Sunday, January 18, 2009

Online MBA in Sweden - தொலைதூர வழியில் வணிக மேலாண்மை / Admissions in Blekinge Institute of Technology

சுவீடன் மேற்படிப்புப் பற்றிய வலைப்பதிவு பலராலும் படிக்கப்பட்டு, பலர் விண்ணப்பித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.மின்னஞ்சலில் சிலருக்கு என்னால் முடிந்தவரை பதில் சொல்ல முடிந்தாலும், நேர வித்தியாசம், படிப்பு, தனிப்பட்டக் காரணங்கள் போன்றவற்றால் பல நேரங்களில் பதில் அளிக்க இயலவில்லை. அதற்காக மன்னிக்கவும்.

------

பொறியியல் , தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வணிகமேலாண்மையில் பட்டப்படிப்பு படித்து வைத்துக்கொள்வது பொதுவாக விரும்பத்தக்கது. முழுநேரப்படிப்பில் சேர முடியாததால் பகுதி நேர, தொலைதூர வழிமுறைகளில் அரசு சார்ந்த அல்லது தனியார் பல்கலை கழகங்களில் படிப்பார்கள். மேலாண்மை படிப்புகளுக்கு தனியார் நிறுவனங்கள் / பல்கலை கழகங்கள் அதிகக்கட்டணம் வசூலிக்கின்றன. அரசு சார்ந்த பல்கலைகழகங்களில் தரம்/பாடத்திட்டம் நன்றாக இருந்தாலும், முழுநேர படிப்பிற்கு போட்டி போடும் அளவுக்கு இல்லை.

இந்நிலையில் தொலைதூர வழியில் வணிகமேலாண்மை/நிர்வாக இயலில் மேற்படிப்பு படிக்க விரும்புவர்களுக்கு வரப்பிரசாதமாக சுவீடனில் பிலெக்கிஞ்ச் கல்லூரி (Blekinge Institute of Technology) தொலைதூர இணைய வழியில் வணிக மேலாண்மைப் படிப்பை வழங்குகிறது. இரண்டு வருட வேலை அனுபவம் இருந்திருந்தால் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஒரு வருடப்படிப்பிற்கு 60 ECTS மதிப்பீடுகளைத் தருகிறது. இதில் குறிப்பிடத்தக்க விசயம் என்னவெனில் 30 ECTS வைத்திருந்தால் சுவீடனில் வேலைக்கான கடவுச்சீட்டு(விசா) பெற்றுக்கொள்ள வழிமுறை உண்டு. பொதுவாக சுவீடனில் கல்வித்தரம் அமெரிக்கா/ஆஸ்திரேலியா/இங்கிலாந்து நாடுகளின் அளவுக்கு உண்டு. பலபடிப்புகளில் சுவீடனில் தரம் , கடுமையான பாடத்திட்டம் நமது அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

போனவருடம் 70 இடங்களுக்கு கிட்டத்தட்ட 2500 விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. இப்படிப்பில் சேருவதற்குக் கட்டணம் ஏதும் கிடையாது.இதுவரை சுவீடனில் எந்த படிப்பிற்கும் கட்டணம் கிடையாது. ஆனால் அடுத்த ஆண்டு முதல் ஐரோப்பியர் அல்லாதவருக்கு கட்டணம் என சட்டம் இயற்றி விட்டார்கள். அடுத்த வருடம் இதே படிப்பிற்கு 3 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படலாம். ஆகையால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

MBA Programme 60 ECTS Fulltime In internet Autumn 09 என்பதைத் தேர்வு செய்து விபரங்களைப் பார்க்கலாம். - ஒரு வருடத்தில் இணையவழியில் முடிக்கலாம்.

MBA Programme 60 ECTS Part time In internet Autumn 09 - இது முடிக்க இரண்டு வருடம் ஆகும்.

விண்ணப்பிக்க இந்த சுட்டியைச் சொடுக்கவும்

இணையதளத்தில் விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி 1.

சான்றிதழ்களை அனுப்ப கடைசி நாள் பிப்ரவரி 15

2009 செப்டம்பரில் படிப்புத் துவங்கும்.

------

ஸ்டுடரா தளம் மூலம் சுவீடன் பல்கலைக் கழகங்களில் மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கும் நாள் கடந்து விட்டாலும், பிலெக்கிஞ்ச் கல்லூரியின் தளம் வாயிலாக விண்ணப்பிக்கும் கெடு பிப்ரவரி 1 ஆம் தேதி வரை உள்ளது.

