Tuesday, May 11, 2010

சுவீடன் மேற்படிப்புக்காக வங்கிக் கடன் கோரும்பொழுது தேவையான கோப்பு

சுவீடனில் மேற்படிப்புக்கு அனுமதி கிடைத்தவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். நிறைய மாணவர்கள் புதிய தலைமுறையில் நான் எழுதிய சுவீடன் மேற்படிப்புக் கட்டுரையையும் இந்த வலைமனையில் எழுதப்பட்டிருந்தப் பதிவையும் வாசித்து விண்ணப்பித்தவர்கள் என அறியும்பொழுது மகிழ்ச்சியாக இருக்கின்றது. கட்டுரையைப் படித்த பின்னரும் ஆலோசனை மையங்களை அணுகி தண்டமாகச் செலவு செய்து அனுமதிக் கிடைத்தவர்களுக்கும் வாழ்த்துகள். அனுமதிக் கிடைத்தச் சிலர் கல்விக் கடனுக்காக வங்கிகளை அணுகி இருப்பீர்கள். அவர்கள் வழக்கம்போல இந்தப் பல்கலைகழகம்/கல்லூரி உண்மையானது என எப்படி நம்புவது, அங்கீகரிக்கப்பட்டதா என கேள்விகளைக் கேட்டுத் துளைத்திருப்பார்கள்.அவர்களின் கேள்விகளிலும் நியாயம் இருக்கின்றது. இணையதளங்களைக் குறிப்பிட்டாலும் அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இத்தகைய சூழலில் சுவீடனில் மேற்படிப்பு படிக்க அனுமதி கிடைத்தவர்கள் உணர்ச்சிவசப்படாமல், வங்கிகளில் கல்விக் கடன் கோரும்பொழுது கீழ்கண்ட கோப்பை தரவிறக்கம் செய்து தாளில் அச்சிட்டுக் கொள்ளவும். இந்தக் கோப்பில் சுவீடன் மேற்படிப்புப் பற்றிய சட்டத் திட்டங்களும்,கல்லூரிகளின் பட்டியலும் இடம்பெற்றிருக்கிறது. இந்தத் தரவு வங்கி அதிகாரிகளுக்குப் போதுமானதாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கும்.

கோப்புக் கிடைக்கும் சுவீடன் அரசாங்கத்தின் தளம் http://www.sweden.gov.se/sb/d/7868/a/21541

முழுக்கோப்பும் இங்கே http://www.sweden.gov.se/content/1/c6/02/15/41/92fc8fff.pdf

2 பின்னூட்டங்கள்/Comments:

said...

இத்தகைய உதவியை செய்யும் உங்களை போன்றோருக்கு என் நன்றிகள்.இவ்வுலகில் இருக்கும் வாய்ப்புகள் பலருக்கு தெரிவதில்லை.
உங்களது உதவும் மனப்பான்மை மேன்மேலும் வளரவேண்டும் .
நன்றி! நன்றி!! நன்றி!!!

said...

தொண்டு தொடர்க ..

நன்றியும் வாழ்த்துக்களும்