Friday, April 28, 2006

வம்பே உன் விலை என்ன?

போலி டோண்டு என்பவரது வலைப்பதிவைப் படித்து விட்டு அதன் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இந்தப் பதிவைப் பதிவு செய்கின்றேன். உண்மையான டோண்டுவுக்கு நன்றி தெரிவித்து பதிவில் எழுதியிருந்த போதும் போலி டோண்டு என்னைத் தாக்கவில்லை. (தப்பித்தேன், திரு.போலி டோண்டு அவர்களே என்னை விட்டு விடுங்கள்).
அனேகமாக உண்மையான டோண்டுவை விட போலிக்கு அதிக ரசிகர்கள் போலும்.
ஆபாச எழுத்துக்களை தவிர்த்து விட்டால் "உண்மையான போலிக்கு" எழுத்தில் நயம் இருக்கிறது. பயந்து பயந்து இப்பதிவை பதிக்கின்றேன்.

Friday, April 21, 2006

டோண்டு சார் நான் பிரென்சு பாஸாயிட்டேன்

அடிப்படை ஆங்கில இலக்கணத்தைப் புரிந்து கொள்ள எனக்குப் பத்து வருடங்கள் ஆனது. ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் தான் எனது "அதிரடி" ஆங்கில ஆசிரியர்கள் திருவாளர் ஃபிரான்க், திருவாளர் இருதய குமார் மூலம் ஆங்கிலம் புரிய ஆரம்பித்தது. ஆனால் இன்றும் ஆங்கிலத்தில் பேசும்போது தமிழில் இருந்து மனதளவில் மொழி பெயர்த்த பிறகுதான் பேச முடிகிறது. இதை எதற்கு சொல்கிறேன் என்றால், என்னால் பிரென்சு அடிப்படை இலக்கணத்தை 6 மாதங்களில் கற்றுக் கொள்ள முடிந்தது. இதற்கு மிகப்பெரும் காரணம் எனது பிரென்சு ஆசிரியை.

லெவல் ஒன்று முடித்தாகி விட்டது. டோண்டு சார், நான் த்ரே பியான் எடுத்து பாஸாயிட்டேன்.

இரண்டு நாட்களுக்கு முன் முத்து(தமிழினி) விடம் தொலைபேசியில் பேசி ஆச்சு. பேசிய பின் தான் புரிந்தது அவர் நல்ல எழுத்தாளர் மட்டும் அல்ல , நல்ல பேச்சாளரும் கூட.

நல்ல பதிவுகளை உருவாக்குவதற்கு சில குறிப்புகளை அளித்தார்.

சிறப்பான ஒரு அனுபவம் அவரிடம் பேசியது. நன்றி முத்து(தமிழினி)

Friday, April 14, 2006

கன்னட மக்களுக்கு ஏன் இத்தனை கோபம்?

ஒரு பக்கம் "கொங்கனி" மொழி பேசும் மக்களின் வியாபார ஆதிக்கம், மேலே மாரத்தியர்களின் ஆதிக்கம். வலது பக்கம் "சுந்தர தெலுங்கினரின்" ஆட்டம். மத்தியிலே கேட்க வேண்டாம் அடி வாங்கவே பிறந்துள்ள "செந்தமிழன்". காவிரி ஊறும் குடகிலோ கூர்க், துளு ராஜ்ஜியம். இதனிடையில் சத்தமே இல்லமல் "ஆர்ம்ஸ்ட்ராங்க்குகே" டீ கொடுத்த "தமிழர்களாக" அடையாளம் காட்டிக்கொள்ளும் கணிசமான மலையாளிகள் தங்களின் ஆளுமையில் உள்ள பகுதியிலேயே தனிமைப் படுத்தப் படும்போது கோபம் வெளிப்படத்தானே செய்யும். நாட்டின் மற்ற பகுதிகளில் இல்லாத அளவுக்கு உள்ளூர கணன்றுக் கொண்டிருக்கும் இந்த நெருப்பு அரசியல் லாப நோக்கின்றி அணைக்கப்பட வேண்டும்.

அண்ணவரு

நீண்ட நாளாகி விட்டது ஒரு பதிவு போட்டு, தேர்தல் சமயம் ஏதேனும் ஏடாகூடமாப் போட்டு வம்பை விலைக்கு வாங்கிவிடக்கூடாது. இருந்தாலும் தேர்தல் சம்பந்தப் படாத ஆனாலும் "வம்புக்கிழுக்கின்ற" ஒரு பதிவைப் பதிய முனைகின்றேன். நேற்றைய "அண்ணவரு" ரசிகர்களின் "உணர்ச்சி வசப்பட்ட" நிகழ்ச்சிகளுக்குப்பின், ஒரு எண்ணம் மனதை குடைகிறது. தங்களுடைய அன்புக்குரியவர் போய்விட்டார் என்பது மட்டும் இல்லாமல் எம்.ஜி.ஆர் என்.டி.ஆர் போல ஒரு உயரிய மரியாதை கர்னாடகத்துக்கு அப்பால் பெறாமல் போய் விட்டாரே என்று கன்னட ரசிகர்களுக்கு தோன்றியிருக்குமோ.(ஆந்திர, தமிழ்நாடு வண்டிகள் குறி வைத்து தாக்கப்பட்டனவே)

எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் போல் ஏன் ராஜ்குமார் மொழிக்கு அப்பாற்பட்டு புகழ் அடையவில்லை. அவரின் "மொழி" காக்கும் போராட்டங்கள் காரணமாக இருக்குமோ.

திப்பு சுல்தான் டப்பிங் தொடருக்காக அவர் செய்த போராட்டம் தான் நினைவுக்கு வருகிறது.

பொதுவாகவே கன்னடர்கள் தமிழர்கள் போல் மொழி உணர்வு உள்ளவர்கள் என்பது பாராட்டத்தக்கது ஆனாலும் நம்மவர்களுக்குரிய "பெருந்தன்மை" அவர்களிடம் குறைவோ !!!