அதிக பட்சம் மூன்று படிப்புகள் வரை விண்ணப்பிக்கலாம். இணையத்தில் விண்ணப்பித்து விட்டு, பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் தங்களது சான்றிதழ்களை தபாலில் அனுப்ப வேண்டும்.
சுவீடனில் மேற்படிப்பு படிக்க இந்திய அறிவியல்/பொறியியற்/தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கு ஆங்கிலத் தேர்வு இல்லை.

பிலெக்கிஞ்ச் கல்லூரி மென்பொருள் பொறியியலுக்கு பெயர் போனக் கல்லூரி.மென்பொருள் துறையில் பொறியியல் படிப்பு படிக்க விரும்புபவர்கள் இதனைத் தேர்வு செய்யலாம்.

பின்வரும் சுட்டியில் வழங்கப்படும் படிப்பின் விபரங்களும் விண்ணப்பிக்கும் சுட்டியும் உள்ளது.

http://www.bth.se/apply

விபரங்கள் தேவைப்படின் எனது மின்னஞ்சல் முகவரியில் rrselvakumar@gmail.com தொடர்பு கொள்ளுங்கள். என்னால் முடிந்தவரை பதில் அளிக்கிறேன். தரமானக் கல்வி இலவசமாகக் கிடைக்கும்பொழுது தவறவிட்டுவிடக்கூடாது. இதை தங்கள் நண்பர்கள்/ உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

முழுக்க முழுக்க , நீங்களே விண்ணப்பிக்க முடியும். எந்த வித கன்சல்டன்சி நிறுவனங்களையும் தொடர்பு கொண்டு பணத்தை வீண் செய்ய வேண்டாம்.

2009 செப்டம்பரில் படிப்புத் துவங்கும்.

-----

தமிழ் தெரியாத நண்பர்களுக்கு அனுப்ப, ஆங்கிலத்திலும்

  • Blekinge Inst Of Technology (one of the known university in Software Engineering) offers Online MBA program (1 Year and two years)
  • Minimum Experience is 2 years.
  • The successful completion of Online MBA program earns 60 ECTS points, which would help you to get Sweden Work Permit/ Visa.
  • The quality and standards of MBA program in Sweden is more or less same as US/UK/Aus.
  • Until now, there is NO tuition fee for the course. However, from next year onwards, the Swedish goverment (which owns Blekinge Inst of Technology) would charge close to Rs. 3 L for all Non-European students (due to recent law).
  • Indian Engineering & Science graduates do NOT need to take up TOEFL exam to do the MBA in Sweden.
Important Dates for Sep 2009 (Autumn 2009)

Last date for applying for the Online MBA program via Internet is Feb 1st.
Last date for submitting certificates is Feb 15th.

The link for applying the Online MBA program is http://www.bth.se/apply
There is NO need to contact any consultancy to apply for the online MBA program.
Blekinge Inst of Technology offers several other Masters programs (like Infomatics, Mathematical Modelling and Simulations, Game Design, Electrical Engg, Software Engg, etc). All the courses are listed on the left side of the link (http://www.bth.se/apply)
If you are interested in doing MBA, please consider this option. Please pass this information to your friends who may utilize this opportunity.

15 பின்னூட்டங்கள்/Comments:

said...
This comment has been removed by the author.
said...

//ஆனால் அடுத்த ஆண்டு முதல் ஐரோப்பியர் அல்லாதவருக்கு கட்டணம் என சட்டம் இயற்றி விட்டார்கள். //

:(

தற்போது உங்களுக்கு உள்ள தொடர்புகள் மூலம் உலகில் எந்தெந்த நாடுகளில் கல்விக் கட்டணம் இல்லை / மிகவும் குறைவு என்று ஒரு இடுகை போட்டால் உதவியாக இருக்கும்.

said...

// Exam எழுத சுவிடனுக்கு போக வேண்டும் போக வேண்டும் போலிருக்குதே?//

இணையவழி எம்.பி.ஏ தேர்வுகளும் இணையவழியிலே நடைபெறும்.

said...

