Saturday, September 29, 2007

கருப்பின் அழகு - ஸ்வப்னகூடு (மலையாளம்)

வழக்கமான மலையாளத் திரைப்படங்களில் வரும் பாடல்களைக் காட்டிலும் இந்த பாடல் வித்தியாசமானது. மென்மையாக, அதே சமயத்தில் வேகமான தாளத்துடன் அமைந்துள்ள இப்பாடல் "ஸ்வப்னக்கூடு" என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. பிரித்விராஜ், குஞ்சாக்கோபோபன்,ஜெயசூரியா , மீராஜாஸ்மின் மற்றும் பாவனா நடித்துள்ள இப்படத்திற்கு இசை மோகன் சிதாரா. படத்தை இயக்கியவர் கமல்.இந்தப் பாடலில் நடித்துள்ள நடிகர்களில் குஞ்சாக்கோபோபனைத் தவிர மற்றவர்கள் தமிழ் ரசிகர்களுக்குப் பரிச்சயமனாவர்களே .. குஞ்சாக்கோபோபன் காதலுக்கு மரியாதை மலையாள மூலத்தில் நடித்தவர்.

Friday, September 28, 2007

சத்தம் போடாதே - திரைப்பார்வை

இயக்குனர் வசந்தை ஒரு விசயத்துக்காக நிச்சயம் பாராட்டலாம். கதைக்களம் எப்படி பட்டதாக இருந்தாலும், அவரின் பெரும்பாலான படங்களில், சமூகத்திற்காக சமூக அக்கறையுடன் செயற்படும் அமைப்புகளை பற்றி தனது படத்தின் கதை மாந்தர்களின் வாயிலாக அழகாக உறுத்தல் இன்றி சொல்லிவிடுவார். இந்த படத்திலும் "ஆல்கஹாலிக் அனானிமஸ்" என்ற ஒரு தன்னார்வ அமைப்பை பற்றி சொல்லியுள்ளார். குடிபழக்கத்துக்கு அடிமையானவர்களை அப்பழக்கத்திலிருந்து மீட்டெடுத்து, அவர்களுக்கு தொடர்ச்சியான கலந்தாய்வுகள் மூலமாக அவர்களின் வாழ்க்கையை செம்மையாக்கும் பணியை செய்து வரும் அமைப்புதான் "ஆல்கஹாலிக் அனானிமஸ்" . இந்த அமைப்பின் இணைய தளத்திற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.எவ்வளவு கடினப்பட்டு எடுக்கப்படும் பிரச்சாரப் படங்களை விட, வெகுசன ஊடகமான திரைப்படங்களில் இப்படி வசனங்களின் வாயிலாகவும், காட்சி அமைப்பின் வாயிலாகவும் கதை ஓட்டத்துடன் சொல்லும்போது இந்த மாதிரியான அமைப்புகள் பற்றிய விழிப்புணர்வு மக்களை எளிதாகச் சென்றடையும். இதை தனது ஒவ்வொரு படத்திலும் செய்து வரும் வசந்த் தொடர்ந்து செய்வார் என நம்பலாம்.

படத்தில் கவர்ந்த இன்னொரு விசயம், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், மறுகல்யாணம் செய்வதை விட தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லி இருப்பது.பான்யன் அமைப்பை பற்றிக்கூட இயக்குனர் சொல்லி இருப்பார்.
சரி படத்திற்கு வருவோம். வசந்த் ஒரு நல்ல "ஒளியும் ஒலியும் டைரக்டர்" என்று கல்லூரிக் காலத்தில் என் நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்லுவார். அவரின் எல்லாபடங்களிலும் பாடற்காட்சிகளை பிரமாதமாக காட்சியமைப்பு செய்திருப்பார். இந்த படத்திலும் முதற்பாதியில் வரும் மூன்று பாடல் காட்சிகளும் டிபிகல் வசந்த் பாடற்காட்சிகள். அதிலும் பிருத்விராஜின் அறிமுகப் பாடல் காட்சியில் குட்டி குட்டி குழந்தைகளுடன் "அழகு குட்டி செல்லம்" என ஆடுவது ஏக அருமை.இரண்டாவது பாதியில் வரும் இரண்டு "திணிப்பு பாடற்களும்" படத்திற்கு திருஷ்டி.

