Wednesday, August 16, 2006

"தேன்கூடு-போட்டி:" சிறுகதை -- "அவள்"

கடவுளே என்ன இது!! காலையிலிருந்து "அவள்" சம்பந்தப் பட்ட மனிதர்களையே சந்தித்துக் கொண்டிருக்கிறேன். எல்லோருமே ஒரே பல்லவியைப் பாடுகின்றனர்...

"அவள்" ஓடி போய் திருமணம் செய்துகொண்டாள் ... "அவள்" அனைத்து பணம் மற்றும் நகைகளையும் எடுத்துக் கொண்டு தனக்கு பிடித்தவனுடன் ஓடிப் போய் விட்டாள்...


எல்லோரின் முகத்திலும் ஒரு கள்ள சந்தோசம் சம்பவத்தை விவரிக்கையில் தெளிவாகத் தெரிந்தது.

"அவளின்" எதிர்த்த வீட்டு ஆன்டியை வடபழனி கோயிலில் பார்த்தபோது, கார்த்தி அவ அன் -லக்கி டா... உன்னை மிஸ் பண்ணிட்டாடா!!!
என் முகத்தில் ஒரு சின்ன புன்னகை மட்டும் தான் கொடுக்க முடிந்தது...

மதியம் ராகத் பிளாசாவில் "அவளின்" கல்லூரித் தோழியைப் பார்க்க நேர்ந்தது... அண்ணா!!! உங்களுக்கு விசயம் தெரியுமா!!! "அவளுக்கு" கல்யாணம் ஆயிடுச்சு.... ஓடிப் போய் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டாள்... அவளோட பிரண்ட்ஷிப்ப கட் பண்ணிட்டேன்... உங்களுக்கு துரோகம் பண்ணவள் நல்லாவே இருக்க மாட்டாள் அண்ணா... உங்களுக்குத் தெரியுமா...நான் உங்களைப் பார்த்து பேச டிரைபண்ணேன்... முடியல...மனதுக்குள் சிரிக்கத்தான் முடிந்தது..."அவளுடன்" ஆன தொடர்பு துண்டிக்க்ப்பட்ட நிலையில் "அவளின்" ஆத்ம தோழியென கூறிகொண்ட இவளைத் தொடர்பு கொண்டபோது அண்ணா இனிமேல் போன் பண்ணாதிங்க !! என்றது ஏனோ நினைவில் வந்து சென்றது.

அவளிடம் பேசிவிட்டு வீட்டுக்கு திரும்பி வருகையில் சார் சார் என்று யாரோ கூப்பிட திரும்பினால் "அவளது" ஏரியா ஆட்டோ டிரைவர்... என்ன சார் இப்படி ஆயிடிச்சு ... என்ன பிராப்ளம் உங்களுக்கு ..அந்த பொண்ணு ஓடிப் போயிடுச்சாம் சார்.. எனக்கு அப்பயேத் தெரியும் சார்... துட்டுக்காக உங்ககிட்ட ஊர் சுத்தி இருக்கா சார்... விசயம் கேள்விப்பட்டவுடனே உங்களைத் தான் நினைச்சேன்... பாவம் சார் நீங்க... சார் இப்போ எங்க இருக்கீங்க சார்?
பெங்களூர் போய்ட்டேன்... அங்க வேலைப் பார்க்கிறேன்... உங்க பசங்க எல்லாம் நல்லா படிக்கிறாங்களா!! பேச்சைத் திருப்பும் விதமாக...
அவரிடம் கொஞச நேரம் பேசிவிட்டு, நேரே வண்டியை வீட்டிற்கு விடாமல் பீச்சிற்கு விட்டேன்.

கடலலைகள் முன்னால் நினைவலைகளில் நீந்த ஆரம்பித்தேன்.

ஆம். "அவளும்" நானும் இரண்டு வருடங்கள் காதலித்தோம். நான் வசித்த அதே தெருவில் "அவளும்" வசித்தாள். இன்டெர்னெட் பிரவுசிங் செல்லும் போது ஏற்பட்ட பழக்கம் நட்பானது... நட்பு காதலாய் இருவரின் சம்மதத்துடன் உருமாறியது.
வாழ்க்கையில் காதலி எனும் புது உறவு வரும்போது , ஏற்கனவே கவிஞனான என் வீட்டுக் கணிபொறியும் கவி பாட ஆர்ம்பித்தது.

"அவள்" செய்யும் தொலைபேசி அழைப்புகள் எனக்கு சுப்ரபாதம் ஆயின.. பேச்சுக் கூட இசையாகும் என்பதை அவளின் குரல் கேட்கும் போது உணர முடிந்தது.

