Tuesday, October 25, 2005

தமிழ்மணம் மற்றும் சுரதா நண்பர்களே நான் எழுதிக்கொண்டிருக்கும் நேசித்தேன்..நேசிக்கின்றேன்.. நேசிப்பேன் தொடரைப்படித்து உங்கள் பின்னூட்டங்களை இட உங்களை வேண்டுகின்றேன்.
உங்கள் கருத்துக்கள் நிச்சயம் என்னை மேலும் சிறப்பாக எழுத தூண்டுகோலாக அமையும்.
நன்றிகள்.

Monday, October 24, 2005

அவன் கிரிக்கெட் பார்க்க ஆரமபித்து இன்றுடன் 15 வருடங்கள் ஆகிறது.1991 ஆம் வருடம் அக்டோபர் 25 இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஷார்ஜா பைனல் மேட்ச். அக்யூப் ஜாவித் ஹாட்ரிக் எடுத்த மேட்ச்.

http://ind.cricinfo.com/db/ARCHIVE/1991-92/OD_TOURNEYS/WLSTPY/PAK_IND_WLSTPY_ODI-FINAL_25OCT1991.html


அது முதல் அவன் வாழ்க்கையில் முக்கியமான தருணங்களில் எல்லாம் ஒரு கிரிக்கெட் மேட்ச் வந்து அந்த நிகழ்ச்சியை மறக்க முடியாதது ஆகிவிடும்.இந்தியாவின் வெற்றியை அவன் வெற்றி போல் கொண்டாடியது உண்டு. தோல்விகளை அவனுக்கு ஏற்பட்ட அவமானமாகவே கருதுவான்.
சில தோல்வி மேட்ச்களை அவன் தன் கனவில் வென்று கொடுத்தது உண்டு.

1996 வோர்ல்ட் கப் கால் இறுதி ஆட்டத்தில் பெங்களூரில் ஜடேஜா அடித்த அடி இன்னொரு தீபாவளி... உண்மையில் அவனக்கு ஜடேஜா வை பிடிக்காது காரணம் அவனுக்குபிடித்த அவளுக்கு ஜடேஜா என்றால் உயிர்.

http://www.cricinfo.com/db/ARCHIVE/WORLD_CUPS/WC96/WC96-MATCHES/IND_PAK_WC96_ODI-QF2_09MAR1996.html


1996 வோர்ல்ட் கப் செமி பைனல்ஸில் வினோத் காம்ப்ளி அழுதபோது , ஏதோ அவன் வீட்டில் துக்கம் நடந்தது போல் கண்னீர் விட்டது...
http://www.cricinfo.com/db/ARCHIVE/WORLD_CUPS/WC96/WC96-MATCHES/SL_IND_WC96_ODI-SEMI1_13MAR1996.html

1999 வோர்ல்ட்கப் டாண் டாண் டவுன்டனில் 373 ரன் அடிச்சு இலங்கையை அழ விட்ட போது 1996 கு ஒரு பழி வாஙகள் என்ற ஒரு திருப்தி.... ...

http://ind.cricinfo.com/db/ARCHIVE/WORLD_CUPS/WC99/SCORECARDS/GROUP-A/IND_SL_WC99_ODI21_26MAY1999.html

College Final year la Operation Research Exam ல இந்தியா அடிச்ச ஸ்கோர் 54 எடுத்து பாஸ் பண்ணது....


அண்ணன் லக்ஷ்மன் "பெரியண்ணன்" ஆஸ்திரேலியாவுக்கு கல்கத்தாவில் ஆப்பு வைத்த டெஸ்ட் மேட்ச்.. அன்று முதல் அவனுக்கு லக்ஷ்மன் பிரியமான கிரிக்கெட்டர் ஆனார்.

ஒவ்வொரு முறை சின்ன சின்ன டீம் கிட்ட எல்லாம் தோற்கும் போது கிரிக்கெட்டையே மறந்து விட தோணும் ஆனால் அடுத்த மேட்ச் வந்தால் முதல் ஆளாய் டீவி முன் உட்கார்ந்ந்து விடுவான்.