இன்னொரு விசயம் ஏனைய வசந்தின் படங்களைப் போல இதிலும் படம் பார்த்த பிறகு ஏதோ மிஸ் ஆகுதே என்ற ஆதங்கம் ஏற்படுகிறது. இந்த படத்தில் அவரின் முந்தையப் படங்களைக் காட்டிலும் சற்று அதிகமாகவே!!! வசந்த் போன்ற இயக்குனர்கள் "திரில்லர்" வகைப் படங்களை எடுக்கும்போது "லாஜிக்கை" நிறைய இடங்களில் இடிக்க வைப்பது நிச்சயம் ஜீரணிக்க முடியாது.

நிதின்சத்யாவிடமிருந்து விவாகரத்து பெற்று , பிருத்விராஜை மணந்துகொள்ளும் பத்மபிரியாவை "பொசசிவ்" நிதின்சத்யா கடத்திசெல்கிறார்.பிருத்விராஜ், தன் மனைவி பத்மபிரியாவை மீட்டாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
படத்தில் யாரையும் குறை சொல்லமுடியாது. எல்லோரும் நன்றாகவே நடித்து உள்ளனர். மேல்தட்டு ஜெண்டில்மேன் இளைஞர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சுவாமிக்கு பிறகு பிரித்விராஜுக்கு அழகாக பொருந்துகிறது. வசனங்களில் மலையாள உச்சரிப்பு இருந்தாலும் அதுவும் ரசிக்கும்படியாக உள்ளது. காபி ஷாப்பில் அவர் பத்மபிரியாவுக்கு கைநடுக்கத்தைப் போக்க வழிமுறைகள் சொல்லிக் கொடுக்கும் காட்சி குட்டிக்கவிதை.

படம் பார்ப்பவர்களுக்கு நிதின்சத்யா கதாபாத்திரத்தின் மேல் பரிதாபமோ, ஆத்திரமோ ஏற்பட வைக்காதது, இரண்டாம் பாதி திரைக்கதையின் பலவீனமே. நாசர், சுஹாசின், ஸ்ரீமன் ஆகியோர் சில காட்சிகளில் வருகின்றனர். யுவன்சங்கர் ராஜா திரில்லர் வகைபடம் என்று அதிகமாக உழைத்திருப்பது பிண்ணனி இசையில் தெரிகிறது. விக்ரமன் படங்களுக்கு விக்ரமனே இசை அமைக்கிறாரோ என்று நினைக்க வைக்கும். அதுபோல வசந்தின் படங்களில் வசந்த் தான் ஒளிப்பதிவோ என்று தோன்றும். தினேஷ் குமாரின் ஒளிப்பதிவு மீண்டும் வசந்தின் ஸ்டைலை திரையில் கொண்டு வந்து நிறுத்தி உள்ளது. சதிஷ் குரேசாவாவின் எடிட்டிங்கும் குறிப்பிடத்தக்கது.
படத்தின் முதற்பாதியை நிச்சயம் ரசிக்கலாம். கியரண்டி கலகலப்பு.
இரண்டாம் பாதி படம் பார்ப்பவர்களின் விருப்பம், நிறைய திரைக்கதை சறுக்கல்கள் வசந்த் திரில்லர் கதைக்களத்துக்கான ஹோம் வொர்க் செய்யவில்லையோ!!!.

வசந்த், இந்த படத்தில் முதற்பாதியில் வருவதைபோல ஒரு அழகான மென்மையான காதல் கதைக்களத்துடன் உங்களிடமிருந்து அடுத்த படத்தை எதிர்பார்க்கிறோம்.

Wednesday, September 26, 2007

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல் - வட்டத்துக்குள் சதுரம்

இளையராஜாவின் இசையில் எழுபதுகளில் வெளியான "வட்டத்துக்குள் சதுரம்" என்ற படத்திலிருந்து இந்த பாடல் நட்பினை போற்றும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இளையராஜாவின் சிறந்த பாடல்களுள் இதையும் ஒன்றாகச் சொல்லலாம்


