Thursday, February 09, 2017

முனைவர். வினையூக்கி



"படித்தான் படிக்கின்றான் படிப்பான்" என்று சம்சாரம் அது மின்சாரம் படத்தில் காஜா ஷெரீப் கேலி செய்யப்படுவர்.அதைப்போல பல்லாண்டுகளாக ஆல் தோட்ட பூபதி மாணவனாக இருந்த நான் நேற்று மாலை ரோம் தோர்வெர்கட்டா பல்ககலை கழகத்தில் தகவல் அறிவியல் துறையில் ஒருவழியாக ஆராய்ச்சி படிப்பை முடித்து முனைவர் பட்டம் வாங்கிவிட்டேன்.  PhD (Hons) in Information Science at Università degli studi di Roma "Tor Vergata", Rome, Italy.தட்டுத்தடுமாறி படித்து முடித்த எனக்கு ஏதோ போனால் போகுது என்று தேர்ச்சி மட்டும் செய்துவிடுவார்கள் என்று நினைத்தேன், ஆனால் இன்ப அதிர்ச்சியாக "ஹானர்ஸ்" மதிப்புபுடன் பிஎச்டி பட்டம் வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக ஆசிரியர்கள் மாணவர்களை கொடுமைப்படுத்துவார்கள் என்றுதான் சொல்வார்கள், ஆனால் என் விசயத்தில் என் கொடுமைகளை சகித்துக் கொண்டு என்னை வழிகாட்டிய என் ஆசிரியர்களுக்குத்தான் முழுப்பெருமையும் சென்றடைய வேண்டும். தன்னடக்கம் ஒருப்பக்கம் இருந்தாலும் தம்பட்டம் இல்லை என்றால் செல்வகுமார் செல்வகுமார் இல்லை அல்லவா !! எனவே அன்பு நண்பர்களே இனி நீங்கள் என்னை முனைவர். வினையூக்கி என்று செல்லமாகவோ முனைவர். அரக்கர் என்று கோபமாகவோ அழைக்கலாம். நாளிதழ், வார இதழ், மாத இதழ் பேட்டிகளுக்கோ என்னைப் பற்றிய கட்டுரை புகைப்படங்களுக்கோ என்னை பத்திரிக்கைத் துறை நண்பர்கள் அணுகலாம். சுயநலம் இருந்தாலும், என்னைப் பற்றிய செய்தி எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஒருவருக்கு மேற்படிப்புப் பற்றிய உந்துதலைக் கொடுத்தால் அது சமூகநீதி அடித்தளத்திற்கான வெற்றிதானே !!