அவன் இந்திய கிரிக்கெட்டுக்கு மட்டும் ரசிகன் என்று எண்ணிவிட முடியாது... பொதுவில் அவன் கிரிக்கெட்டுக்கு ரசிகன் ...பின்புதான் இந்திய அணிக்கு .....
டீவி யில் அதிக முக்கியத்துவம் இல்லாத ஆட்டங்களை கூட அவன் ரசித்துப் பார்ப்பான்.
ஒரு முறை அவன் தோழிக்கு அவன் ஆஸ்த்ரேலியா பாகிஸ்தானை டெஸ்ட் மேட்ச்சில் சேஸிங் செய்ததை வர்ணனையாக கடிதம் எழுதியதுண்டு. [அந்த மேட்ச்சில் "கில்லி" யும் லாங்கரும் சதமடித்து ஜெயிக்க வைப்பார்கள்].
Many of the matches are won from no where positions... Life also like that ... u can never expect what would happen ... Life is full of suprises like a "perfect" test matches...

அவனைப் பொருத்தவரை கிரிக்கெட் அவன் வாழ்வோடு ஒன்றிய ஒரு விசயம்.

Difficulty in reading this post due to font issues?Click herefor a PDF copy. Works best if you right-click and select 'Save as'

Wednesday, October 19, 2005

சுக துக்கங்களை சமமாக பாவிக்க வேண்டும் என்று கூறுபவர்களுக்கு சொல்ல விரும்புவது , நிச்சயமாக இன்ப துன்பங்களை ஒரே அளவீட்டினால் அளக்க முடியாது. இன்பம் கொள்ளளவு என்றால் துன்பம் எடையை போன்றது. ஆனால் மையப்புள்ளி துன்பத்துக்கும் இன்பத்துக்கும் ஒன்றாகவே இருப்பது கவனிக்கத்தக்கது.
துன்பத்துக்கு எது காரணமோ அதுவே இன்பத்துக்கும் காரணம்.காதல், நட்பு,பணம், படிப்பு, வெற்றி, அங்கிகாரம்,பாராட்டு இது அனைத்தும் கிடைக்கும் அல்லது இருக்கும் விதத்தை பொருத்து நமக்கு வருத்தமோ சந்தோசமோ ஏற்படுகிறது. சந்தோசத்தை அனுபவிப்பதுபோல் துக்கத்தையும் கொண்டாடுங்கள்.
கஷ்டங்களை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும்போது உண்மையில் துன்பம் நம்மைவிட்டு விலகி நம் மனம் லேசாகிவிடுகிறது. நீங்கள் வெற்றி பெற்ற்வர்களை கவனித்தீர்கள் என்றால், அவர்களின் வெற்றியின் ரகசியம் வெற்றியை விட அவர்கள் தோல்வியை அதிகம் அலசியிருப்பார்கள்.துன்பம் மனப்பாரமாக கருதப்படுகிறது, அதனை அலசும்போது அவை துகள்களாக சிதறி ந்ம் மனம் மிகவும் பக்குவப்பட்ட நிலையை அடைகிறது.
சந்தோசம் கடல் போன்றது.... நீந்திக்கொன்டே இருக்கலாம்.... சந்தோசம் வரும்போது கொண்டாடுங்கள்... அதே சமயத்தில் துன்பம் வரும்போதும் துன்பத்தை நேசியுங்கள்.

After all Life is to Live and Love the every moment.