//தற்போது உங்களுக்கு உள்ள தொடர்புகள் மூலம் உலகில் எந்தெந்த நாடுகளில் கல்விக் கட்டணம் இல்லை / மிகவும் குறைவு என்று ஒரு இடுகை போட்டால் உதவியாக இருக்கும். //

நிச்சயம் ரவிசங்கர்.

said...

//இணையவழி எம்.பி.ஏ தேர்வுகளும் இணையவழியிலே நடைபெறும்.//

நன்றி, தாங்களின் பழய இடுகையை பார்த்த பின் அந்தப் பின்னூட்டத்தை நீக்கிவிட்டேன். குழப்பத்திற்கு மன்னிக்கவும்.

Internet MBA, part time, starting in September 2009 and ending in June 2011.

NB. All students have to take a comprehensive exam on campus - the rest is on Internet.

இதைப் பார்த்துவிட்டுதான் கேட்டேன்.இந்த comprehensive exam எழுத போகவேண்டாமா?

said...

// இதைப் பார்த்துவிட்டுதான் கேட்டேன்.இந்த comprehensive exam எழுத போகவேண்டாமா? //

நன்றி நந்தவனத்தான். இதைப்பற்றி நான் விசாரித்து பதிவு இடுகிறேன்.

said...

//சுவீடனில் மேற்படிப்பு படிக்க இந்திய அறிவியல்/பொறியியற்/தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கு ஆங்கிலத் தேர்வு இல்லை//

What should you select in the option box? En A or En B? It is not very clear in the application form.

said...

ஒரு blank option டிராப் டவுன் பாக்ஸில் இருக்கும். Exempted from English Test எனக்குறிப்பிட்டு விடலாம். நான் என்னுடைய விண்ணப்பத்தை இவ்வாறே பூர்த்தி செய்தேன்.

said...

நேரம் கிடைத்தால், இத்த கேள்விகளுக்கு விளக்கம் தர முடியுமா?

1) படிபதட்கு இடம் கிடைக்கவில்லை என்றால், ஒரிஜினல் செர்டிபிகட் திருப்பி எமக்கு அனுப்பி வைப்பார்களா?
2) MBAக்கு இரண்டு வருடம் வேலை அனுபவம் கேட்கிறார்கள், குறிப்பிட்ட துறையில் தான் தேவையா, அல்லது, படிப்பு சம்பந்தமாக எதாவது ஒரு திரையில் வேலை அனுபவம் போதுமா?
3)வயது வரம்பு பற்றி எதுவும் அவர்கள் போடவில்லையே??

நண்றி

said...

//1) படிபதட்கு இடம் கிடைக்கவில்லை என்றால், ஒரிஜினல் செர்டிபிகட் திருப்பி எமக்கு அனுப்பி வைப்பார்களா?
2) MBAக்கு இரண்டு வருடம் வேலை அனுபவம் கேட்கிறார்கள், குறிப்பிட்ட துறையில் தான் தேவையா, அல்லது, படிப்பு சம்பந்தமாக எதாவது ஒரு திரையில் வேலை அனுபவம் போதுமா?
3)வயது வரம்பு பற்றி எதுவும் அவர்கள் போடவில்லையே??
//
நகல்கள் மட்டுமே அனுப்பிவீர்கள்.
எந்த துறையாக இருந்தாலும் அவர்களுக்கு சம்மதம் தான்.
வயது வரம்பு கிடையாது.

said...

நிறைய கேள்விகள் இருக்குப்பா....கேக்குறேன்...கேக்குறேன்.
அன்புடன் அருணா

said...

hello friend i m syed rahman working in saudi arabia as piping designer (Native mayiladuthurai, TN), i m completed my diploma in mechanical engg. 2005 , i want khow whether i m eligialbe for see course. other wise send any other detail about distance education for UG degree. Help me

mail id: syed250123@gmail.com

said...

can you share your mail ID

said...

Hi ,

This is Arul for chennai.

Please clarify my doubt regarding the below line as soon as possiable.

NB. All students have to take a comprehensive exam on campus - the rest is on Internet.

said...

Dear mr. Selvakumar,
you are doing a wonderful job.
I am here in Africa ( Mali ) on my business tour. I am in Pharmaceutical business, supplying Indian medicines to French Speaking African countries. When I am in India, I am too busy, here I am too free. This has given opportunity to see you on Web. Keep going. Best of Luck. God Bless you. Regards, Nathan