சிறு வயது சுமித்ரா , லதாவாக வரும் அந்த இரு குட்டி பெண்களும் அழகாக நடித்து இருப்பனர்.ஒரு குழந்தை "சிந்து பைரவியில் " நடித்த ராசி என்று நினனக்கிறேன். இன்னொருவர் "சுவரில்லாத சித்திரங்களில்" நடித்த சுமதி யா?!! சரியாக தெரியவில்லை.
ஆமாம் இந்த பாடலை பாடியவர்கள் யார்? யாரேனும் தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்


நன்றி : www.youtube.com

Tuesday, September 25, 2007

மடை திறந்து பாடல் - நிழல்கள் , அசலும் நகலும்

அசல்
நகல்வெளிகண்ட நாதரின் நிழல்கள்- 'ராஜா'க்கள் படைத்த அற்புதம்! படிக்க இங்கே சொடுக்கவும்

Monday, September 24, 2007

மீண்டும் மிசாபுல் ஹக் பாகிஸ்தானின் "குளூஸ்னர்" ஆனார்

T20 சாம்பியன்ஸிப் முதல் சுற்றில் இந்தியாவுடன் ஆன ஆட்டத்தில் , பாகிஸ்தான் வெற்றி பெற 15 பந்துகளில் 39 ரன்கள் எடுக்க வேண்டிய கடினமான நிலையில் இருந்து மீட்டெடுத்து 2 பந்துகளில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ,

கடைசி பந்தில் மிசாபுல் ஹக் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அந்த ஆட்டத்தில் 3-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.


இறுதி போட்டியில் , 24 பந்துகளில் 54 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையிலிருந்து மீண்டும் ஒரு முறை அணியை மீட்டெடுத்து வெற்றியின் விளிம்பு வரை கொண்டு வந்தார், மிசாபுல் ஹக். 4 பந்துகளில் 6 ரன்கள் எடுக்க வேண்டியிருந்த போது விக்கெட் கீப்பர் தலைக்கு மேலே ஸ்கூப் செய்ததால் மேல் எழும்பிய பந்து சரியாக ஸ்ரீசாந்த் கையில் வந்து விழுந்தது. இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் கோப்பையைக் கைப்பற்றியது.

ஒரு முறை அல்ல, இருமுறை பாகிஸ்தானின் "குளூஸ்னர்" ஆனார் மிசாபுல் ஹக்.

மலரும் நினைவுகள் லான்ஸ் குளூஸ்னர் 1999 உலகக்கோப்பை அரை இறுதி ஆட்டத்தில்

Thursday, September 20, 2007

நாங்க ஏண்டா நடுச்சாமத்தில சுடுகாட்டுக்குப் போவனும் - வடிவேலு காமெடிநள்ளிரவு நேரம், கல்லறையில் நண்பனுடன் - சிறுகதை யை படிக்க இங்கே சொடுக்கவும்

Wednesday, September 19, 2007

ஐந்து வாங்கினார் ஆறாக திருப்பிக் கொடுத்தார் - யுவராஜ் சிங் (வீடியோ)

ஐந்தாக வாங்கியது டிமிட்ரி மசாக்கரனஸிடம்ஆறாக திருப்பிக் கொடுத்தது ஸ்டூவர்ட் பிராடிடம்நன்றி : ESPN தொலைக்காட்சி மற்றும் youtube தளம்

இந்தியா 18 ரன்களில் இங்கிலாந்தை வீழ்த்தியது - யுவராஜ் பழி தீர்த்தார்

யுவராஜ் சிங்கின் ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்களுடன் இந்தியா 218 - 4இங்கிலாந்தின் மாடி, சோலங்கி, பீட்டர்சன் மற்றும் அணித்தலைவர் காலிங்வுட் ஆகியோர் இந்திய அணியின் ஸ்கோரை சிறப்பாகத் துரத்தி வந்தாலும், கடைசி ஆறு பந்துகளில் 36 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கடைசி ஓவரின் நிலவரம் இதோ

19.1 Pathan to Wright, 1 run, massive intent, but not enough connection. Midwicket cleans up

19.2 Pathan to Flintoff, 1 run, back of a length, and clubbed down to long-off. It's all a bit futile now


19.3 Pathan to Wright, 1 wide, way down the leg-side but Dhoni does well to save four byes
19.3 Pathan to Wright, FOUR, down on one knee and slapped over the covers. Good, but not good

19.4 Pathan to Wright, SIX, that must be the lowest-key maximum of the day. Helped over deep midwicket, to a bare ripple of appreciation enough

19.5 Pathan to Wright, OUT, that's an incredible catch from Harbhajan on the long-on boundary! He reached up and back and plucked the six from thin air, inches inside the rope and right in front of the England dug-out! Risked life and limb and came up trumps!

