Monday, May 08, 2006

தி.மு.க விற்கு 40% ஓட்டுக்கள்

தி.மு.க விற்கு 40% ஓட்டுக்கள் கிடைத்தது. அ.தி.மு.க விற்கு 20% ஓட்டுக்கள் மட்டுமேக் கிடைத்தது. அட....இது எப்படின்னு கேட்கிறீங்களா... எங்க வீட்டுலதாங்க... எங்க வீட்டுல மொத்தம் 5 ஓட்டு..அதுல இரண்டு சூரியனுக்கு...ஒன்று இரட்டை இலைக்கு.. பாக்கி இரண்டு பேர் வெளியூர போய் இருக்கிறதுனால ஓட்டுப் போட முடியலா... ஆமாம் அந்த ஒத்த ஓட்டு அ.தி.மு.க விற்கு யார் போட்டாங்க... அட அது நான் தாங்க...

Tuesday, May 02, 2006

டப்பிங் படங்கள்,

எனது 23 வருட சினிமா பார்க்கும் வரலாற்றில் டப்பிங் படங்களக்கு பெரும்பங்கு உண்டு. குறிப்பாக தெலுங்கு டப்பிங் படங்கள். நீண்ட நாள் வரை சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து ஆகியன தமிழ் படங்கள் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். புஷ்பக விமானம், தமிழில் பேசும்படம், கன்னடத்தில் இருந்து டப் ஆனது. எனது சினிமா ஆர்வத்தை அடுத்த பரிணாமத்துக்கு எடுத்துப் போனப் படம். கடைசியில் கமலஹாசன் அமலாவின் முகவரி எழுதிய தாளை தொலைக்கும் இடம் கனமான முடிவு.
இதயத்தை திருடாதே. இளையராஜாவின் பாடற்களுக்காகப் பார்த்தப் படம். அந்தப் பேய்ப்பாட்டு அன்றைக்கு எனக்கு மிகவும் பயத்தைக் கொடுத்த பாடற்களில் ஒன்று.

இதுதான்ட போலிஸ், வைஜெயந்தி ஐ.பி.எஸ் டப்பிங் படங்களின் முந்தைய சாதனைகளை முறியடித்தப் படங்கள்.

ராஜசேகரின் டப்பிங் படங்களின் சாய்குமாரின் வாய்ஸ் மிக பிரபல்யம்.(நம்ம ஆதி வில்லன்)

சாய்குமார் நடித்த தெலுங்கு, கன்னட டப் படங்களுக்கு அவரே வாய்ஸ் கொடுப்பது ஒரு பிளஸ் பாய்ண்ட்.

அந்தப்புரம், பாதி தெலுங்கு, மறுபாதி பார்த்திபனை வைத்து ரீமேக் செய்யப்பட்டு வித்தியாசமான முயற்சியாக வெளிவந்தது.

சிரஞீவியின் கைதி, கேங்லீடர், முரடன் என சிலக்குறிப்பிடத்தக்க படங்கள், எப்போதும் மனதில் நிற்கும்.
தெலுங்கு படங்களில் எல்லா விசயமும் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். அப்போது தியேட்டரில் பார்த்த டப் படங்கள் இப்போது டீவி சேனலில் அந்த அந்த மொழியிலேயேப் பார்க்கும்போது இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்.


எனக்குப் பிடித்த டாப் 10 டப்பிங் படங்கள்

1. பேசும்படம்
2. அந்தப்புரம்
3. சலங்கை ஒலி
4. வாலிபன் (திவ்யபாரதி, வெங்கடேஷ் நடித்தது)
5. உண்மை (மலையாள டப்பிங், மம்மூட்டி நடித்த சஸ்பென்ஸ், த்ரில்லர், மம்மூட்டிக்கு அவரே வாய்ஸ்)
6. 4 ஸ்டூடன்ட்ஸ்
7. இதயத்தை திருடாதே.
8. இது தான்ட போலிஸ், மற்றும் 9. ராஜசேகர நடித்த ஒரு திரில்லர், பெயர் மறந்து விட்டது.
10. வைஜெயந்தி ஐ.பி.எஸ்

Monday, May 01, 2006

நட்சத்திரப் பின்னூட்டம்: முத்து(தமிழினி)க்கு

பதிவுக்கு மட்டும் தான் நட்சத்திர அந்தஸ்தா!! நண்பர் முத்து(தமிழினி) யை மரியாதை செய்யும் வகையில் அவருக்கு அளிக்க இருந்த பின்னூட்டத்தை தனிப்பதிவாகப் போட்டு அவருக்கு வரும் பின்னுட்டங்களையும் என் பக்கமாக பிரிக்க ஒரு திட்டம். (என்னங்க செய்வது, தேர்தல் நேரமல்லவா அதுதான் மூளை இப்படி வேலை செய்கிறது). இது நட்சத்திரப் பின்னூட்டம்.

முத்து(தமிழினி) யின் எழுத்தில் என்னைக் கவர்ந்த விஷயம், அவரது எளிமையான எழுத்து நடை. நுனிப்புல் மேயும் என்னைப் போன்றவர்களுக்கு எளிமையான நடையில் எளிதாக மேய முடிகிறது. .

முத்து(தமிழினி) யின் எழுத்துக்களில் எனது வாழ்க்கை சம்பவங்களை தொடர்பு படுத்திக் கொள்ள முடிகிறது. அவரின் தந்தையைப் பற்றி எழுதிய ஒரு பதிவு என்னை மிகவும் பாதித்தது. எனது தந்தையும் படுக்க பஞ்சு மெத்தை தரவில்லை ஆனாலும் முள்படுக்கை இல்லாமற் பார்த்துக் கொண்டார். முத்து(தமிழினி) யின் இந்த வாக்கியத்தை எனது சொந்தக் கருத்தாகக் கூறி எனது தந்தையை சந்தோசப் படுத்தினேன். பொதுவாகவே எனக்கு ஆங்கில மீடியத்தில் படிக்க வில்லையே என்ற ஒரு ஆதங்கம் உண்டு. அதன் வெளிப்பாடாக சில சமய்ங்க்ளில் குத்திக் காட்டி பேசிவிடுவேன். இனிமேல் எனது தந்தையிடத்து எனது குத்தல் பேச்சுக்கள் இருக்காது என நம்பலாம்.

சில சமயங்களில் சிலரது வார்த்தைகள் நம்மை வெகுவாகப் பாதித்து நல்ல மனமாற்றங்களை உருவாக்கும். எழுத்தாளனின் வெற்றி உலகில் எந்த மூலையிலாவது ஏதேனும் ஒரு மனிதனிடமாவது மனமாற்றத்தை ஏற்படுத்துவதில் தான் இருக்கிறது. அந்த வகையில் முத்து(தமிழினி) ஒரு எழுத்தாளராக வெற்றிப் பெற்று விட்டார்.

மாற்றுக் கருத்து உடையோரையும் மதிக்கும் அவரின் மாண்பையும் பாராட்டி நிச்சயம் ஒரு பல்சுவையான ஒரு நட்சத்திர வாரத்தை அளிப்பார் என்ற நம்பிக்கையுடன் இப்பதிவு அவரை வாழ்த்தி, மேலும் பல சிறப்பு நட்ச்சத்திர பின்னூட்டங்கள் தனியேப் பதிவு செய்யப்படும்.