உருவம் மனதில் கொடுத்து வைத்தேன். பஸ் மீண்டும் நகர... அப்படியே கண்களில் அந்த உருவத்துடன் கண்ணயர்ந்தேன். பஸ்ஸின் அதிர்வுகள் நின்றதை அடுத்து தூக்கம் கலைந்தது.
"மெட்ராஸ், ஒரு சீட் இருக்குமா!!!"
"சீட் இல்லை, ஸ்டாண்டிங் தான், 200 ரூபாய்"
பஸ்ஸின் மாற்று டிரைவர், பஸ்ஸை நடுவழியில் நிறுத்திய அந்த பெண்ணுக்கு கதவைத் திறந்துவிட்டார். கதையில் வந்த பெண்ணுக்கு நான் கொடுத்த உருவத்தின் அச்சு அசலாய் இந்த பெண்..
பஸ்ஸின் வெளிச்சத்தில் ரோட்டின் இடது புறத்தில் உள்ள தூரப் பலகைக் காட்டியது திண்டிவனம் 8 கி.மீ
---------------------------------------
17 பின்னூட்டங்கள்/Comments:
onnume velangale
வெங்கி, வாசிப்புக்கு நன்றி... கதையைப் படித்தான் என்பதற்கு பதிலாக எழுதினான் என்று மாற்றி இருக்கிறேன்.. மறுவாசிப்பு செய்து புரியுதா என்று பாருங்களேன்.
வினையூக்கி ஐயா, உங்களை "பார்த்த ஞாபகம்" தொடர்கதை எழுத அழைப்பு விட்டிருக்கிறேன். தயவு செய்து எனது தளம் சென்று என கடைசி பதிவை பார்க்கவும்.
நன்றி.
என்னங்க திகில் கதை எல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டீங்க. . . . .
நல்லா இருக்கு,
என்ன இப்பிடி எல்லாம் ஐமாய்க்கிறீங்கள். ஒரே திகிலப்பா.
நன்றி மாசிலா!! இரண்டு நாட்கள் நேரம் தர இயலுமா!!! அனைத்துப் பகுதிகளையும் படித்துவிட்டு கடைசி பகுதி எழுதுகிறேன்.. வாய்ப்புக்கு நன்றி சார்
ஆவி அமுதா மாதிரி நீங்களும் ஒரு ஆவி செல்வா ஆகிக் கொண்டிருக்கிறீர்கள்.. பார்த்து.. நல்ல மந்திரவாதியிடம் எதற்கும் மந்தரித்துக் கொள்ளவும் ;)
நன்றி நளாயினி. அது எப்படி பேய் கதைகள் எழுதும்போது மட்டும் சரியாக ஆஜர் ஆயிடுறிங்க....
//வெங்கட்ராமன் said...
என்னங்க திகில் கதை எல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டீங்க. . . . .
நல்லா இருக்கு //
நன்றி வெங்கட்ராமன் , உண்மையில் பேய் கதைகள் எழுதுவது சுலபமாக இருக்கு..
//பொன்ஸ்~~Poorna said...
ஆவி அமுதா மாதிரி நீங்களும் ஒரு ஆவி செல்வா ஆகிக் கொண்டிருக்கிறீர்கள்.. பார்த்து.. நல்ல மந்திரவாதியிடம் எதற்கும் மந்தரித்துக் கொள்ளவும் ;) //
ஹிஹிஹி.... நம்ம ஆவி அண்ணாச்சிக்கிட்ட தான் கேட்கனும் நல்ல மந்திரவாதியா!!
நல்ல கதை வினையூக்கியாரே,
////அடுத்து தூக்கம் கலைந்தது. "மெட்ராஸ், ஒரு சீட் இருக்குமா!!!"
"சீட் இல்லை, ஸ்டாண்டிங் தான், 200 ரூபாய்"
பஸ்ஸின் மாற்று டிரைவர், பஸ்ஸை நடுவழியில் நிறுத்திய அந்த பெண்ணுக்கு கதவைத் திறந்துவிட்டார். கதையில் வந்த பெண்ணுக்கு நான் கொடுத்த உருவத்தின் அச்சு அசலாய் இந்த பெண்..
பஸ்ஸின் வெளிச்சத்தில் ரோட்டின் இடது புறத்தில் உள்ள தூரப் பலகைக் காட்டியது திண்டிவனம் 8 கி.மீ////
========= வீ எம் தொடர்ச்சி=========
சார் , கோயம்பேடு வந்தாச்சு.. கண்டக்டர் குரல் என்னை எழுப்பியது..
அட ! கனவுக்குள் ஒரு கனவா.... ஆச்சரியத்துடனும், என் கதை என்னுள்ளேயே இத்தனை பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டதே .. நிச்சயம் வீ எம் அறிவித்த 'திகில் கதைகள் பரிசு போட்டியில்' இந்த கதைக்கு தான் முதல் பரிசு என்ற நம்பிக்கையோடு ஆட்டோ நிறுத்தம் நோக்கி நடந்தேன்,..
===================================
நன்றி வீ.எம். உங்க ஸ்டைல்லதான் நான் இந்த கதையை இரண்டா உடைத்தூ எழுதினேன்.. நீங்க அதுக்கும் மூன்றாம் பாகம் எழுதிட்டிங்க...
//நிச்சயம் வீ எம் அறிவித்த 'திகில் கதைகள் பரிசு போட்டியில்' இந்த கதைக்கு தான் முதல் பரிசு என்ற நம்பிக்கையோடு ஆட்டோ நிறுத்தம் நோக்கி நடந்தேன்,..
//
எங்கே பரிசு எங்கே பரிசு எங்கள் ஆவி அண்ணன் வினையூக்கிக்கு
ஆரம்பிச்சாச்சா அண்ணா?
சரி, இப்போ என்ன தான் சொல்ல வரீங்க?
கதை எழுதக்கூடாதா? இல்லை திண்டிவனம் போகக்கூடாதா?
வித்தியாசமா யோசிக்கிறீங்களேப்பா.
:)
இரண்டு கதைகளை ஒன்றாக்கி.... திகில் ஏற்படுத்திட்டீங்க.
இதுக்கெல்லாம் dejavu மாதிரி ஏதாவது வார்த்தையிருக்கலாம் தேடிப்பாருங்க
முதல் பகுதியை மட்டும் படித்து முடித்தபோது, 'ஆகா இவர் ஆரம்பிச்சுட்டாரா?' என்றே தோன்றியது. முடிவு யூகிக்க கூடியதாயிருந்தாலும் நன்றாகவே இருக்கிறது(Double Impact). ;-)
நன்றி பூர்ணிமா, சிறில் அலெக்ஸ் மற்றும் யோசிப்பவர்
Post a Comment