19.6 Pathan to Flintoff, FOUR, Flintoff finishes with an emphatic thump that Harbhajan this time can't cut off. England reach 200 and save some pride, but it's India who march on


இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சொல்லப்போனால் உண்மையான வித்தியாசம் யுவராஜின் ஆறு சிக்ஸர்கள்.பதான் 3 விக்கெட்டுக்களையும் ஹர்பஜன் சிங் இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
ஆட்ட விவரங்களை அறிய இங்கே சொடுக்கவும்

நன்றி = www.cricinfo.com

ஆறு சிக்ஸர்கள் ஆறுபந்துகளில் யுவராஜ் விளாசல்

18.1 Broad to Yuvraj Singh, SIX, that's out the ground, super shot over cow corner and it just kept going up

The dodgy TV measurement says that's 111 yards ... but as it landed outside the ground how the whatsists do they know? They guess, that's how.

18.2 Broad to Yuvraj Singh, SIX, now that really is sweet, no more than a dismissive flick off his legs, swatting a fly, and the ball arcs deep into the crowd beyond backward square leg

18.3 Broad to Yuvraj Singh, SIX, he's hitting them everywhere, he steps to leg and smashes the ball over extra cover and it keeps on travelling ... the fireworks start on top of the scoreboard ... they've been going off in the middle for some time

18.4 Broad to Yuvraj Singh, SIX, Shiver me timbers!: Broad goes round the wicket, bowls a filthy wide full toss and Yuvraj steers it over backward point and it clears
the rope again
England have a team meeting. Shuffling deckchairs on the Jolly Roger though ...

18.5 Broad to Yuvraj Singh, SIX, down on one knee and larruped over midwicket, that one was more nine iron, it went into the night sky and dropped with a thud in the jubilant crowd ...

Broad looks like a man who knows he is about to be mauled again ...
Broad looks quizzical ... and miserable. Can he ... can Yuvraj do it ...

18.6 Broad to Yuvraj Singh, SIX, and he has, Yuvraj leans back and smacks that over wide mid-on ... it was the maximum from the moment it left that bat and the crowd were roaring as it flew

Thats it Six Sixes in an over.. Poor Broad...

யுவராஜ் 12 பந்துகளில் அரை சதமடித்தார். இது ஒரு உலக சாதனையாகும். சர்வதேச ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 17 பந்துகளில் ஜெய சூர்யா அரைசதமடித்ததே இதுவரை சாதனையாக இருந்துள்ளது.

யுவராஜ் 16 பந்துகளில் . 7 சிக்ஸர்கள் மற்றும் மூன்று பவுண்டரிகள் உதவியுடன் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்தது. முன்னதாக கம்பீர் , மற்றும் சேவக் அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.

இருவரும் முதற் விக்கெட்டுக்கு 139 ரன்கள் 14.4 ஓவர்களில் சேர்த்தனர். கடைசி நியுசிலாந்து ஆட்டத்தைபோல இதிலும் துவக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான துவக்கத்தைக் கொடுத்தது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்ககூடிய விசயமாகும்.

இங்கிலாந்துடன் ஆன ஒரு நாள் போட்டிதொடரில் இங்கிலாந்து ஆட்டக்காரர் மாசக்கரனஸ் யுவராஜின் ஓவரில் ஐந்து சிக்ஸர்கள் அடித்தார். அதற்கு சரியான பழிவாங்கலாக இந்த ஆறு சிக்ஸர்கள் அமைந்தது.ஆறு சிக்சர்களை அடிக்க உதவிய ஸ்டூவர்ட் பிராட் முன்பு ஒரு முறை கங்குலியை சீண்டிய போது எடுத்த படம்

நன்றி : www.cricinfo.com

Saturday, September 15, 2007

1991 ல் பாலசந்தர், 2007ல் சேரன்மரகதமணியின்(தெலுங்கில் கீரவாணி) இசையில் "பாடும் நிலா" பாலா மற்றும் சந்தியா பாடிய "சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா" என்ற