Difficulty in reading this post due to font issues?Click herefor a PDF copy. Works best if you right-click and select 'Save as'

Monday, October 10, 2005

தினமலர் நாளிதழுக்கு என் மனமார்ந்த நன்றிகள். நேற்றைய [9 அக்டோபர் ஞாயிறு] இதழில் என்னுடைய இந்த வலைப்பூவை பற்றிய தகவல் வெளியானது. நம்முடைய எழுத்தை, எண்ணத்தை அச்சில் பார்க்கையில் தான் எவ்வளவு ஆனந்தம். நேற்று அதிகாலையில் தினமலரை விரித்து இரண்டாம் பக்கத்தை மேலோட்டமாக பார்க்கையில் "வினையூக்கி" கண்ணில் பட்டது. என் வாழ்க்கையில் முக்கியமான த்ருணம் அது.
[தினமலர் வெப் சைட்டிலும் வெளியாகி உள்ளது
http://www.dinamalar.com/2005oct09/flash.asp ]

Thursday, October 06, 2005

அவன் எப்போதும் தன் சங்கடங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள் விரும்பாதவன். பிரச்சினைகள், சங்கடங்கள். வருத்த்ங்கள் அவனுக்கு ஏற்படும்போது நேராக கிளிஜோஷ்யகாரனிடம் செல்வான். ஜோஷ்யம் பார்த்தால் சரி ஆகிவிடும் என்று அல்ல... வெறும் 5 ரூபாய்க்கு உலகத்தில் வேறு யாரும் "அவ்வளவு நல்ல, நிம்மதியான வார்த்தைகளை" கூற மாட்டார்கள். அவன் ஒரு முறை பார்த்த கிளியிடம் மருமுறை பார்க்க மாட்டான், காரணம் கிளி ஜோஷ்ய காரர்களிடம் இரண்டாம் முறை போனால் "பரிகாரம்" என்று எதாவது கதை சொல்லி விடுவார்களோ என்ற பயம். எனவே ஒவ்வொரு முறையும் புது கிளி தான். இதனாலயே அவனுக்கு மதராசில் பெரும்பண்மயான கிளிகள் அறிமுகம்.
ஆச்சர்யமான விசயம் என்னவெனில் ஒவ்வொரு முறை கிளி எடுக்கும் அட்டை அவன் அப்போதைய சூழ்நிலையை எடுத்துக்காட்டும் விதமாக அமைந்துவிடும்.

Difficulty in reading this post due to font issues?Click herefor a PDF copy. Works best if you right-click and select 'Save as'

மொழி என்பது உணர்வு சார்ந்த விசயமன்று,,,,, அறிவு சார்ந்த விசயம்..... என்று தமிழர்கள் ஆகிய நாம் மொழியை உண்ர்வுபூர்வமான விசயமாக அணுக ஆரம்பித்தோமோ அன்றிலிருந்து மற்றவர்களை காட்டிலும் ஒரு படி பின் தங்க ஆரம்பித்து விட்டோம்.

தமிழ் வழிக்கல்வியில் படித்த பெரும்பாண்மையினோருக்கு தமிழ் இலக்கணம் எவ்வ்ளவு தூரம் தெரியும் என்பது அகத்தியருக்குத்தான் வெளிச்சம். இன்றைக்கு பள்ளி இறுதி தமிழ் மாணவனின் நிலை இரண்டும் கெட்டான் நிலைதான். தமிழ் மொழியறிவும் இல்லாமல், கல்லூரியில் ஆங்கிலத்தில் நடத்த் போகும் பாடங்களை புரிந்து கொள்ள் முடியாமல் திக்கி திணறுகின்றான்.
நம் மொழி செம்மொழி என்று சொல்ல வேண்டுமானால் நமக்கு பன் மொழி தெரிந்து இருக்க வேண்டும்.
நாம் ஒரு விசயததை ஆதரிக்கையில், அது பிறிதொரு விசயத்துக்கு எதிர்ப்பகிவிடக்கூடாது என்பதை புரிந்துகொண்டு
தமிழ் இளைஞனே, தமிழ் பேசு, படி, எழுது ஆனால் தமிழுடன் பிற மொழியும் படி, பிறன் மொழியில் உன் மொழி புகழ் பாடு.

