Wednesday, June 02, 2010

சுவீடன் மேற்படிப்பு - 2011, ஜனவரி சேர்க்கைக்கு விண்ணப்பம் - கட்டணமின்றி படிக்க கடைசி வாய்ப்பு

2011 செப்டம்பர் முதல் ஐரோப்பியர் அல்லாத மக்களுக்கு மேற்படிப்பில் கட்டணம் வசூலிக்கப்படப்போவதாக சுவீடன் அறிவித்து விட்டது. ஆகையால், கட்டணமின்றி படிக்க வரும் 2011 ஜனவரி சேர்க்கையே கடைசி வாய்ப்பு. குறைவான படிப்புகள் மட்டுமே இந்த சேர்க்கையில் தொடங்கினாலும், மேற்படிப்பு படிக்க ஆர்வமிருப்பவர்கள் விண்ணப்பிக்கக் கேட்டுக்கொள்கிறேன். முதுகலைப் படிப்பிற்கு(Masters) 4 கல்லூரிகளையும் இளங்கலைப் படிப்பிற்கு(Bachelors) 10 கல்லூரிகள் வரை தேர்வு செய்யலாம்.ஜூன் முதல் வாரம் முதல் சேர்க்கைக்கான விண்ணப்பங்களைப் பெறும் பணி ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.

நமது அண்ணா பல்கலை கழகம் நடத்தும் மைய சேர்க்கையைப்போல ஸ்டூடரா இணையத்தளம் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளும். முதலில் இணையத்தில் பதிந்து விட்டு பின்னர் சான்றிதழ்களின் நகல்களை நோட்டரி கையொப்பம் பெற்று சுவீடனுக்கு அனுப்ப வேண்டும்.

ஸ்டூடரா இணையதளம் https://www.studera.nu/studera/1374.html

இணையதளத்தில் விபரங்களுடன் விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 16 , 2010

சான்றிதழ்களின் நகல்களை அனுப்பக் கடைசி நாள் செப்டம்பர் 1, 2010

முதுகலைப் படிப்பு படிக்க விரும்புவர்கள் இந்த சுட்டியைத் தொடரவும் https://www.studera.nu/studera/1499.html

இளங்கலைப் படிப்பு படிக்க விரும்புவர்கள் இந்த சுட்டியைத் தொடரவும் https://www.studera.nu/studera/1498.html


கிளிப்பிள்ளைக்கு சொல்லிக்கொடுப்பது போல இந்த ஸ்டூடரா தளத்தில் விளக்கி இருக்கிறார்கள். நுனிப்புல் மேயாமல் தெளிவாக வாசித்து, தாங்களாகவே விண்ணப்பிக்க முடியும் என்ற நிலையில், ஆலோசனை மையங்களுக்குச் சென்று நீங்கள் பணம் படைத்தவர் எனக் காட்டிக்கொள்ள வேண்டாம். ஆலோசனை மையங்கள் தபால்காரர்கள் வேலைப் பார்ப்பதைவிட வேறு எதுவும் செய்வதில்லை. சிலப்பலப் படிப்புகள் தொலை தூர படிப்புகளாகவும் படிக்கலாம். உங்களுக்கு வேண்டிய படிப்பை கீழ்க்காணும் சுட்டியில் தேடலாம் https://www.studera.nu/aw/courseGuide.do?lang=en

இந்தியாவில் இருந்து விண்ணப்பிக்கும் பொறியியல், மருத்துவம், அறிவியல் தொழில்நுட்பம், மருந்தகப்படிப்பு பட்டதாரிகள் ஆங்கிலத்தேர்ச்சியை நிறுபிக்கும் எந்த தேர்வுகளும் எழுதத் தேவை இல்லை. https://www.studera.nu/studera/1663.html

வாழ்த்துகள் தோழர் தோழிகளே !! சுவீடிஷ் மொழியுடன் தமிழும் கலந்து ஒலிக்க நிறைய மாணவர்கள் இங்கு வர வேண்டும்.

இது தொடர்பாக முன்பு எழுதியக் கட்டுரைகள்


12 பின்னூட்டங்கள்/Comments:

said...

நன்றி நண்பா நினைவூட்டலுக்கு.

said...

உங்கள் சேவை மகத்தானது
தொடர்ந்து வினையூக்கவும் !!!!!!!

said...

அட எத்தன..!! இதுக்கு அப்பறமும் யாராவது consultancy கிட்ட போனா அவங்கள தெய்வம் தான் காப்பத்தனும்..

காசு நிறைய இருந்தா இல்லாதவன் புள்ளைய படிக்க வைங்க.. இல்ல தின்னாது தீத்துடுங்க.. consultants கிட்ட குடுக்காதிங்க..

said...

தகவலுக்கு நன்றி.

மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துகின்றேன்.

said...

தம்பி வினையூக்கி,

வணக்கம்.எனது உறவினர் ஒருவர் உங்களுரில் மேற்படிப்பு விரும்புகிறார்.அது விடயமாக உங்களை மின்னஞ்ல் வழியாக தொடர்புகொள்ளலாமா.?

அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்

said...

@அரவிந்தன்

நிச்சயமாக சார்.

பண்புடன்
வினையூக்கி செல்வா

said...

நன்றி....செல்வா...எனது உறவினரும் படிக்க விரும்புகிறார்..உங்களுடன் மெயிலில் தொடர்பு கொள்ளட்டுமா...

said...

Very Useful Information Brother.Thanks.

said...

நினைவூட்டல் பதிவுக்கு நன்றி, நானும் பயன்படும் என் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

said...

தகவலுக்கு நன்றி.

said...

எனது மின்னஞ்சல் முகவரி rrselvakumar@gmail.com

said...

www.studera.nu போல பின்லாந்து யுனிவர்சிட்டிகளுக்கு இருக்கா ?