பாடலின் வீடீயோ இதோ!!
நட்பு காதலாக பரிணாம வளர்ச்சி அடையும் ஒர் இரவில் நடக்கும் தொடர்ச்சியான போன் உரையாடல் காட்சிகளை கொண்டு இந்த பாடல் காட்சியமைக்கப்பட்டிருக்கும். 90 களின் தூர்தர்ஷனின் செய்திக்கான உலகம் சுற்றும் ஆரம்பக்காட்சி, செங்குத்து கட்டங்கள், சென்னை நகரின் வெறிச்சோடி இருக்கும் இரவு நேர தெருக்கள் என சில வினாடி காட்சிகளைக் கூட கவிதையாய் காட்டி இருப்பார் பாலசந்தர். நடுத்தர வயது ஆணாக மம்மூட்டி, முதன் முறையாக காதல் வயப்படும் பெண்ணாக பானுப்பிரியா இயல்பாக நடித்திருப்பனர்.

இதே பாணியில் மாயக்கண்ணாடி படத்திலும் சேரன், இளையராஜாவின் அருமையான இசையில் ஒரு பாடற்காட்சியை அமைத்திருப்பார்.வெவ்வேறு காலகட்டத்தில் வெளிவந்திருந்தாலும், காதல் பரிமாற்றத்திற்கு தொலை தொடர்பு சாதனங்கள் எப்படி உதவிகரமாக இருக்கின்றன என்பதை நயத்தோடு சொல்லும் இவை இரண்டும் காலம் கடந்தும் ரசிக்கப்படும் என்பது நிச்சயம்.

நன்றி : www.youtube.com

Friday, September 14, 2007

அஞ்சலி பாப்பா - சிறுகதை

மணி நாலாகியிருந்தது, அஞ்சலி பாப்பா ஸ்கூல்ல இருந்து வந்திருப்பா. தினமும் பாப்பாகிட்ட பேசலைன்னா எனக்கு ஆபிஸ்ல வேலை ஓடாது. எவ்வளவு மீட்டிங் , வெளியூர் பயணங்கள் அப்படி இப்படின்னு இருந்தாலும் இந்த நேரத்திற்கு என் குழந்தைகிட்ட பேசிடனும்.
வீட்டிற்கு போன் பண்ண போது ரம்யா கடுப்புடன் “ஹலோ ” சொன்னாள்.

“ரம்யா, பாப்பா எங்க? “

“நல்லா நாலு சாத்து சாத்தி தூங்க வச்சிருக்கேன், ஸ்கூல் மிஸ் கிட்ட கொடுக்க சொல்லி குடுத்த 500ரூபாயையும் , புதுசா வாங்கின பென்சில் பாக்ஸையும் தொலைச்சுட்டு வந்து இருக்கா! அதுதான் நாலு முதுகில வச்சேன்“

“உனக்கு அறிவே இல்லியா!! பாப்பாவை அடிக்காதேன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன், சரி பாப்பாவை எழுப்பி சமாதனபடுத்தி ஸ்கூல் பக்கமாக கூட்டிட்டு வா, நான் ஆபிஸ்லேந்து ஸ்கூல் கிட்ட வர்றேன்” சொல்லி போனை வைத்த போது 15 வருடங்கள் முன்பு இதே போல நான் 50 ரூபாய் பணத்தை தொலைத்த சம்பவம் ஞாபகம் வந்தது,

அப்போ நான் ஒன்பதாங்கிளாஸ் படிச்சுட்டு இருந்தேன். அப்போதான் சம்மர் ஹாலிடேஸ் முடிஞ்சு ஸ்கூல ஆரம்பிச்சு இருந்தது.

“அப்பா, நோட்டுக்கு கொடுத்த காசு காணாம போயிடுச்சுப்பா” சொல்லி முடிக்கும் முன் பளாரென ஒரு அறை அப்பாவிடமிருந்து…

“எப்படிடா காணாபோகும் , என்ன பண்ண சொல்லு, பீடி குடிக்க செலவு பண்ணிட்டியா, சினிமா பார்த்தியா!!”

“இல்லைப்பா, நான் அப்படி எதுவும் பண்ணலேப்பா, “ என நான் எவ்வளவோ கெஞ்சியும் அப்பா பெல்டைக் கழட்டி அடிச்சதின் தழும்புகள் இன்னும் மனசில அப்படியே இருக்குது.