Difficulty in reading this post due to font issues?Click herefor a PDF copy. Works best if you right-click and select 'Save as'

Wednesday, October 05, 2005

நம்மில் எத்தனை பேர் , காதல் அல்லது நட்பில் பிரிவு ஏற்படும்போது சம்பந்தப்பட்ட மற்றவரை மட்டும் குறை சொல்லி உள்ளோம். நிச்சயம் 99 விழுக்காடு நபர்கள், உறவின் பிரிவின் போது சம்பந்தப்பட்ட மற்றவரை எவ்வளவு தரம் தாழ்த்தி பேசி விடுகிறார்கள். உண்மையான நட்பு அல்லது காதலின் ஆழம் பிரிவுக்குப் பின்னரும் நாம் மற்றவரின் மேல் வைத்துள்ள மரியாதையில் தான் உள்ளது.

பிரிவினால் மற்றவருக்கு அமைதியோ சந்தோசமோ கிடைக்குமென்றால், தாராளமாக அந்தப் பிரிவை ஏற்றுகொள்ளலாம். அப்படி ஏற்றுகொள்ளும்போது எந்த ஒரு உறவின் பிரிவும் காயமாக மாறாது, மாறாக பிரிந்தவரின் நினைவுகள் மண்வாசனை போல் என்றென்றும் ரம்மியத்தைக் கொடுக்கும்.

Difficulty in reading this post due to font issues?Click herefor a PDF copy. Works best if you right-click and select 'Save as'

Tuesday, October 04, 2005

தெலுங்கு மக்களும் தமிழ் சினிமாவும்,
தெலுங்கு மக்களுக்கு சினிமாவை பொருத்த மட்டில் பரந்த மனப்பாண்மை உண்டு. தெலுங்கர்களின் தமிழ் படங்களை,நடிகர்களை, இசையை ஏற்றுகொள்ளும் மனோபாவம் பாராட்டததக்கது. ஆந்திரா மக்கள் தமிழ் டப்பிங் படங்களை ஏற்றுகொள்ளும் அளவை ஒப்பீடு செய்கையில் தமிழ் ரசிகர்கள் தெலுங்கு டப்பிங் படங்களுக்கு ஒரு சராசரி வெற்றி கூட தருவதில்லை. [இதற்கு காரணம் ஆந்திரா மக்களின் சினிமா மோகம். ஒரு வருடத்திற்கு ஆந்திராவில் வசிக்குமொருவர் 27 படங்களை தியேட்டருக்கு சென்று பார்க்கிறார். ]
முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று என்னவென்றால் ஆந்திரா மக்கள் தெலுங்கிற்கு டப் செய்யப்படும் படங்களை நேரடி மொழி படமாகவே கருதுகிறார்கள்.ஆதித்யா என்ற தெலுங்கு சேனலில் 10 பாடல்களுக்கு 3 பாடல்கள் தமிழ் டப் படங்களிருந்து வந்துவிடும். இதே விசயத்தை நீங்கள்எந்த ஒரு தமிழ் சேனலிலும் பார்க்கமுடியாது. [" Exception" தெலுங்கு மெட்டில் அமைந்த பாடல்கள்]. ஒரு பாமர தெலுங்கு ரசிகனுக்கு நம்மூர் வடிவேலு,கௌன்டமணி கூட நன்றாக தெரியும்.

நாம் தெலுங்கு டப் படஙகளை வெற்றி பெற வைத்தது இல்லையா என்று நீங்கள் கேட்கலாம்?... ஆம். அவையனைத்தும் நம்மூர் கமல் நடித்த "சலங்கை ஒலி", சிப்பிக்குள் முத்து", மணிரத்னம் இயக்கிய "இதயத்தை திருடாதே" இப்படி விரல் விட்டு எண்ணி விடலாம். Again "Exception " வைஜெயந்தி ஐ.பி.எஸ், இதுதான்டா போலிஸ்.
அங்கு நம்ம ராமராஜன் நடித்த "கரகாட்டக்காரன்" கூட வெற்றிபடமாம். சந்திரமுகி, அன்னியன், மன்மதன் தெலுங்கில் டப் செய்யப்பட்டு நேரடி தெலுங்கு படங்களை விட அதிக வசூல் செய்து வருகின்றன.