உண்மையில் ஒரு அற்புதமான காலம்...எழுந்தவுடன் முக்ம் கூட கழுவாமல் அவள் வீட்டு பால்கனியில் அவள் முகம் கண்டது ஒரு சுகம்...

24 மாதங்களில் 40 படங்கள்....சில படங்கள் இரு முறை.. எண்ணற்ற பீட்சா கார்னர் மீட்டிங்ஸ்

எல்லோரின் வாழ்க்கையில் சந்தோசத்தைக் கெடுக்கும் சந்தேகம் என் வாழ்விலும் வந்தது.. நீண்ட நேரம் அவள் கைத்தொலைப்பேசி என்கேஜ்டா இருந்த அன்று ஏற்பட்ட சிறு பிணக்கு , சிறு பொறியாகி "அவளது" கல்லூரி சீனியருடனும் உதயம் தியேட்டர் வாசலில் பார்த்த போது காட்டுதீயானது. அந்த தீயில் ஆத்திரம் என் கண்ணை மறைக்க அனைவரின் முன்னிலையிலும் திட்டி தீர்த்ததில் அற்புதமான ஒரு உறவு பொசுங்க ஆரம்பித்தது.

அதன் பிறகு "அவள்" என்னை தொடர்பு கொள்ளவில்லை. ..


வீட்டை மாற்றினேன்.. வேலையை மாற்றினேன்... மனதை மாற்றிக் கொள்ளவில்லை... "அவளாக" திரும்பி வருவாள் என்ற எண்ணத்தில்.

எனது கல்லூரி ஜூனியர் அனு வின் அறிமுகம்,நட்பு மனதை மீண்டும் வசந்த காலத்திற்கு இட்டுச் சென்ற போதும் "அவள்" மீண்டும் வரக்கூடும் என்ற நம்பிக்கையில் காத்திருந்தேன்.

கடந்த மாதம் என்னுடைய யாஹூ ஈமெயிலை நீண்ட நாட்களுக்குப் பிறகு திறக்கையில் "அவளது" மின்னஞ்சல் ஒன்று வந்து இருந்தது. அவளுக்கு திருமணம் ஆகிவிட்டதாகவும், "அவளது" கணவனுக்கு ஒரு வேலை ஏற்பாடு செய்து தரும்படி கேட்டுக் கொள்ள்ப்பட்டு "அவளின்" கணவனின் பயோடேடாவும் அனுப்பப்பட்டிருந்த்தது. "அவள்" வேலையில்லாத சுழலால் தனது இறுதியாண்டு படிப்பை தொடர முடியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தாள்.

எனது நம்பிக்கை பொய்த்தது என்ற வருத்தம் ஒரு புறம் இருக்க என்னால் "அவளுக்கு" உதவி செய்ய முடியும் என்ற "அவளது" நம்பிக்கை என்னை உறவுகளின் மற்றொரு பரிமாணத்தைப் புரியச் செய்தது.

மறுவாரம் வேலைக் கிடைக்க உதவியமைக்கு நன்றி தெரிவித்து ஒரு மெயில் வந்திருந்தது.

"உண்மையான காதலின் ஆழம் பிரிவுக்குப் பின்னரும் நாம் மற்றவரின் மேல் வைத்துள்ள மரியாதையில் தான் உள்ளது.பிரிவினால் மற்றவருக்கு அமைதியோ சந்தோசமோ கிடைக்குமென்றால், தாராளமாக அந்தப் பிரிவை ஏற்றுகொள்ளலாம். அப்படி ஏற்றுகொள்ளும்போது எந்த ஒரு உறவின் பிரிவும் காயமாக மாறாது, மாறாக பிரிந்தவரின் நினைவுகள் மண்வாசனை போல் என்றென்றும் ரம்மியத்தைக் கொடுக்கும்"

என்று நான் கல்லூரியில் பேசிய வாசகம் நினைவுக்கு வந்து சென்றது.

கைத்தொலைப்பேசி அழைக்க நினைவலைகளிருந்து மீண்டு , "ஹாய்,அனு, நாளைக்கு டிக்கெட் கன்பார்ம்ட்... சீக்கிரம் சென்ட்ரல் ஷ்டேசனுக்கு வந்துடு..உன் கிட்ட கொஞசம் மனம் விட்டுப் பேசனும்" என்று வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்திற்கு அடிபோட்டு போனை அனைத்தேன்.

Friday, August 04, 2006

Somewhere I read this

Somewhere I read this