மறுநாள், “இவன் இங்கேயிருந்தா இப்படி திருட்டுத்தனம் பண்னி ஒழுக்கமே இல்லாம ஆயிடுவான் ஹாஸ்டல்ல படிச்சாதான் புத்தி வரும்” என்று சொல்லி கொண்டு போய் ஹாஸ்டல்ல சேர்த்து விட்டுட்டாரு.

ஹாஸ்டல்ல லைஃப் என்னை வைராக்கியமா படிக்க வச்சாலும். வீட்டில் இருந்து படிச்சிருந்தா சில விசயங்களை இழக்காம இருந்திருப்பேன்னு பல சமயங்கள்ல தோணவைக்கும்.

எல்லாமே நேத்து நடந்தது போல இருக்குது. அஞ்சலி பாப்பாவுக்கு போன வாரம் பென்சில் பாக்ஸ் வாங்கின கடைக்கு வந்திருந்த போது பழைய விசயங்கள்ல இருந்து மீண்டு வந்தேன்.

அதே மாதிரியான இன்னொரு பாக்ஸ் வாங்கி, அதில் 5 நூறு ரூபாய் நோட்டுகளையும் வைத்து, அஞ்சலி பாப்பா ஸ்கூல் பக்கம் போனேன். ஏற்கனவே ரம்யாவும் பாப்பாவும் வந்திருந்தனர்.அஞ்சலி பாப்பாவோட கண்ணேல்லாம் சிவந்து போய் இருந்தது.

“பாப்பா, காணா போட்டா பாக்ஸ் கிடைச்சிருச்சு, இங்க பாருங்க” சொல்லி அதைக் கொடுத்தது, எல்லா சோக களையும் போய் பாப்பா அழகா சிரிச்சா.

“கார்த்திபா, கார்த்திபா, “

“என்னடா !! சொல்லுடா செல்லம்“

“கார்த்திபா, இதை யாரு கண்டுபிடிச்சு கொடுத்தா!! , இங்க பாரு இந்த ரெட் பென்சிலும், க்ரீன் பென்சிலும் நான் ஸ்கூலுக்கு எடுத்திட்டே வரல, வீட்டிலேதான் இருக்கு, இது எப்படி காணா போன பாக்ஸ்ல இருக்கு!!”

“இதுவா செல்லம், காட் தான் இதை வந்து கொடுத்துட்டு போனாரு, நீ நல்லா பாப்பாவா இருக்கிறதுனால ரெண்டு பென்சில் சேர்த்து கொடுத்திருக்காரு, அப்புறம் இன்னொன்னு இனிமேல் பாப்பா எந்த பொருளையும் காணாபோடக்கூடாதுன்னு காட் சொல்லி இருக்காரு
காட் க்கு ஒரு தாங்க்ஸ் சொல்லிடு“

“தாங்க்யூ காட்” என வானத்தைப் பார்த்து சொன்ன என் குட்டி அஞ்சலி பாப்பாவை வாரி அணைத்துக்கொண்டேன்.

Tuesday, September 11, 2007

டிவெண்டி20 கிரிக்கெட் வரலற்றின் முதற்சதம் - கிறிஸ்கெயில் அதிரடி

டிவெண்டி20 கிரிக்கெட் உலககோப்பைக்கான போட்டிகளின் முதற் ஆட்டம் தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகளுக்கிடையே கோலாகலமாக துவங்கியது. டிவெண்டி20 போட்டிகளின் வரலாற்றில் முதன்முறையாக கிறிஸ்கெயில் சதமடித்தார்.10 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரிகள் அடித்து 117 ரன்கள் அடித்தார். இதற்கு முன் ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங் 98 ரன்கள் நியுசிலாந்து அணிகெதிராக அடித்ததே சாதனையாக இருந்தது,இந்த ஆட்டத்தில் கிறிஸ் கெயில் 26 பந்துகளில் 50 ரன்களையும் 51 பந்துகளில் 100 ரன்களையும் கடந்தார்.
இவரின் அதிரடி ஆட்டத்தின் உதவியால் மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது.