தமிழ் நடிகர்களில் விஜயை தவிர அனைவருக்கும் தெலுங்கில் நல்ல " Market" உண்டு.

ஆந்திராவை பொருத்தமட்டில் தமிழ் மட்டும் அல்லாது ஏனைய அனைத்து மொழிகளுக்கும் மரியாதை உண்டு. ஒரு பாமர தெலுங்கன் குறைந்தபட்சம் மூன்று மொழிகள் பேசுவான்.

தமிழ் மக்களை பொருத்தவரை, என்றுமே மற்ற மொழி சம்பந்தபட்ட விசயங்களில் பெரும் ஆர்வம் இருந்ததில்லை. இந்த மனப்போக்கு மாறவேண்டும். எங்கே, நாம் ஹிந்திக்காக எதிர்ப்புக்காக ஊயிர் விட்டவர்கள். ஆச்சே!

Difficulty in reading this post due to font issues?Click herefor a PDF copy. Works best if you right-click and select 'Save as'

Condtions Apply

அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ். உண்மை. ஆனால் அன்பு நிபந்தனைக்குட்பட்டதா... என்று எனக்கும் என் நண்பர் ஒருவருக்கும் நீண்ட விவாதம் நேற்று சென்றது. பெரும்பாலான சமயங்களில் அன்பு " Condtions Apply " என்ற நிலையில்தான் இருக்கிறது. சுயநலமில்லாத காதலோ நட்போ கிடையாது. காதலோ நட்போ "I Feel Comfortable with him/her " என்ற சூழ்நிலையில்தான் தோன்றுகிறது.

தமிழ்மணம் இணைய தளத்திற்கு நன்றிகள். என்னுடைய எண்ணஙகளை பலகோடி தமிழ் மக்களுக்கு எடுத்து செல்வதற்காக.

Monday, October 03, 2005

கஜினி படம் பார்தேன். பார்தேன் என்று சொல்வதை விட பார்த்தோம் என்று சொல்வது சரி. எனது சக ஊழியர்கள் 43 பேருடன் மதராசில் மிகவும் பிரபல்யமான விருகம்பாக்கம் அன்னை கருமாரி, தேவிகருமாரி , சக்தி கருமாரி காம்ப்ளெக்ஸ் தியேட்டரில் மூட்டை பூச்சி கடியுடன் குளுகுளு வசதி இல்லாமல் 70 ருபாய்க்கு பார்த்தோம். படம் விருவிருப்பாக இருந்தது. நந்தாவுக்கு பிறகு சூர்யா விடம் தான் நடிப்ப்பில் எததனை முன்னேற்றங்கள். படத்தில் வெறுப்பான ஒரே விசயம் நயந்தாரா. இரண்டு பாடல்கள் அற்புதம்,
இன்னொருமுறை சத்யம் ல் பார்க்கவேன்டும்.

என் நண்பர் திரு,ஏகாந்த் அவர்களின் உதவியால் இந்த வலைப்பதிவில் என் முதற் தமிழ் பதிப்பை தருகின்றேன். ஏகாந்த் அவர்களுக்கு என் நன்றிகள். ஏகாந்த், ஒரு நடமாடும் என்சைக்ளோப்டியா. எனக்கு எந்த ஒரு ஐயப்பாடு வந்தாலும் என் கைத்தொலைப்பேசியில் அவரை அழைத்து விசயத்தை தெளிவுபடுத்திகொள்வேன்.நீண்ட நாட்களாக தமிழில் வலைபதிவு செய்யவேண்டும் என்ற எண்ணம் இன்றுதான் நிறைவேறியது.

மீண்டும் வருகிறேன்.
வினையூக்கி.