ஸ்கோர்கார்டைப் பார்க்க இங்கே சொடுக்கவும்

-------------------------
அண்மையில் எழுதப்பட்ட கதை : சகிப்புத்தன்மை

அமேரிக்கா அமேரிக்கா ..அமேரிக்கான்னா வார் கண்ணா வாரு - வீடியோதமிழகத்தில் 80 களில் பிரபலமாய் இருந்த சுராங்கனி சுராங்கனி பாடலின் மெட்டில் அமேரிக்காவின் ராணுவ , அரசியல் நடவடிக்கைகளை கிண்டல் செய்யும் ஒரு பாடலின் வீடியோ
நன்றி : www.youtube.com

அண்மையில் எழுதப்பட்ட கதை : கிருஷ்ணமூர்த்தியுடன் கடவுள்

Wednesday, September 05, 2007

உத்தப்பா அதிரடி , இந்தியா திரில் வெற்றி83/4 என்ற இக்கட்டான சூழ்நிலையில் இருந்து, ஓவைஸ் ஷா வின் சதத்துடன், இங்கிலாந்து ஆட்டக்காரர் மசாக்ரனஸ், இந்தியாவின் யுவராஜ் வீசிய ஐம்பதாவது ஓவரில் கடைசி ஐந்து பந்துகளையும் சிக்ஸருக்கு வீசியபின் உற்சாகத்துடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணிக்கு இந்தியாவின் முதற்விக்கெட்டை வீழ்த்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
இந்திய அணியின் ஸ்கோர் 150 ஆக இருக்கும்பொழுது கங்குலி தனது அரைசதத்திற்குப் பின் ஆட்டமிழந்தார். இப்போதெல்லாம் கங்குலி அடிக்கடி அரைசதம் அடிக்கிறார். இந்த வருடத்தில் இவர் அடிக்கும் 11வது அரைசதம் இது. (கிரெக் சாப்பல் சார், நீங்க எங்க இருக்கீங்க).

டெண்டுல்கரின் அதிரடி ஆட்டம் அவரின் ஆரம்பகால ஓபனிங் பேட்டிங் நினைவுப்படுத்தும் விதமாக அமைந்து இருந்தது. மீண்டும் ஒரு முறை தொண்ணூறுகளில் ஆட்டமிழந்தார். மத்திய வரிசை ஆட்டக்காரர்கள் ரன் விகிதத்தை அதிகப்படுத்தும் முயற்சியில் நோக்கில் அடித்து ஆடி ஆட்டமிழக்க, இந்தியாவின் ஸ்கோர் 234/5 41வது ஓவரில் என்றானது.

தோனியும் உத்தப்பாவும் அடுத்து 60 ரன்களை சேர்க்க, 294 ரன்கள் இருந்தபோது தோனியும் ஆட்டமிழந்தார். அதனையடுத்து அகர்கரும், ஜாகிர்கானும் ரன் அவுட் ஆக, கடைசி 4 பந்துகளில் 8 ரன்கள் தேவை என்ற நிலையில் உத்தப்பா அடுத்த இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டி வெற்றியைத் தேடி தந்தார். உத்தப்பா 33 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து இருந்தார்.வெற்றிக்குப்பின்னர், 30 ரன்கள் கடைசி ஓவரில் வாரி வழங்கிய யுவராஜ் முதல் ஆளாய் மைதானத்திற்கு ஓடிவந்து உத்தப்பாவை ஆரத்தழுவிக் கொண்டார். (ஏதோ ஒரு ரசிகர் தான் ஓடி வருகிறார் என்று நினைத்த ஒரு பாதுகாவலர் சிறிது தூரம் அவரின் பின்னால் சிறிது தூரம் ஓடிவந்தார்)

ஆட்டத்தின் ஸ்கோர்கார்டைப் பார்க்க இங்கே சொடுக்கவும்

ஆட்டநாயகனாக டெண்டுல்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் ஒரு நாள் தொடர் 3-3 என்று சமனிலை அடைந்துள்ளது. அடுத்த ஆட்டம் வருகிற எட்டாம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

Monday, September 03, 2007

நானும் கடவுள் - வீடியோநன்றி : கமல்ஹாசன், மாதவன், சந்தானபாரதி, மதன், சுந்தர்.சி மற்றும் அன்பே சிவம் படக்குழுவினர்